free mail

October 29, 2011

என்ன நடக்கிறது அன்ன ஹசாரே குழுவில்.

அன்னா ஹசாரே இயக்கத்தின் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பல்வேறு சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் இந்தக் குழுவை கலைத்துவிட்டு புதிய குழு அமைக்க அன்னா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதன் உயர்மட்டக்குழுவில் பிரபல வக்கீல் சாந்திபூஷன், அவரது மகன் பிரசாந்த் பூஷன், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி, வருமானவரித்துறை முன்னாள் அதிகாரி அரவிந்த் கெஜ்ரிவால், கர்நாடக மாநில லோக் ஆயுக்தா முன்னாள் தலைவர் சந்தோஷ் ஹெக்டே, சமூக ஆர்வலர் அக்னிவேஷ், மேதா பட்கர் உள்பட பலர் இடம் பெற்றிருந்தனர்.
மத்திய அரசின் உளவாளியாக செயல்படுவதாக அண்மையில் அக்னிவேஷ் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதை தொடர்ந்து அவர் அன்னாகுழுவிலிருந்து விலக்கப்பட்டார். அன்னா குழுவில் ஜனநாயகம் இல்லை என அக்னிவேஷ் குற்றம் சாட்டினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீர் பிரச்னையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அன்னா குழுவில் இடம் பெற்றுள்ள பிரபல வக்கீல் சாந்தி பூஷன் கருத்து தெரிவித்தார். இதற்கு அன்னா எதிர்ப்பு தெரிவித்தார். பிரசாந்த் பூஷனின் கருத்துகளில் தனக்கு உடன்பாடு இல்லை என மறுப்பு தெரிவித்தார்.
பிரசாந்த் பூஷனை உயர்மட்டக் குழுவிலிருந்து நீக்க வேண்டும் என பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அன்னாவுக்கு நெருக்கமான அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. வருமான வரித்துறையில் பணி செய்த போது, மேல் படிப்புக்காக சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்ததாகவும், மேல்படிப்பு முடித்தவுடன் பணியிலிருந்து நின்று விட்டதாகவும் கெஜ்ரிவால் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளிக்க கெஜ்ரிவால் கால அவகாசம் கேட்டுள்ளார். மேலும், அன்னா அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்ட நிதியை, தனக்கு சொந்தமான அறக்கட்டளைக்கு மாற்றிக் கொண்டதாகவும் கெஜ்ரிவால் மீது சர்ச்சை கிளம்பியது.
இதற்கிடையில் கிரண்பேடி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. விமானத்தில் சாதாரண வகுப்பில் பிரயாணம் செய்து விட்டு உயர்வகுப்புக்கான டிக்கெட் பணத்தை விழா குழுவினரிடம் வசூலித்துக் கொண்டதாக அவர் மீது புகார் எழுந்தது. தனது அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவதற்காக இவ்வாறு செய்ததாக கிரண்பேடி விளக்கம் அளித்தார். கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பி தந்து விடுவதாகவும் தெரிவித்தார். இதற்கிடையில் அவர் நடத்தும் இரண்டு அறக்கட்டளைகளுக்கு வருமானவரித்துறை நேற்று நோட்டீஸ் அனுப்பியது.
அரியானா மாநிலம் ஹிசார் இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக அன்னா குழுவினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.இதில் காங்கிரஸ் பலத்த தோல்வியடைந்தது. ஒரு கட்சிக்கு எதிராக தேர்தல் பிரசாரம் செய்தது தவறு என லோக் ஆயுக்தா முன்னாள் தலைவர் சந்தோஷ் ஹெக்டே கருத்து தெரிவித்தார். காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அன்னா குழுவிலிருந்து ராஜிந்தர் சிங் மற்றும் ராஜகோபால் ஆகியோர் விலகினர். அன்னா திசைமாறி செல்வதாக ராஜிந்தர்சிங் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் அன்னா இயக்கத்தின் உயர்மட்டக்குழு இன்று டெல்லியில் கூடுகிறது.
ஏற்கனவே மவுன விரதம் இருந்து வரும் அன்னா இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளார். சந்தோஷ் ஹெக்டேவும், மேதாபட்கரும் இன்றைய கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். குழு உறுப்பினர்கள் பல்வேறு சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் குழுவை கலைத்து விட்டு அரசியல் சார்பு இல்லாத புதிய உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைக்க அன்னாவுக்கு யோசனை வழங்கப்பட்டுள்ளது. சட்ட அனுபவமும், ராணுவ அனுபவமும் கொண்டவர்களை உறுப்பினர்களாக சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்று டெல்லியில் நடைபெறும் உயர்மட்டக்குழு கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.


இந்த செய்தியை படிக்கும் போது எனக்கு தோன்றியது ,ஆழும் வர்க்கத்தை எதிர்த்ததால் இந்த நிலையா இல்லை அரசியல் கட்சிகளில் ஏற்படும் உட்கட்சி பூசல் போல் அன்ன ஹசாரே குழுவிலும் ஏதேனும் பூசல் புகுந்து விட்டதோ?


ஊழலுக்கு எதிராக போராடியவர்கள் மீது ஊழல் புகார்கள்.என்ன கொடுமை சார் இது.செய்திகள்.www.dinakaran.com

October 28, 2011

இந்தியாவின் டாப் டென் கோடீஸ்வரர்கள்.

அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை இந்தியாவின் டாப் பாணக்கார மனிதர்கள் ஐம்பது பேரை பட்டியலிட்டிருக்கிறது.அதில் முதல் பத்து இடங்களில் வருவோரின் சிறு குறிப்பு.இந்த பட்டியலில் வரும் பெரும்பாலானோரின் சொத்து மதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு சில ஆயிரம் கோடிகளை இளந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.1.முகேஷ் அம்பானி,
சொத்து மதிப்பு.ரூபாய்.1,11,000 கோடி (22.6 பில்லியன் டாலர்)
ரிலயன்ஸ் குழுமம்.2.லஷ்மி மிட்டல்,
சொத்து மதிப்பு..ரூபாய்.94,080 கோடி (19.2 பில்லியன் டாலர்)
உலகின் முதல் தர இரும்பு உற்பத்தியாளர்.


3.அஸிம் பிரேம்ஜி,
சொத்து மதிப்பு...ரூபாய்.63,700 கோடி (13 பில்லியன் டாலர்)
விப்ரோ நிறுவனர்.4.சாஷி மற்றும் ரவி ருய்யா,
சொத்து மதிப்பு.ரூபாய்.49,980 கோடி (10.2 பில்லியன் டாலர்)
இவர்கள் இருவரும் சகோதரர்கள்.


5.சாவித்ரி ஜின்டால்,
சொத்து மதிப்பு.ரூபாய்.46,500 கோடி (9.5 பில்லியன் டாலர்)
இவர் ஒரு பெண் தொழிலதிபர்.ஜின்டால் குழுமம்.


6.சுனில் மிட்டல்,
சொத்து மதிப்பு.ரூபாய்.43,120 கோடி (8.8 பில்லியன் டாலர்)
பார்தி ஏர்டெல் நிறுவனர்.


7.கௌதம் அடானி,
சொத்து மதிப்பு.ரூபாய்.40,180 கோடி (8.2 பில்லியன் டாலர்)
அடானி குழுமம்.


8.குமார் மங்கலம் பிர்லா,
சொத்து மதிப்பு.ரூபாய்.37,730 கோடி (7.7 பில்லியன் டாலர்)
ஆதித்யா பிர்லா குழுமம்.


9.பல்போன்ஜி மிஸ்ரி,
சொத்து மதிப்பு.ரூபாய்.37,240 கோடி (7.6 பில்லியன் டாலர்)
சர்பார்ஜி பல்போன்ஜி குழுமம்.


10.அதி கோத்ரேஜ்,
சொத்து மதிப்பு.ரூபாய்.33,320 கோடி (6.8 பில்லியன் டாலர்)
கோத்ரேஜ் குழுமம்.மற்றும் 13 வது இடத்தில் அனில் அம்பானி இருக்கிறர்.2004 முதல் 2010 வரை டாப் பத்துற்குள் வலம் வந்தவர் இந்த வருடம் 13 ம் இடத்தையே பிடித்தார்.அதற்கு காரணம் அவருடைய நிறுவனம் 7 பில்லியன் டாலர்கள் நஷ்டம் அடைந்ததாக குறிப்பிடுகிறார்கள்.இவரின் சொத்துமதிப்பு.ரூபாய்.28,910 கோடி (5.9 பில்லியன் டாலர்)


தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான HCL நிறுவனர் ஷிவ் நாடார் 14 வது இடத்தை பிடித்திருக்கிறார்.அவருடைய சொத்து மதிப்பு.ரூபாய்.22,540, கோடி (4.6 பில்லியன் டாலர்)23 வது இடத்தில் இன்னும் ஓர் தமிழர் இருக்கிறார் அவர்தான் சன் நெட்வொர்க் நிறுவனத்தின் உரிமையாளர் காலாநிதி மாறான்.கடந்த ஆண்டு 16 வது இடத்தில் இருந்தார் அப்போது அவருடைய சொத்து மதிப்பு.ரூபாய்.17,000 கோடி ஆகும் .ஆனால் இந்த ஆண்டு இவருடைய சொத்து மதிப்பு.ரூபாய்.12,250 கோடி (2.5 பில்லியன் டாலர்)


உலக பொருளாதார மந்தத்தின் விளைவாக கடந்த ஆண்டு பட்டியலில் இருந்தவர்கள் இந்த ஆண்டு காணாமல் போய் இருக்கிறார்கள்.இந்த ஆண்டின் பட்டியலில் இருப்பவர்களும் ஒரு சில புதியவர்களை தவர மற்றவர்கள் பெரும் இளப்புடனே பட்டியலில் நீடிக்கிறார்கள்.
தகவல்கள்.www.forbes.com

October 27, 2011

ஐந்தும் எங்களுக்கே உற்சாகத்தில் இந்திய அணி.

இந்திய அணி பெற்றது வெற்றியல்ல மாபெரும் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.எப்படியாவது தொடரை கைப்பற்றினால் போதும் என்று நினைத்த ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக ஐந்து போட்டிகளையும் வென்று நாங்கள் உலகக் கோப்பையை வென்ற அதே அணிதான் என நிருபித்திருக்கிறது.இங்கிலாந்து மண்ணில் பெற்ற தோல்விக்கு ஓரளவு ஈடு கட்டியாகிவிட்டது.இது பழிதீர்த்து கொண்ட தொடர் அல்ல என்று டோனி குறிப்பிட்டாலும் இந்திய ரசிகர்கள் ஒவ்வொருவரும் இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியிடம் வாங்கியதை வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுத்தாகிவிட்டது என்று திருப்திபட்டுக் கொள்வார்கள்.இங்கிலாந்து மண்ணில் நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி போராடிதான் தோற்றது.ஆனால் இந்திய மண்ணில் இங்கிலாந்துக்கு போராட வாய்ப்பே தராமல் அனைத்து போட்டிகளிலும் அபாரமான வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி.
சச்சின்,சேவாக்,ஜாகிர்கான்,ஹர்பஜன் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் இங்கிலாந்து தொடரை எதிர்கொண்ட போது எப்படிதான் போராட போகிறார்களோ என்ற எண்ணம்தான் தோன்றியது. அந்த எண்ணத்தை பொய்யாக்கும் விதத்தில் முதல் போட்டியை வென்று இரண்டாம் போட்டியை வென்று மூன்று,நன்கு என ஐந்தையும் வென்றார்கள்.

இந்த வெற்றிகளுக்கெல்லாம் மூல காரணம் அணித் தலைவர் டோனிதான் என்பது அனைவரும் அறிந்ததே.வெற்றிப் படிக்கட்டில் ஏற டோனிக்கு உதவியாக இந்தி வீரர்கள் அனைவரும் பக்கபலமாக செயல்பட்டனர். குறிப்பாக விராத் கோலி,ஜடேஜா,ரெய்னா,புதுமுகம் ஆரோன் என வரிசையாக சொல்லிக்கொண்டேச் செல்லலாம்.நான்கு ஆட்டங்களில் களமிறங்கிய டோனி நான்கிலுமே ஆட்டமிளக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த தொடர் வெற்றியின் மூலம் இந்திய ரசிகர்கள் சொல்லெண்ணா மகிழ்சியில் திளைத்திருக்கிறார்கள்.அதோடு இருபது ஓவர் தொடரையும் வென்று அதற்கடுத்தாற் போல் வரும் ஆஸ்திரேலிய தொடரையும் வென்று ரசிகர்களை இதே உள்ளக் களிப்போடு வைத்திருப்பார்கள் என்று நம்புவோம்.

உள்ளாட்சி தேர்தல் ஒரு புள்ளி விவரம்.

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கட்சிகள் பெற்ற வெற்றி தோல்விகள் ஒரு புள்ளி விவர பார்வை.

மொத்த வாக்காளர்கள். 4 , 63,37,379.வாக்குச் சாவடிகளின்மொத்த எண்ணிக்கை. 86,104.
நகரப் பகுதிகளில், 1,00,80,195 ஆண் வாக்காளர்களும், 99,13,703 பெண் வாக்காளர்களும், உள்ளனர் . மொத்தம், 1,99, 94,351வாக்காளர்கள் உள்ளனர்.

ஊராட்சிப் பகுதிகளில், 1,33, 18,643 ஆண் வாக்காளர்களும், 1,31,24,227 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.மொத்தம், 2,64,43,028 வாக்காளர்கள் உள்ளனர்.

மாநகராட்சிகள்.10

மாநகராட்சி உறுப்பினர்கள்.820,


நகராட்சி .125


நகராட்சி உறுப்பினர்கள்.3,697.


பேரூராட்சி.529.

பேரூராட்சி உறுப்பினர்கள்.8,303.மாவட்ட ஊராட்சி .32.

மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள்.655.ஊராட்சி ஒன்றியம்.385.


ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள்.6,470.கிராம ஊராட்சி. 12,524,கிராம ஊராட்சி உறுப்பினர்கள்.99,333.
மொத்த பதவிகள்.1,18,983.போட்டியிட்ட சில முக்கிய கட்சிகள்.

1.அ.தி.மு.க,

2.தி.மு.க,

3.தே.மு.தி.க,

4.ம.தி.மு.க,

5.காங்கிரஸ்,

6.பா.ம.க,

7.வி.சி,

8.மார்கிஸ்ட் கம்னியுஸ்ட்,என

இன்னும் பல சிறு கட்சிகளும் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் உள்ளாட்சி தேர்தலில் அனைத்துப் பதவிகளுக்கும் போட்டியிட்டனர்.உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்.கட்சி அடிப்படையில்.


அ.தி.மு.க


மாநகராட்சிகள்.
10,உறுப்பினர்கள். 556

நகராட்சிகள்.89 உறுப்பினர்கள். 1680

பேரூராட்சிகள்.285,உறுப்பினர்கள்,2849.

மாவட்ட ஊராட்சி.566,ஊராட்சி ஓன்றியம்.3727,
தி. மு. க.


மாநகராட்சிகள்.0
,உறுப்பினர்கள். 121,

நகராட்சிகள்.23, உறுப்பினர்கள். 963,

பேரூராட்சிகள்.121,உறுப்பினர்கள்,1820.

மாவட்ட ஊராட்சி.26,ஊராட்சி ஓன்றியம்.934,
தே.மு.தி.க.


மாநகராட்சிகள்.0,
8,உறுப்பினர்கள்.

நகராட்சிகள்.2, உறுப்பினர்கள்.120 ,

பேரூராட்சிகள்.3,உறுப்பினர்கள்,392.

மாவட்ட ஊராட்சி.5,

ஊராட்சி ஓன்றியம்.321,


ம.தி.மு.க


மாநகராட்சிகள்.0
,உறுப்பினர்கள். 11,

நகராட்சிகள்.1, உறுப்பினர்கள்.49 ,

பேரூராட்சிகள்.7,உறுப்பினர்கள்,82.

மாவட்ட ஊராட்சி.4,

ஊராட்சி ஓன்றியம்.41,


காங்கிரஸ்,மாநகராட்சிகள்.
0,உறுப்பினர்கள். 17,

நகராட்சிகள்.166, உறுப்பினர்கள். ,

பேரூராட்சிகள்.24,உறுப்பினர்கள்,379.

மாவட்ட ஊராட்சி.4,

ஊராட்சி ஓன்றியம்.147,பா.ம.கமாநகராட்சிகள்.
,உறுப்பினர்கள். 2,

நகராட்சிகள்., உறுப்பினர்கள். 60,

பேரூராட்சிகள்.2,உறுப்பினர்கள்,108.

மாவட்ட ஊராட்சி.3,

ஊராட்சி ஓன்றியம்.221,பா.ஜ.க


மாநகராட்சிகள்.0
,உறுப்பினர்கள்.4 ,

நகராட்சிகள்.2, உறுப்பினர்கள். 37,

பேரூராட்சிகள்.13,உறுப்பினர்கள்,181.

மாவட்ட ஊராட்சி.2,

ஊராட்சி ஓன்றியம்.31,மார்கிஸ்ட் கம்,


மாநகராட்சிகள்.
0,உறுப்பினர்கள். 3,

நகராட்சிகள்.2, உறுப்பினர்கள்.20 ,

பேரூராட்சிகள்.5,உறுப்பினர்கள்,101.

மாவட்ட ஊராட்சி.2,

ஊராட்சி ஓன்றியம்.26,


இந்திய பொதுவுடமைக் கட்சி,


மாநகராட்சிகள்.0
,உறுப்பினர்கள். 4,

நகராட்சிகள்.0, உறுப்பினர்கள். 10,

பேரூராட்சிகள்.2,உறுப்பினர்கள்,33.

மாவட்ட ஊராட்சி.4,

ஊராட்சி ஓன்றியம்.46,


விடுதலை சிறுத்தைகள்,


மாநகராட்சிகள்.0
,உறுப்பினர்கள். 2,

நகராட்சிகள்.0, உறுப்பினர்கள்.13 ,

பேரூராட்சிகள்.0,உறுப்பினர்கள்,12.

மாவட்ட ஊராட்சி.0,

ஊராட்சி ஓன்றியம்.10,


பகுஜன் சமாஜ்,


மாநகராட்சிகள்.0
,உறுப்பினர்கள். 0,

நகராட்சிகள்.0, உறுப்பினர்கள்.2 ,

பேரூராட்சிகள்.0,உறுப்பினர்கள்,2.

மாவட்ட ஊராட்சி.0,

ஊராட்சி ஓன்றியம்.1,


ராஷ்டிரிய ஜனதா தளம்,


மாநகராட்சிகள்.0
,உறுப்பினர்கள். 0,

நகராட்சிகள்.0, உறுப்பினர்கள். 1,

பேரூராட்சிகள்.0,உறுப்பினர்கள்,8.

மாவட்ட ஊராட்சி.0,

ஊராட்சி ஓன்றியம்.2,


புதிய தமிழகம்,


மாநகராட்சிகள்.0
,உறுப்பினர்கள். 0,

நகராட்சிகள்.0, உறுப்பினர்கள். 0,

பேரூராட்சிகள்.0,உறுப்பினர்கள்,7.

மாவட்ட ஊராட்சி.0,

ஊராட்சி ஓன்றியம்.7,


இதர கட்சிகள்,


மாநகராட்சிகள்.0
,உறுப்பினர்கள். 0,

நகராட்சிகள்.0, உறுப்பினர்கள்.14 ,

பேரூராட்சிகள்.0,உறுப்பினர்கள்,29.

மாவட்ட ஊராட்சி.0,

ஊராட்சி ஓன்றியம்.4,சுயேட்சை வேட்பாளர்கள்,


மாநகராட்சிகள்.0
,உறுப்பினர்கள். 52,

நகராட்சிகள்.5, உறுப்பினர்கள். 552,

பேரூராட்சிகள்.64,உறுப்பினர்கள்,1995.

மாவட்ட ஊராட்சி.0,

ஊராட்சி ஓன்றியம்.636,மேலும் ஒரு சில இடங்களில் தேர்தல் நடைபெறவில்லை.உள்ளாட்சி தேர்தலில் அதிக பட்சமாக அ.தி.மு.க.
39.02 சதவீத வாக்குகளும்,அடுத்தப்படியாக தி.மு.க வுக்கு 26.09 சதவீத வாக்குகளும்,தே.மு.தி.க வுக்கு 10.11 சதவீத வாக்குகளும், காங்கிரஸ்கு 5.71 சதவீத வாக்குகளும்,பா.ஜ.க வுக்கு 1.35 சதவீத வாக்குகளும், ம.தி.மு.க. வுக்கு 1.7 சதவீத வாக்குகளும்,பொதுவுடைமை கட்சிக்கு (மார்க்சியம்) 1.02, சதவீத வாக்குகளும், இந்திய பொதுவுடமைக் கட்சிக்கு 0.71 சதவீத வாக்குகளும், சுயேட்சை வேட்பாளர்கள் 9.46 சதவீத வாக்குகளும், பா.ம.க.வுக்கு 3.55 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.