September 30, 2011

இணையத்தின் சக்கரவர்த்தி கூகுல்.பாகம் ஐந்து.

கூகுல் பல்வேறு விதமான வசதிகளை பயனாளர்களுக்கு வழங்கி வருகிறது. அவைகளில் மின்னஞ்சல் சேவை வழங்கும் ஜிமெயிலின் பணி மகத்தானது.ஜிமெயில் பற்றி சில முக்கிய தகவல்கள்.



ஜிமெயில்


ஜிமெயில், ஏப்ரல் 1 , 2004 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப் படுத்தப்பட்ட காலப் பகுதியில் இச்சேவைகளைப் பெற்றுக்கொள்ள ஜிமெயில் மின்னஞ்சல் சேவையை ஏற்கனவே பயன்படுத்துபவரின் அழைப்பிதழ் தேவை. ஆரம்பத்தில் அமெரிக்காவில் அழைப்புக்கள் குறுஞ்செய்திகள் வழியாக வழங்கப்பட்டது. தொடக்கத்தில், 1 GB அளவாக இருந்த சேமிப்புத் திறன் ஏப்ரல் 1, 2005 முதல், ஜிமெயிலின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக 2 GB ஆக கூட்டப்பட்டது.(தற்போதைய சேமிப்புத் திறன் 8GB SEP,2011 )ஆரம்பத்தில் இதன் வளர்ச்சி வீதம் கூடுதலாகவே இருந்தது. இதன் தற்போதைய வளர்ச்சி விகிதம் நாளுக்கு 3.348 மெகா பைட் ஆகும்.
ஜிமெயில் ஏஜாக்ஸ்ஸை மிகப்பெருமளவில் பயன்படுத்துகின்றது. தற்கால உலாவிகளின் ஜாவாஸ்கிரிப்ட் முறையைப் பயன்படுத்தி சிறந்த பயனர் அனுபவத்தைத் தருகின்றது. இதற்கு இன்டநெட் எக்ஸ்ப்ளோரர் 5.5, பயர்பாக்ஸ் 0.8+, மொஸிலா அப்ளிக்கேசன் ஸ்யூட் 1.4+, சவாரி 1.2.1+, நெட்ஸ்கேப் 7.1+, ஒபேரா 9+, ஆகிய உலவிகள் மூலம் பயன்படுத்தப்பட்டது .பழைய உலாவிப் பதிப்புகளில் இன்ரநெட் எக்ஸ்ளோளர் 4.0+, நெட்ஸ்கேப் 4.07+, ஒபேரா 6.03+ அடிப்படை HTML பார்வையைத்தரும் . ஜிமெயில் நகர்பேசிகளில் WAP முறையிலும் அணுகக்கூடியது.
ஏப்ரல் 12 , 2006 முதல் கூகிள் காலண்டர் சேவையையும் இணைத்துக் கொண்டது.



ஜிமெயிலின் அந்தரங்கத் தன்மை Privacy policy குறித்துக் கேள்விகள் எழுந்துள்ளன. ஜிமெயில் மின்னஞ்சல் கணக்குகள் அழிக்கப்பட்ட பின்னரும் சிறிது காலத்திற்கு இவை பாதுகாக்கப்படும். மேலும் பொதுப் பாதுகாப்பிற்காக மின்னஞ்சல் படிக்கக் கூட கொடுக்கப்படும்.
இது பெரும்பான்மையோருக்கு பிடிக்கவில்லை என்றாலும் ஜிமெயிலின் புது புது வசிதிகளுக்காக பயன்படுத்துகின்றனர்.


ஜிமெயில் தற்போது, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் இடைமுகத்தை அளிக்கின்றது. அரபு , பல்கோரிய, குரோத்தியன், செக், டெனிஸ், டச்சு , எஸ்தோனிய, பினிஷ் , பிரெஞ்சு , ஜெர்மன் , கிரேக்கம் , ஹீத்ரு, ஹிந்தி , ஹங்கேரியன் , ஐஸ்லாந்திக், இந்தோனேசியன், இத்தாலி, ஜப்பானிஷ், கொரியன், லத்வியா, லித்துவேனியா, போலிஷ் , போத்துக்கீசியன், உரோமானிய, ரஷ்யன், செர்பியன், சீனம், ஸ்லோவாக், ஸ்லோவேனியன், ஸ்பானிஸ், ஸ்வீடிஸ், ராகாலெக், தாய் , சம்பிரதாய சீனம் , துருக்கி , பிரிட்டீஷ் ஆங்கிலம் , அமெரிக்கன் ஆங்கிலம், உக்ரேனிய, வியட்நாமிய மொழிகளில் இடைமுகமானது வெளிவந்துள்ளது.






இன்னும் தேடுவோம்............

1 comment:

Ramya Parasuram said...
This comment has been removed by a blog administrator.