September 29, 2011

2010 ல் ஆயுதங்கள் வங்கியதில் இந்தியா முதலிடம்.

இந்தியா எந்த துறையில் வளர்கிறதோ இல்லையோ ஆனால் நாட்டின் பாதுகாப்பிற்கென செலவிடும் பணத்தின் அளவில் மற்ற நாடுகளை விட இந்தியாவுக்கு வேகமான வளர்ச்சிதான். கடந்த 2010 ம் ஆண்டில் ஆயுதங்கள் வாங்கியதில் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்தது. அந்த வகையில் பாதுகாப்பு மேம்பாட்டுக்காக ரூ.28,420 கோடி மதிப்பில் ஆயுதங்களை இந்தியா வாங்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2010 ல் ரஷ்யாவிடம் ரூ.7,350 கோடி மதிப்பிலான 29 எம்.ஐ.ஜி. மற்றும் 29 கே போர் விமானங்கள், இங்கிலாந்திடம் 57 ஹவாக் ஜெட்கள், இத்தாலியிடம் 12 ஏ.டபிள்யூ 100 ஹெலிகாப்டர்களையும் இந்தியா வாங்கியுள்ளது.
இது போன்று ஆயுதங்கள், கருவிகள் வாங்கியதில் இந்தியா முதலிடமும், தைவான், சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் அடுத்தடுத்த இடங்களை பிடித்தன. இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்கியதில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. மேலும் உயர் தொழில் நுட்ப ஆயுதங்களை இஸ்ரேல், பிரான்ஸ், அமெரிக்காவிடம் இருந்தும் இந்தியா பெற்றுள்ளது.
வளரும் நாடுகளுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஒப்பந்தங்களில் அமெரிக்கா, ரஷ்யா முதல் 2 இடங்களில் உள்ளன. உலக அளவில் 2010 ம் ஆண்டில் ஆயுதங்கள் பரிமாற்ற ஒப்பந்தங்களின் மதிப்பு 1.98 லட்சம் கோடி. 2009 ல் இது ரூ.1.87 லட்சம் கோடியாக இருந்து குறிப்பிடதக்கது.

No comments: