December 29, 2010
December 27, 2010
இளந்தொழிலதிபர்களுக்கு நௌக்ரி.காம் நிறுவனரின் ஆலோசனை.
சஞ்சீவ் பிக்சாண்டனி. நிறுவனர் நௌக்ரி.காம்.
விரைந்து செய்யுங்கள் போட்டி இல்லாத நேரத்தில் நஷ்டமாகி கையை கடிக்காமல் இருக்கும் போதே தவறு செய்துவிடுங்கள்.
வியாபாரத் திட்டத்தில் அகலக் கால் வைக்காதீர்கள். எவ்வளவு உற்பத்தி செய்ய முடியுமோ அவ்வளவு மட்டுமே தருவதாகக் கூறி நிறைவேற்றும் போது அதிகமாக தாருங்கள்.
சிறந்தவர்களையே துணையாகக் கொள்ளுங்கள். உங்கள் நோக்கம்,பார்வை ஆகியவற்றை அவர்களிடம் சொல்லி , உங்கள் பணத்தையும் பங்காகச் சேர்த்து தொழில் தொடங்குங்கள். தாராளமாக அவர்களுக்கு பங்கு கொடுங்கள்.
பணம் சம்பாதிக்கவே தொழில் தொடங்குவதாக இருந்தால் , தொடங்காதீர்கள். ஏனெனில் தொழிலில் உகந்த நேரம் இல்லாமல் நஷ்டபட வேண்டியும் வரலாம்.சம்பாதிப்பதையும் தாண்டி தொலைநொக்கு இலக்கு இல்லாமல் இருந்தால், சோதனைக்காலம் புரட்டி போட்டுவிடும்.அனைத்தையும் விட்டு விட்டு உங்கள் பழைய வேலைக்கே போக நேரிட்டுவிடும்.ஆனால் தொழிலில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் இருந்தால் சுழலான தொழில் காலத்தில் அதை எதிர்த்துத் துடுப்புப் போட்டு கரையேறி விடுவீர்கள் என்பது நிச்சயம்!
ஒருசந்தர்ப்பத்தை நான் அடையாளம் கண்டேன். அது ஒரு ஆதாயமான சந்தர்ப்பம் என்று முதலில் தெரியாது. என் மனதில் பட்டதெல்லாம் ஆகா! பிரமாதமான ஐடியாவா இருக்கே! எனக்கு இதைப் பிடிச்சிருக்கு என்பதுதான். ஆனால் காலப்போக்கில் அது கனிந்தது சரியான இடத்திலும் சரியான காலத்திலும் எனக்கு சாதகமாக நிகழ்ச்சிகள் நடந்தன.உங்ளுக்கு சரியான காலம் வாய்த்து ,சரியான இடத்தில் நீங்கள் இருந்து,நீண்டகாலமும் ஒரு தொழிலில் இருந்தால் ஏதாவது ஒரு விதத்தில் உங்கள் பக்கமும் காற்று வீசும். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள தெரிய வேண்டும் அவ்வளவே.
விட்டுக்கொடுத்தால்தான் உயரப்பறப்பது சாத்தியம். புத்திசாலிகளை உங்கள் பக்கம் சேருங்கள். அவர்கள் தன்னம்பிக்கை உள்ளவர்காளாக இருப்பார்கள்.தங்களுக்கு வேண்டியதை தயார் செய்திருப்பார்கள்.நீங்கள் சாதிக்க முடியாதவற்றை அவர்கள் சாதிப்பார்கள்.நீக்கள் யோசித்து பார்க்காத கோணத்தில் அவர்கள் யோசிப்பார்கள்.பொறாமைப்பட்டு பயனில்லை. விட்டுக்கொடுத்தேனும் அவர்களை உங்கள் பக்கம் சேர்த்துக் கொள்ளுங்கள்.ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொன்றும் உங்கள் குடும்பத்தில் விளைவுகளை ஏற்படுத்தும்.அதற்கும் நீங்கள் அதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
நன்றி..
நூல் ...முயற்சி திருவினையாக்கும்..
ஆசிரியர்..ராஷ்மிபன்சால்..
தமிழில் தொகுத்தவர்...ரவி பிராகாஷ்.
December 26, 2010
Subscribe to:
Posts (Atom)