December 10, 2010
இளந்தொழிலதிபர்களுக்கு ஓர் ஆலோசனை.ஷங்கர் மருவாடா
நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ அதில் உங்களுக்கு விருப்பமில்லையென்றால்,நீங்கள் ஓரு தவறான இடத்தில் இருக்கிறீர்கள் என்று பொருள்.இரண்டாவது தைரியம்.குழு உங்களுடனே நின்றுவிடும் மேலே நகராது.வாய்ப்புகளை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் தேர்வு ஒரு வேளை தவறாக போனாலும் நீங்கள் வெல்லும்போது உங்கள் கடந்தகாலத் தோல்விகள் எல்லாம் கழுவிக் களையப்பட்டுவிடும்.
நீங்கள் பல கதாபாத்திரங்களை ஏற்க வேண்டியிருக்கும்.தம்முனைப்பு உள்ளவராகவும்,அதே சமயம் தன்மையானவராகவும் இருக்க வேண்டியிருக்கும்.நீங்கள்தான் ஒன்றைச் செய்கிறீர்கள்,உங்கள் பின்னால் நீங்களேதான் இருக்கவும் வேண்டியிருக்கிறது.நீங்களே வழி நடத்த வேண்டும்,நீங்களே உங்களுக்கு பக்கபலமாகவும் இருக்கவும் வேண்டும்.ஒரு முக்கியமான வாடிக்கையாளர் வருகை தரும் நாளன்று உங்கள் டாய்லெட்டைச் சுத்தம் செய்யும் நபர் வரவில்லையென்றால்,நீங்கள்தான் அதைச் சுத்தம் செய்ய வேண்டும். இதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை.
வேலை அனுபவம் எங்கள் விசயத்தில் உதவி புரிந்தது.ஒரு கலாச்சாரத்தின் மீது கவனத்தைச் செலுத்துவது என்பது முன்பு நான் பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து கற்று கொண்டதுதான்.மதிப்பீடுகளிலும் நன்னெறிக் கோட்பாடுகளிலும் அதிக அளவு கவனம் செலுத்துவது ஓர் அற்புதமான கலாசாரம். ஆய்வுகள் பற்றி எனக்கு என்னவெல்லாம் தெரியுமோ அவையெல்லாம் ப்ராக்டர் அண்ட் கெம்பிளிலிருந்து கிடைத்தவைதான்.
ஒன்றைப் பற்றிய சிறிதளவு ஞானம்கூட இல்லாமல் பேரார்வம் என்பது வராது.ஆனால் எல்லோருக்கும் பொருந்தக்கூடிய ஒரே அளவு என்பது இல்லை.திறமைசாலிகளை நீங்கள் எப்போதுமே வேலைக்கு எடுத்துக்கொள்ள முடியும்.
தனியார் முதலீட்டாளர்களைத் தவிர ஒரு தொழிலதிபருக்கு ஒரு தேவதையும் தேவை.ஆரம்பக்கட்டத்தில் ஒன்றைத் தொடங்குவதற்காக கொஞ்சம் விதை நிதி உங்களுக்குத்தேவை.அதை உங்கள் நண்பர்களிடமிருந்து, குடும்பத்தாரிடமிருந்து பெறமுடியும்.உங்கள் யோசனையைச் செயல்படுத்தி நிரூபித்துக் காட்டப் போதுமான அளவு உங்களுக்கு பணம் தேவை. உங்கள் விருப்பம் என்ன என்று நீங்கள் அறிகிற போது உங்கள் யோசனை நிரூபிக்கப்படுகிறபோது,தனியார் முதலீடுகள் கட்டாயம் வரும்.உங்கள் தொழிலை மேலும் வளர்க்க அவர்களின் முதலீடுகளைப் பெறுவதுதான் சிறந்த வழி என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.ஆனால் வெளித்தலையீடுகளையும்,கட்டுப்பாடுகளையும் ஒப்புக்கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
நன்றி
ஷங்கர் மருவாடா,
தமிழாக்க ஆசிரியர்,
ரவிபிரகாஷ்,
நூல்,முயற்சி திருவினையாக்கும்
ஓர் ஆலோசனை
தொழிலதிபர்களாக ஆகவிருப்பவர்களுக்கு ஓர் ஆலோசனை. மூன்றாண்டு விதியைவிட மேலான உண்மைத் தத்துவம் வேறு இருக்க முடியாது. ஒரு தொழிலில் மூன்று ஆண்டுகள் உங்களால் தாக்குப் பிடிக்க முடிந்தால், நாலாவது ஆண்டு இன்னும் மேலேறி ஓடிக்கொண்டு இருப்பீர்கள்.ஒரு வேலையில் இருந்து கொண்டுருப்பதைவிட ஒரு தொழிலதிபராக நீங்கள் இன்னும் சிறப்பாக செயல்படுவீர்கள்.என்னுடைய மூன்று சொந்த முயற்சிகளிலேயே இது நிகழ்ந்ததைப் பார்த்திருக்கிறேன்.அவற்றின் ஆரம்ப நிலைகளில் என்னை மிகவும் ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறேன்.தொடர்ந்து ஏராளமான நண்பர்களோடு அந்தத் தொழில்கள் மிகச் சிறப்பாக ஆனதையும் பார்த்திருக்கிறேன். நான்கு மற்றும் அதற்கு மேலான ஆண்டுகள் தொழிலதிபர்களாக இருப்பவர்களுக்கு உங்களிடமிருந்து எனக்கொரு ஆலோசனை தேவை.ஒரு நிறுவனம் உங்களோடு இருந்ததைவிட நீங்கள் இல்லாத போது இன்னும் சிறப்பாகச் செயல்படும்படியாக அதைவிட்டு விட்டு எப்படு அதிலிருந்து வெளியேறப் போகிறீர்கள்?
இந்தப் பெரிய உலகத்திற்கு என்னுடைய ஆலோசனை முதல் ஆளாக கொடுப்பதில் உள்ள சந்தோசத்தை அனுபவியுங்கள்.அதற்கு முயற்சியாவது செய்யுங்கள்.தேவைப்படுபவர்களுக்கு உங்கள் நேரத்தைக் கொடுங்கள், பணத்தைக் கொடுங்கள்,திறமையைக் கொடுங்கள்.அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்த உதவுங்கள்.நம்புங்கள் அதில் உங்களுக்கு கிடைக்கும் சந்தோசம் வேறு எதையும் விட அதிகமாகவே இருக்கும்.
சொன்னவர்
வெங்கட் கிருஷ்ணன்
கிவ் இந்தியா.
December 6, 2010
என்ன செய்யலாம்?
உலகில் பணம்இருந்தால் எந்த பாவ காரியங்களோ,தவறுகளோ,கொடுமைகளோ ,வரம்பு மீறல்களோ எதை வேண்டுமானாலும் பயமின்றி செய்யலாம்.அதற்கு ஒரு சின்னச் உதாரணம் எனக்கு நேற்று நடந்த சம்பவத்தைச் சொல்லலாம்.இரவு எட்டு மணியிருக்கும் நான் நான்கு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தேன். ஒரு சிக்னல் அருகே வரும்போது மஞ்சள் வண்ண விளக்கு எரிந்து கொண்டிருந்தது அதனால் நிறுத்தக் கோட்டைத் தாண்டிச் சென்றுவிட்டேன்.தாண்டிவிட்டேனென்றால் ஒரு பத்தடி முன்பாக சென்றிருப்பேன் அவ்வளவே.திடீரென வாகனத்தின் முன்னால் போக்குவரத்து பணியாளர் ஒருவர் கையை நீட்டிக்கொண்டு நின்றார்.நான் வாகனத்தை நிறுத்தி விட்டேன்.வாகனத்தை ஓரமாக விடச்சொன்னார் நானும் அவ்வாறே செய்தேன் .பின்பு அருகில் வந்த அந்த ஆள் சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருப்பது உனக்கு தெரியவில்லை குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகிறாயா என மிரட்டலாக கேட்டார்.ஆனால் உண்மையில் நடந்தது நான் மஞ்சள் விளக்கு எரிந்து கொண்டிருந்த போதுதான் நிறுத்தக்கோட்டை கடந்தேன் .ஆனால் நான் கடந்த சில வினாடிகளிலேயே சிகப்பு விளக்கும் எரிந்திரிக்கிறது. அதை நான் கவனிக்கவில்லை.இதை அந்த ஆளிடம் சொன்னால் காதில் வாங்கமாட்டான் அதனால் சொல்லாமல் இருப்பதே நலமென அமைதியாக இருந்து விட்டேன்.பின்பு அந்த ஆள் என் முகத்தினருகிலே வந்து ஊதச்சொன்னார் நானும் ஊதினேன்.நான் குடிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். பின்பு ஓட்டுனர் உரிமம் இருக்கிறதா என்றார்.நான் இருக்கிறது என கூறிவிட்டு என் சட்டைப் பையிலிருந்து ஓட்டுனர் உரிமத்தை எடுக்க முற்பட்டேன்.அப்போது அந்த ஆள் என்னிடம் நூறு ரூபாய் கொடுத்துவிட்டுச் செல் என்கிறான். நான் அவனை பரிதாபமாக பார்த்தப்படியே அவ்வளவு பணம் என்னிடம் இல்லையே என்று அவனிடம் பொய் சொன்னேன் என்னிடம் இருந்ததோ வெறும் நூற்று நாற்பது ரூபாய்கள்தான் அதிலும் நூறு ரூபாயை அவனுக்கு தாரைவார்ப்பதா என யோசித்தேன்.அந்த யோசனைக்கே இடந்தராமல் மறுமுறை அவன் மிரட்டலில் பணத்தை கொடுத்தே விட்டேன். இதற்கு அடுத்ததாகத்தான் கவனிக்க வேண்டிய விசயமே இருக்கிறது.அது என்னிடம் ஓட்டுனர் உரிமத்தை கேட்டவன் பணத்தை பார்த்ததும் அந்த கடமையை மறந்து விட்டான்.மேலும் சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போதே சாலையை கடந்து செல்லுமாறு சைகையால் உத்தரவிடுகிறான்.வாங்கிய பணத்திற்கு விசுவாசமாம்.இப்படிப்பட்ட நல்லவர்களை என்ன செய்யலாம்.பணத்தைப் பார்த்ததும் கடமை காற்றில் பறந்துவிட்டது. இது ஒருச் சின்ன சம்பவம்தான் இருந்தாலும் சின்ன தவறுகள்தான் சமுதாயத்தை சீரழிப்பதற்ககு போதுமானதாக இருக்கிறது.இந்த தவறில் என்னுடை பங்கும் இருக்கிறது.ஆதலால் நானும் இப்போது குற்றவாளிதான் என்னை என்ன செய்லாம்?
Subscribe to:
Posts (Atom)