September 26, 2011

வருகிறது புதிய வசதி,பேஸ்புக்கில் நண்பர்கள் பட்டியலிலிருந்து நம்மை நீக்கியவரை உடனே கண்டறியலாம்.

பேஸ்புக்கில் மேலும் ஒரு புதிய வசதியை அறிமுகப் படுத்துகிறார்கள்.இனிமேல் யாராவது பேஸ்புக் நண்பர்கள் பட்டியலிலிருந்து உங்களை நீக்கி விட்டால் அவர்கள் யார் யார் என்பதை உடனே கண்டறிந்து விடலாம்.
முன்பு ஒருவரது பக்கத்திற்குச் சென்று உள்ளே நுழைய முற்படும் போது அவரின் பக்கத்தை உங்களால் பார்க்க முடியாமல் இருக்கும் போது தான் அவர் உங்களை நீக்கிவிட்டார் என்பது தெரியவரும்.
ஆனால் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Timeline என்ற வசதி தேதி வாரியான அட்டவணைப்படி இந்த மாற்றங்களைப் பயனாளர்களுக்குக் காட்டுகின்றது.
இதன் மூலம் ஒருமுறை நம்மை நண்பர்கள் பட்டியலிலிருந்து நீக்கிய நண்பர்களுக்கு மீண்டும் அவர்களுக்கு
நட்பு கோரிக்கை நாம் தெரியாமல் அனுப்புவதை தவிற்கலாம்.
இந்த புதிய வசதி அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: