free mail

December 18, 2014

லிங்கா எனது பார்வையில் ..

லிங்கா .....
.
என் பார்வையில் ......
.
.
இந்த திரைப்படத்தின் நாயகனாக என் கண்முன்னே விரிவது ஒளி இயக்குநர் ரத்னவேலுதான் ...ப்ப்ப்ப்பா என்ன ஒரு கேமரா விளையாட்டு . சூப்பர் ..
.
அடுத்தது கலை இயக்குநர். அருமையான வேலைப்பாடுகள் அதுவும் கடின உழைப்பின் பிரதிபலிப்பு கண் கொட்டாமல் ரசிக்கவைக்கிறது .கலைக்கும் ஒளிக்கும் கொஞ்சம் மூளையாக இருந்த இயக்குனர் ரவிக்குமார் அவர்களுக்கு மிகுந்த நன்றிகள் ..
அவருக்கு இந்த இரண்டு துறை சார்பாகத்தான் நன்றியோ பாராட்டோ தெரிவிக்க முடியும் .ஏனையவை ஏனோதானோதான் ..இசையைப் பற்றி இப்போது பேசத்தேவையில்லை ஏன்னா முன்பே அறிந்துதான் பாடல்கள் அத்தனையும் அருமை .பின்னணி இசையும் அருமைதான் ....
.
ரஜினி ...
.
மாற்றம் மட்டுமல்ல தலைவரும் மாறமாட்டார் போல பழைய பல்லவியை மீண்டும் பாட முயற்சித்துக்கொண்டிருக்கிறார் ..குரல் கரகரத்து விட்டது என்பது ரசிகனான எங்களுக்கு வருத்தமே ...அமிதாப்பின் காலில் விழுந்தால் மட்டும் போதாது .அவர் கைப்பிடித்து அவர் பாதையில் கொஞ்சதூரமேனும் பயணப்பட்டால் ரஜினி என்ற  மாஸ் கலையாமலிருக்கும் என்பது என் எண்ணம் ....
.
ரஜினியின் எந்த திரைபடத்தையும் பார்த்தாலும் முன்பே பார்த்திருந்தாலும் ஒரு சில காட்சிகளாவது ரஜினி  என்னை சிலிர்க்க வைப்பார் .அதுவும் மீண்டும் மீண்டும் அதே காட்சிகளை பார்த்தாலும் .ஆனால் இந்த திரைப்படத்தில் ரஜினியோ ரவிக்குமாரோ அந்த வாய்ப்பை எனக்கு தரவில்லை ..வருத்தம்தான் போகட்டும் .பிரம்மாண்ட காட்சிகளால் கவர முயற்சித்துவிட்டு ..காட்சி அமைப்பதில் கோட்டை விட்டுவிட்டார் இயக்குநர். ஓட்டையாக...சிலபல நகைச்சுவை காட்சிகள் ரசிக்கும்படியாவே இருந்தது அதுவும் ரஜினியின் தோஸ்தான பாம்பு நகைச்சுவை அட்டகாசம் போங்க ..என்னா முகபாவம் சூப்பர் .கூடவே சீரியசான காட்சிகளும் சிரிப்பை வரவழைத்ததுதான் சோகம் ....
இப்படி பழைய ரஜினியை ரசிக்க முடியாமல் மனம் இரண்டுபட்டு கிடந்தவேளையில் ஒரே நிவாரணமாக வந்தார் அனுஷ்கா ....(பாஸ் அது நிர்வாணம் இல்ல நிவாரணம் )அவரைப்பார்த்து மனம் பெருத்த ஆறுதலடைந்தது ..இரண்டு திரைப்படத்தில் இரண்டான மனசு லிங்காவில் நாலானது ம் அவ்வளவு அழகு ....நடிப்பும் அழகுதான் ...
..
சோனாக்சி .....நல்லா நடிக்குறாங்க ...ஆனா நடனம்தான் ப்ப்ப்பா சகிக்கல ...
.
சந்தானம் ...
மணமில்லாத சந்தணம் ஆயிட்டார் ...
.
ஜெகபதிபாபு ....
அழகான மொக்க வில்லன் ..மொக்கையாக்கிட்டாங்க ...
.

.ரவிக்குமார் ....

கதை திரைக்கதை இயக்கம் ..மூணுமே சறுக்கல்தான் ..ரசிக்க முடியல ....ரஜினி நடித்த திரைப்படங்களிலேயே இந்த திரைப்படத்தில்தான் அவருக்கு மிக அதிகமான டூப் பயன்படுத்தியதற்காக ரவிக்குமாருக்கு மிகப்பெரிய கொட்டு ..காட்சிகளே கெட்டுப்போச்சு ......
.
இப்படி பல குறைகளும் சில நிறைகளும் இருந்தாலும் மீண்டும் இந்த திரைப்படத்தை பார்க்க விரும்புவேன் ..ஏன்னா நான்  ரஜினி ரசிகன் .....
.
..
மொத்தத்தில் லிங்கா கறுப்பு காகிதத்தில் வெள்ளைப்புள்ளி ......

November 4, 2014

கடன் ஓர் கடன்

நம்ம அண்ணன் ஒருத்தர்ட்ட...

அண்ணே எனக்கு அவசரமா பத்தாயிரம் ரூபாய் தேவைப்படுது யார்கிட்டயாவது வட்டிக்கோ அல்லது டெய்லி சீட்டுக்கோ வாங்கித்தர முடியுமா என கேட்டேன் ..கடனாய் கேட்டாலும் தரமாட்டார்கள் என்பதால்தான் வட்டி என்ற பிட்டை போட்டேன் )
நொடி கூட தாமதிக்காம உடனே சொன்னார் .என்னது வட்டிக்கு காசா டேய் நாங்க எல்லாம் வாங்கிட்டு படுகிற அவஸ்த்தை எங்களுக்குதான் தெரியும் .எக்காலத்திலையும் வட்டிக்கு வாங்கும் எண்ணத்தை மட்டும் விட்டுவிடு என சீரியசாவே சொல்லி முடிச்சார் ..
.
நான் குழம்பிட்டேன் நம்ம நல்லதுக்குதான் வாட்டிக்கு வாங்க வேணாம்னு சொல்றாங்களா ..அல்லது நம்மேல் கொண்ட அதீத நம்பிக்கையின் பிரதிபலிப்பே இந்த நிராகரிப்பாய் இருக்குமா என குழம்பித்தான் போனேன் ..
இருந்தாலும் ...
அண்ணே எனக்கு ரொம்ப தேவை இருக்குண்ணே அதனால ஐந்தாயிரம் ரூபாய் கடனுக்காச்சும் கொடுண்ணே என்று கேட்டேன் ....
.
கொஞ்சமா திகைத்த முகத்தோடு சொன்னார் ....
வாய்ப்பே இல்லயப்பா ஏன்னா போனவாரம்  வட்டிக்கு வாங்குன  பத்தாயிரம் ரூபாய் சாயங்காலம் திருப்பி கொடுக்கணும் இப்போ ஐந்தாயிரம் ரூபாய்தான் இருக்கு மீதி ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஓடிட்டு இருக்கேன் ...இதுல நாளைக்கு ஒருத்தருக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடுக்கணும் ...அடுத்வாரம் இன்னும் ஒருத்தருக்கு ...
.
அண்ணே போதும்ணே இதோட நிறுத்திரு .உன்கிட்ட கடனுக்கும் கேட்கல வட்டிக்கும் கேட்கல .....போட்டா ..
.
ஹலோ நான்தான்டா எனக்கு அவசரமா ஒரு ஐந்தாயிரம் ரூபாய் தேவைப்படுது ....
.
டேய் மச்சான் நானே உன்கிட்ட கேக்கலாம்னு இருந்தேன்டா ... ...
.
அவன் பேசுனது பிறகு எனக்கு கேக்கவே இல்லை ...கட் பண்ணிட்டேன் அழைப்பை ......
.

November 3, 2014

சில்லரை

சினிமாவில் யதார்த்தத்தை மீறிய சில காட்சிகள் நிஜ வாழ்க்கையில் நடக்கும்போது மிக சுவாரஸ்யமாகிவிடுகிறது ... அப்படிதான் இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தையில் வெட்டியாக நின்று கொண்டிருந்தபோது ஒரு குடிகார பிச்சைக்காரர் ஒரு பக்தி கானத்தை மிகுந்த உச்சக் கூக்குரலில் பாடி பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார் .அவர் பாடும் தோரணையும் வித்தியாசமான பாவனையும் என்னை கவர்ந்ததால் அவரை கவனித்துக்கொண்டிருந்தேன் ...அவரும் நான்கைந்தை வரிகளை மட்டும் மீண்டும் மீண்டும் பாடியவாறே நான் நின்றிருந்த கடைக்கருகே வந்து மீண்டும் முதல் வரியிலிருந்து பாட ஆரம்பித்தார் ..கடைக்கு காய்கனி வாங்கவந்தவர்கள் பாடக பிச்சைக்கரரின் குரலின் உச்சநிலையைக் கண்டு அதுவும் செவிப்புறமாய் பாடும்போது மிரண்டுதான் போனார்கள் ...இதைப்பார்த்த கடை முதலாளிக்கு சிறிது கோபம் வந்துவிட்டது .இருந்தாலும் வெளிக்காட்ட முடியாத சூழ்நிலையாதலால் அமைதியாக இருந்துவிட்டார் ..பாடகரும் பாடிய நிலையிலேயே மூன்று முறை கையேந்தி விட்டார் ..முதலாளி கண்டுகொள்வதாக இல்லை ..மீண்டும் பாடகரின் ஒருசில முயற்சிச்சிக்குப் பின் முதலாளி வாயைத் திறந்து சில்லறை இல்லை என்று மூஞ்சை கோணலாக வைத்துக்கொண்டே சொன்னார் ...கொஞ்சமும் அலட்டாத பாடகர் பாடிபடியே இந்தாங்க எடுத்துக்கோங்க என்று தன் தட்டை முதலாளி முன் வைத்தார் ...... அப்படியே முதலாளி அதிர்ச்சியாயிட்டாரு.. சுத்தியிருந்த நாங்களும்தான் ...சில வினாடிகளுக்குப் பிறகு சாவதனாமாக பாடகர் சொல்கிறார் சில்லறை எடுத்துக்கோங்கன்னு சொல்லவந்தேன் அப்படி என்று விட்டு மீண்டும் பாட ஆரம்பித்து விட்டார் ..அவர் பாடலை ஆரம்பிக்கவும் நான் சிரிக்க ஆரம்பிக்கவும் சரியாய் இருந்தது..அதுவும் பலமாக சிரித்தேன் என் கூட துணைக்கு சிரிக்கவும் ஒருசிலர் இருந்தனர் ....இப்போது முதலாளிக்கு பிச்சைக்காரனை மறந்துவிட்டார் என்னை முறைக்க ஆரம்பித்தார் ..நான் இன்னும் பலமாக சிரித்தேன் .அவர் கோ ப ப்டவில்லை அவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டார் ..... . ஆனா பிச்சைக்கார பாடகருக்குதான் காசு கிடைக்கவில்லை ..பிறகு நான்தான் என்கிட்ட சில்லரை இல்லையென சொல்லி வேறு ஒருவரிடம் ஒரு ரூபாய் கொடுக்க சொன்னேன் .....
.
நான் கொடுக்க சொல்லவில்லை என்றால் என்னையும் எடுக்கச்சொல்லியிருப்பார் ...........சில்லரை ......

November 2, 2014

ஆங்கிலம் கற்பதற்கு ஓர் வியாபாரக்கூடம்

எட்டு வயது குழந்தையுடன் ஒரு உரையாடல் ....
உன் பெயரென்னம்மா ....
.
கிப்சிகா ...
.
எத்தனாவது வகுப்பு படிக்குற ..
.
மூணாவது...
.
எந்த பள்ளிக்கூடம் ..
.
ஏபிஜெஎம்..காக்காவிளை ..
.
உன்னுடைய வகுப்பில் மொத்தம் எத்தனை பேர் ..
.
பதினான்கு ..
.
சரி திருக்குறள் தெரியுமா ..
.
தெரியும் ..
.
எத்தனை ..
.
ஒன்று ..
.
ஒண்ணுதான் தெரியுமா ..
.
ஆமா ..
.
மொத்தம் எத்தனை திருக்குறள் உண்டுனு தெரியுமா ...
.
தெரியாது ...எங்களுக்கு சொல்லிதரல ..
.
தமிழ் பாடம் நடத்துவாங்கதானே ..
.
ஆமா ஒரு பிரீயடு மட்டும் ...
.
சரி உங்க பள்ளிக்கூடத்தில் இங்கிலீஷ்ல பேசுவீங்களா தமிழ்ல பேசுவீங்களா ...
.
தமிழ் பிரீயடை தவிர மத்த நேரம்லாம் இங்கிலிஷ்லதான் பேசனும் மீறிப் தமிழ்ல பேசுனா பைன் போடுவாங்க ..சில நேரம் அடிக்கவும் செய்வாங்க ...
.
ஐயையோ ரொம்ப அநியாயமா இருக்கே ..
.
ம்.
.
வீட்ல அப்பா அம்மாகிட்ட பள்ளிக்கூடத்துல இந்த மாதிரி தண்டனை தராங்கன்னு சொன்னியா ...
.
சொன்னேன் அவங்க ஒண்ணும் சொல்ல ..
.
உனக்கு தமிழ்ல பேசி தண்டனை கிடைச்சுருக்கா..
.
ஆமா ஒருதடவை ....
.
உனக்கு இங்கிலீஷ்ல பேசுறது பிடிக்குமா தமிழ்ல பேசுறது பிடிக்குமா ...
.
தமிழ்ல பேசுறதுதான் பிடிக்கும் ...
.
ஓ செல்லம் சூப்பர் ..
.
சரி தமிழ்ல பேசுனா தண்டனை பள்ளிக்கூடத்தை அடிச்சு உடைச்சுரலாமா ...
.
குறு குறுவென என் முகத்தைப் பார்த்துவிட்டு ..உங்களால் அது முடியாது என்றாள் ....
நானும் அதோடு பேச்சை நிறுத்திவிட்டேன் ....புள்ள கடைசி பதிலை சரியாதான் சொல்லிருக்கா ......
இந்த நிகழ்ச்சியை நாளைக்கு அல்லது அடுத்த நாளோ நாலுபேரிடம் பேசிட்டு இருக்கும்போது பொங்குவேன் அடுத்ததான் நான் என்  வேலையைப் பார்க்கப் போய்விடுவேன் ...மிகச் சாதாரண சாமான்யனின் கோபம் எதிர்த்து பிரச்சினை செய்யாத நாலுபேரோடு முடிகிறது ......

October 20, 2014

கரி கரியாய் கரணமாம் ...

இரண்டுபேர் ஒரு பையனைப்பற்றி பேசிட்டு இருந்தாங்க ..அந்த பையன் இருக்கானே ரொம்ப நல்லவன் ஒரு கெட்டப்பழக்கம் கிடையாது .தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருப்பான் ..எந்த சண்டை சச்சரவுக்கு ஒண்ணும் போறதில்லை ரொம்ப அமைதியான பையன் .சிக்கனம்னா என்னானு அவன்கிட்டதான் படிக்கணும் அவ்வளவு சிக்கனம் . அவனை நம்பி பொண்ணு கொடுக்கலாம் அப்படி இப்படினு ஆகா ஓகோன்னு பேசிட்டு இருந்தாங்க ..இத கேட்டுட்டு இருந்த நான் அண்ணே அந்த அரிசி வியாபாரி பையனைப் பற்றிதானே பேசுறீங்க ..
.
ஆமாப்பா ..
.
ஆமாண்ணே அந்தபையன் ரொம்ப நல்லவன் .பாருங்களேன் போனவாரம் நோயாளி  ஒருத்தருக்கு இரத்தம் தேவைப்பட்டுச்சு ..இவனுக்கு அதே வகை ரத்தம்னு இவனிடம் கேட்டதற்கு உடனடியாக தன்னையே நோயாளி ஆக்கிட்டாண்ணே ..காய்ச்சல் பீச்சல்னு ....
.
இதுல என்னடா தப்பு இருக்கு தன் உடம்பு பாதிக்கப்பட்டிருந்ததால இரத்தம் கொடுக்க தயங்கினான் அவ்வளவுதானே ....
.
ஆமாண்ணே அவன் நல்லவனாச்சே அதான்  தரமுடியாதுன்னு சொலறதுக்கு பதிலா தரக்கூடிய சூழ்நிலையில் இல்லையென சுத்தி சொன்னான் அவ்வளவுதான் .....
.
ஆமாடா அவன் இரத்தம் கொடுக்க முன்வரவில்லை என இவ்வளவு நாசூக்கா கேலி பண்றியே நீ எத்தனை பேருக்கு எத்தனை லிட்டர் இரத்தம் கொடுத்துருக்க சொல்லு பார்க்கலாம் .....
.
இந்த கேள்வி என் நெஞ்சில் இடியாய் இறங்கியது ...அந்த இடியின் பாதிப்போடு சொன்னேன்.....அண்ணே இன்னும் யாருக்கும் இரத்தம்  கொடுக்கலண்ணே .......
.
தம்பி கரியை நம்ம மூஞ்சில வச்சுட்டு அடுத்தவன் மூஞ்சி கரியை பாக்கக்கூடாது சரியா ....
.
சரிண்ணே ....
.
.
கொஞ்சம் உண்மை கொஞ்சம் கற்பனை தொகுப்பிலிருந்து .....

October 8, 2014

ஆடை என்ற போலி திரை

நானும் கொஞ்சநாளா பார்த்துட்டே இருக்கேன்  இந்த அரைகுறை ஆடைப் பிரச்சினை ஓய்ந்தபாடில்லை ..தொலைக்காட்சியை திறந்தா அங்கும் இதுதான் ஓடுது பேஸ்ப்புக்கை திறந்தா இங்கும் அதுதான் ஓடுது ...கொய்யால ஐம்பது வருசத்துக்கு முன்னாடி வெறும் புடவையை மார்பை சுற்றிக்கொண்டு அலைந்தபோது எந்த நாதாரியும் நாகரீகத்தைப் பற்ற பேசவில்லை ..அப்போது ஜாதி துணைநின்றது ..இப்போது கலாச்சாரத்தை துணைகளைக்கிறார்கள் ..ஆடைதான் ஒரு சமூகத்தின் கலாச்சாரத்தை தீர்மானிக்கிறது என்றால் அப்படிப்பட்ட ஆணியே வேண்டாம் என்பதே எண்ணம் ...
பாதி மார்பு வெளியே தெரிய வலம் வரும் கறுப்பு வெள்ளை தேசத்தில் எந்த ஆடவனும் ஆடை குறைவாக இருக்கிறதென்று குறுகுறுவென பார்த்தாக எந்தச் செய்தியும் சொல்லவில்லை ..மாறாக நம் சமூகத்தில் மில்லி மீட்டர்கள் மிடி உயரும் நேரம் பார்த்தது சென்டிமீட்டர்கள் உள்ளம் கேட்குமே மோர் ..என்ற வரிகளுக்கேற்பதான் நாம் வடிவமைக்கப்பட்டிருக்கிறோம் ..நம் வடிவம்தான் மாறவேண்டுமே தவிர ஆடைகளுக்கான வடிவமல்ல ..கோணலோ நேரோ அதை பார்க்கும் பார்வையே தீர்மானிக்கிறது .
.
இப்படிக்கு...
நேராகப் பார்க்க முயற்சிப்பவன் ....

October 5, 2014

நண்பன் ..

நேற்று இரண்டு நண்பர்களுக்கு பிரச்சினையாம் .கொஞ்நேரம் கழிச்சு ஒரு நண்பன் வந்து அவர் தரப்பு நியாங்களையும் எதனால் கோபமடைந்தேன் என காரணங்களையும் விவரித்தார் .. . நான் அமைதியாக கேட்டுக்கொண்டே இவ்வளவு மோசமாகவா நடந்துகொண்டான் அவன் அப்படிப்பட்ட ஆள் இல்லையே உன்னைமாதிரி நல்ல குணமுள்ளவனாச்சே என சொல்லி பேச்சை முடித்தேன் ... . இன்னும் கொஞ்ச நேரம் கடந்து சண்டயிட்ட மற்றொரு நண்பனும் வந்தான் ....அவரும் முதலாமவர் போலவே பல சிலவற்றை அடுக்கினார் ..நானும் முதலாமவருக்கு சொன்ன அதே வசனத்தை சொல்லி நாளை சந்திப்போமென நகர்ந்தேன் ... . இன்னைக்கு பார்க்குறேன் இரண்டுபேரும் கைகோர்த்துட்டே டாஸ்மாக் நோக்கி வேகமா நடந்துகிட்டு இருந்தாங்க ... அதைப்பார்த்து கொஞ்சம் அதிர்ச்சிதான் நேத்து அந்தமாதிரி திட்டிகிட்டவங்க இன்று இந்த மாதிரி போனா அதிர்ச்சி வராம என்ன வரும் .....நான் நேரா அவர்களை பார்ல போய் பிடிச்சேன் (சத்தியமா நான் குடிக்குறதுக்காக அங்கு போகல அவங்ககிட்ட பேசறதுக்குதான் போனேன் .பேசிப்பேசி பேசிப்பேசி..... ) ஏண்டா நேத்து அவ்வளவு அசிங்கமா திட்டிக்கிட்டீங்க இன்னைக்கு புருஷன் பொண்டாட்டி மாதிரி குலாவிட்டே போறீங்க நீங்க சொல்றதல்லாம் கேக்குறவன் கேணையானாடா ..என கோபமாக கேட்டன் ..... . எதிர்ல இருந்தவன் சிரிச்சுகிட்டே மற்றவரிடம் சொல்கிறான் ...மச்சான் நம்ம ரெண்டு பேரோட  சிந்தனையும் செயலும் ஒரே பாதையில் போகுதுல்ல ...பார் நேத்துகூட ஒரே கேணைய ரெண்டுபேரும் தெரிவு செய்துருக்கறோம்ன்னு சொல்லிக்கிட்டு ஹாஹாஹா சிரிக்குறானுங்க .... இதைப்பார்த்து என்னால் என் கோபத்தை அடக்கவே முடியவில்லை ...படார்னு எதிரில் இருந்த மதுபுட்டிய எடுத்தேன் .அப்படியே உடைச்சேன் சிசிசிசி திறந்தேன் ..கப்புல ஊத்தி குடிச்சேன். .அவனுங்களுக்கு கொஞ்சம்தான் கொடுத்தேன் ...இதுதான் சரியான தண்டனை அவர்களுக்கு ....... . . கொஞ்சம் உண்மையும் கொஞ்சம் கற்பனையும் ..தொகுப்பிலிருந்து ....

May 23, 2014

கோச்சடையான் விமர்சனத்தின் விமர்சனம் .

கோச்சடையான் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு ரஜினி ரசிகர்களையே ஓரளவுக்கு கலக்கமான நிலையிலேயே வைத்திருந்தது என்பதுதான் உண்மை.அதற்கு ஒரே காரணம் ரஜினியின் மகள் என்ற உரிமை அங்கு ரஜினியை இயக்குகிறது என்பதால்தான் இருக்க முடியும்.மகளுக்காக செய்கிறார் என்றே அறியா சிறுவர்கள் விமர்சித்தார்கள்.பாவம் அவர்களுக்கு இப்போது புரிந்திருக்கும் திறமையானவரின் வாரிசும் திறமையானவாரக இருக்கலாமென்று. . முன்பு விமர்சித்த ஜோதிடர்கள் பலரை நுண்ணோக்கி வைத்து தேடியும் கிடைக்கவில்லை.காரணம் நேற்றைய தினத்தின் சிலிர்ப்பில் சிதறி ஓடிவிட்டார்கள்.ஐயகோ அவர்களின் அழுகிய அல்லது அழுத முகத்தை பார்க்க முடியவில்லையே என்செய்வேன் ராணாவே...எதிர்விமர்சனங்களாலேயே எதிர்பார்க்கப்பட்டு அதுவும் பயம் கொண்டு.ஆனால் இன்று எதிர் கருத்துக்கும் ஆள் இல்லை.முந்தினம் அப்படியே எதிராக விமர்சித்தவரும் இன்று பாராட்டுவதை கண முடிகிறது.அவர்களின் இந்த கண்ணியத்தை நாம் பாரட்டுவோம். . அதாவது புது முயற்சிகள் என்பது அண்டை நாட்டவன் செய்ய வேண்டும்.அதிலும் குறிப்பாக வெள்ளைத் தோலுடையவன் செய்யவேண்டும் அப்போதுதான் நாம் ஆர்ப்பரித்து வரவேற்போம். அதையே அண்டைவீட்டுக்காரன் செய்தால் கேலிதான் நம் முதல் மறுபடியாக இருக்கும்.நம்மால் புதிதாக கண்டுபிடிக்கத்தான் முடியவில்லை.வேறொரு சந்தையில் அறிமுகப்படுத்தியதையாவது விரைவாக நம் சந்தையில் அறிமுகப்படுத்த வேண்டும் எண்ணமாவது வராதா?அப்படியே வந்தாலும் வென்ற பின்னர்தான் வரவேற்பு.இதுவும் நாளை மாறலாம். . நேற்று முதல் இன்று வரை சுமார் இருபது கோச்சடையான் விமர்சங்கள் படித்திருப்பேன்.ஒருவர் கூட படத்திற்கு எதிராக ஒரு கருத்தைக் கூட முன்வைக்கவில்லை.அதாவது மோசம் என்றோ சரியில்லை என்றோ சொல்லவில்லை.ஆனால் ஒரு சில தொழில்நுட்ப குறைபாடுகளை சுட்டிக்காட்டியிருந்தார்கள்.அவையும் கதையாலும்,இசையாலும்,பிரம்மாண்டத்தாலும்,ரஜினியாலும் மறக்கப்பட்டு மறைந்துவிடுவதாகவே குறிப்பிட்டிருந்தார்கள். . இப்படியாக இந்தியாவின் நிரந்தர வசூல் மன்னனாக ரஜினி மீண்டும் தன்னை நிருபித்துக்கொண்டார்..... . . நன்றி

April 8, 2014

கேவலமான அரசியல் அதிகாரிகள்

அரசியல்வாதிகள் மக்களிடம் கும்பிடு போடுகிறார்கள்,மக்கள் அரசு
அதிகாரிகளிடம் கும்பிடு போடுகிறார்கள் அல்லது மக்கள் கும்பிடு போட
வேண்டுமென அதிகாரிகள் காட்டாயமாக எதிர்பார்க்கிறார்கள்,அதே அரசு
அதிகாரிகள் அரசியல்வாதிகளிடம் கூழைகும்பிடுப்
போட்டுத்திரிகிறார்கள்.எவருக்குமே மனிதாபிமானமும் இல்லை இரக்கமும்
இல்லை.குறிப்பாக அரசு அதிகாரிகளுக்கு.
இரண்டு நாட்களுக்கு முன் என் மாமா வாகன விபத்தில் மரணமடைந்து
விட்டார்.சாலைன் ஓரமாக நடந்துசென்று கொண்டிருந்த அவர் மீது அதுமீறலாக
வாகனத்தில் அலங்கார வளைவை ஏற்றி வந்ததால் அதில் ஒரு பகுதி வெளியே
நீட்டிக்கொண்டிருந்திருக்கிறது அப்பகுதி மோதியதால் சுழற்றப்பட்ட அவர்
வாகனச் சக்கரங்களுக்கிடை விழுந்ததால் கோரமே நிகழ்ந்து விட்டது..இதற்கு
முதல் காரணம் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்காத
அதிகாரிகள்தான்.எத்தனையோ விபத்துகள் இப்படி நடந்தும் அதிகாரிகள்
மெத்தனமாகவே இருக்கின்றனர்.அடுத்தவனிடம் பிடுங்கி தின்னும் இவர்களிடம்
நீதியையும்,ஒழுக்கத்தையும் எதிர்பார்ப்பது நம் தவறுதான்..
பதறிப்போய் உடலை அரசு மருத்துவ மனைக்கு எடுத்து சென்றால் மருத்துவர்
இல்லை சாவி இல்லை என உடலை அவசர ஊர்தியிலேயே காத்திருக்க வைத்துவிட்டு
சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.காரணம் பதிறிய உறவுகள் அவர்களிடம் இன்னும்
பணத்தை நீட்டவில்லை.உறவுகள் கோபத்தோடு எதிர்க்கையில் உடலை
மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்..அடுத்ததாக மருத்துவர்
வருகிறார்.இவர்கள் கோபப்பட்டதை அறிந்த மருத்துவர் நீங்கள் எப்படி
கோபப்படலாம் நான் நினைத்தால் இவர் குடித்து விட்டு வாகனத்தில் விழுந்து
விட்டார் என அறிக்கையை மாற்ற முடியும் என மிரட்டியிருக்கிறார்.இதைக்கேட்ட
உறவுகள் அதிர்ந்தே போய்விட்டார்கள்.இழந்த வேதனையில் இருந்தவர்களிடம் ஒரு
அரசு மருத்துவர் பேசும் பேச்சு இது..இறுதியில் உறவுகளை மன்னிப்பு கேட்க
வைத்தபின்தான் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார் அந்த மனிதம்
கொன்ற மருத்துவர்..இந்த சம்பவம் நடைப்பெற்றது குமரி மாவட்டத்தின்
குழித்துறை அரசு மருத்தவமனையில்..
.
அடுத்ததாக தக்கலை நகர காவல் நிலையம் .
புகார் கொடுக்கச் சென்றவர்களிடம் பேப்பர் வாங்கிட்டுவா,கார்பன் பேப்பர்
வாங்கிட்டுவா, பென் வாங்கிட்டுவா என அலக்கழித்துவிட்டு ஐநூறு ரூபாய்
கேட்டிருக்கிறார்கள் அதை வாங்கிக் கொண்ட பின்புதான் புகார் எழுதவே
அனுமதித்திருக்கிறார்கள்.இப்படி ஒவ்வொரு அதிகாரிகளை கடந்து வருகையில்
பிச்சைக்காசு ஆயிரத்து எண்ணூறு ரூபாபாய் பெற்றுக்கொண்டுதான் கடமையை
நிறைவேற்றியிருக்கிறார்கள் கடமை தவறா அதிகாரிகள்..விபபத்து நடந்த இடத்தை
பார்வையிட வந்த அதிகாரி பெட்ரோல் செலவு என அறுநூறு ரூபாய் பிச்சை
எடுத்திருக்கிறார்..
இப்படி நம் அரசு இயந்திரமும் அதன் உதிரிப்பாகாங்களும் மக்களுக்காக
இயங்குறோம் என சொல்லிக்கொண்டு மக்களின் ரத்தத்தையும் கண்ணீரையும்
எரிபொருளாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்...
.
இப்படிப்பட்ட கொடும்நிகழ்வுகளை பார்த்த கேட்ட பலர் உள்ளுக்குள்
கொந்தளித்து அதை எழுத்தாக மட்டுமே கொண்டு வர முடிகிறது..சுத்த
கையாலாகாத்தனம்தான் என்ன செய்வது நானும் சராசரி ஆயிற்றே...
.
.
பின் குறிப்பு..
குமரி மாவட்ட நண்பர்கள் இதை படித்தால் தயவு செய்து பகிரவும்...

February 3, 2014

விழிப்புணர்வு பிரச்சாரம் இப்படியும் செய்யலாம்.

நெல்லையச் சார்ந்த சங்கர நாராயணன்,அனுபாரதி என்ற புதுமண
தம்பதியினர்.தங்கள் திருமணம் முடிந்த அடுத்த பதினயிந்தாவது நிமிடத்தில்
திருமண மண்டபத்திலேயே ரத்ததானம் வழங்கினர்.மணமக்களை வாழ்த்த வந்த
ஐம்பதுக்கும் மேற்பட்ட சுற்றமும் கூடவே ரத்ததானம் வழங்கி தங்கள் வாழ்த்தை
தெரிவித்தனர்.
.
.
அவர்கள் மணமக்களல்ல மனமக்கள்...

தகவல் மற்றும் புகைப்படம்.
ONEINDIATAMIL

January 28, 2014

2013 ஆம் ஆண்டு விற்பனையில் முதலிடம் பிடித்த ஸ்மார்ட்போன் நிறுவனம்.

கடந்த ஆண்டு மொத்தம் சுமார் 99 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை
செய்யப்பட்டுள்ளன.இது 2012 ஆம் ஆண்டைக்காட்டிலும் 41 சதவீதம்
அதிகமாகும்.
.
.
இதில் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் மட்டும் 30 கோடியே இருபது லட்சம் அளவுக்கு
விற்பனையாகிருக்கின்றன.இது உலக அளவில் கிட்டத்தட்ட நாற்பது சதவீதமாகும்.
.
.
அடுத்தபடியாக ஆப்பிள் ஸ்மார்ட்போன்கள் 15 கோடியே 34 லட்சம் அளவில்
ஏற்றுமதி செய்து இரண்டாவது இடத்திலும்.
.
.
மூன்றாவதாக ஹூவாய் நிறுவனம் 5 கோடியே 4 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை
செய்திருக்கின்றன.
.
.
எல்.ஜி 4 கோடியே 76 லட்சமும்,லென்னோவா 4 கோடியே 55 லட்சம்
ஸ்மார்ட்போன்கள் விற்பனையோடு அடுத்தடுத்த இடங்களை பிடிக்கின்றன.
.
.
சுமார் 37 கோடியே 33 லட்சம் ஸ்மார்ட்போன்கள் இதர நிறுவனங்களால் விற்பனை
செய்யப்பட்டுள்ளது.
.
.
தகவல் உதவி.
cnet.net

January 24, 2014

ஜில்லா,வீரம் ஒரு பார்வை சின்னதாக..

இந்த இரண்டு திரைப்படங்களையும் ரசித்து பார்ப்பதற்கோ சுவைப்பதற்கோ
அவசிமில்லை.காரணம் நாயகர்களின் கதைத் தேர்வு அப்படி.இயக்குநர்களின்
இயக்கமோ எப்படியோ அப்படி.இனி ஒப்பிடலாம்.

அஜித்.
.
மங்காத்தாவில் வெள்ளை முடியோடு வந்த அஜித்தை ஏற்கமுடிந்த எனக்கு
வீரத்தில் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.கதைக்கே ஒட்டாத பாத்திர
வடிவமைப்பு.இது தேவையில்லாத விளம்பரம்தான்.அடுத்த படத்திலாவது சினிமாவை
சினிமாவாக காட்டுங்கள்.யதார்த்தமில்லாத கதையை
திரைப்படுத்திவிட்டு,யதார்த்தமான தோற்றத்தை திரையில் கொண்டு வருவது ஏன்?
.
.
விஜய்.
நீங்கள் ஒரு கல்லூரி மாணவன் என்று சொன்னால் ஒப்புக்கொள்ளத்தான்
வேண்டும்.ஏன்னா இளமை கூடிக்கொண்டே போகிறது.அழகு ஏறிக்கொண்டேச்
செல்கிறது.ஆனா ஒரு காவலதிகாரியாக உங்களை! மிடியல வேண்டாம் விட்ருங்க.
.
.
காஜல் அகர்வால்,தமன்ன,
பெருசா ஒண்ணுமில்லை அவங்களை பற்றி சொல்வதற்கு..
.
.
இயக்குநர் சிவா,
சிறுத்தைனு ஒரு சிறப்பான படத்தை பார்க்காமலே அஜித் இந்தப்பட வாய்ப்பை
உங்களுக்கு தந்திருப்பார் என நினைக்கிறேன்.வில்லனுடைய கெத்தே உங்களால்
உடைபடுகிறது சிவா.அடுத்தப் படத்திலாவது கொஞ்சம் யதார்த்தத்தை
கலக்குங்க...கவனிக்க...அடுத்தப்படம் கெடைச்சா.
..
.
இயக்குநர் நேசன்.
உங்கள் திறமை பாராட்டப்படுகிறது.ஏன்னா இந்த படத்தில் மோகன்லாலை நடிக்க
சம்மதிக்க வைத்ததற்கு.எப்படி முடிந்தது உங்களால் ஒரு மொக்கை கதையால் நல்ல
கலைஞனை கவர்ந்திழுக்க.உங்கள் ஒருசில காட்சியமைப்புக ள் அருமையாக
கையாளப்பட்டிருந்தது.ஆனால் காட்சி முடிவில் அந்த கோர்வை
கைவிடப்பட்டுவிடுகிறது.நாயக துதிபாடி சினிமா எடுக்க நினைக்காதீர்கள்.
.
.
நகைச்சுவை.
நகைத்து சுவைப்பதற்கான காட்சிகள் இரண்டு படத்திலும் ஒன்றுமில்லை.ஏதோ
சிரிக்கலாம் .சந்தானத்தையும்,சூரியையும் கதையில் திணித்திருக்கிறார்கள்
என்றே சொல்ல வேண்டும்.மனதில் நிற்கா நகைச்சுவைகள்.
.
.
வசனங்கள்.
இரண்டு இயக்குநர்களும் டிவிட்டர்,பேஸ்புக் பக்கம் அதிகமாக வலம்
வருவார்கள் போல நிறைய ஸ்டேட்டஸ்களும்,டிவீட்டுகளும் நன்றாக இருந்தன.ஆனா
அதை பன்ச் பாணியில் பேசும்போதுதான் கொஞ்சம் கடுப்ப கெளப்புது.வசனம்
நன்று.
.
.
.
பாடல்கள்.
அஜித் திரைபடத்தில் பாடல்கள் ஹிட்டாகி ரொம்ப வருசம் ஆயிடிச்சி.அந்த
வரிசையில் வீரமும் ஒன்று.
விஜய் இதில் மாறுபடுகிறார் .விஜய்யின் படத்தில் குறைந்தபட்சமாக இரண்டு
பாடலாவது ஹிட்டாகிவிடும் இந்தப்படத்திலும் அது தொடர்கிறது.
.
.
கதை.
அப்பன் வெப்பன் இரண்டு படத்துலேயும் இதுதான் கதை.அதாவது ஜில்லாவுல
வெப்பன் வைச்சுருக்கிற அப்பனை திருத்த முயல்கிறார் விஜய்.வீரத்தில்
நாயகியின் அப்பனுக்கு வெப்பனால் வரும் ஆபத்திலிருந்து காப்பாற்ற
முயல்கிறார் அஜித்.
.
..
.
பொதுவாக பெரிய கதாநாயகர்களின் திரைப்படங்கள் அவர்களின் ரசிகர்களை
திருப்திபடுத்தவே எடுக்கப்படுகின்றன.அப்படிதான் எடுக்கவும்
செய்கிறார்கள்.அந்த வரிசையில் இரண்டு எண்ணிக்கை கூடியிருக்கிறது அவ்வளவே.
.
.
.
பின்குறிப்பு.
இது என்பார்வையில் மட்டும்..
நன்றி..

January 23, 2014

ஆடு இல்லை ஆடுவேன்..

ஒரு விவசாயின் கண்காணிப்பில் வளர்ந்த ஆடு ஒன்று வழிதவறி அருகில் இருந்த
காட்டுக்குள் நெடுந்தொலைவு சென்றுவிட்டது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைபசேலன தாவரங்களும்,புல் பூண்டுகளும்
செழித்து கிடந்தன.ஆனால் ஆவலாய் உண்பதற்கான மனநிலையில் ஆடு இல்லை.பயத்தோடு
பதறியபடி ஓடி ஓடி ஓய்ந்து போனதுதான் பலன்.

ஏற்கனவே பதறிபோன நெஞ்சை பதறவைக்கும் விதமாக புதருக்குள் இருந்து பாய்ந்து
வந்தான் எமன் சிறுத்தை.திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பாராத ஆடு
நிலைகுலைந்துதான் போய்விட்டது.பாய்ந்தது கிழட்டு சிறுத்தை போல்
கழுத்துக்கு வைத்த குறி தவறி போய் அருகில் இருந்த மரத்தில்
முட்டிக்கொண்டது.இந்த சிலவினாடி புலியின் தடுமாற்றத்தை சாதகமாக்கி
சிட்டாக பறந்தது ஆடு.ஓடியது ஓடியது மணிக்கணிக்கில் ஓடி சோர்ந்து
விழுந்தது.உடலில் வலுவில்லாத நிலையில் மரணபயத்துடன் தன் சுயநினைவை இழந்து
கொண்டிருந்து ஆடு


சிறிது நேரம் கழித்து கண் விழித்த ஆட்டின் எதிரே ஒரு கரிய உருவம் நின்று
கொண்டிருந்தது.அது ஒரு காட்டாடு.கண்விழித்த ஆடு காட்டாடைப்பார்த்து அலறத்
துவங்கியது.காட்டாடே கொஞ்சம் அரண்டுதான் போனது .இருந்தாலும் பொறுமையாக
பயப்படாதே நண்பா நான் உன் இனம்தான்.உனக்கு உதவலாம் என்ற எண்ணத்தில் இங்கு
நின்று கொண்டிருக்கிறேன்.

வேண்டாம் நீ எனக்கு உதவ வேண்டாம் இங்கிருந்து நகர்ந்தாலே போதும்.

நீ இந்த காட்டிற்கு புதியவன் என நினைக்கிறேன்.இந்த சூழ்நிலையில் என் உதவி
கட்டாயம் உனக்கு தேவைப்படும்.

கொஞ்சம் யோசனையோடு காட்டாடை நோக்கியது கிராமத்து ஆடு.

குறிப்பறிந்த காட்டாடு பயப்படாமல் உன்னைப்பற்றிய விவரத்தை சொல் என்றது.

சிறிய தளர்வுடனான தயக்குத்துடன் தன் முழுக்கதையையும் சொல்லியது.

கதையை கேட்ட காட்டாடு உனக்கு நான் உதவுகிறேன்.அதற்கு முன்பு நான்
சொல்வதைக் கேள்.இந்த இயற்கை அளப்பரிய வளங்களை நமக்கு
கொடுத்திருக்கிறது.விதவிதமான உணவுகள், விருப்பமான பகுதிகளுச் செல்ல முழு
சுதந்திரம் என எல்லாமே இங்கேதானே இருக்கிறது.அதனால் இங்கேயே இருந்து
விடலாமே.

ஒருக்காலும் முடியாது.சற்று முன்னர் உன் காட்டில் நடந்த அனுபவமே போதும்
என் வாழ்நாள் முழுமைக்கும் இந்த காட்டை வெறுக்க.அதனால் தயவுசெய்து என்
கிராமத்துக்குச் செல்வதற்கான வழியை காட்டு என்றது.

காட்டாடு எவ்வளவு எடுத்துச் சொல்லியும் பலன் இல்லாததால் வெள்ளாட்டின்
கிரமாத்திற்கு செல்வதற்கான வழியை தேட தீர்மானித்தது.

ஒரு வார தீவிர தேடலுக்குப் பிறகு இரு ஆடும் கிராமத்தை அடைந்தன.இந்த ஒரு
வாரத்தில் நான்கு முறை நான்கு விதமான விலங்குகளின் தாக்குதலிலிருந்து
இரண்டும் தப்பின.இதில் வெள்ளாட்டின் நிலைதான் பரிதாபத்துக்குரியது.

காட்டாடு கிராமத்து ஆட்டைப்பார்த்து கேட்டது.

ஆமா உன் கிராமம் இவ்வளவு வறண்டு காய்ந்து கிடக்கிறதே.இங்கு அதிகபட்சம்
என்ன உணவு கிடைத்துவிடும்.என கேட்டது.

உணவை நான் தேடிப்போய் கிடைக்காமல் இருந்தாலும் என் முதலாளி எங்களுக்கான
உணவை நாள்தோறும் சிறிதளவேனும் தருவார்.முதலாளியின் பாதுகாப்பில் உணவோடு
பயமில்லாமல் இருக்கிறேன்.உன்னைப்போல் உயிருக்கு பயந்து ஓடிக்கொண்டிருக்க
வேண்டிய அவசியமில்லையே.அதனால் நீயும் என்னுடன் வந்துவிடு முதலாளி
உன்னையும் ஏற்றுக்கொள்வார் என்றது.

காட்டாடு சிரித்து கொண்டே சொன்னது உன் முதலாளியின் அடிமைகளின்
எண்ணிக்கையை அதிகரிக்க நீ சிரமபடவேண்டாம்.என் வழி வேற உன் வழி வேற அதனால
நான் இப்போதே விடைப்பெற்றுக்கொள்கிறேன்.

சிறிது நேர நட்பு பாராட்டுதல்களோடு நன்றி நவிதல்களும் முடிந்து இரு
ஆடுகளும் தங்கள் பகுதிக்கான பாதையில் நடக்கதுவங்கின.

சிறு நேரத்தில் வீட்டை அடைந்த ஆடு தன் மந்தையோடு ஒட்டிக்கொண்டது.

விசாரித்த சகாக்களுக்கு தன் அனுபவத்தை விவரிக்க ஆரம்பித்தது.

மறுநாள் காலை மந்தையை பார்வையிட்ட விவசாயியின் கண்ணில் நம் ஆடும்
தென்பட்டது.திருடு போய்விட்டது என்று கருதிய ஆடு ஒரு வாரத்தில் திரும்ப
வந்திருக்கிறது.அதுவும் கொஞ்சம் கொழுத்துபோய் வந்திருக்கிறது.விவசாயி
இரட்டிப்பு மகிழ்சியோடு அன்றைய பொழுதை கழிக்கச் சென்றான்.

இப்படி இரண்டுநாள் கடந்திருக்கும் மந்தைக்கு வந்த விவசாயியோடு மூன்றுபேர்
வந்திருந்தனர்.அவர் மூன்று நான்கு ஆடுகளை சுட்டிகாட்டி பேசியபடி
இருந்தனர்.சிறிது நேரத்தில் கையில் கொண்டுவந்த கயிற்றால் மூன்று ஆடுகளை
கட்டி இழுத்துச் சென்றனர்.அதில் நம் ஆடும் ஒன்று.

மூன்று ஆடுகளும் ஒரு நிகழ்ச்சியை சிறப்பிக்க இறுதியாக பயணிக்கிறார்கள்
என்பது மட்டும் உறுதி.


இந்த கதையின் நீதி.

நம் வாழ்க்கையில் எடுக்கப்படும் முடிவுகள் நாம்தாம்
எடுக்கவேண்டும்.அம்முடிவு தவறாக போய்விடினும் கூட இறுதிவரை போராடினால்
நூலிளையில் தப்புவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

ஆனால்

நம் முடிவுகளை வேறொருவர் தீர்மானித்தால் எவ்வளவுதான் போராடினாலும்
மீள்வதற்கு வாய்ப்பு மிகமிக குறைவு.ஏனென்றால் முடிவு நம்முடையதல்ல...