December 15, 2010
December 13, 2010
28.10.2009 அன்று குமுதம் இதழில் ஞானி எழுதிய கட்டுரை
மூன்று மனக்குடைச்கல்கள்????
அரசியல் செல்வாக்கு,பணம் இவை இரண்டு மட்டும்தான் துணைவேந்தர் நியமனங்களில் இன்று செல்லுபடியாகக்கூடியவை.இரண்டு துணைவேந்தர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு இன்னும் நிலுவையில் உள்ளன.
பதவி ஏற்றதுமே ஒரு துணை வேந்தர் அறிவித்தார்!முதல்வர் கருணாநிதியின் அனைத்து படைப்புகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நோபல் பரிசுக்கான கமிட்டிக்கு அனுப்பி வைக்கும் பணியை அவரது பல்கலைக்கழகம் செய்யுமாம்.இப்போது புது நியமனமாகியிருக்கும் ஒரு துணைவேந்தர் அறிவித்திருக்கிறார்!பெரியார்,அண்ணா,கலைஞர் மூவரின் சிந்தனைகள் பற்றியும் தனித்தனியே முதுகலைப்படிப்பை அவரது பல்கலைக் கழகம் அறிமுகப்படுத்துமாம்.பெரியார் சரி அவர் சுயமான சிந்தனையாளர்.அவர் சிந்தனைகளைப் படிப்பது பயனுள்ளதுதான்.அண்ணா பெரியார் அளவுக்கு வரமாட்டார் என்றாலும் பரவாயில்லை இருந்துவிட்டுப் பொகட்டும்.ஆனால் கலைஞர்?அவருடைய சுயமான சிந்தனை எல்லாமே சுயநலச் சிந்தனைகளாக மட்டும் இருந்ததுதானே ஐம்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கை வரலாறு?என்ன பாடத்திட்டம் போடுவார்கள்?
நேர்மையாக போடுவதானால் இப்படித்தான் போட வேண்டும்.
செமஸ்டர்.1.குடும்பவியல் சிந்தனைகள்!இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக அரசு உயர் பதவியில் இருப்பவருக்கு மனைவி, துணைவி என்ற இரு உறவுகள் இருப்பதைப் பொதுமக்கள் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் கருத்தாக்கங்களாக எப்படி நடைமுறைப்படுத்தினார் என்று ஆராயப்படும்.சொந்தவாரிசுகள்,மருமான் வாரிசுகள்,குடும்பவாரிசுகள் ஆகியோரிடையே ஏற்படும் முரண்பாடுகளைக் களைந்து அனைவரும் பதவி, அதிகாரங்களை எப்படு எந்த விகிதத்தில் பகிர்ந்து அளித்தால் சமாதான சகவாழ்வு சாத்தியப்படும் என்ற குடும்பத் தலைவரின் சாணக்கியச் சிந்தனைகள் ஆராயப்படும்.
செமஸ்டர்.2.கட்சி அமைப்புச் சிந்தனைகள்!உட்கட்சி ஜனநாயகம் என்பது உயர் பதவிக்கு வரும் வாய்ப்பை ஏற்படுத்துவதல்ல மாறாக எல்லோருக்கும் ஆட்சி அதிகார சுகங்களில் அவரவர் நிலைக்கேற்ற பங்குகளை அனுபவிக்க வழி வகுப்பது என்ற அடிப்பையில் ஊழலில் ஜனநாயக சோசலிசத்தை அறிமுகம் செய்த பாங்கு ஆராயப்படும்.
செமஸ்டர்.3.மானிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற சமஷ்டி சித்தார்ந்த சிந்தனைகள்?மாநிலத்தில் சுயநல ஆட்சி தொடரும் விதத்தில், பாதிக்கப்படாத விதத்தில மத்தியில் உள்ளோர் அனுமதிக்கும் வரை அவர்களுடைய சிந்தனைகளை நம் சிந்தனைகளாக எப்படி சுவீகரித்துக்கொண்டு கூட்டாட்சி நடத்தலாம் என்று ஆராயப்படும்.
செமஸ்டர்.4.மொழிச்சிந்தனைகள்!ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தாய்மொழிக்கல்வியை குழி தோண்டி புதைத்து விட்டு அந்தக் கல்லறை மீது அமர்ந்து எட்படி கண்ணீர் வடிப்பது என்ற சோதனைகள் இந்த செமஸ்டரில் இடம்பெறும்.திரைப்படத்துக்கு தமிழ்ப் பெயரிட்டால் வரிவிலக்கு என்று அறிவித்து விட்டு படத்தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்களுக்கு மொழி விலக்கு அளிக்கும் முரண்பாடுகள் மக்கள் கண்ணில் உறுத்தாமல் அவர்கள் கவனங்களை மானாட மயிலாட போன்ற பண்பாட்டு நிகழ்ச்சிகள் வாயிலாகத் திருப்புவது எப்படி என்ற உத்திகள் ஆராயப்படும்.
செமஸ்டர்.5.பகுத்தறிவுச் சிந்தனைகள்!ஒவ்வொரு ஊழல்கள் பற்றியோ, அராஜகம் பற்றியோ,நிர்வாக முறைகேடு பற்றியோ முணுமுணுப்பாக விமர்சனங்கள் எழும்போதல்லாம் அவற்றிலிருந்து மக்கள் கவனத்தை திருப்ப எப்படு மக்கள் கவனத்தை திருப்பலாம் எப்படி பகுத்தறிவை பயன்படுத்தலாம் என்பது பற்றிய தந்திரோபாய சிந்தனைகள் ஆராயப்படும்.சூத்திரர் ஆட்சி, நெஞ்சில் தைத்முள் போன்ற காவியச் சொற்கள் எப்படு முகமூடிகளாகப் பயன்படக்கூடியவை என்பது பற்றிய சோதனை வகுப்புகள் இந்த செமஸ்டரில் இடம்பெறும்.
இன்னும் ஏழு செமஸ்டர்களுக்கான சரக்குகள் இருப்பதால் பாடத்திட்டத்தை இளங்கலையிலிருந்தே தொடங்கி முதுகலை முனைவர் பட்டம் வரை விரிவுபடுத்தலாம் என்று துணைவேந்தருக்கு பரிந்துரைக்கிறேன்.படிக்கிறவனுக்கு பொழுது போக்குக்காவது பாடம் இருக்கட்டும்.
மனக்குடைச்சல.2.
படித்த நடுத்தர வர்கத்தினர் துளியும் சமூக அக்கரையற்றவர்ரளாக நடமாடுவதைக் காணும்போதல்லாம் இது எப்போதுதான் மாறும் என்ற மனக்குடைச்சல் அதிகமாகிறது.
மேற்கு வங்கத்தின் மூர்சிதாபாதில் பதினாறு வயதுச் சிறுவன் பாபர் அலியின் சாதனையை படித்த போது நெஞ்சு நெகிழ்கிறது. வீட்டிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அரசு பள்ளிக்குச் சென்று படித்து விட்டு வரும் பாபர் அலி வீடு திரும்பியதும் அங்குள்ள குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கிறான் .ஒன்பது வயதில் டீச்சர் ஸ்டூடன்ட் விளையாட்டாக அவன் துவங்கிய இந்ண பள்ளிக் கூடம் இன்று வேலைக்கு போய் வரும் அறுநூறு குழந்தைகளுக்கான பாடசாலையாகிவிட்டது.
இதைப்பற்றி பி.பி.சி படம்பிடித்து காட்டினப் பிறகுதான் நமக்கு தெரியவருகிறது.நம் தொலைக்காட்ச்சிகளுக்கு இந்த மாதிரி நிகழ்ச்சிகளே தேவையேயில்லையே. குழந்தைகளை அழ வைத்து சூப்பர் சிங்கராக்கி டி.ஆர்.பி ரேட்டை எப்படி ஏற்றுவது என்பதில்தான் குறியாக இருக்கிறார்கள். அதற்கு குடும்பம் குடும்பமாக ஒத்துளைக்கிறோம்.
மனக்குடைச்கல்.3.எந்த நாளும் நிலைத்திடும் நூலொன்றுமில்லை என்பான் பாரதி. உண்மைதான் சில அடிப்படை மனித உணர்ச்சிகளைச் சொல்லும் படைப்புகள் மட்டுமே எந்த நாளிலும் அர்த்தமுள்ளதாகத் தோன்றும்.
நன்றி ஞானி அவர்கள் மற்றும் குமுதம் வார இதழ்
Subscribe to:
Posts (Atom)