August 9, 2011
IdlyVadai - இட்லிவடை: சமச்சீர் கல்வியை 10 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்ட...
IdlyVadai - இட்லிவடை: சமச்சீர் கல்வியை 10 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்ட...: "தமிழகத்தில் நடப்பு ஆண்டு முதலே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப..."
August 8, 2011
மம்முட்டி
மம்முட்டி என்கிற ரசனைக் கலைஞனின் வாழ்வியல் அனுபவங்களின் தொகுப்பே இந்தப் புத்தகம். மம்முட்டி என்கிற பெயர் பிடிக்காமல் எகிப்து நடிகர் ஓமர் ஷெரீஃபின் பெயரை வைத்துக்கொண்டு அலைந்தது .வக்கீலாக வாழ்ந்தது,முதல் தர நடிகர் ஆனது வரை வாழ்வில் சந்தித்த மனிதம், அன்பு, நேசம்,நட்பு,பாடம் என எல்லாவற்றையும் பாசிட்டிவ் கோணத்தில் பகிர்ந்து கொண்டு இருக்கிறார் மம்முட்டி.விவாகரத்து வழக்கில் அன்பான கணவருக்கு எதிராகச் சாட்சி சொல்ல முடியாமல் மயங்கி விழுந்த மனைவி,மம்முட்டியால் காப்பாற்ற முடியாமல் போன முதல் ரசிகன் என அவரது வாழ்கைச் சம்பவங்கள், அது கற்றுக் கொடுத்தப் பாடம் ஆகியவற்றைக் குட்டிக் கதைபோல சுவாரஸ்யமாக சொல்லிச் செல்கிறார். {மூன்றாம் பிறே வாழ்வனுபவங்கள்}{ஆசிரியர்.மம்முட்டி}{தமிழில்..கே.வி.ஷைலஜா}{வெளியீடு..வம்சி புக்ஸ்,19.டி.எம்.சாரோன்,திருவண்ணாமலை}{பக்கங்கள்..128}{விலை..ரூபாய்.180} நன்றி.ஆனந்தவிகடன்.3.8.11
என்ன கொடுமை சார் இது?
எங்களால்தான் அதிமுக ஜெயித்தது..ஐம்பது சதவீதம் ஓட்டு என் மகனின் ரசிகர்களுடையதுனு ஊர் ஊராக பேசிக்கொண்டிருக்கிற இயக்குனர் மீது கார்டன் தரப்பு கடுங்கோபத்தில் இருக்கிறதாம். இப்படியே பேசவிட்டால் நமக்கு கெட்டப் பேரு. ஏதாவது செய்யணுமுன்னு மேலிடத்தை உசுப்பேற்ற, அவருடைய தயாரிப்பாளர் சங்க பதவிக்கு சிக்கல் ஏற்பட்டு இருக்குதாம்.அம்மா ஆதரவாளர்னு சொல்லிட்டுதான் புறவாசல் வழியா பதவியைப் பிடித்தார்.இப்ப இரண்டு பேருக்கும் புகைச்சல். அவரைப் பதவி நீக்கம் செய்தே ஆகவேண்டுமென்று ஒரு தரப்பு தீவிரமாக வேலை செய்கிறதாம் .ஆனால் இதுப்பற்றி கவலைப்படாத இயக்குனரோ எங்களுக்கு டார்ச்சர் கொடுத்தால் உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் தனித்து நிற்போம். இலைக்கட்சி ஓட்டுகளை பிரிப்போம்னு காமடி பண்ணுகிறாராம்.இது தினமலரில் வந்த பெட்டிச் செய்தி. நன்றி , தினமலர் நாழிதள்.இதைப்படிக்கிற போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?எனக்கு என்ன தோன்றுகிறதென்றால் விஜய் அடுத்தத் திரைப்படம் வெளியடப்படுவதில் திரையரங்கு சிக்கல் ஏற்படுமென்று நினைக்கிறேன்.ஒரு பழமொழி நினைவிற்கு வருகிறது. அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில் குடைப் பிடிப்பானாம்,,,,,?
Subscribe to:
Posts (Atom)