September 26, 2011

மக்கள் மத்தியில் தே.மு.தி.க வின் மதிப்பு சரிந்து கொண்டிருக்கிறதா?

தேசிய முற்போக்கு திராவிட கழகம்,2005 ல் விஜயகாந்த் அவர்களால் துவங்கப்பட்டு இன்று தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெயரோடு வலம் வந்துக் கொண்டிருக்கிறது.
விஜயகாந்த் அவர்கள் 2005 ல் கட்சி துவங்கியதே 2006 ல் வந்த சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான்.ஆனால் தேர்தலில் அவர் மட்டுமே வென்று சட்டசபைக்குச் சென்றார்.இருந்தாலும் தே.மு.தி.க அனைத்துப் பகுதிகளிலும் கணிசமான வாக்குகள் பெற்றிருந்ததோடு அதிக வாக்குகள் பெற்ற கட்சிகள் வரிசையில் மூன்றாவது இடத்தையும் பிடித்தது குறிப்பிடத் தக்கது.அதன் பிறகு வந்த நாடாளுமன்ற தேர்தல்கள்,இடைத்தேர்தல்கள் என அனைத்து தேர்தல்களிலும் தன் கட்சியின் சார்பாக வேட்பாளர்களை நிறுத்தினார்.அந்தத் தேர்தல்களில் வெற்றி பெறாவிட்டாலும் இனி வரும் தேர்தல்களில் வெற்றி பெறுவார் என்ற எண்ணம் மக்களிடையே நிலவியது.இப்படி சிறுக ,சிறுக முன்னேறிக் கொண்டிருந்த தே.மு.தி.க 2011 சட்டமன்ற தேர்தலை ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தது. அதற்கு காரணம் இந்த தேர்தலில் விஜயகாந்த் தனித்து போட்டியிடுவாரா இல்லை வேறு கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் காணப்பட்டது.ஆனால் விஜயகாந்த் அவர்களோ, எனது கட்சி மட்டும் என்ன தமிழக அரசியல் கட்சிகளை விட சளைத்ததா என முடிவெடுத்து கூட்டணி அரசியலில் தனது கட்சியையும் மூழ்கவிட்டார்.

மக்களுடனும்,கடவுளுடனும்தான் கூட்டணி என்றுக் கூறிக்கொண்டவர் அ.தி.மு.க வின் கடவுளுடன் கூட்டணி வைத்துக்கொண்டார்.தனித்து நிற்பேன்,தனித்து நிற்பேன் என்று கூறி அனைத்துக் கட்சிகளை விட தனித்துவமாய் தெரிந்த அவரின் கட்சி கூட்டணி என்னும் சாக்கடையில் கலந்துவிட்டது.இருந்தாலும் இந்தக் கூட்டணி முயற்சி தே.மு.தி.க வுக்கு வெற்றி என்றே சொல்ல வேண்டும்.கிடைத்த 41 தொகுதியில் போட்டியிட்டு அதில் 29 இடங்களை கைப்பற்றியது.தி.மு.க வின் போதாத காலம் அது கேவலமாக தோற்க, 29 சட்டமன்ற உறுப்பினர்களுடன் சட்டசபையில் பிரதான எதிர் கட்சியாக அமர்ந்தது தே.மு.தி.க.

ஆளும்கட்சியினரோடு கூட்டணியில் இருப்பதால் எதிர்கட்சியான தே.மு.தி.க வால் எதையும் வெளிப்படையாக பேச முடியவில்லை அல்லது பேச விடப்படவில்லை என்றும் வைத்துக் கொள்ளலாம்.இருந்தாலும் தே.மு.தி.க தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாகவே கருதப்பட்டது. அந்த அளவுக்கு தே.மு.தி.கவுக்கு சாதகமான பல நிகழ்வுகள் நடந்தேறின,அது நேற்று வரை இன்று அந்த சூழல் உடைந்து விட்டதாகவே கூறலாம்.ஏனென்றால் வரப்போகும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க வுடன் தொகுதி பங்கீடு சுமூகமாக முடியாததால் தனித்து போட்டியிடுவதாக தே.மு.தி.க அறிவித்ததுதான்.தே.மு.தி.க வால் தனித்து நின்று உள்ளாட்சி தேர்தலில் 25 வார்டுகளில் கூட வெற்றி பெற முடியாது.ஏனென்றால் தே.மு.தி.க வின் சமீபத்திய செயல்பாடுகள் மக்களிடையே ஓர் திருப்திகரமான நிலையை ஏற்படுத்தவில்லை. மாறாக அனைத்துக் கட்சிகளைப் போல தே.மு.தி.க வும் பத்தோடு பதினொன்று என்ற எண்ணத்தில் மக்கள் வந்துவிட்டதாகவே என் எண்ணம்.அதற்கேற்றார் போல் தே.மு.தி.க வின் நடவடிக்கைகளும் இருக்கின்றன.உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணியைத் தொடர்ந்திருக்க வேண்டும் அதுதான் தே.மு.தி.க வின் எதிர்கால வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்.அதை தவிர்த்துவிட்டு மீண்டும் தனித்து நிற்போம் என்று முதலிலிருந்து ஆரம்பிக்கிறது தே.மு.தி.க.

தற்போதய சூழலில் தே.மு.தி.க வும்,பா.ம.க வை போல் கிளம்பியிரக்கிறது என்ற பேச்சும் வந்து கொண்டிருக்கிறது.ஏனென்றால் பா.ம.க வுக்கு தமிழகத்தை ஆளும் தகுதி இருக்கும் பெரிய கட்சி என்றே பா.ம.கவின் தலைவர்களும் தொண்டர்களும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அது போல தே.மு.தி.க வும் கனவு கண்டு கொண்டிருக்கிறது போல.அந்த கனவில் துவங்கப்பட்ட கட்சிதான் தே.மு.தி.க . ஆனால் அந்த கனவை சில காலம் மறந்திருந்தனர்.மறந்த காலம் இறந்த காலம் ஆகிவிட்டதால் கடந்த காலத்தில் சொன்னதை நிகழ்காலத்தில் முயற்சிக்கிறார்கள் போலும்.கறுப்பு எம்.ஜி.ஆர் என்று அடைமொழி போட்டுக் கொண்டால் மட்டும் போதாது அதேபோல் விஜயகாந்தின் செயல்பாடுகளிலும் இருக்க வேண்டும்.எம்.ஜி.ஆர் அவர்களிடம் இருந்த துளி நல்ல விசயங்கள் கூட விஜயகாந்திடம் இல்லை என்பதுதான் உண்மை.
அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய இரண்டும் தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல் சக்திகள் .தற்போது தி.மு.க வின் நிலை இறங்கு முகத்தில் இருந்தாலும் வெகு விரைவிலேயே அது மீண்டுவிடும் என்பது அனைவருக்கும் தெரியும்.ஆனால் தே.மு.தி.க வின் நிலைதான் சற்று பரிதாபத்திற்குரியது ஒரு உறுதியான நிலைப்பாடு இல்லாமல் அங்கும் இங்குமாக தாவிக்கொண்டிருப்பது தமிழகத்தின் மாற்று அரசியல் கட்சி என வருணிக்கப்பட்ட தே.மு.தி.க வுக்கு அழகல்ல .

என்னைப் பொறத்தவரை தே.மு.தி.க அ.தி.மு.க வின் கூட்டணியில் இருந்து விலகியது மிகப் பெரிய தவறு என்றே கூறுவேன்.
வரும் உள்ளாட்சி தேர்தலில் தெரியும் தே.மு.தி.க உட்பட அனைத்துக் கட்சிகளின் உண்மை நிலவரம்.பொறுத்திருந்து பார்ப்போம்.ங்கியதே 2006 ல் வந்த சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான்.ஆனால் தேர்தலில் அவர் மட்டுமே வென்று சட்டசபைக்குச் சென்றார்.இருந்தாலும் தே.மு.தி.க அனைத்துப் பகுதிகளிலும் கணிசமான வாக்குகள் பெற்றிருந்ததோடு அதிக வாக்குகள் பெற்ற கட்சிகள் வரிசையில் மூன்றாவது இடத்தையும் பிடித்தது குறிப்பிடத் தக்கது.அதன் பிறகு வந்த நாடாளுமன்ற தேர்தல்கள்,இடைத்தேர்தல்கள் என அனைத்து தேர்தல்களிலும் தன் கட்சியின் சார்பாக வேட்பாளர்களை நிறுத்தினார்.அந்தத் தேர்தல்களில் வெற்றி பெறாவிட்டாலும் இனி வரும் தேர்தல்களில் வெற்றி பெறுவார் என்ற எண்ணம் மக்களிடையே நிலவியது.இப்படி சிறுக ,சிறுக முன்னேறிக் கொண்டிருந்த தே.மு.தி.க 2011 சட்டமன்ற தேர்தலை ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தது. அதற்கு காரணம் இந்த தேர்தலில் விஜயகாந்த் தனித்து போட்டியிடுவாரா இல்லை வேறு கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் காணப்பட்டது.ஆனால் விஜயகாந்த் அவர்களோ, எனது கட்சி மட்டும் என்ன தமிழக அரசியல் கட்சிகளை விட சளைத்ததா என முடிவெடுத்து கூட்டணி அரசியலில் தனது கட்சியையும் மூழ்கவிட்டார்.

மக்களுடனும்,கடவுளுடனும்தான் கூட்டணி என்றுக் கூறிக்கொண்டவர் அ.தி.மு.க வின் கடவுளுடன் கூட்டணி வைத்துக்கொண்டார்.தனித்து நிற்பேன்,தனித்து நிற்பேன் என்று கூறி அனைத்துக் கட்சிகளை விட தனித்துவமாய் தெரிந்த அவரின் கட்சி கூட்டணி என்னும் சாக்கடையில் கலந்துவிட்டது.இருந்தாலும் இந்தக் கூட்டணி முயற்சி தே.மு.தி.க வுக்கு வெற்றி என்றே சொல்ல வேண்டும்.கிடைத்த 41 தொகுதியில் போட்டியிட்டு அதில் 29 இடங்களை கைப்பற்றியது.தி.மு.க வின் போதாத காலம் அது கேவலமாக தோற்க, 29 சட்டமன்ற உறுப்பினர்களுடன் சட்டசபையில் பிரதான எதிர் கட்சியாக அமர்ந்தது தே.மு.தி.க.

ஆளும்கட்சியினரோடு கூட்டணியில் இருப்பதால் எதிர்கட்சியான தே.மு.தி.க வால் எதையும் வெளிப்படையாக பேச முடியவில்லை அல்லது பேச விடப்படவில்லை என்றும் வைத்துக் கொள்ளலாம்.இருந்தாலும் தே.மு.தி.க தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாகவே கருதப்பட்டது. அந்த அளவுக்கு தே.மு.தி.கவுக்கு சாதகமான பல நிகழ்வுகள் நடந்தேறின,அது நேற்று வரை இன்று அந்த சூழல் உடைந்து விட்டதாகவே கூறலாம்.ஏனென்றால் வரப்போகும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க வுடன் தொகுதி பங்கீடு சுமூகமாக முடியாததால் தனித்து போட்டியிடுவதாக தே.மு.தி.க அறிவித்ததுதான்.தே.மு.தி.க வால் தனித்து நின்று உள்ளாட்சி தேர்தலில் 25 வார்டுகளில் கூட வெற்றி பெற முடியாது.ஏனென்றால் தே.மு.தி.க வின் சமீபத்திய செயல்பாடுகள் மக்களிடையே ஓர் திருப்திகரமான நிலையை ஏற்படுத்தவில்லை. மாறாக அனைத்துக் கட்சிகளைப் போல தே.மு.தி.க வும் பத்தோடு பதினொன்று என்ற எண்ணத்தில் மக்கள் வந்துவிட்டதாகவே என் எண்ணம்.அதற்கேற்றார் போல் தே.மு.தி.க வின் நடவடிக்கைகளும் இருக்கின்றன.உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணியைத் தொடர்ந்திருக்க வேண்டும் அதுதான் தே.மு.தி.க வின் எதிர்கால வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்.அதை தவிர்த்துவிட்டு மீண்டும் தனித்து நிற்போம் என்று முதலிலிருந்து ஆரம்பிக்கிறது தே.மு.தி.க.

தற்போதய சூழலில் தே.மு.தி.க வும்,பா.ம.க வை போல் கிளம்பியிரக்கிறது என்ற பேச்சும் வந்து கொண்டிருக்கிறது.ஏனென்றால் பா.ம.க வுக்கு தமிழகத்தை ஆளும் தகுதி இருக்கும் பெரிய கட்சி என்றே பா.ம.கவின் தலைவர்களும் தொண்டர்களும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அது போல தே.மு.தி.க வும் கனவு கண்டு கொண்டிருக்கிறது போல.அந்த கனவில் துவங்கப்பட்ட கட்சிதான் தே.மு.தி.க . ஆனால் அந்த கனவை சில காலம் மறந்திருந்தனர்.மறந்த காலம் இறந்த காலம் ஆகிவிட்டதால் கடந்த காலத்தில் சொன்னதை நிகழ்காலத்தில் முயற்சிக்கிறார்கள் போலும்.கறுப்பு எம்.ஜி.ஆர் என்று அடைமொழி போட்டுக் கொண்டால் மட்டும் போதாது அதேபோல் விஜயகாந்தின் செயல்பாடுகளிலும் இருக்க வேண்டும்.எம்.ஜி.ஆர் அவர்களிடம் இருந்த துளி நல்ல விசயங்கள் கூட விஜயகாந்திடம் இல்லை என்பதுதான் உண்மை.
அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய இரண்டும் தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல் சக்திகள் .தற்போது தி.மு.க வின் நிலை இறங்கு முகத்தில் இருந்தாலும் வெகு விரைவிலேயே அது மீண்டுவிடும் என்பது அனைவருக்கும் தெரியும்.ஆனால் தே.மு.தி.க வின் நிலைதான் சற்று பரிதாபத்திற்குரியது ஒரு உறுதியான நிலைப்பாடு இல்லாமல் அங்கும் இங்குமாக தாவிக்கொண்டிருப்பது தமிழகத்தின் மாற்று அரசியல் கட்சி என வருணிக்கப்பட்ட தே.மு.தி.க வுக்கு அழகல்ல .

என்னைப் பொறத்தவரை தே.மு.தி.க அ.தி.மு.க வின் கூட்டணியில் இருந்து விலகியது மிகப் பெரிய தவறு என்றே கூறுவேன்.
வரும் உள்ளாட்சி தேர்தலில் தெரியும் தே.மு.தி.க உட்பட அனைத்துக் கட்சிகளின் உண்மை நிலவரம்.பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments: