September 28, 2011

ஞாபக சக்தி குறைபாட்டை தவிற்க சில தகவல்கள்.

ஞாபக சக்தி குறைவு என்பது இப்போது பெரியவர்களுக்கு மட்டுமல்ல பள்ளிக்கூடம் செல்லும் சிறவர்களுக்கும் இதன் பாதிப்பு இருக்கிறது.பெரும்பாலும் உணவு முறை மற்றும்,மனக்கவலைகள் காரணமாகத்தான் இந்த குறைபாடு தோன்ற காரணம். உணவு
வகைகளில் சில மாற்றங்களை மேற்கொண்டு உணவு உண்ணும் பழக்கத்தை மேற்கொண்டால் கூடுமானவரைக்கும் ஞாபக சக்தி குறைபாட்டை தவிற்கலாம்.


அதற்கான சில வழிமுறைகள் இதோ.



1.ஞாபக சக்தி அதிகரிக்க நாள்தோறும் காலையில் ஐந்து நிமிடம் தியானம் செய்வது நல்லது.


2.வாரம் ஒரு முறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறு சுறுப்பாகத் திகழ்வார்கள். நகரங்களில் இருப்போற்கு வல்லாரை கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு.அவர்கள் வல்லாரை கேப்ஸ் யூல்களைப் பயன்படுத்தலாம்.

3.சிறுவர்களுக்கும் ,பெரியவர்களுக்கும் நாள்தோறும் காலையில் தண்ணீரில் ஊறபோட்ட பாதாம் பருப்பை அரைத்து உட்கொள்ள தரலாம். 100 கிராம் பாதாம் பருப்பில் 490 மில்லி கிராம் பாஸ்பரஸ், தாது உப்பு இருக்கிறது. குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது.


4. இருபது கிராம் அக்ரூட் பருப்புகளுடன் பத்து கிராம் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். செலவில்லாமல் சாப்பிட 50 கிராம் வேர்க்கடலை போதும்.


5. ஞாபக சக்தியை அதிகரிக்கும் முதல் பழம் ஆப்பிள். இரண்டாவதாக பேரீச்சை, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு முதலியன.


6. சமையலில் சீரகம், மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம் பெறவேண்டும். இவை மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன.


7. கோதுமை, சோளம், பார்லி, காராமணி, பாசிப்பருப்பு, கேரட், தண்டுக்கீரை, பீட்ரூட், முருங்கைக்காய், சோயாபீன்ஸ், வெங்காயம், வெள்ளைப் பூண்டு, புதினா முதலியவற்றில் பாஸ்பரஸ் உப்பு அதிக அளவில் உள்ளது.இவை தவிர பால், தயிர் போன்றவற்றையும் உணவில் சேர்க்க வேண்டும்.


சத்தான உணவு வகைகள் உண்பதன் மூலம் ஞாபக சக்தி குறைபாட்டிற்கு நிவாரணம் கிடைத்தாலும், நாமும் கூடுமானவரை தேவையில்லாத கவலைகளையும்,பிரச்சனைகளையும் மூளைக்கு அனுப்பாமல் இருந்தாலே ஞாபக சக்தி குறைபாட்டை கொஞ்சம் தவிற்கலாம்.

No comments: