free mail

August 20, 2011

அதிசய தகவல்கள்.

1.நைல் நதியின் மேல் செல்லும் நீரோட்டத்தை விட அதன் அடிமட்டத்தில் பாயும் நீரின் வேகம் ஆறு மடங்கு அதிகமாக இருக்கும்.(எப்போதுமே உள்ளே என்ன நடக்கிறது என்று கணிப்பது கஷ்டம்தான்.)


2.ரோலர் கோஸ்டரில் பயணம் செய்பவர்களுக்கு மூளையில் இரத்த அடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.(ரோலர் கோஸ்டர் அப்படீனா என்ன?)


3.நீல நிற கண்களை உடையோற்கு மற்றவர்களை விட இரவில் பார்வை திறன் துல்லியமாக இருக்கும்(.நீல லென் மாட்டிக்கலாமா)

4.காகிதப் பணம் தயாரிக்கப்படுவது காகிதம்,பருத்தி ஆகியவற்றின் சிறப்பான கலவைகளால்தான்.(அது எப்படின்னு சொல்லீட்டிங்கன்னா சௌகரியமா இருக்கும்.)

5.தேளை கொல்வதற்கு எளிய வழி.சிறிதளவு மதுபானத்தை தேளின் மீது ஊற்றினால் போதும் உடனே அது இறந்து விடும்.(மப்பு தலைக்கேறியிருக்கும்.)

6.வெங்காயம் உரிக்கும் போது கண்ணில் கண்ணிர் வராமல் இருக்க சூயிங்கம் மென்றால் போதும்.(கண்ணுக்கு பாதுகாப்பு வாயா?)

7.உலகில் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் 29 சதவீதம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது.அது போல் உலகின் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 33 சதவீதம் பயன்படுத்தப்படுவதும் அமெரிக்காவில்தான்.(எல்லாத்துலேயும் no.1 நாங்க)

8.ஒரு மணி நேரம் காதில் இயர்போன் அணிந்து பாட்டு கேட்கும் போது ,காதில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது.(அப்போ ஏற்கனவே காதில் பாக்டீரியா இருக்கா?)

9. வலது கைப்பழக்கம் உள்ளவர்கள் இடது கைப்பழக்கம் உடையவர்களைவிட சராசரியாக ஒன்பது வருடங்கள் உயிர் வாழ்கிறார்கள்.(இது என்ன புது புரளி?)

10.ஒரு முறை புன்னகை புரிவதன் மூலம் குறைந்தப் பட்சம் 30 தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.அப்படினா (ஓயாம சிரிச்சுகிட்டே இருந்தா?)

11.நமது மூக்கு நமது உடலில் ஒரு குளிர் சாதனப் பெட்டி போல் இயங்குகிறது.இது உடலுக்குள் செல்லும் குளிர் காற்றை வெப்பப்படுத்தி அனுப்புகிறது.சூடானக்காற்றை குளிரச் செய்து அனுப்புகிறது.மேலும் காற்றில் உள்ள மாசுக்களை தடுத்து தூயக்காற்றை உள்ளே அனுப்பும் வடிகட்டியாகவும் மூக்கு செயல்படுகிறது.(மூக்கைப் பற்றி மூக்குமுட்டச் செயதி)

12.நமது மூளையானது சக்தி வாய்ந்த கணினியை விட பல மடங்கு சக்தி வாயந்தது.மூளை 100 பில்லியன் நரம்பு செல்களால் உருவானதாகும்.(ஆனா அந்த மூளையே உதவிக்கு கணினியைதானே தேடுது.)

13.மனிதன் இறக்கும் போது முதலில் அவனின் கேட்கும் திறனையே இழக்கிறான்.(எல்லாம் முடிந்த பிறகு பார்த்தா என்ன கேட்டா என்ன)

14.ஒரிகான் என்ற இடத்தில் 2400 வருடங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் காளான் ஒன்று உள்ளது.இது 3.4 சதுரமைல் இடத்தில் பரந்து காணப்படுகிறது.இதில் விசேசம் என்னவென்றால் அது இன்றும் வளர்ந்து கொண்டிருக்கிறது.(காம்ப்ளான் தொழிற்சாலை பக்கத்தில் இருக்குதோ என்னவோ?)

15.மற்ற வகை நாய்களை விட, ஜெர்மன ஷெப்பர்ட் வகையைச் சார்ந்த நாய்களே மனிதனை அதிக அளவில் கடிக்கிறது.(இனிமேல் அந்த நாய்களை ஹிட்லர் ஷெப்பர்ட் என்று அழைக்கலாம்.)

16.ஆண்களின் சட்டைகளில் வலது பக்கத்தில் பட்டன்கள் இருக்கும்.ஆனால் பெண்களின் சட்டைகளில் இடது பக்கத்தில் பட்டன்கள் இருக்கும்.(அப்படியா.ஆச்சர்யக்குறி )

17.நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் செயல்களை பார்க்கும் போது .நமது விழித்திரையானது சாதாரண நிலையவிட 45 சதவீத அளவில் விரிந்து விடுகிறது.(பாக்க நல்லாவா இருக்கும்?)

18.தேன் எளிதில் ஜீரணமாவதற்கு காரணம் அது ஏற்கனவே தேனீக்களால் ஜீரணிக்கப்பட்டிருப்பதுதான்.(எனக்கு ரொம்ப உபயோகப்படும்)

19.உண்மையான டைட்டானிக் கப்பலைத் தயாரிக்க எவ்வளவு செலவானது தெரியுமா? வெறும் ஏழு மில்லியன் டாலர் மட்டும்தான்.ஆனால் டைட்டானிக் படம் தயாரிக்க எவ்வளவு செலவானது தெரியுமா? 200 மில்லியன் டாலர்.(கப்பல உடைக்கிறதுக்கு இவ்வளவு செலவாகியிருக்கும்.)

20.நாம் நமது கழுத்தை அசைக்கும் போது டிரிக் என ஏற்படும் சத்தமானது நைட்ரஜன் வாய்வுக் குமிழ்கள் எரிக்கப்படுவதால் உண்டாகிறது.(நல்ல வேளை ஹார்பன் டை ஆக்ஸைடு இல்ல.)

21.மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத பகுதி எது தெரியுமா? கண்ணின் கருவிழி.ஏனென்றால் கருவிழி அதற்கு தேவையான ஆக்ஸிஜனை காற்றிலிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்கிறது.(இது எனக்கு புதுசு.)இன்னும் கோடி கோடி காணக்கான ஆச்சர்ய தகவல்களை தன்னகத்தே வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் இல்லாமல் துயில் கொள்கிறாள் இயற்கை அன்னை.
தகவல்கள்.

தினதந்தி தங்கமலர்.
நன்றி.

August 19, 2011

கல்கி அவர்களின் படைப்புகள்,,,

கல்கி என எல்லோராலும் அறியப்பட்ட ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமிழ் இலக்கியத்துக்கு செய்துள்ள தொண்டு அளவிட முடியாதவை.அம்மாமனிதரின் சிந்தனையில் உருவான சில முத்துக்கள்,அவைகளை புதினம் என்றும் சொல்லலாம்,நவீன இலக்கியங்கள் என்றும் கூறலாம். கல்கி அவர்கள் எழுதிய புதினங்களின் தொகுப்பு இதோ.


1.கள்வனின் காதலி. ([[1937]])


2.தியாகபூமி ([[1938]]

3.மகுடபதி ([[1942]])


4.பார்த்திபன் கனவு ([[1941]]
[[1943]]


5.சிவகாமியின் சபதம் ([[1944]])


6.அபலையின் கண்ணீர்'' ([[1947]])


7.சோலைமலை இளவரசி ([[1947]])


8.அலை ஓசை([[1948]])


9.பொன்னியின் செல்வன் [[1950]]-[[1955]])


10.தேவகியின் கணவன்'' ([[1950]])


11.மோகினித்தீவு ([[1950]])


12.பொய்மான் கரடு[[1951]])


13.புன்னைவனத்துப் புலி'' ([[1952]])
14.அமர தாரா'' ([[1954]])

ஆகிய புதினங்கள் கல்கியால் படைக்கப்பட்டவை. மேலும் அவர் நூற்றுக்கணக்கான கட்டுரைகளும்,சிறு கதைகளும் எழுதியுள்ளார்.


சிறு கதைகளின் தொகுப்பு.1.சுபத்திரையின் சகோதரன்


1.ஒற்றை ரோஜா


2.தீப்பிடித்த குடிசைகள்


3. புது ஓவர்சியர்
4.வஸ்தாது வேணு


5. அமர வாழ்வு


6.சுண்டுவின் சந்நியாசம்


7.திருடன் மகன் திருடன்


8. இமயமலை எங்கள் மலை


9.பொங்குமாங்கடல்


10. மாஸ்டர் மெதுவடை


11.புஷ்பப் பல்லக்கு


12.பிரபல நட்சத்திரம்


13.பித்தளை ஒட்டியாணம்

14.அருணாசலத்தின் அலுவல்


15.பரிசல் துறை

16.ஸுசீலா எம். ஏ.

17.கமலாவின் கல்யாணம்


18.தற்கொலை

19.எஸ். எஸ். மேனகா

20.சாரதையின் தந்திரம்


21.கவர்னர் விஜயம்

22.நம்பர்
ஒன்பது குழி நிலம்

23.புன்னைவனத்துப் புலி


24.திருவழுந்தூர் சிவக்கொழுந்து

25.ஜமீன்தார் மகன்

26.மயிலைக் காளை

28.ரங்கதுர்க்கம் ராஜா
29.இடிந்த கோட்டை

30.மயில்விழி மான்

31. நாடகக்காரி

32.தப்பிலி கப்"

33.கணையாழியின் கனவு

34.கேதாரியின் தாயார்

35.காந்திமதியின் காதலன்

36.சிரஞ்சீவிக் கதை

37.ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம்

38.பாழடைந்த பங்களா

39.சந்திரமதி

40.போலீஸ் விருந்து

41.கைதியின் பிரார்த்தனை

42.காரிருளில் ஒரு மின்னல்

43.தந்தையும் மகனும்

44.பவானி, பி. ஏ, பி. எல்

45.கடிதமும் கண்ணீரும்

46.வைர மோதிரம்

47.வீணை பவானி

48.தூக்குத் தண்டனை

49.என் தெய்வம்


50.எஜமான விசுவாசம்


51.இது என்ன சொர்க்கம்

52.கைலாசமய்யர் காபரா

53.லஞ்சம் வாங்காதவன்

54.ஸினிமாக் கதை

55.எங்கள் ஊர் சங்கீதப் போட்டி


56.ரங்கூன் மாப்பிள்ளை

57.தேவகியின் கணவன்

58.பால ஜோசியர்


59.மாடத்தேவன் சுனை

60.காதறாக் கள்ளன்

61.மாலதியின் தந்தை


62.வீடு தேடும் படலம்

63.நீண்ட முகவுரை

64.பாங்கர் விநாயகராவ்

65.தெய்வயானை66.கோவிந்தனும் வீரப்பனும்

67.சின்னத்தம்பியும் திருடர்களும்


68.விதூஷகன் சின்னுமுதலி

69.அரசூர் பஞ்சாயத்து

70.கவர்னர் வண்டி

71.தண்டனை யாருக்கு?

72.சுயநலம்


73. புலி ராஜா

74.விஷ மந்திரம்


இவைகள் கல்கி அவர்கள் எழுதிய சிறுகதைகளும், சிறுகதை தொகுப்புகளும் ஆகும் .தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பொக்கிசம் அமரர் கல்கியின் புதினங்கள்.


தகவல்கள்..

தமழ் விக்கிபீடியா.

தேனீக்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு.

நீண்ட நாள் ஆனாலும்

கெட்டுப் போகமல் இருக்கும்

ஒரு உணவு பொருள் என்ன

என்று கேட்டால் பளிச்சென்று ஞாபத்துக்கு

வருவது தேன்.

தேனீக்களின் சேமிப்பு நமக்கு உணவு.

தேனில் மருத்துவக் குணங்களும்,

நோய் எதிர்ப்பு சக்தியும்,

வைட்டமின்களும்

இருப்பதாக ஆய்வு

செய்து கண்டறியப்பட்ட உண்மை.

நாம் பயன்படுத்தும் தேன்
பெரும்பாலும் மனிதனால் தயாரிக்கபட்ட

வை அதாவது தேனீ வளர்ப்பு மூலமாக கிடைக்கிறது.

தேன் அதிக அளவு கிடைப்பது

இம்முறையில்தான்.

தமிழ்நாட்டில் அதிக அளவு குமரி


மாவட்டத்தில் உற்பத்திச்
செய்ப்படுகிறது. இது ஒருகுடிசைத் தொழிலாக அரசு அனுமதித்திருக்கிறது.

தேன் சேகரிப்பதற்கு சில


குறிப்பிட்ட இடங்கள்

மனிதர்க கண்டறியப்பட்டுள்ளது.

ரப்பர் மரம்

அதிகம் உள்ளப் பகுதிகள்,

தென்னஞ்சோலைகள்,

வாழைத்தோட்டங்கள்

போன்ற பகுதிகளில்

தேன் பெட்டி வைக்கப்

படுகிறது இதன் மூலம் தேன் சேகரிக்கப் படுகிறது.

இதனை நாட்டுத்தேன் என

குறிப்பிடுகின்றனர்.

காடுகளிலிருந்தும் தேன்
கிடைக்கிறது.இவை

அதிக அளவில் கிடைப்பதில்லை .அப்படி
கிடைத்தாலும் கலப்படமான தேன்தான்

கிடைக்கும் என்ற கருத்தும் உண்டு.

பல தனியார் நிறுவனங்கள் புட்டிகளில் அடைக்கப்பட்ட தேனை

விற்பனை செய்கின்றனர்.

அரசும் கூட்டுறவு அமைப்பு மூலம் தேன் விற்பனை செய்கிறது.

தேனுக்கு பல மருத்துவ

குணங்களும்,மகத்தான குணங்களும் உண்டு.

உடல் பருமனாக இருப்போர் நாள்தோறும் அதிகாலையில் ஒரு குவளை

வெந்நீரில் இரு
மேஜைக் கரண்டி தேன் கலந்து

குடித்து வந்தால் உடலில் உள்ள

கெட்டக் கொளுப்பு கரைந்துவிடும் என மருத்துவக் குறிப்பு கூறுகிறது.

அதேப் போல் உடல்

மெலிந்தோர் பருமனாகவும் தேன்

உதவுகிறது.பாதாம் ,முந்திரி,பிஸ்தா போன்ற பருப்புகளை தேனில்
ஊற வைத்து நாள் தோறும்

சாப்பிட்டு
வந்தால் உடல் பருமனாவது
மட்டுமல்லாமல்
வலிமையான

உடற்கட்டையும் பெறலாம்.

சித்த மருத்துவத்தில் தேனும்

ஒரு மருத்துவப் பொருளாகவே கருதப்படுகிறது.

தேனீக்கள் மலரில் இருந்து தேனை எடுத்து தன்

வயிற்றுப் பகுதியில் உள்ள ஒரு விசேசமான பையில்

நிரப்புகிறது.அங்கு பல வித ரசாயன
மாற்றங்களுக்கு உட்படும்

தேனீயின் உணவு இந்த மாற்றத்திற்கு

பிறகுதான் தேனாக உருவாகிறது.
அடுத்தபடியாக தன் வயிற்றுப் பகுதியில் உள்ள தேனை தேனடையில்
சேகரிக்கிறது.

தேனடையில் உள்ள
வெப்பநிலையும் ,காற்றோட்டமும்

சேரும்போது தேன் இறுகி விடுகிறது.

இதனால் அதில் உள்ள தண்ணீர் நீக்கப்படுகிறது.


ஆகவே தேன் பதப்படுத்தப்பட்ட நிலையை அடைகிறது.

இதனால் தான் தேன் நீண்ட நாட்கள்

ஆனாலும் கெடாமல் இருக்கிறது.

தேனீ என்னும் ஐந்து கிராம் எடை கொண்ட ஓர் உயிர் பல பேரின்

வருமானத்திற்காகவும்,வயிற்றிற்காகவும்,தாவரங்களின் மகரந்த சேர்கைக்கும் பெருமளவு உதவுகிறது.

இயற்கையின் அற்புதமான படைப்புகளில் முதல்

இடத்தைப் தேனீ பிடிக்கிறது.

இன்னும் எவ்வளவோ தகவல்களை தேனீயைப் பற்றி

சொல்லிக்கொண்டேச் செல்லலாம் எனக்கு

தெரிந்தது கடுகளாவான இவ்வளவே.

தேன் சுவைப்பதற்கும் இனிமை,கேட்பதற்கும் இனிமை , நினைத்தாலும் இனிக்கும் அளவிற்கு தேனீயின் அருமை இருக்கிறது.

இனிமேல் ரோஜா கூட்டத்தில் தேனீக்கள் கூட்டம்


இருந்தால்

அவைகளை விரட்டாதீர்.

August 18, 2011

தற்கொலைக்கு முயன்ற அன்னா ஹசாரே?

ஊழல் எதிர்ப்பு போரில் தீவிரமாக இருக்கும்

காந்தியவாதி அன்னா ஹசாரே

இளம் வயதில் தற்கொலைக்கு

முயன்றவர் என தகவல் வெளியாகி உள்ளது.

அதற்கு சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமல்ல.

வாழ்கையில் ஏற்பட்ட வெறுப்பின்

காரணமாக தற்கொலை செய்து

கொள்வதற்காக இரண்டு பக்க கடிதமும் எழுதி

வைத்திருந்தார்.


அந்தி நிலையில் ஒரு நாள் புது டில்லி ரயில்

நிலையத்தில் இருந்தபோது,அங்கிருந்த

கடையில் சுவாமி விவேகானந்தரைப்

பற்றிய புத்தகத்தை

வாங்கிப் படித்தார்.

மனிதன் உயிர் வாழ்வதற்கான காரணத்தை தேடி

அலைந்த அவருக்கு

அந்த புத்தகத்தில் விடை

கிடைத்தது.சக மனிதர்களுக்கு சேவை

செய்வதே தமது வாழ்கையின் நோக்கமென

உணர்ந்தார். அதனால் தற்கொலை

செய்யும் முயற்சியை கைவிட்டார்.
1962-ம் ஆண்டு சீன போருக்குப் பிறகு மத்திய அரசு

இளைஞர்களுக்கு விடுத்த அழைப்பை

ஏற்று ,ராணுவத்தில் தன்னை

இணைத்துக் கொண்டார்.9-வது மராத்தா பட்டாலியன்


பிரிவில் இருந்த அவர் 1978-ம் ஆண்டு


ராணவத்திலிருந்து விருப்ப

ஓய்வு பெற்றார்.

அப்போது அவருக்கு வயது 39.

அதன் பின்னர் மராட்டிய

மானிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட

ராலேகான் சித்தி கிராமத்துக்குச் சென்றார்.


அங்கு விவசாயிகள் வறுமையில்

உழல்வதைக் கண்டார்.

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை

செயல்படுத்தி அதை மாதிரி கிராமமாக

மாற்றிக்காட்டினார்.

தனது போரட்டங்கள் மூலமாக

அந்த கிராமத்துக்கு மின்சாரம்

,பள்ளிக்கூடம் உள்ளிட்ட வளர்ச்சி

திட்டங்களை கொண்டுவரச் செய்தார்.


அவரது போராட்ட ஆயுதம் உண்ணாவிரதம்

தான் ஆனால் அதை பிளாக்மெயில்

என்று மராட்டிய அரசியல்வாதிகள் வருணிப்பது உண்டு.

1995-ம் ஆண்டில் 2 ஊழல் மந்திரிகளை

அப்போதைய சிவசேனா பாரதிய ஜனாதா கூட்டணி

அரசில் இருந்து நீக்க செய்தார்.2003-ம் ஆண்டில் 4 ஊழல் மந்திரிகளுக்கு எதிராக விசாரணை

கமிஷன் அமைக்க செய்தார்.இந்த ஆண்டு ஏப்ரலில் தனது நான்கு நாள்

உண்ணாவாரதம் மூலம் லோக்பால்
மசோதாவை உருவாக்க சமூக ஆர்வலர்கள்

அடங்கிய கூட்டுக்குழுவை அமைப்பதற்கு

மத்திய அரசை சம்மதிக்க செய்தார்.

நேற்று மீண்டும் உண்ணாவிரதம் இருக்கத்
தயாரான போது

அவர் கைது செய்யப்பட்டார்.நன்றி

தினதந்தி

IdlyVadai - இட்லிவடை: லேட்டாக கோபப்பட்ட தமிழர்கள்

இந்த வாதம் ஓரளவுக்கு எற்றுக்கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது,உங்களுடைய கருத்து என்ன?IdlyVadai - இட்லிவடை: லேட்டாக கோபப்பட்ட தமிழர்கள்: "சென்னையில் SRM பல்கலைக்கழக நிகழ்ச்சில் பேசிய இந்தியாவுக்கான அமெரிக்க உதவி துணைத் தூதரான மவுரின் சோவ் என்பவர் தன் இந்தியா அனுபவங்களை பேசும் ப...

August 16, 2011

நம் இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணி பற்றி

பேசுவதற்கு எனக்கு தகுதி

இருக்கிறதா என்பது தெரியவில்லை.

இருந்தாலும் இந்திய அணியின் தீவிர ரசிகன்

என்ற முறையில் நான் பேசலாம்
என்று நினைக்கிறேன்.

கிட்டத்தட்ட இருபது மாதங்களாக டெஸ்ட்

போட்டியில் முதல் இடத்தில் ஆதிக்கம்

செலுத்திய இந்திய அணி

தற்போது நடைபெற்றுக்

கொண்டிருக்கும் இங்கிலாந்துக்கு

எதிரான தொடரில் தொடர்ந்து

மூன்று தோல்விகளை

சந்தித்தை அடுத்து தன்னுடைய

ஒன்றாம் நம்பர் இடத்தை

இங்கிலாந்துக்கு தாரைவார்த்தது.

இது எல்லோரும் அறிந்த சேதிதான்.

எந்த விளையாட்டாக இருந்தாலும்

தோல்வியை சந்திக்காமல்

எந்த அணியும் இல்லை எந்த

வீரரும் இல்லை.
ஆனால் இந்திய அணி

இப்போதுதான் தோல்வி அடைவது போல

சில முன்னாள் வீரர்களும்,சில பத்திரிகைகளும்

,ரசிகர்களும் கூட வானத்துக்கும் பூமிக்குமாக

குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த கோபமும் ,கிண்டலும் எதற்கென்று
கேட்கிறேன்.இந்திய அணி வெற்றி பெற்ற போது

இப்போது திட்டிக்கொண்டிருப்பவர்கள்

அப்போது பாராட்டினார்கள்இது உண்மை.

அதற்காக தோல்வி அடைந்தால்

திட்ட வேண்டும் என்னும்

விதிமுறை இருக்கிறதா என்ன?

நாள் தோறும் செய்தித்தாளைத்

திறந்தால் முன்னாள் வீரர் கருத்து.

அவர் குற்றம் சாட்டினார்,இவர் குற்றம் சாட்டினார் என்று

பத்திரிகைகள் எழுதித் தீர்க்கின்றன.


இப்படி பேட்டி அளித்துக் கொண்டிருப்பவர்கள்

தோல்வி என்ற சுவடையே

காணாதவர்கள் போலும்

அதனால்தான் என்னவோ வாய்க்கு

வந்தாற்போல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு தெரிந்து இப்போது

திட்டிக்கொண்டிருக்கும் பலர்

சொல்லிக்கொள்கிறார் போல் பெரிய வெற்றி ஒன்றும்

பெற்றவர்களில்லை.
திட்ட வேண்டுமென்பது அவர்கள் கடமைபோலும்.

இப்போது இந்திய அணிக்கு

வேண்டுயது, குட்டோ ,திட்டோ அல்ல

ஆதரவுமட்டுமே.இந்நேரத்தில் ஆதரவாக

பேசாவிடினும் பறவாயில்லை.மௌனமாக இருந்தாலே போதும்.

இந்த தோல்வியிலிருந்து எப்படி

மீழ்வது என்று இந்திய வீரர்களுக்கு
தெரியும்.

யாரும் அறிவுரை கூற வேண்டிய அவசியமில்லை

என்பதே என் கருத்து.

August 15, 2011

அரசியல்அரசியல்

2 ஜி விவகாரத்திற்காக ஒரு

கூட்டத்தொடர் முழுவதும்

பாராளுமன்றத்தை முடக்கினார்கள்.146 கோடி ரூபாய் மக்கள் பணம் வீணானது.

அது பற்றி யாருக்கும் கவலையில்லை.இப்போது காமன்வெல்த் விளையாட்டுப் பிரச்சினை .

மத்திய கணக்கு தணிக்கைக் குழு [சி.ஏ.ஜி] டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீதும் குற்றம் சாட்டியுள்ளது. அவர் ராஜினாமா பண்ணியே ஆக வேண்டும் என்கிறார்கள்.

இல்லையேல் பாராளுமன்றத்தை முடக்க எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

மீண்டும் மக்கள் பணம் ஒரு நாளைக்கு எட்டுக் கோடி ரூபாய் வீணாகப் போகிறது.


பாராளுமன்றம் என்பது மக்கள் மேடை நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்காக எதிர் கட்சிகள் குரல் எழுப்ப பாராளுமன்றம்தான் உரிய இடம்.

மக்கள் பிரச்சினையை பேசித் தீர்க்க வேண்டிய இடத்தில்,

பேசவேண்டியவர்கள் பேசாமல் எழுந்து

போய்விட்டால் யாருக்கு நஷ்டம்?

மக்களுக்குதானே.

அதோடு மக்களின்
அடிப்படை உரிமைகள் பறிபோகின்றன.மக்களுக்குச் சேர வேண்டிய நலத் திட்டங்கள் பல உரிய நேரத்திரல் அமல்படுத்தப்படாமல் போகும் அவல நிலை.


தீராத மக்கள் பிரச்சனைக்காக ஒரு வாரம் பாராளுமன்றத்தை நீட்டியுங்கள் என்று ஒரு எ.பி.யாவது இதுவரை வாதாடியிருப்பாரா? மக்கள் பிரச்சனைக்காக பாராளுமன்றத்தை முடக்குவது ஜனநாயகமாகாது.அது ஒரு கேலிக்கூத்து.


பிரதமர் அலுவலகம் மீதும் சி.ஏ.ஜி. அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.அப்படியானால் பிரதமர் பதவி விலகும் வரை பாராளுமன்றத்தை முடக்கப் போகிறார்களா? பாராளுமன்ற முடக்கம் ஆழும்கட்சிக்கும் நல்லதல்ல எதிர்கட்சிக்கும் நல்தல்ல.மக்கள் பிரச்சினையைப் பேச எத்தனையோ வழிகள் இருக்க, பாராளுமன்ற முடக்கத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவது வெட்கக்கேடு.
நன்றி.

குமுதம் வார இதழ்.

17.8.2011

காமராஜர்

பெருந்தலைவர் காமராஜர்

நீண்ட தூரம் சுற்று

பயணம் முடிந்து காரில் சென்னைக்கு

வந்து கொண்டிருந்தார்.

அதிகாலை நேரம் பயண களைப்பால்

கண்ணயர்ந்திருந்த அவர் நீண்ட நேரம் கார்

ஓரிடத்திலேயே நிற்பதை

உணர்ந்தார்.கண்விழித்த அவர்

என்னய்யா ஆச்சு

எங்கேய்யா வந்திருக்கோம்

என்று ஓட்டுனரிடம் கேட்டார்.

சைதாப்பேட்டை பாலங்கிட்ட வந்தாச்சு.

ஆனால் போக்குவரத்து

நெரிசலால் வாகனங்கள்

நகர்வதில் சிரமம் என்று

ஓட்டுனர் பதிலளித்தார்.

உடனே காமராஜர் காரின்

கதைவைத் திறந்தார்.

வேட்டியை மடித்துக்

கட்டிக்கொண்டு விறுவிறுவென

சைதாபேட்டை காவல்

நிலையத்தை நோக்கி சென்றார்.

அப்போது அங்கு பணியில் இருந்த

மூன்று காவலர்கள்

தங்கள் முன்னால் முதல்வர் வந்து
நிற்பதைக்கண்டு
பதறி எழுந்தார்கள்.

இங்கே உட்கார்ந்து என்ன

பண்றீங்க.

ரோடு பூரா வண்டிங்க
நிற்குது.

வாங்கய்யா வெளியே

என்றார் காமராஜர்.

காவலர்களோடு சேர்ந்து தானும்

போக்குவரத்தை சரி செய்தார்.

அங்கு அவரைப் பார்த்த

பயணிகள் ஆச்சர்யம்
அடைந்தனர்.


அரை மணி நேரத்தில்

போக்குவரத்து சரியானது.

நன்றி

தினதந்தி

பாஸந்தி செய்வது எப்படி?

பாஸந்தி முழுக்கமுழுக்க பாலினால் செய்யப்படும் ஒரு இனிப்பு. வட இந்தியர்களின் வீடுகளில் பெரும்பாலும் பாஸந்தி இருக்கும்.அவர்கள் வீட்டிலேயே பாஸந்தி தயாரித்துக் கொள்வர்.பாஸந்தி செய்வது கடுமையான வேலையில்லை ஆனால் பணம் சிறிது அதிகமாகவே செலவாகும்.பணத்தை பார்த்தால் ருசியாக சாப்பிட முடியாது.சரி விசயத்துக்கு வருகிறேன்.எனக்கு பாலில் செய்த இனிப்புகள் என்றால் கொள்ளை பிரியம்.அதிலும் பாஸந்தி என்றால் கேட்கவா வேண்டும். எத்தனை நாள்தான் கடைகளிலே சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாமே அதை தயாரித்தால் என்ன என்று யோசனை உருவாகியது. பாஸந்தி யோசனையில் மட்டுமே இருந்தது நடைமுறைக்கு வரவில்லை காரணம் எனக்கு பாஸந்தி செய்ய தெரியாது.அதனால் பாஸந்தி செய்வது எப்படி என்று கூகுலில் தேடினேன்.தேடல் வீண் போகவில்லை பாஸந்தியைப் பற்றி அ முதல் ஃ வரை தகவல் கிடைத்தது .ஆனால் அதன் செய்முறை கடினமாக இருப்பதாக தோன்றியது அதனால் அதை எளிதாக புரியும்படியாக நாலுபேருக்கு சொல்வோம் என்ற சிந்தனையின் வெளிப்பாடுதான் இந்தப் பதிவு.
நான் மொக்கை போடுவதாக நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. நிபந்தனைக்குட்பட்டது.

பாஸந்தி செய்முறை.

தேவயான பொருட்கள்.

[பால் 2லிட்டர்]

[சர்க்கரை 1 கப்]

[குங்குமப்பூ தேவையான அளவு]

[நெய் 3டீஸ்பூன்]

[பாதாம் 10 எண்ணம்]

[முந்திரி 15 எண்ணம்]

[பிஸ்தா தேவையான அளவு]

@செய்முறை@

வாணலியில் பாலை ஊற்றி சிறிதளவு தீயில் அடுப்பை வைத்து பாலை காய்ச்ச வேண்டும்.கவனிக்கவும் வாணலியின் அடி கனமாக இருக்க வேண்டும்.இல்லையென்றால் பாஸந்தி வெள்ளை நிறத்தில் இருக்காது கறுப்பு நிறத்தில் தான் இருக்கும்.சரி அடுத்ததாக பால் காய்ந்ததும் சிறிது குங்குமப்பூவே சேர்த்து கலக்க வேண்டும். அதன் மேல் படியும் ஏடை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொண்டே இருக்கவும்.இவ்வாறு பாலின் அளவு கால் லிட்டர் வரும் அளவிற்கு குங்குமப்பூ கலந்து ஏடுகளை எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அடுத்ததாக சேகரித்த பால்ஏடு மற்றும் சர்க்கரையும் சேர்த்து சிறிதளவு தீயில் நன்றாக கிளறவும்.பிறகு பாதாம்,முந்திரி,பிஸ்தா மூன்று பருப்புகளையும் நெய்யில் வறுத்தும் சேர்கலாம்.தண்ணீரில் ஊற வைத்தும் சேர்க்கலாம்.அது உங்களின் விருப்பம் .பின்பு அதன் மேல் செய்யப்படும் அலங்காரங்களும் உங்கள் விருப்பத்திற்கே.பாஸந்தியின் மற்றொரு சிறப்பு இதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்ச்சியாகவும் சாப்பிடலாம். அப்படியே சூடாகவும் சாப்பிடலாம்.

இப்போதே சமயலறைக்குச் சென்று ஆக வேண்டிய வேலைகளை பாருங்கள்.

புகைப்படம்

அழகு

August 14, 2011

stopcorruption movement in coimbatore: ஊழல் ஒழிப்பிற்கான லோக்பால மசோதா

stopcorruption movement in coimbatore: ஊழல் ஒழிப்பிற்கான லோக்பால மசோதா: "                                           ஊழல் ஒழிப்பிற்கான லோக்பால மசோதாவை உருவாக்க ஒரு கூட்டுக்குழு ஏற்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் ..."
மனைவியை நன்றாக வைத்திருப்பதாக காட்ட வேண்டுமே என்கிற தவிப்பும் வந்து போகிற வறுமையின் வாசனை தெரிந்துவிடக்கூடாதே என்கிற பதட்டமுமாக கௌரவம் கப்பாற்ற அலைகிற அந்தச் சமயங்களிலேதான் அரிசி தீர்ந்துவிடுவதும் எண்ணெய் காலியாகிவிடுவதுமென பற்றாக்குறைகளால் நிறைகிறது வீடு .இருந்தாற்போல இருமுகிற மகளுக்கெனவும் விருந்தினர் வருகையூட்டிய தைரியத்தில் எதையாவது கேட்டழுகிற மகனுக்கெனவும் கையிருப்பும் கரைந்து போக வந்திருப்பவர்கள் எதையாவது கேட்டு வெறுங்கைச் சிரிப்பு வெளிபட்டு விடக்கூடாதே என்கிற பதற்றம் மனைவியாகிவிட்ட மகளுக்கே அதிகமிருக்கிறது எப்படியாகிலும் புறப்பட்டுப் போகிற போது தந்து விட்டுப் போன இரண்டாயிரம் ரூபாய் அறிந்து கொண்டதன் அடையாளமாக இருக்கலாமெனவும் தோன்றுகிறது.
பி.ஜி. கதிவன் என்பவர் . 17.8.2011 ஆனந்த விகடனில் எழுதிய கவிதை