April 8, 2014

கேவலமான அரசியல் அதிகாரிகள்

அரசியல்வாதிகள் மக்களிடம் கும்பிடு போடுகிறார்கள்,மக்கள் அரசு
அதிகாரிகளிடம் கும்பிடு போடுகிறார்கள் அல்லது மக்கள் கும்பிடு போட
வேண்டுமென அதிகாரிகள் காட்டாயமாக எதிர்பார்க்கிறார்கள்,அதே அரசு
அதிகாரிகள் அரசியல்வாதிகளிடம் கூழைகும்பிடுப்
போட்டுத்திரிகிறார்கள்.எவருக்குமே மனிதாபிமானமும் இல்லை இரக்கமும்
இல்லை.குறிப்பாக அரசு அதிகாரிகளுக்கு.
இரண்டு நாட்களுக்கு முன் என் மாமா வாகன விபத்தில் மரணமடைந்து
விட்டார்.சாலைன் ஓரமாக நடந்துசென்று கொண்டிருந்த அவர் மீது அதுமீறலாக
வாகனத்தில் அலங்கார வளைவை ஏற்றி வந்ததால் அதில் ஒரு பகுதி வெளியே
நீட்டிக்கொண்டிருந்திருக்கிறது அப்பகுதி மோதியதால் சுழற்றப்பட்ட அவர்
வாகனச் சக்கரங்களுக்கிடை விழுந்ததால் கோரமே நிகழ்ந்து விட்டது..இதற்கு
முதல் காரணம் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்காத
அதிகாரிகள்தான்.எத்தனையோ விபத்துகள் இப்படி நடந்தும் அதிகாரிகள்
மெத்தனமாகவே இருக்கின்றனர்.அடுத்தவனிடம் பிடுங்கி தின்னும் இவர்களிடம்
நீதியையும்,ஒழுக்கத்தையும் எதிர்பார்ப்பது நம் தவறுதான்..
பதறிப்போய் உடலை அரசு மருத்துவ மனைக்கு எடுத்து சென்றால் மருத்துவர்
இல்லை சாவி இல்லை என உடலை அவசர ஊர்தியிலேயே காத்திருக்க வைத்துவிட்டு
சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.காரணம் பதிறிய உறவுகள் அவர்களிடம் இன்னும்
பணத்தை நீட்டவில்லை.உறவுகள் கோபத்தோடு எதிர்க்கையில் உடலை
மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்..அடுத்ததாக மருத்துவர்
வருகிறார்.இவர்கள் கோபப்பட்டதை அறிந்த மருத்துவர் நீங்கள் எப்படி
கோபப்படலாம் நான் நினைத்தால் இவர் குடித்து விட்டு வாகனத்தில் விழுந்து
விட்டார் என அறிக்கையை மாற்ற முடியும் என மிரட்டியிருக்கிறார்.இதைக்கேட்ட
உறவுகள் அதிர்ந்தே போய்விட்டார்கள்.இழந்த வேதனையில் இருந்தவர்களிடம் ஒரு
அரசு மருத்துவர் பேசும் பேச்சு இது..இறுதியில் உறவுகளை மன்னிப்பு கேட்க
வைத்தபின்தான் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார் அந்த மனிதம்
கொன்ற மருத்துவர்..இந்த சம்பவம் நடைப்பெற்றது குமரி மாவட்டத்தின்
குழித்துறை அரசு மருத்தவமனையில்..
.
அடுத்ததாக தக்கலை நகர காவல் நிலையம் .
புகார் கொடுக்கச் சென்றவர்களிடம் பேப்பர் வாங்கிட்டுவா,கார்பன் பேப்பர்
வாங்கிட்டுவா, பென் வாங்கிட்டுவா என அலக்கழித்துவிட்டு ஐநூறு ரூபாய்
கேட்டிருக்கிறார்கள் அதை வாங்கிக் கொண்ட பின்புதான் புகார் எழுதவே
அனுமதித்திருக்கிறார்கள்.இப்படி ஒவ்வொரு அதிகாரிகளை கடந்து வருகையில்
பிச்சைக்காசு ஆயிரத்து எண்ணூறு ரூபாபாய் பெற்றுக்கொண்டுதான் கடமையை
நிறைவேற்றியிருக்கிறார்கள் கடமை தவறா அதிகாரிகள்..விபபத்து நடந்த இடத்தை
பார்வையிட வந்த அதிகாரி பெட்ரோல் செலவு என அறுநூறு ரூபாய் பிச்சை
எடுத்திருக்கிறார்..
இப்படி நம் அரசு இயந்திரமும் அதன் உதிரிப்பாகாங்களும் மக்களுக்காக
இயங்குறோம் என சொல்லிக்கொண்டு மக்களின் ரத்தத்தையும் கண்ணீரையும்
எரிபொருளாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்...
.
இப்படிப்பட்ட கொடும்நிகழ்வுகளை பார்த்த கேட்ட பலர் உள்ளுக்குள்
கொந்தளித்து அதை எழுத்தாக மட்டுமே கொண்டு வர முடிகிறது..சுத்த
கையாலாகாத்தனம்தான் என்ன செய்வது நானும் சராசரி ஆயிற்றே...
.
.
பின் குறிப்பு..
குமரி மாவட்ட நண்பர்கள் இதை படித்தால் தயவு செய்து பகிரவும்...