November 5, 2011

பழங்குடி மாணவர்களுக்கு மாதப் படி ரூ 50 ஆக உயர்வு முதல்வர் அறிவிப்பு.



ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் மாதாந்திர உதவி தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கான சோப்பு, சலவை தூள், தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்கள் வாங்கவும், இதர சிறு செலவுகளுக்காகவும் மாதந்தோறும் ரூ.25 வழங்கப்பட்டு வந்தது.
இந்த தொகை ரூ.50 ஆக உயர்த்தப்படுகிறது. கல்லூரி விடுதி மாணவ, மாணவிகளுக்கான தொகை ரூ.35ல் இருந்து ரூ.75 ஆக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் கல்லூரி விடுதி மாணவ, மாணவிகள் 13,013 பேரும், பள்ளி விடுதி மாணவ, மாணவிகள் 1 லட்சத்து 7,002 பேரும் பயன் அடைவார்கள்.
இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3 கோடியே 19 லட்சத்து 55 ஆயிரத்து 700ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளில் இடம் கேட்டு அதிகளவில் விண்ணப்பங்கள் வந்ததால், 2011-12ம் கல்வி ஆண்டில் கூடுதலாக 1,500 இருக்கைகள் ஏற்படுத்த ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
செய்திகள்.www.dinakaran.com

இப்படி மக்களுக்கு
பயனுள்ள வளர்ச்சி திட்டங்களில் முதல்வர் கவனம் செலுத்தினால் பொது மக்கள் பூரித்து விடுவார்களே .

மறு வெளியீட்டில் கலக்கும் பாட்ஷா.

வெ ள்ளிக் கிழமை காலைக் காட்சி. இடம் தேவி வளாகம். இதில் உள்ள நான்கு அரங்குகளில் வேலாயுதமும் ஏழாம் அறிவும் ஓடிக் கொண்டுள்ளன.
நம்பினால் நம்புங்கள்…. 50 வாகனங்கள் மட்டுமே பார்க்கிங் ஏரியாவில் இருந்தன. அங்கிருந்த தியேட்டர் ஊழியரைக் கேட்டபோது, “டல்லடிக்குது சார். தியேட்டர்ல தனியா படம் பார்க்குற எஃபெக்ட். நாலைஞ்சு ஜோடிங்களுக்குதான் வசதியா இருக்கும் இப்போ!,”என்றார்.
பக்கத்திலேயே அண்ணா திரையரங்கம். கொட்டும் மழை. ஆனால் ஒரு புதுப்பட ரிலீசுக்கே உரிய ஆரவாரத்துடன் இளைஞர் கூட்டம்.
காரணம்… தலைவரின் பாட்ஷா மறுவெளியீடு!!
இந்த வரவேற்பும், கூட்டமும் விநியோகஸ்தர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துவிட்டது. சினிமா பாஷையில் முன்பெல்லாம் எம்.ஜி.ஆர் படங்களை ‘கோல்ட்’ என்று குறிப்பிடுவார்கள் விநியோகஸ்தர்கள்.
அந்த அந்தஸ்தை எம்.ஜி.ஆருக்கு அடுத்து ரஜினியின் படங்களுக்கு மட்டுமே கொடுத்துள்ளனர். ரஜினியின் எந்தப் படமாக இருந்தாலும், முறையாக மறுவெளியீடு செய்யும் போது வசூலை அள்ளுகின்றன.





தீபாவளி புதுப் படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லாத இந்த நேரம் பார்த்து, ரஜினியின் பிளாக்பஸ்டர் படமான பாட்ஷாவை வெளியிட்டுள்ளனர்.
தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கிலும் வசூலில் புதிய புரட்சியே செய்த படம் பாட்ஷா. இன்றுவரை தமிழ் சினிமாவின் 80 ஆண்டுகால டாப் 10 படங்களுள் ஒன்று என்ற அந்தஸ்தை இந்தப் படத்துக்கு கொடுத்துள்ளனர். இந்தப் படத்தை பார்க்காத தமிழ் ரசிகர்கள் அநேகமாக யாரும் இருக்கமாட்டார்கள்.
தொலைக்காட்சிகளில் கணக்கில்லாமல் ஒளிபரப்பப்பட்ட படங்களுள் பாட்ஷாவும் ஒன்று.
இருந்தாலும் இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் இப்போது மறுவெளியீடு செய்துள்ளனர். சென்னையில் அண்ணா, ஸ்ரீநிவாசா, நியூபிராட்வே, மகாலெட்சுமி ஆகிய நான்கு அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.
விஷயமறிந்த ரஜினி ரசிகர்கள் பெருமளவில் படம் பார்க்க திரண்டுவிட்டனர். “தீபாவளிப் புதுப்பட அரங்குகள் காலியாக இருக்கையில், ரஜினியின் பாட்ஷா வெலியான அரங்குகள் திருவிழாக் கோலத்தில் இருந்தது, ரஜினியின் மாஸ் என்ன என்பதை பறைசாற்றுகிறது,” என ரஜினி ரசிகர்கள் தெரிவித்தனர்.
படம் வெளியான அண்ணா தியேட்டரில் பல ரசிகர்கள் ரஜினி பேனருக்கு முன்னால் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். தலைவரின் படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சியின் போது எப்படி தூள் கிளப்புவார்களோ, அதற்கு நிகராக பாட்ஷா மறுவெளியீட்டின் முதல் காட்சியின் போதும் செய்து அசத்தினர் ரசிகர்கள்.
இதற்கிடையே சென்னை சீனிவாசா திரையரங்கில் பாட்ஷாவின் சிறப்புக் காட்சிக்கு சைதை பகுதி ரஜினி ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கு சைதை ரவி பொறுப்பேற்றுள்ளார். மாலை 6 மணிக்கு மேள தாளம் முழங்க, அதிர்வேட்டு முழக்கத்தோடு இந்த சிறப்புக் காட்சி தொடங்குகிறது.
இது குறித்து சைதை ரவி நம்மிடம் கூறுகையில், “புதுசோ பழசோ…தலைவர் படம் தலைவர் படம்தான். அந்தப் படம் எப்போது ரிலீஸானாலும் கொண்டாட்டம்தான். தலைவர் படத்தைப் பார்ப்பது ஒரு பரவசமான அனுபவம். அதைக் கொண்டாடத்தான் நாளை சிறப்புக் காட்சி. அனைத்து ரஜினி ரசிகர்களும் வந்து அந்த அனுபவத்தைப் பெறுங்கள்,” என்றார்.

தகவல்கள்.
www.envazhi.com
நன்றி.

சூப்பர் ஸ்டாரின் புதிய அவதாரம்.

குழந்தைகள் சத்துக் குறைபாடு தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் விளம்பரப் படத்தில் நடிக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்தியா முழுவதும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு நோய்களிலும் அவர்கள் சிக்கியுள்ளார்கள். எனவே மக்கள் மத்தியில் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசின் சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
இதற்காக விளம்பர படங்கள் தயாரிக்கப்பட உள்ளன. இந்த விளம்பரப் படத்தில் இந்தியாவின் முன்னணி நடிகர்கள் நடித்தால் சரியாக இருக்கும் என்று கருதி சூப்பர் ஸ்டார் ரஜினியை அணுகினர். விஷயத்தைக் கேட்டதும் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார் ரஜினி.







இந்தப் படம் தொடர்பான ஒப்பந்தத்திலும் அவர் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் இது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடவும் ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்துள்ளார். ரஜினியுடன் அமீர்கானும் இந்த விளம்பரம் மற்றும் பிரச்சாரத்தில் பங்கேற்கிறார்.
வரும் நாட்களில் நாடு முழுவதும் ரஜினி, அமீர்கான் உருவப் படங்களுடன் ஊட்டச்சத்து விழிப்புணர்வு விளம்பர பேனர்கள் வைக்கப்பட உள்ளன.
இது சம்பந்தமாக பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் கருத்தரங்குகள் பிரசாரக் கூட்டங்களிலும் இருவரும் பங்கேற்றுப் பேச உள்ளதாக மத்திய அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் வணிக விளம்பரங்களில் நடிக்காதவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. ஆனால் சமூக நலனுக்காக ஏற்கனவே போலியோ தடுப்பு விழிப்புணர்வு பிரசார விளம்பர படத்தில் நடித்தார். அந்தப் படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
உடல் நலம் பெற்று புதுப்பிறவி எடுத்து வந்துள்ள ரஜினியின் சமூகப் பணியில் முதல் நகர்வாக, குழந்தைகள் நலன் தொடர்பான இந்த விளம்பரம் மற்றும் பிரச்சாரம் பார்க்கப்படுகிறது.

தகவல்கள்.www.envazhi.com
நன்றி.

முதல்வர் மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்குகள்.

இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளில் நம் முதல்வர்தான் அதிக ஊழல் வழக்குகளை சந்தித்திருக்கிறார்.1991-1996 ஆம் ஆண்டு காலத்தில் அவர் முதலமைச்சராக இருந்து 96 ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க,த.மா.க கூட்டணியிடம் படு தோல்வி அடைந்தார்.அப்போது பதவிக்கு வந்த மு.கருணாநிதி தலமையிலான தி.மு.க அரசு ஆறு மாதங்கள் கழித்து டிசம்பர் 7 ஆம் தேதி பஞ்சாயத்துகளுக்கு வண்ண தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கிய வழக்கில் முதன் முறையாக ஜெயலலிதாவை கைது செய்தது.






அவரை கைது செய்து வீட்டிலிருந்து அழைத்துச் சென்றவுடனையே லஞ்ச ஒழிப்பு போலிஸ் ஜெயலலிதா வீட்டினுள் நுளைந்தது.அப்போது நடைப்பெற்ற சோதனையில்தான் ரூ.66 கோடி சொத்துகள் கைப்பற்றப்பட்டு சொத்துக் குவிப்பு வழக்குப் போடப்பட்டது. ஜெயலலிதா சிறையில் 28 நாட்கள் இருந்து 1997 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி விடுதலையானார்.ஆனால் அவர் சிறையில் இருந்தபோதே அவர் மீது மேலும் 7க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டன.


தமிழக மின் வாரியத்துக்கு நிலக்கரி வாங்கிய வழக்கு,பிளசன்ட் ஸ்டே வழக்கு,டான்சி வழக்கு,ஸ்பிக் வழக்கு,சுடுகாட்டு ஊழல் வழக்கு ஆகியவையாகும்.1997 ஏப்ரலில் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க மூன்று சிறப்பு நீதிமன்றங்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் மூலம் கருணாநிதி அரசு நியமித்தது.இந்த சிறப்பு நீதிமன்றங்களை எதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்த மனுக்கள் உச்ச நீதி மன்றத்தில் 1999 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன.

வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டி ஊழல் வழக்கில் அவரை சிறப்பு நீதிமன்றம் மே 30 ,2000 ஆண்டு விடுதலை செய்தது.டான்சி வழக்கிலும்,பிளசன்ட் ஸ்டே வழக்கிலும் சிறப்பு நீதிமன்றத்தில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

டான்சி வழக்கில் டிசம்பர் 4.2001 ல் அவர் விடுதலை ஆனார். இதனை எதிர்த்து தி.மு.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதில் நவம்பர் 24,2003 ல் விடுதலை ஆனார் .பின் நிலக்கரி இறக்குமதி வழக்கிலும் சிறப்பு நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் உயர் நீதி மன்றத்திலேயே அவருக்கு விடுதலை கிடைத்தது.மேலும் 12 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த வருமான வரிக் கணக்கினை தாக்கல் செய்யாததற்கான வழக்கிலிருந்தும் விடுதலை ஆனார். 3 லட்சம் டாலரை தனது பிறந்த நாள் பரிசாக வாங்கியதாக சி.பி.ஐ தொடர்ந்த வழக்கிலும் சென்னை உயர்நீதிமன்றம் அவரை விடுவித்தது.இப்படி கிட்டத்தட்ட எல்லா வழக்கிலிருந்தும் விடுதலையான முதல்வருக்கு இந்த சொத்துக் குவிப்பு வழக்கு மட்டும் தலைக்கு மேல் கத்தி போல் தொங்கிக்க கொண்டிருக்கிறது. இந்த வழக்கின் முடிவும் விரைவிலேயே தெரிந்துவிடும்.பார்ப்போம் கத்தி கூர்மையாக இருக்கிறதா இல்லை மழுங்கிப் போய் விட்டதா என்று.

தகவல்கள்.இந்தியா டுடே.

November 4, 2011

என்ன வாழ்கைடா இது.ஜெயலலிதா.

பெங்களூரில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது. கோர்ட் விசாரணைக்கு காலவரம்பு எதுவும் விதிக்க முடியாது என்றும் தொடர்ந்து ஆஜராகி விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இன்றைய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். விசாரணைக்கு தடை விதித்து நாங்கள் தவறான முன்னுதாரணமாக மாற முடியாது , ஆஜராகும் நாள் வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம். என்றும் கூறிவிட்டனர். அதுவும் விசாரணை கோர்ட்டுதான் முடிவு செய்யும் என்றனர்.











இன்னும் ஒரு பத்து வருடத்திற்கு வழக்கை இழுத்தடிக்கலாம் என நினைத்தார் ஜெயலலிதா ஆனால் நீதிமன்றம் அவருடைய ஆசையை நிராசையாக்கி விட்டது.இந்த வழக்கில் அவருக்கு தண்டனை உறுதியாக கிடைக்கும் என்று அவரே நம்புகிறார் போல அதனால்தான் இந்த மேல் முறையீடு, வேலைப்பளு போன்ற காரணங்கள்.அங்கு ஒரு சிலரை விசாரணைக்கு என்று அழைத்துச் சென்று விட்டு ஜாமீனே தரவில்லை.இங்கு என்னடாவென்றால் வழக்கை வேகமாக முடிக்கலாம் என்று நீதிமன்றமே அழைக்கிறது அப்படியிருந்தும் இன்னும் வாய்தாக்கள் வேண்டும் என்று கேட்டால் கேட்பவரை என்னவென்று சொல்வது?

வாழ்க ஜனநாயகம்.

November 2, 2011

தமிழக முதல்வரின் முரண்பாடுகள்.

சென்னையில் கடந்த தி.மு.க., ஆட்சியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம்,உயர் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது 4,028 நூலகங்கள் இயங்கி வருகின்றது. இதில் பெரிய நூலகமாக கன்னிமாரா நூலகம்இருந்து வருகிறது. இதைவிட அதிக நூல்களைக் கொண்ட மிகப்பெரிய நவீன நூலகத்தைக் கட்ட முடிவெடுத்து 2007-08ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, சென்னை கோட்டூர்புரத்தில், அண்ணா பல்கலை., வளாகத்தை ஒட்டி எட்டு ஏக்கர் பரப்பிலான இடத்தில், எட்டு அடுக்குகளுடன் ரூ. 172 கோடி செலவில் சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் கடந்தாண்டு செப்டம்பர் 15ம் தேதி திறக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் அடிக்கடி நேரில் சென்று கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு பணிகளை முடுக்கி விட்டனர். இதன் காரணமாக 22 மாதங்களில் பணிகள் முடிந்து திறப்பு விழா கண்டது நூற்றாண்டு நூலகம். நினைத்தபடி, மிக நேர்த்தியாக நூலக கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்றது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் முன்னாள் முதல்வர் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகளின் நலனை பேணிக்காக்கும் விதமாக இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை கோட்டூர்புரத்தில் தற்போதுள்ள அண்ணாதுரை நூற்றாண்டு நூலகத்தில் உயர்சிறப்பு குழந்தைகள் மருத்துவமனை ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். தற்போதுள்ள நூலகம், கல்லூரி சாலையில் உள்ள டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள அறிவுசார் பூங்கா உருவாக்கப்பட்டு அங்கு மாற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகள்.www.dinamalar.com



ஜெயலலிதா ஒரு மாநிலத்தில் முதல்வரைப் போல் செயல்படுவதாக தெரியவில்லை.மாறாக அவரது செயல்பாடுகள் சிறு பிள்ளைதனமாகத்தான் இருக்கிறது.ஒட்டு மொத்த அதிகரமும் தன்னிடத்தில் இருப்பதால் எவ்வளவு பெரிய முட்டாள்தனமான காரியங்கள் செய்தாலும் தமிழக மக்கள் கண்ணையும்,காதையும்,வாயையும் மூடிக்கொண்டிருப்பார்கள் என்று நினைத்திருக்கிறார் போலும். கருணாநிதி ஆட்சியில் உருவான எல்லா திட்டங்களையும் அடியோடு ஒளித்துக்கட்டிவிட வேண்டும் என்ற முடிவில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.புதிய சட்ட மன்ற அலுவலகத்தை நவீன பொது மருத்தவமனை என்றார்.சமச்சீர் கல்வியை தடை போட நினைத்தார் ஆனால் நீதிமன்றம் முதல்வர் தலையிலேயே இடியை போட்டது.மூவரின் தூக்கு தண்டனயை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த மனுவை மீண்டும் தமிழக அரசே தள்ளுபடி செய்ய கேட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனை அமைக்கப்படும் என்கிறார்.

தி.மு.க வை எதிர்கிறேன் என்ற பேரில் இது போல் மக்களுக்கு விரோதமாக நடந்து கொண்டால் மக்கள் மனதிலும் அரசுக்கு எதிரான விரோதம்தான் உருவாகும்.


தற்போது பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கில் கூட ஜெயலலிதா தண்டிக்கபட வேண்டும் என பெரும்பாலான மக்கள் நினைக்கவில்லை மாறாக அந்த வழக்கில் இருந்து விடுபட வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள்.அந்த அளவிற்கு முதல்வர் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். முதலில் முதல்வரின் சர்வாதிகார போக்கை குறைக்க வேண்டும்.அப்போதுதான் நம்மைப் போல் ஒருவர் என்ற எண்ணம் மக்கள் மனதில் தோன்றும் .இல்லையேல் 2016 ல் வடிவேலு முதல்வர் ஆகிவிடக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.இதை அனைத்து அரசியல் கட்சிகளும் மனதில் வைத்தால் நலம்.

November 1, 2011

தீபாவளி ரேசில் முந்தும் திரைப்படம் எது? பிரபல இணையதளம் நடத்திய வாக்கெடுப்பின் விவரம்.

தீபாவளி அன்று வெளியான திரைப்படங்களில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தவை மூன்று திரைப்படங்கள் ரா ஒன், வேலாயுதம் மற்றும் ஏழாம் அறிவு.ரா ஒன் பாலிவுட் திரைப்படமாக இருந்தாலும் தமிழ்நாட்டு ரசிகர்களிடையே இருந்த எதிர்பார்ப்புக்கு காரணம் சூப்பர் ஸ்டார் கௌரவ வேடத்தில் நடித்திருப்பதால்தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.அடுத்தது விஜய் நடித்த வேலாயுதம் எப்போதும் போல் விஜய் படம் என்ற எதிர்பார்ப்பில் களம் இறங்கியிருக்கிறது.

சூர்யா நடித்த ஏழாம் அறிவு இந்த திரைப்படம் அளவுக்கதிகமான விளம்பரத்தோடும் எதிர்பார்ப்போடும் வெளிவந்திருக்கிறது.இந்த படத்தின் மற்றொரு சிறப்பு வெற்றிபட இயக்குனர் முருகதாஸ் இந்த படத்தை இயக்கிருக்கிறார்.




இப்போது உங்களிடம் சின்ன வேண்டுகோள்.அது என்னவென்றால் தலைப்பில் குறிப்பிட்ட பிரபல இணையதளம் எதுவென்றால் நம்முடைய இந்த வலைப்பக்கம்தான் இதை பார்த்து யாரும் கோபப்படாதீர்கள்.இன்று பிரபலமாகா விட்டாலும் பத்தோ இருபதோ ஆண்டுகள் கழித்து பிரபலமாகலாம் அல்லவா அதனால் ஒரு சிறு விளம்பரம்.மீண்டும் ஒரு முறை கோவிச்சுக்காதிங்க.




இனி வாக்கு விவரத்திற்கு வருவோம்.


மொத்தம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை. 131.







ரா ஒன் திரைப்படத்திற்கு பதிவான வாக்குகள்.12 [9 சதவிதம்]










வேலாயுதம் திரைப்படத்திற்கு பதிவான வாக்குகள்.54 [41 சதவீதம்]















ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு பதிவான வாக்குள்.57 [43 சதவீதம்]




இது போக எந்தத் திரைப்படமும் நன்றாக இல்லை என்று குறிப்பிட்டோர்கள்.15 பேர் [11 சதவீதம்]



வாக்குகளின் அடிப்படையில் முடிவு உங்களுக்கே தெரிந்திருக்கும்.






மீண்டும் ஒருமுறை கோவிச்சுக்காதிங்க.

October 30, 2011

உலக மக்கள் தொகை எழுநூறு கோடியா?

இன்று உலக மக்கள் தொகை 700 கோடியை தொடும் என ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. அதுவும் குறிப்பாக, 700 கோடியாவது குழந்தை உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மனிதன் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. எனினும், கடந்த 1805ம் ஆண்டில்தான் உலக மக்கள் தொகை 100 கோடியை எட்டியது.ஆனால், அடுத்த 122 ஆண்டில் (1927) 200 கோடியை எட்டியது. அதன்பிறகு 32 ஆண்டில் (1959) 300 கோடியையும்,
14 ஆண்டில் (1974) 400 கோடியையும், 13 ஆண்டில் (1987) 500 கோடியையும், 12 ஆண்டில் (1999) 600 கோடியையும் எட்டியது. கடந்த 100 ஆண்டில் மட்டும் 5 மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று உலக மக்கள் தொகை 700 கோடியை எட்டும் என ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. தினமும்சராசரியாக குழந்தை பிறக்கும் அளவை கருத்தில் கொண்டு இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
700 கோடியாவது குழந்தை எங்கு பிறக்கும் என்பதை துல்லியமாக சொல்ல முடியாது. எனினும், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறக்க வாய்ப்பு உள்ளதாக பிளான் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இது விளங்குகிறது. அதாவது பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகளின் மக்கள் தொகைக்கு சமம் ஆகும்.
மக்கள் தொகை பெருக்கத்தைக் குறைக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதால் இனி மக்கள் தொகைவளர்ச்சி வேகம் குறையும் என ஐ.நா. சபை மதிப்பீடு செய்துள்ளது. அந்த வகையில் 800 கோடியை தொட 14 ஆண்டுகள் (2025) ஆகும். 900 கோடியை தொட 25 ஆண்டுகளும் (2050) 1000 கோடியை தொட 50 ஆண்டுகளும்(2100) ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.
700 கோடியை இப்படி கணக்கிட்டால்...
700 கோடி விநாடிகள் பின்னோக்கி சென்றால், 1789ம் ஆண்டுக்கு செல்வோம். அப்போது, அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் பதவி வகித்த காலம் அது.
பூமத்திய ரேகையை ஒட்டி 700 கோடி காலடிகள் எடுத்து வைத்தால், 106 முறை உலகை சுற்றி வரலாம்.
2 மிலி தண்ணீர் கொள்ளக்கூடிய 700 கோடி சிறிய கப்களில் தண்ணீரை ஊற்றினால், அந்த தண்ணீர் மூலம் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கு அமைக்கப்படும் பிரம்மாண்டமான 5 நீச்சல் குளங்களுக்கு தண்ணீரை நிரப்ப முடியும்.
5 அடி உயரமுள்ள சராசரி மனிதன் 700 கோடி பேரை ஒருவரின் மேல் ஒருவராக அடுக்கினாற்போல நிற்க வைத்தால், சூரியனை அடையும் தூரத்தில் 14ல் ஒரு பங்கு தூரத்தை எட்டலாம். அதேநேரம், நிலவின் தூரத்தை போல 27 முறை இருக்கும்.
ஸீ 3 மிலி கிராம் எடை கொண்ட 700 கோடி எறும்புகளின் எடை 23 டன்னாக இருக்கும்.





இந்தியாவை பொறுத்தவரை இது வருத்தமான விஷயம் என குலாம்நபி ஆசாத் கருத்து தெரிவித்துள்ளார்.
உலகின் 700 கோடியாவது குழந்தை உ.பி.யில் இந்தியாவில் பிறப்பது பற்றி கருத்து தெரிவித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறியதாவது:
இந்த சம்பவம் கொண்டாப்பட்டாலும், இந்தியாவை பொறுத்தவரை மிகவும் கவலைப்படக் கூடிய விஷயம். இந் நிகழ்ச்சியை நாம் கொண்டாக் கூடாது.
உலக நிலப்பரப்பில் 2.4 சதவீதம் மட்டும் உள்ள இந்தியாவில், உலக மக்கள் தொகையில் 18 சதவீதம் பேர் இருக்கிறோம். நமது நாட்டின் மக்கள் தொகை தற்போது 121 கோடியாக உள்ளது. இந்த நிலையை கட்டுக்குள் வைத்திருந்தாலே மகிழ்ச்சிதான். கடந்த 1991 முதல் 2001ம் ஆண்டு வரை இந்திய மக்கள் தொகை 20 கோடி அதிகரித்தது. கடந்த 2001ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை 18 கோடி பேர் அதிகரித்துள்ளனர்.
தற்போது இந்தியாவில் ஒரு பெண்ணின் கருத்தரிப்பு விகிதம் 2.6 ஆக உள்ளது. 2060ம் ஆண்டில் இது 2.1 ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் குழந்தை பெற்றுக் கொள்வது பொழுபோக்கு நிகழ்ச்சியாக இருக்கிறது. பீகார், சட்டீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் பெண்களின் கருத்தரிப்பு விகிதம் அதிகளவில் உள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சி தற்போது அதிகமாக உள்ளது. 2030ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை மிஞ்சும் என தெரிவித்தார்.




மக்கள் தொகை வளர்ச்சியில் முன்னணியில் இருந்துவிட்டு பொருளாதார முன்னேற்றத்தில் வளர்ந்த நாடுகள், வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளை விட பத்து இருபது ஆண்டுகள் பின்னோக்கி இருப்பது உண்மையிலேயே நாம் கவலைப்படக் கூடிய விசயமாகும்.அடுத்து வரும் இருபது ஆண்டுகளிலாவது இந்தியா மக்கள் தொகை மட்டுமல்ல பொருளாதார முன்னேற்றத்திலும் நாங்கள்தான் முன்னணியில் இருக்கிறோம் என்று மார்தட்டிக் கொள்ளக் கூடிய சூழல் நிலவினால் அது இந்தியர்களாகிய நமக்கு பெருமை.



செய்திகள்.www.dinakaran.com

என் பலம் என் வேகம்தான்.சூப்பர் ஸ்டார்.



‘என் பலம் என் வேகம்தான். அந்த வேகம் குறையும் வரை நடிப்பேன்’ என்றார் சூப்பர் ஸ்டார்.
உடல் நலம் பெற்று சென்னை திரும்பிய பின் 3 மாதங்கள் ஓய்வெடுத்து வந்த ரஜினி, இப்போது வெளி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்க ஆரம்பித்துள்ளார்.
சமீபத்தில் சில நண்பர்களின் திருமணங்களுக்குப் போன அவர், கடந்த வாரம் ரா ஒன் மற்றும் 7 ஆம் அறிவு படங்களைப் பார்த்தார்.
இப்போது முதல் முறையாக வெளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். 75 படங்களுக்கு மேல் இயக்கிய இயக்குநர் எஸ்பி முத்துராமனின் கலைச் சேவைக்காக சங்கர ரத்னா விருது வழங்கும் விழா அது.
சென்னையில் ஏவிஎம் ராஜேஸ்வரி மண்டபத்தில் சனிக்கிழமை சங்கர நேத்ராலயா சார்பில் நடந்த இந்த விழாவில் பங்கேற்ற ரஜினியின் பேச்சு, அங்கு வந்திருந்தவர்களை உருக்கிவிட்டதென்றால் மிகையல்ல.
அதே கம்பீரமும் சுறுசுறுப்பும் வசீகர புன்னகையும் தவழ, அனைவருக்கும் வணக்கம் சொன்னார் ரஜினி. புகைப்படக்காரர்கள் விரும்பும் வரை படம் எடுக்கவும் அனுமதித்தார்.
ஆரம்பத்தில் ரஜினி இந்த விழாவுக்கு வருவார் என யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. திடீரென அவரைப் பார்த்ததில் அரங்கம் திக்குமுக்காடிப் போனது. பின்னர் அதிர வைக்கும் கைத்தட்டலும் அவரை வரவேற்றனர்.
விழாவில் ரஜினி பேசியது:
சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் என்னை தொடர்பு கொண்டு பேசினார். எனக்கு சங்கர ரத்னா விருது வழங்கப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் நீ கலந்து கொள்ளாவிட்டாலும், உன் வாழ்த்து மடலையாவது அனுப்ப வேண்டும் என்றும், அதை மேடையில் மகிழ்ச்சியுடன் படிப்பேன் என்றும் கூறினார். அதற்கு நானும் சம்மதம் தெரிவித்தேன்.
பின்புதான் யோசித்தேன், உடல் நிலை சரியான பிறகு, ஏதாவது ஒரு நல்ல நிகழ்ச்சியில்தான் கலந்து கொள்ள வேண்டும் என்று இருந்தேன். அப்படி பார்த்தால், என்னை சினிமாவில் வளர்த்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு விருது வழங்கும் இந்த நிகழ்ச்சியை விட வேறு நல்ல நிகழ்ச்சி எதுவும் கிடையாது.
உடலில் வேகம் இருக்கும் வரை…
நான் முழுமையாக குணம் அடைய மக்களின் அன்பும், ரசிகர்களின் வேண்டுதலும்தான் காரணம். என்னை உருவாக்கிய ஜாம்பவான்கள் இருக்கிற இந்த மேடையில், நான் அதிகம் பேசினால், அது அதிக பிரசங்கித்தனம் ஆகிவிடும்.
எனக்கு வெற்றிப் படங்களை கொடுத்தார் என்பதால் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 25 படங்களில் நடிக்கவில்லை. அவர் மீது கொண்ட அன்பினால் தான் 25 படங்களில் நடித்தேன்.
நான் ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் எனக் குறிப்பட்டனர். ஆனால் சிவாஜியைப் போலவோ, கமலைப் போலவோ என்னிடம் நல்ல நடிப்பும், திறமையும் இல்லை (தலைவா… இது டூ மச்!).
எனது பலமே எனது வேகம்தான். அந்த வேகம் குறைந்தால் என்னால் நடிக்க முடியாது. என் வேகம் குறையும் வரை நடிப்பேன். ரசிகர்களை மகிழ்விப்பேன்,” என்றார் ரஜினி.

முன்னதாக சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சார்பில் தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமனின் கலைச் சேவையைப் பாராட்டி சங்கர ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்த விருதை கம்பன் கழகத் தலைவர் இராம.வீரப்பன் வழங்கினார்.
விழாவில், திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம். சரவணன், பஞ்சு அருணாச்சலம், வி.சி.குகநாதன், திரைப்பட இயக்குநர்கள் கே.பாலசந்தர், திரிலோகச்சந்தர், நடிகர் விசு, நடிகை குஷ்பு, பாடகி வாணி ஜெயராம், எழுத்தாளர் சிவசங்கரி, டாக்டர் எஸ்.பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவுக்கு வந்த அனைவரும் ரஜினியை நலம் விசாரித்தனர். அனைவரிடமும் சிரித்துப் பேசிய ரஜினி, விழா முடியும் வரை இருந்துவிட்டே கிளம்பினார்.

nandri envazhi.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படங்களும் கதாபாத்திரமும்.



MOVIE AND CHARACTER NAME OF THALAIVAR ... Endhiran (2010) .... Vaseegaran Kuselan (2008).... Ashok Kumar ... aka Katha Nayakudu (India: Telugu title) Sivaji (2007) ....Shivaji Arumugam ... aka Sivaji: The Boss (India: English title: long title) Chandramukhi (2005) (as Super Star Rajinikanth) .... Dr.Saravanan/Vettaiyan Raja, Baba (2002) (as Super Star Rajnikanth) .... Baba Bulandi (2000) (as Superstar Rajnikant) .... Ghajraj Thakur Padaiyappa (1999) .... Padaiyappa Krantikari (1997) (as Rajnikant) Arunachalam (1997) .... Arunachalam Muthu (1995) .... Muthu ... aka The Dancing Maharaja (India: English title) Aatank Hi Aatank (1995) .... Munna Badsha (1995) .... Badsha/Manickam Peda Rayudu (1995) .... Murdered Village Chief Veera (1994).... Muthuveerappan "Veera"Ejamaan (1993) .... Vanavarayan ... aka Yejaman (India: Tamil title: alternative transliteration) Insaniyat Ke Devta (1993).... Anwar Uzhaippaali (1993)Valli (1993) Tyagi (1992) .... Shankar G. 'Dadhu' Dayal Mannan (1992) .... Krishna Annamalai (1992) .... Annamalai Chor Ke Ghar Chorni (1992) Pandian (1992) .... Pandiyan Thalapathi (1991) .... Surya... aka Dal-pati (The Leader)(India: Hindi title) ... aka The Commander (India: English title) Nattukku Oru Nallavan(1991) Khoon Ka Karz (1991) .... Kishan Farishtay (1991) (as Rajnikant) .... Police Inspector Arjun Ramojirao Shivajirao Gaikwad Jadish Mulk Tange... aka Angels (India: English title) Hum (1991) (as Rajnikant) .... Kumar ... aka We Dharma Dorai (1991) Phool Bane Angaarey (1991)(as Rajnikant) .... Inspector Ranjeet Singh ... aka When a Flower Becomes a Fireball(International: English title) Shanti Kranti (1991) Panakkaran (1990/I) Adisaya Piravi (1990) .... Kalicharan/Balwant 'Balu'/Inspector Maha ... aka Adhisaya Pirvai (India: Tamiltitle: DVD title) ... aka Sabse Badaa Badshah (India: Hindi title: dubbed version) ChaalBaaz (1989) (as Rajinikant) .... Jaggu Bhrashtachar (1989) .... Abdul Sattar ... aka Corruption (International: English title) Gair Kaanooni (1989) (as Rajani Kant) .... Azam Khan Kodiparakkudu (1989) .... Erode Shivagiri/Dada ... aka Fluttering Flag Mappilai (1989) Raajadhi Raaja (1989) Raja Chinna Roja (1989) Siva (1989) ... aka Shiva (India: Tamil title: alternative transliteration) Bloodstone (1988) (as Rajni Kanth) .... Shyam Sabu Tamacha (1988) (as Rajanikant) .... Vikram Pratap Singh 'Vicky' Dharmathin Thalaivan (1988) Guru Sisyan (1988) ...aka Guru Sishyan (India: Tamil title: alternative transliteration) ... aka Zulm Ka Badshah (India: Hindi title) Uttar Dakshin (1987) Daku Hasina (1987) .... Mangal Singh Manithan (1987) Oor Kavalan (1987) Sattam Oru Vilayattu (1987) Velaikkaaran (1987) Zameen (1987) (as Rajnikant) Asli Naqli (1986) (as Rajnikant) .... Birju UstadBhagwaan Dada (1986) .... Bhagwaan Dada Dosti Dushmani (1986) Jeevana Porstam (1986) Maaveran (1986) Mr. Bharath (1986/I).... Bharat (Gopinath's & Shanti's Son) Naan Adimai Illai (1986) Viduthalai (1986)(as Rajnikant) Geraftaar (1985) (as Rajanikanth) .... Inspector Hussein (Guest Appearance) Wafadaar (1985) (as Rajani Kant) .... Ranga Bewafai (1985) .... Ranvir Mahaguru (1985) .... Vijay (Maha Guru) Aaj Ka Dada (1985) Chithirame Chithirame (1985) Ek Saudagar (1985) .... Kishore Mera Inteqam (1985) Naan Sigappu Manithan (1985) Nyayam Meere Cheppali (1985) Padikkathavan (1985) (as Rajanikant) .... Rajkumar 'Raja' K. Pandey ...aka Fauladi (India: Hindi title:dubbed version) Sree Raaghavendar (1985) .... Venkatanathan ... aka Shri Raghavendrar (India: Tamil title: alternative transliteration) Unn Kannil Neer Vazhindal (1985) JohnJani Janardhan (1984) .... Janardhan B. Gupta/Inspector John A. Mendez/Jani Gangvaa (1984) Insaaf Kaun Karega (1984) (as Rajnikant) .... Police Inspector Vikram Singh Meri Adalat (1984) (asRajnikant) Aakhri Sangram (1984) .... Bholu Pandit Anbulla Rajanikant (1984) Bhooka Sher (1984) Dushmano Ka Dushman (1984) .... Manohar Idhey Naa Savaal (1984) ... aka Ithe Naa Saval (India: Telugu title: alternative transliteration) Kai Kodukkam Kai (1984) .... Kaalimuthu/Veer ... aka Shoor Veer (India: Hindi title:dubbed version) Naan Mahaan Alla (1984) Nallavanukku Nallavan (1984) Nuvva Nena (1984)... aka Neeya Nanna (India: Tamil title) Rowdycaku Saval(1984) Takkaridonga (1984)Thambikku Entha Ooru (1984) Tiger Rajani (1984) Zulm Ki Zanjeer (1984) Jeet Hamaari (1983) (as Rajinikanth) .... Raju Adutha Varisu (1983) Andhaa Kanoon (1983) .... Vijay Kumar Singh Moondru Mugham (1983) .... Alex Pandiyan Paayum Puli (1983) (as Rajinikant) ... akaFaoladi Mukka (India: Hindi title: dubbed version) PremaPariksha (1983) Sasthi Viratam (1983) Sivappu Sooriyan (1983) Thanga Magan (1983) Thayi Veedu (1983) Thudikkum Karangal (1983) Uruvavugal Maralam (1983) Agni Sakshi (1982) Engeyo Ketta Kural (1982) Pokkiri Raja (1982) Pudhu Kavithai (1982.......
இணைப்பு:



nga (1982)
Thanikkattu Raja (1982)
Thee (1981)
Black Cobra (1981)
Garjanai (1981)
... aka Garjanam (India: Malayalam title)
... aka Garjane (India: Kannada title)
... aka Garjaney (India: Kannada title: alternative transliteration)
Kazhagu (1981)
Netri Kann (1981)
... aka Netrikkan (India: Tamil title: alternative transliteration)
Ranuva Veeran (1981)
Thillu Mullu (1981) .... Chandran/Indiran
Kaali (1980) .... Kaali
... aka Kali (India: Tamil title: alternative transliteration)
Maayadhaari Krishnudu (1980)
Anbukku Naan Adimai (1980)
Billa (1980) .... Billa
Ellaam Un Kairaasi (1980)
Johnny/Jani (1980)
Kurinchi Malar (1980)
Mr. Rajanikant (1980) (as Rajnikant)
Murattu Kaalai (1980) .... Kaaliyan
Naan Potta Savaal (1980)
Polladhavan (1980)
Ram Robert Rahim (1980) .... Ram
Aarilirindhu Aruvathu Varai (1979)
Alavuddinum Athbutha Vilakkum (1979) .... Kamruddin
... aka Aladdin and the Wonderful Lamp (India: English title)
... aka Allavudeenum Albutha Velakkum (India: Malayalam title: alternative transliteration)
... aka Allavudeenum Arputha Vilakkum (India: Tamil title)
Ammaa Evarigaina Amma (1979)
... aka Amma Evarikaina Amma(India: Telugu title: alternative transliteration)
Andamaina Anubhavam (1979)
Annai Oru Aalayam (1979)
Dharma Yuddham (1979)
Diler (1979)
Johnny (1979)
Kuppathu Raja (1979)
Naan Vaazha Vaippen (1979).... Michael
Ninaithale Inikkum (1979)
Thai Illamal Naan Illai (1979)
Thayillamal Nannilai (1979)
Tiger (1979)
En Kelvikku Enna Bathil (1978)
Shankar Saleem Simon (1978)
Aval Appadithaan (1978) .... Advertising Boss
Ayiram Janmangal (1978)
Bhairavi (1978)
... aka Bairavi (India: Tamil title: alternative transliteration)
Chadurangam (1978)
... aka Chadarangam (India: Tamil title: alternative transliteration)
Ilamai Oonjal Aadukirathu (1978) .... Murli
... aka Elamai Vunjaladugiradhu (India: Tamil title: alternative transliteration)
Iraivan Kodutha Varam (1978)
... aka God Bless Me!
Justice Gopinath (1978)
Kiladi Kittu (1978)
Maathu Thappadha Maga (1978)
Mangudi Minor (1978)
Mullum Malarum (1978) .... Kali
Pavathin Sambalam (1978)
Priya (1978)
Thappitha Thala (1978)
... aka Losing the Rhythm
... aka Thappu Thalangal (India: Tamil title)
... aka Wrong Beats
Thayi Meethu Sathyam (1978)
Vanakathukuria Kathaliye (1978)
Vayasu Pilichindi (1978)
Aarupushpangal (1977)
Aadu Puli Atham (1977)
Aame Katha (1977)
Avargal (1977) .... Ramnath
... aka Characters
... aka They
Bhuvana Oru Kelvikkuri (1977)
Chilakamma Cheppindi (1977).... Kasi
Galate Samsara (1977)
Gayatri (1977)
Kavikuyil (1977)
Kumkuma Rakshe (1977)
Pathinaru Vayathinile (1977).... Parattayan
... aka 16 Vayathiniley
... aka At the Age of Sixteen
... aka Sweet 16
Raghupati Raghava Rajaram (1977)
Sahodarara Saval (1977)
Tholireyi Gadichindi (1977)
Anthuleni Katha (1976) .... Murthy
... aka A Story Without an End
Moondru Mudichu (1976)
... aka Three Knots
Apoorva Raagangal (1975)
... aka Rare Melodies
Katha Sangama (1975)
Writer:
Baba (2002) (screenplay) (story)
Producer:
Baba (2002) (producer)
Self:
2000s
1990s
Aaghaaz (2000) .... Himself (a scene from a movie)
Kishen Kanhaiya (1990) .... Himself (a scene from a movie)




THANKYOU.facebook.com/anbula rajinikanth/...

திரு.ஞானியின் பார்வையில் சில.கொஞ்சம் கவலைகள்.


.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களை மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் பெரிய அரசியல் மாற்றம் எதையும் செய்துவிடவில்லை. ஐந்து மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டப் பேரவை தேர்தல்களில் தி.மு.கவை நிராகரித்து அ.தி.மு.கவை ஆட்சிக்குக் கொண்டு வந்த அதே போக்குதான் இதிலும் தொடர்கிறது. ஐந்து மாதங்களுக்குள் புதிய ஆட்சிக்கு எதிராக பெரும் அதிருப்தி மக்கள் மனதில் உருவாக வாய்ப்பில்லை என்பதால் அதே போக்கு தொடர்கிறது.

பா.ம.க, தே.மு.தி.க, ம.தி.மு.க, இடதுசாரிகள் முதலிய சிறு கட்சிகளுக்கெல்லாம் பெரும் பின்னடைவு என்றும் காங்கிரஸ் அடியோடு காலி என்றும் சிலர் உள்ளாட்சித்தேர்தல் முடிவுகளை விமர்சிக்கிறார்கள்..

அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. எப்போதுமே இரு பெரும் கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க இரண்டுக்கும் தலா 25 சதவிகித ஓட்டு பலம் குறைந்தபட்சம் இருந்துகொண்டே இருக்கிறது. தேர்தல் சமயத்து அரசியல் சூழ்நிலையைப் பொறுத்து இரு கட்சிகளுக்குமிடையே சுமார் 5 முதல் 10 சதவிகித ஓட்டு வித்யாசம் மாறி மாறி இருந்து வருகிறது. சிறு கட்சிகள் ஒரு சத விகித முதல் 10 சதவிகிதம் வரை ஓட்டு பலம் உள்ளவை. பெரிய கட்சி ஏதேனும் ஒன்றுடன் சிறு கட்சிகள் கூட்டு சேர்ந்தால், அது இருவருக்கும் பயன் தரும். பிரிந்து இருந்தால், பெரிய கட்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்படாது. சிறிய கட்சிக்கு கடும் பாதிப்பு இருக்கும். இதுதான் எப்போதும் நடக்கிறது. இப்போதும் நடந்திருக்கிறது.

நம்முடைய தேர்தல் முறையில் வாங்குகிற ஓட்டுகளுக்கும் பெறுகிற இடங்களுக்கும் சம்பந்தமே இல்லாத நிலை இருப்பதால் கணிசமாக ஓட்டு வாங்கினாலும் பயன் இல்லாமல் போகும். இந்த முறை பாரதிய ஜனதாவும் மார்க்சிஸ்ட்டுகளும் ம.தி.மு.கவும் ஆளுக்கொரு நகராட்சியைக் கைப்பற்றியிருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய ஓட்டு சதவிகிதம் என்ன? கம்யூனிஸ்ட் – 0.71. மார்க்சிஸ்ட் 1.02. பா.ஜ.க – 1.35. ம.தி.மு.க 1.7. இவர்களை விட பாட்டாளி மக்கள் கட்சியும் காங்கிரசும் அதிக ஓட்டுகளை வாங்கியும் எந்த நகராட்சியையும் பிடிக்கவில்லை. பா.ம.க – 3.55 சதவிகிதம். காங்கிரஸ் 5.71. உண்மையில் காங்கிரஸ் தமிழ்நாட்டில் நான்காவது இடத்தில் இருக்கிறது. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை வந்தால் மட்டுமே நம் தேர்தல்களில் ஒவ்வொரு கட்சியும் அசல் பலத்துக்குரிய இடங்களைப் பெறமுடியும்.

உள்ளாட்சி தேர்தல்களில் தனி நபர் செல்வாக்கிற்கு கணிசமான இடம் இருக்க முடியும் என்றும் வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்குக்கு கூடுதல் அழுத்தம் கிடைக்கும் என்றும் பொர்துவாக் நம்பப்பட்டது. ஆனால் இந்த உள்ளாட்சித் தேர்தல்கள் கட்சிகளின் ஆதிக்கத்தையே உறுதிப்படுத்தியிருக்கின்றன. பஞ்சாயத்து மட்டத்தில் அதிகாரப்பூர்வமாக கட்சி அடிப்படை கிடையாது என்றபோதும் அங்கேயும் கட்சி செல்வாக்கே இந்த முறை மேலோங்கியிருக்கிறது. கட்சி செல்வாக்கு என்பது இங்கே கூடவே பணபலத்தையும் குறிக்கிறது.

உண்மையில் மாநகராட்சி வரை கட்சி அடிப்படையை முற்றிலும் நீக்க வேண்டும். கட்சி சின்ன அடிப்படையில் போட்டி நடக்ககூடாது. தனி நபர்களின் தரத்தின் அடிப்படையிலேயே தேர்தல் நடக்க வேண்டும். அதுதான் உள்ளாட்சிகளுக்கு சரியானதாக இருக்க முடியும் என்றெல்லாம் நாம் சொன்னாலும், நடைமுறையில் கட்சி அடிப்படைதான் இங்கே ஆழமாக வேரூன்றியிருக்கிறது.

சென்னை மேயர் தேர்தலில் ஜெயித்த வேட்பாளர் சைதை துரைசாமி தனிப்பட்ட முறையில் நல்ல பெயர் எடுத்தவர். மனித நேய அறக்கட்டளை பணிகள் வாயிலாக ஐ.ஏ.எஸ்சுக்கு ஏழை மாணவர்களை இலவசமாக தயார் செய்து அனுப்பி சாதனைகள் செய்தவர். ஆனால் அவரே அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிடாமல், சுயேச்சையாக போட்டியிட்டால், கவுன்சிலராகக் கூட தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது சந்தேகம்தான்.

ஏனென்றால் சைதை துரைசாமி போலவே நல்ல பெயர் எடுத்திருக்கக்கூடிய, நல்ல களப்பணிகள் செய்திருக்கக்கூடிய பல சமூக ஆர்வலர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு கவுன்சிலராகக் கூட ஆகமுடியவில்லை. தமிழ்க அரசின் வீட்டு வசதி வாரிய வீடுகளையும் மனைகளையும் முதலமைச்சர் தன் விருப்பக் கோட்டாவில் முறைகேடாக பல அதிகாரிகளுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் ஒதுக்கிய ஊழலை தகவலறியும் உரிமைச்சட்டதின் கீழ் வெளிப்படுத்தியவர் சென்னை எம்.ஜி.ஆர்.நகர் கோபாலகிருஷ்ணன். ஆனால் அவருக்கு கவுன்சிலர் தேர்தலில் கிடைத்த மொத்த ஓட்டு வெறும் 305தான். கொட்டிவாக்கத்தில் ராஜ் செருபாலும், தியாகராய நகரில் ஸ்ரீதரனும் முக்கியமான சமூக ஆர்வலர்கள். அவர்களுக்கும் தேர்தலில் இதே கதிதான்.

உள்ளாட்சி தேர்தலில் கூட கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நல்ல வேட்பாளர்கள் வெல்லும் வாய்ப்பு இனி சுத்தமாக் இல்லை என்பதுதான் இந்த தேர்தல் காட்டியிருக்கும் ஆபத்தான நிலைமை. இது பற்றி நாம் நிச்சயம் கவலைப்படவேண்டும்.

கவலை 2:

கிரண் பேடி அப்படி என்ன பெரிய தப்பு செய்துவிட்டார் என்று அவரை ஆதரிப்பவர்கள் வாதிடுகிறார்கள். ஊழலுக்கு எதிராக ஜன் லோக்பால் சட்டம் தேவை என்று போராடும் அண்னா ஹசாரேவின் தளபதிகளில் ஒருத்தர் கிரண் பேடி. எல்லா அரசியல்வாதிகளும் ஊழல் பேர்வழிகள், எல்லா எம்.பிகளும் நமபமுடியாதவர்கள் என்று கேலியும் கிண்டலுமாக ராம் லீலா மைதான மேடையில் நடனம் ஆடி நையாண்டி செய்தவர் கிரண் பேடி. அவரை யாராவது வெளியூரில் பேசக் கூப்பிட்டால் விமான டிக்கட் வாங்கித் தரவேண்டும். கிரண் பேடி விமானத்தில் சொகுசு வகுப்புக்கான கட்டணத்தை நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் வாங்கிக் கொள்வார். ஆனால் சாதாரண வகுப்பில் பயணம் செய்வார். அந்த டிக்கட்டிலும் அவருக்கு 75 சதவிகித தள்ளுபடி உண்டு. காரனம் அவர் போலீஸ் அதிகாரியாக் இருந்தபோது தீரச்செயலுக்கான மெடல் வாங்கியவர் என்பதால அந்த சலுகை. ஆக மொத்தத்தில் 10 ஆயிரம் ரூபாய் விமான டிக்கட்டை 2500 ரூபாய்க்கு வாங்கிவிட்டு, பில்லை மட்டும் 20 ஆயிரம் ரூபாய்க்கு கொடுப்பார் கிரண் பேடி என்பதுதான் குற்றச்சாட்டு. இதை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை அம்பலப்படுத்தியது.

கிரண் பேடி நடந்ததை மறுக்கவில்லை. இப்படி ‘மிச்சப்படுத்தும்’ தொகையை நான் சமூகப் பணிகளுக்குத்தான் பயன்படுத்துகிறேன் என்பதுதான் அவரது சமாதானம். பல அரசு ஊழியர்களும் தனியார் ஊழியர்களும், இப்படி பில் தொகையில் மிச்சப்படுத்தும் வழககம் நம் சமூகத்தில் சகஜமாக இருந்துவருகிறது. . நான் சாதாரண வகுப்பில் போவேன். என் பதவி அந்தஸ்துக்கு எனக்கு முதல் வகுப்பு டிக்கட்டுக்கு உரிமை உண்டு என்பதால் முதல் வகுப்பு டிக்கட் பணத்தை வாங்கிக் கொள்வேன் என்பது பல அலுவலர்களின் வழக்கமான நிலை. கிரண் பேடியும் அதையேதான் செய்துவருகிறார்.

பொய்க் கணக்கு காட்டி எடுக்கும் பணத்துக்குத்தான் கறுப்புப் பணம் என்று பெயர். அதை நல்ல காரியத்துக்குத்தான் பயன்படுத்துகிறேன் என்ற சமாதானத்தை கறுப்புப் பணத்தை வைத்திருக்கும் ஒவ்வொருவரும் சொல்ல ஆர்மபிக்கலாம். ஊழலுக்கு எதிராக குரலெழுப்புபவர் துளியும் ஊழல் செய்யாதவராக இருக்கவேண்டும் என்பதே நியாயம்.

இங்கே எனக்கு மறைந்த ஏ.கே.வி எனப்படும் அ.கி.வேங்கடசுப்பிரமணியனின் நினைவுதான் வருகிறது. அவரும் உயர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தவர்தான். பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின் கேட்டலிஸ்ட் டிரஸ்ட், குடிமக்கள் முரசு இதழ் ஆகியவற்றின் மூலம் நுகர்வோர் விழிப்புணர்வுக்காகவும் வாக்காளர் உரிமைகளுக்காகவும் ஊழலற்ற நிர்வாகத்துக்காகவும் ஓயாமல் வேலை செய்தவர். எனக்கு 49 ஓ வை அவர்தான் தெரியப்படுத்தினார்.

தமிழகம் முழுவதும் அவரை பல அமைப்புகள் பயிற்சி வகுப்புக்கும் கூட்டங்களுக்கும் அழைத்தன. ஓயாமல் சுற்றுப்பயணம் செய்து பேசினார். பஸ்களில் செல்வார். பஸ் டிக்கட் என்னவோ அதைத்தான் அழைத்தவரிடம் வாங்கிக் கொள்வார். கூட்டம் பேச சென்ற ஊரில் சொந்த வேலையாக எதையாவது செய்யச் சென்றால், அதற்கு சொந்தக் காசைத்தான் செலவு செய்வார். நமக்கு ஏ.கே.விகள்தான் தேவை., கிரண் பேடிகள் அல்ல. ஆனால் கிரண் பேடிகள்தான் மீடியாவில் வலம் வருகிறார்கள் என்பதே கவலையாக் இருக்கிறது.

கவலை 3:

சென்ற சில வருடங்களில் உலகத்தை உலுக்கி எடுத்தவர் ஜூலியன் அசாஞ்சே.அவர் உருவாக்கிய விக்கிலீக்ஸ், அரசாங்கங்கள் குறிப்பாக அமெரிக்க அரசாங்கம் சொல்லும் பல பொய்களை அம்பலப்படுத்தியது. இணைய தளத்தின் மூலம் புதிய இதழியலையே அசாஞ்சே உருவாக்கியிருந்தார்.

விக்கிலீக்ஸை முடக்க அமெரிக்க அரசும் இதர அரசுகளும் எடுத்த பல முயற்சிகள் தோற்றன. அசாஞ்சே மீது வழக்கு போட்டு அவ்ரை முடக்கும் முயற்சியும் வெற்றி பெறவில்லை. எனவே விக்கிலீக்சின் பொருளாதார பலத்தை சீர்குலைக்கும் வேலையில் இறங்கிவிட்டன.

விக்கிகிலீக்ஸ் முழுக்க முழுக்க பொதுமக்களின் நன்கொடையை நம்பியே நடக்கிறது. ஆண்டு தோறும் 35 லட்சம் டாலர்கள் தேவை. உலகம் முழுவதும் பல நாடுகளிலிருந்து நன்கொடை கொடுப்பவர்களுக்கு எளிமையான வழி விசா, மாஸ்டர் கார்டுகள், பேபால், போன்றவை மூலம் இண்ட்டர்நெட் வழியாக நன்கொடை அனுப்புவதாகும். வெஸ்டர்ன் யூனியன் போன்ர பண பரிவர்த்தனை கம்பெனிகள் மூலம் பணம் அனுப்பலாம். அமெரிக்க அரசின் நெருக்கடியால், இவை அனைத்தும் விக்கிலீக்சுக்கு எங்கள் கார்டுகள், அமைப்புகள் மூலம் நன்கொடை வாங்கித் தரமாட்டோம் என்று சொல்லிவிட்டன. இதனால் விக்கிலீக்சுக்கு வந்துகொண்டிருந்த நன்கொடையில் 90 சதவிகிதம் பாதிக்கப்பட்டுவிட்டது.

எனவே அடுத்த ஓராண்டுக்கு விக்கிலீக்ஸ் செயல்பாடுகளை நிறுத்திவைக்கப் போவதாக அசாஞ்சே அறிவித்திருக்கிறார். மாற்று வழிகளில் பணம் திரட்டியபிறகு மறுபடியும் செயல்படுவோம் என்று அசாஞ்சே சொல்லியிருக்கிறார்.

இன்று படித்தவ்ர்கள் பலரும் இண்ட்டர்நெட் சார்ந்த விசா, மாஸ்டர் கார்ட், பேபால், கூகிள், ஃபேஸ்புக். ஜீமெயில் போன்ற பல வசதிகளை சகஜமாகப் பயன்படுத்துகிறார்கள். இவையெல்லாம் நம் சுதந்திரமான உரிமைகள். யாரும் இவற்றை எதுவும் செய்யமுடியாது. இவை நமக்கு நிரந்தரமானவை என்று நம்பிக் கொண்டிருப்பது எவ்வளவு தவறு என்று விக்கிலீக்ஸ் சிக்கல் புரியவைக்கிறது. அத்தனையும் அமெரிக்க கம்பெனிகள். அமெரிக்க அரசின் மிரட்டலுக்கு உட்பட்டவை.

உலகத்தில் அராஜகங்களை பகிரங்கமாகப் பேசவும் எடுத்துச் சொல்லவும் விக்கிலீக்ஸ் மட்டுமல்ல, கிரீன்பீஸ், அம்னெஸ்டி இண்ட்டர்சேஷனல் போன்ற அமைப்புகளும் இயங்குகின்றன. எல்லாமே மக்களின் நன்கொடைகளில் இயங்குபவை. ஆனால் அவை செயல்பட, வங்கிகள், கிரெடிட் டெபிட் கார்டுகள், இண்ட்டர்நெட் போன்ற உதவிகள்தேவை. அவற்றை வெட்டிவிட்டால் செயல்படமுடியாது. அரசாங்கங்கள் நினைத்தால் வெட்டிவிடமுடியும் என்பதை விக்கிலீக்ஸ் சிக்கல் நமக்கு முகத்தில் அடித்தாற் போல சொல்கிறது

இந்தியாவிலும் நமக்கு மறந்திருக்கலாம். சில வருடங்கள் முன்பு தெஹல்கா முதலில் இணையளமாகத்தான் செயல்படத் தொடங்கியது. பல முறைகேடுளை அம்பலப்படுத்திய தெஹல்காவை ஒடுக்க நினைத்த பி.ஜே.பி அரசு தெஹல்காவில் முதலீடு செய்த நிதி நிறுவனங்களை ரெய்டு செய்து முடக்கியது. தெஹல்கா இணையதளமும் மூடப்பட்டது. பின்னர் மக்கள் நன்கொடையினால் தெஹல்கா அச்சு பத்திரிகையானது. பத்திரிகைகளின் பொருளாதாரத்தை ஒடுக்க அரசாங்கங்களும் தனியார் கம்பெனிகளும் விளம்பரங்களில் கைவைப்பது வழக்கம்.

எந்த எதிர்ப்பையும் விமர்சனத்தையும், போராட்டத்தையும் ஒடுக்க அதன் அடிப்படையாக இருக்கக்கூடிய வருமானத்தில் கைவைப்பதுதான் ஒடுக்குவோரின் நடைமுறை. கூடன்குளம் போராட்டத்தையும் ஒடுக்க அங்குள்ள மக்களின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் தடை முயற்சிகளில் அரசு ஈடுபடத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வரத் தொடங்கியுள்ளன. பொருளாதாரரீதியாக தாக்கு பிடிக்கும் சக்தி இருந்தால் மட்டுமே எந்த எதிர்ப்பையும் வெல்ல முடியும். அந்த சக்தி பெரும்பாலான எதிர்ப்பு இயக்கங்களுக்கு இல்லையே என்பது கவலையாக இருக்கிறது.

இந்த வார வேண்டுகோள்:

தி.மு.க ஆட்சிக்காலத்தில் சென்னையில் நடத்தப்பட்ட சங்கமம் நிகழ்ச்சி தொடர்பாக பல முறைகேடுகள், விமர்சனங்கள் இருந்தாலும், கிராமியக் கலைகளை ஊக்குவிக்கவும் நகரில் அறிமுகப்படுத்தவும் அவை உதவும் என்பதால், ஜெயலலிதா அரசு வரும் ஜனவரியில் அவற்றை கைவிடாமல் நடத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும், சைதை துரைசாமி தலைமையிலான புதிய மாந்கராட்சியும் சேர்ந்து அதை நடத்த முடியும்.

கல்கி 29.10.201

இடமின்மையால் கீழ்க் கண்டவை கல்கியில் வெளியாகவில்லை:

இந்த வாரம் ரசித்தது:

உள்ளாட்சித்தேர்தலில் முதல் இடத்தில் அ.தி.மு.கவும், இரண்டாம் இடத்தில் தி.மு.கவும் வந்து என்ன பயன் ? அந்தத் தலைவர்கள் சந்தோஷமாகவா இருக்கிறார்கள் ? ஒருத்தர் பெங்களூர் கோர்ட்டுக்கும் இன்னொருத்தர் டெல்லி கோர்ர்ட்டுக்கும் போய் நின்று கொண்டிருக்கிறார்கள் – ம.தி.மு.க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் – தொலைக்காட்சியில் சொன்னது.

இந்த வார சந்தேகம்:

உள்ளாட்சி தேர்தலில் சில ஊர்களில் இரு வேட்பாளர்கள் சமமான எண்ணிக்கையில் ஓட்டு வாங்கியதால், இருவரில் வென்றவர் யார் என்பதை பஞ்சயத்து ராஜ் சட்டத்தின் கீழ் சீட்டு குலுக்கிப் போட்டு முடிவு செய்யப்பட்டது என்று செய்திகள் வந்துள்ளன. எப்படி சட்டமே இப்ப்டி ஒரு நடைமுறையை வைத்திருக்க முடியும் ? சீட்டு குலுக்கி முடிவு செய்யலாம் என்றால், தேர்தலே நடத்த வேண்டாமே. வேட்பு மனு தாக்கல் முடிந்ததுமே சீட்டு குலுக்கி விடலாமே ? இருவர் சம ஓட்டு வாங்கினால், அடுத்த இரண்டரை ஆண்டு ஒருவர், மீதி இரண்டரை ஆண்டு மற்றவர் பதவியிலிருப்பார் என்று முடிவு செய்வதுதானே நியாயம் ?

———————–