September 27, 2011

இணையத்தின் சக்ரவர்த்தி கூகுல்.பாகம் நான்கு.

கூகுல் பல்வேறு வகையான வசதிகளை தன் சொந்த முயற்சியில் மேற்கொண்டாலும், இணையத்தில் பிரபலமாக இருக்கும் நிறவனங்களை எந்த விலை கொடுத்தாவது கூகுலோடு இணைத்துக் கொள்வதை வாடிக்கையாகவே வைத்திருந்தது.

பிப்ரவரி 2003 ல் weblog இன் முன்னோடியும்"பிளாக்கர்"(blogger) ன் உரிமையாளரான "பைரா லாப்ஸ்"(Pyra Labs)ஐ சொந்தமாக்கிக் கொண்டது. உலக இணையத் தளத்தின் 84.7 சதவீத தேடுதல்களை 2004 ம் முற்பகுதியில் கூகிள் நிறுவனமானது யாகூ(YAHOO!), ஏ.ஓ.எல்.(AOL), சி.என்.என்(CNN)ஆகியவற்றுடன் கூட்டுச் சேர்ந்து ஒப்பந்தம் செய்திருந்தது, பின்பு 2004 ம் பிப்ரவரி ல் யாகூ விலகிக்கொண்டு தனது சொந்த தேடு பொறியை தொடங்கிற்று. யாகூ விலகிக் கொண்டது கூகிள் நிறுவனம் சந்தித்த ஒரு பெரிய சவாலாக இருந்த போதிலும் G-mail,orkut, மற்றும் புதிய பல யுக்திகிள் மூலமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது.அத்துடன் கூகிள் நிறுவனம் தனது நீண்டகால ஆராய்ச்சிக்கான "நாஸா"(NASA) கூட்டு ஒப்பந்தம் 2005 செப்டம்பரில் கையெழுத்தானது இந்த கூட்டு ஆய்விற்கான கட்டிடத்தின் பரப்பளவு 11 இலட்சம் சதுரஅடிகள் ஆகும்.


இணையத்திற்கான கூட்டு "ஏஓஎல்"(aol) லுடன் டிசம்பர் ல் உருவாக்கிக் கொண்டது. மேலும்,"சன்மைக்ரோ" உடன் தொழில் நுட்ப்பத்தை பகிர்ந்து கொள்வதோடு, கூகுல் நிறுவனம் தனது ஊழியர்களை "ஓப்பன் ஆபிஸ்"(OpenOffice.org)நிறுவன வேலைகளிலும் வாடகைக்கு அமர்த்தி உள்ளது. இதனிடையே 2004 க்கும் 2006 ஆம் வருட இறுதிக்கும் உள்ள கால கட்டத்தில் பல மென்பொருள் முன் மாதிரி நிறுவனங்களையும்(Trendalyzer,Upstartle,AdscapeMedia)ரேடியோ விளம்பர நிறுவனம்"டிமார்க்"(dMarc)யும் தம்வசமாக்கிக் கொண்டதுடன் $900 விளம்பர உடன்பாட்டை "மைஸ்பேஸ்"(MySpace) உடன் செய்து கொண்டது . கூடவே, 2006 ன் இறுதியில் யூ டியூப்"(You Tube) என்ற மிகவும் பெயர் பெற்ற இணையத்தளத்தை $1.65 பில்லியனிற்கு கூகுலால் வாங்கப்பட்டது.
,இத்துடன் விக்கி தொழில் நுட்பத்தை வடிவமைத்த JotSpot சொந்தமாக்கப்பட்டது.இத்துடன் நிற்காமல் 2007 ஏப்ரலில் $3.1பில்லியன்கொடுத்து "டபுல் கிளிக்"(Double Click)ஐ வாங்கிக் கொண்டதோடு 2007 ஜூலை 9 ல்"பெஸ்டினி"யையும் கொள்முதல் செய்து கொண்டது.


இத்தனைக்கும்மத்தியில் தனது பரம எதிரியான மைக்ரோசாப்ட்'(MicroSoft) ன் திறமையான பணியாளர்களை தம் வசம் ஈர்த்ததுடன் அந் நிறுவனம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கினை நீதிமன்றத்திற்கு வெளியே இரகசியமாக 2005 டிசம்பர் 22 ல் தீர்த்தும் கொண்டது.
கூகுல் நிறுவனம் 2006 ல் "mobi"எனப்படும் கைத் தொலைபேசி இணைய முகவரி தோற்றத்திற்கு காரணகர்த்தாவாகவும், முதலீடு அளித்த நிறுவனமாகவும் முன் நிலைபடுத்தியதோடு 'கூகுல் மொபி இன் உரிமையாளராகவும் கூகுல் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


2004 ல் இலாபம் ஈட்டாத"கூகுல்.Google.org ஐ நிறுவியதோடு ஆரம்ப நிதியாக $1 பில்லியன் வைப்பு செய்யப்பட்டது. இந்நிறுவனத்தின் முக்கிய பணிகளாக, சூழல் வெப்பமாகுதலை தடுத்தல்,உலக சுகாதாரம்,உலக வறுமை ஒழிப்பு என்பன உள்ளடக்கப் பட்டுள்ளது.அத்துடன் இந்த அமைப்பின் முதல் திட்டமாக மின்சாரத்தில் இயங்கும் வகனங்களை வடிவமைக்கும் திட்டம் டாக்டர்.லாரி தலைமையில் தொடங்கப் பட்டுள்ளது.

இன்னும் எத்தனையோ எண்ணிலடங்காத புத்தாக்கங்களை வெளியிட்டிருக்கிறது. இன்றும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.




இன்னும் தேடுவோம்.........

No comments: