May 23, 2014

கோச்சடையான் விமர்சனத்தின் விமர்சனம் .

கோச்சடையான் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு ரஜினி ரசிகர்களையே ஓரளவுக்கு கலக்கமான நிலையிலேயே வைத்திருந்தது என்பதுதான் உண்மை.அதற்கு ஒரே காரணம் ரஜினியின் மகள் என்ற உரிமை அங்கு ரஜினியை இயக்குகிறது என்பதால்தான் இருக்க முடியும்.மகளுக்காக செய்கிறார் என்றே அறியா சிறுவர்கள் விமர்சித்தார்கள்.பாவம் அவர்களுக்கு இப்போது புரிந்திருக்கும் திறமையானவரின் வாரிசும் திறமையானவாரக இருக்கலாமென்று. . முன்பு விமர்சித்த ஜோதிடர்கள் பலரை நுண்ணோக்கி வைத்து தேடியும் கிடைக்கவில்லை.காரணம் நேற்றைய தினத்தின் சிலிர்ப்பில் சிதறி ஓடிவிட்டார்கள்.ஐயகோ அவர்களின் அழுகிய அல்லது அழுத முகத்தை பார்க்க முடியவில்லையே என்செய்வேன் ராணாவே...எதிர்விமர்சனங்களாலேயே எதிர்பார்க்கப்பட்டு அதுவும் பயம் கொண்டு.ஆனால் இன்று எதிர் கருத்துக்கும் ஆள் இல்லை.முந்தினம் அப்படியே எதிராக விமர்சித்தவரும் இன்று பாராட்டுவதை கண முடிகிறது.அவர்களின் இந்த கண்ணியத்தை நாம் பாரட்டுவோம். . அதாவது புது முயற்சிகள் என்பது அண்டை நாட்டவன் செய்ய வேண்டும்.அதிலும் குறிப்பாக வெள்ளைத் தோலுடையவன் செய்யவேண்டும் அப்போதுதான் நாம் ஆர்ப்பரித்து வரவேற்போம். அதையே அண்டைவீட்டுக்காரன் செய்தால் கேலிதான் நம் முதல் மறுபடியாக இருக்கும்.நம்மால் புதிதாக கண்டுபிடிக்கத்தான் முடியவில்லை.வேறொரு சந்தையில் அறிமுகப்படுத்தியதையாவது விரைவாக நம் சந்தையில் அறிமுகப்படுத்த வேண்டும் எண்ணமாவது வராதா?அப்படியே வந்தாலும் வென்ற பின்னர்தான் வரவேற்பு.இதுவும் நாளை மாறலாம். . நேற்று முதல் இன்று வரை சுமார் இருபது கோச்சடையான் விமர்சங்கள் படித்திருப்பேன்.ஒருவர் கூட படத்திற்கு எதிராக ஒரு கருத்தைக் கூட முன்வைக்கவில்லை.அதாவது மோசம் என்றோ சரியில்லை என்றோ சொல்லவில்லை.ஆனால் ஒரு சில தொழில்நுட்ப குறைபாடுகளை சுட்டிக்காட்டியிருந்தார்கள்.அவையும் கதையாலும்,இசையாலும்,பிரம்மாண்டத்தாலும்,ரஜினியாலும் மறக்கப்பட்டு மறைந்துவிடுவதாகவே குறிப்பிட்டிருந்தார்கள். . இப்படியாக இந்தியாவின் நிரந்தர வசூல் மன்னனாக ரஜினி மீண்டும் தன்னை நிருபித்துக்கொண்டார்..... . . நன்றி