November 12, 2011

உலக அதிசயங்கள்.

உலக அதிசயங்கள் ஏழு என்பது அனைவருக்கும் தெரியும்.இருந்தாலும் ஒரு விளம்பரத்திற்காக இது.




தாஜ்மஹால்

இந்தியாவிலுள்ள நினைவுச் சின்னங்களுள் , உலக அளவில் பலருக்குத் தெரிந்தஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது.



சீன பெருஞ்சுவர்


சீனப் பேரரசைக் காப்பதற்காக அதன் வடக்கு எல்லையில் கட்டப்பட்ட அரண் ஆகும்.இது யாலு நதியிலுள்ள , கொரியாவுடனான எல்லையிலிருந்து கோபி பாலைவனம் வரை 6,400 கிமீ அளவுக்கு நீண்டு செல்கிறது.


மச்சு பிக்ச்சு



இது பெரு நாட்டில் உள்ளது . கடல் மட்டத்தில் இருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இன்கா பேரரசு காலத்தைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம் ஆகும்.



கொலோசியம்


இத்தாலியில் உள்ள ரோம் நகரில் உள்ளது.
கொலோசியம் என்பது, தொழில்முறைப் போர்வீரர்கள், தங்களுக்குள்ளும், விலங்குகளுடனும், பயங்கரமான குற்றவாளிகளுடனும், சண்டையிடுவதற்காகக் கட்டப்பட்ட ஒரு அரங்கம் ஆகும்.


இயேசு கிறிஸ்து சிலை.

இது பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜனேரோ நகரில் அமைந்துள்ளது. இது தேக்கோ கலையின் மிகப்பெரும் எடுத்துக்காட்டாகும். மேலும் இச்சிலை உலகிலேயே 4 வது மிகப்பெரிய இயேசுவின் சிலையாகும். இது 9.5 மீட்டர் (31 அடி) உயரமுள்ள அடிப்பீடத்தோடு சேர்த்து, 39.6 மீட்டர் (130அடி) உயரமும், 30 மீட்டர் (98 அடி) அகலமும் உடையது. இதன் மொத்த எடை 635 டன்கள் ஆகும்.



பெட்ரா



இது ஜோர்டான் நாட்டல் உள்ள பழமைவாய்ந்த கட்டிடகலைக்கு ஓர் எடுத்துக்காட்டு.


சிச்சன் இட்சா



மெக்சிகோ நாட்டின், யுகாட்டான் என்னுமிடத்தில் உள்ளது.





தகவல்கள்.www.ta.wikipedia.org

நன்றி.

November 11, 2011

புரூஸ்லி சிறு குறிப்பு.

சண்டை என்றால் நம் நினைவிற்கு உடனே வருவது புரூஸ்லீயும், அவருடைய வினோதமான சத்தமும்தான் .அந்த சண்டை நாயகனைப் பற்றி சிறு குறிப்பு.

இருவரும் சண்டை போடுவோம்; நான் ஜெயித்தால், உன் பள்ளியை இழுத்து மூடி விடேவண்டும்.நீ ஜெயித்தால், நான் சொல்லிக் கொடுப்பைத நிறுத்திக்கொள்கிறேன். சவாலுக்குத் தயாரா?’’ என்று அழைத்தார் குங்ஃபூவில் புகழ் பெற்ற ஆசிரியரான வோங்க் ஜாக்மென். அமெரிக்காவின் ஆக்லாந்து நகரில் புதிதாகத் தற்காப்புக் கலைகளைக் கற்றுத் தரும் பள்ளியைத் திறந்திருந்த புரூஸ்லி எவ்விதத் தயக்கமும் இன்றி சவாலுக்குச் சம்மதித்தார்.


சண்டைக்கு வந்து, பத்தே நொடியில் தோல்வியைத் தழுவினார் வோங்க். ஒரே நாளில், அமெரிக்கா மற்றும் சீனாவில் லீ யின் புகழ் கிடு கிடுவெனப் பரவியது. ‘‘என்ன தைரியத்தில் அவருடன் மோத ஒப்புக் கொண்டீர்கள்?’’ நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘நான் தத்துவத்தைப் பாடமாகப் படித்திருக்கிறேன். வாய்ப்புகள் தாமே வராது,நாம்தான் உருவாக்க வேண்டும் என்பதை அறிவேன். அதனாலேயே வெற்றி, தோல்வி பற்றிக் கவைலயின்றி, நானும் என் கலையும் புகழ் பெற இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொண்டேன் என்றார் புரூஸ்லி. 25 வயது வரை ஒரு சாதாரண தொலைக்காட்சி நடிகராக இருந்து வந்த புரூஸ்லி , உலகப் புகழ் பெற்றது அதன் பிறேக! சான்பிரான்சிஸ்கோவில் ஒரு சீனத் தம்பதியின் மகனாக, 1940-ல் பிறந்தார் புரூஸ்லி. குடும்பம் சீனா திரும்பியதும், குழந்தை நட்சத்திரமாகப் பல நாடகங்களில் நடித்தார்.
பின்னர், குங்ஃபூ பள்ளியில் சேர்ந்து தற்காப்புக்கலையையும், ‘ச்சாச்சா’ எனப்படும் நடனத்தையும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். 18-வது வயதிலேயே பாக்ஸிங் சாம்பியன்ஷிப் வெற்றி. இதையடுத்து, புரூஸ்லி அடிக்கடி தெருச் சண்டைகளில் இறங்கி, போலிஸ் பிரச்சனை ஏற்படேவ, பெற்றோர் அவரை சான்பிரான்சிஸ்கோ அனுப்பினர்.
அங்கே ஓர் உணவகத்தில் பகுதி நேர வேலை பார்த்தபடியே, உயர்நிலைப் படிப்பை முடித்த புரூஸ்லி,வாஷிங்டன் பல்கலைகழகத்தில் தத்துவம் படித்தார். கூடவே, சீனத் தற்காப்புக் கலையை மற்றவர்களுக்கும் கற்றுத்தரத் தொடங்கினார். ஓரிரு நொடியிலேயே வெற்றிபெறும் லீயின் ‘ஜட் க்யூன்டோ’ என்ற புதிய சண்டை முறைக்கு சீனாவில் பெரும் வரேவற்பு கிடைத்தது. இடையில், ‘சினிமாவில் நடிக்கத் தயாராக இருக்கிறேன்’ என அறிவித்தார் புரூஸ்லி. கலையை மறந்து, சினிமாவில் நடிக்க அலைகிறார் என விமர்சனங்கள் எழுந்தன. ‘‘வாய்ப்புகள் தாமே வராது, நாம்தான் உருவாக்க வேண்டும். சினிமா மூலேமே இந்தக் கலை இன்னும் பெரும் புகழைடயும்’’ என்று உறுதியுடன் சொன்னார் லீ.


1971-ல் ‘தி பிக் பாஸ்’ வெளியாகி, உலெகங்கும் சக்கைப்போடு போட்டது. அதன் பின்னர் வெளியான ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி’, ‘ரிடர்ன் ஆஃப் த ட்ராகன்’, ‘என்டர் தி ட்ராகன்’ எனப் பல படங்கள் வசூலில் சாதனை படைத்தன. அவரது கனவுப் படமான ‘கேம் ஆஃப் டெத்’ படப்பிடிப்பின்போது, மர்மமான முறையில் இறந்துபோனார் புரூஸ்லி. அவர் எடுத்துக் கொண்ட வலி மருந்துகள் அலர்ஜியாகி, அவரது உயிரைப் பறித்துவிட்டன’’ என்று மருத்துவர்கள் சொன்னாலும், 33-வது வயதில் அவருக்கு ஏற்பட்ட மரணத்தின் மர்மம் இன்றுவரை விடுபடேவ இல்லை. வாய்ப்புகள் வரும் என்று காத்திருப்பவர்கள் என்றுமே வெற்றியைத் தொடேவ முடியாது; வாய்ப்புகளை உருவாக்குபவர்கேள சாதைனயாளர்கள் என்பது புரூஸ்லயின் வாழ்க்கை சொல்லும் மந்திரம்.


நன்றி.www.ewow.lK/

November 10, 2011

2011 ஆம் ஆண்டின் உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள்.

அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் நடப்பாண்டின் உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலை வெளியிடுகிறது.இந்த ஆண்டின் உலக சக்திகள் டாப் ஏழு பேர்.

1.முதலிடத்தில் அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமா.


2.ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின்.


3.சீன அதிபர் ஹீ ஜின்டாவோ.


4.ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல்.

5.மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்.


6.சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா.


7.போப் 16 ஆம் பெனடிக்ட்


11 வது இடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும்.


19 வது இடத்தில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் உள்ளனர்.

November 9, 2011

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கூடங்குளம் அணு உலை.

அணு எதிர்ப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில், கூடங்குளம் அணு உலை, ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. ராணுவத்தின் முப்படைகள், மத்திய தொழில் பாதுகாப்புப் படைகள், இந்திய கடலோர காவல் படைகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன.



அணு உலையை மூடக்கோரி, இடிந்தகரை சர்ச் வளாகத்தில், ஒரு குழுவினர் போராட்டம் நடத்துவதால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், கூடங்குளம் அணு உலைக்கு, சர்வதேச அளவிலானஅச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே, கூடுதல் பாதுகாப்பு வழங்க, பிரதமர் அலுவலகம் மூலம், ராணுவத் துறையிடம், இந்திய அணுசக்தி கழகம் கேட்டு கொண்டதன்படி, கூடங்குளம் அணு உலை, ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.




இந்திய ராணுவத்தின் மூன்று படைகளும், களத்தில் இறங்கியுள்ளன.புனேவிலுள்ள தரைப் படையின், தெற்கு மண்டல தலைமை அலுவலக உத்தரவுப்படி, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட சென்னையிலுள்ள, தென் மாநில தலைமை ராணுவ அதிகாரி மேற்பார்வையில், கூடங்குளம் அணு உலை பாதுகாப்பில், தரைப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கொச்சியை தலைமையிடமாக கொண்ட, தென்னிந்திய கடற்படை (நேவி) தலைமை அட்மிரல் சுதர்சன் ஸ்ரீகாந்த் மேற் பார்வையில், கூடங்குளம் உலையைச் சுற்றியுள்ள இந்திய கடற்பகுதியில், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில், கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், ராடார் கருவி கண்காணிப்பு, கடற்பகுதி கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்ட, தெற்கு மண்டல விமானப் படையினரும், கூடங்குளம் அணு உலை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். போர் விமானங்களும், ஏவுகணை சுமந்த விமானங்களும், அணு உலையின் எல்லையைச் சுற்றிய கடற்பகுதிகளின் மீது, பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, அணு உலை வளாகத்தில், கடலோர காவல்படையின் போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, அனைத்து நவீன தொழில்நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர, ரகசிய வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டு, அணு உலை மற்றும் அதன் சுற்றுப்புறகடற்பகுதிகள் கண்காணிக்கப்படுகிறது. பாதுகாப்பு கருதி, உலையைச் சுற்றியுள்ள மொபைல்போன் டவர்களும் கண்காணிக்கப்படுகின்றன.அணு உலைக்கு வெளியிலும், நிலப்பகுதிகளிலும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், தீவிர பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அணு உலையின் கட்டுப்பாட்டு அறை, எரிபொருள் பகுதி உள்ளிட்டஅனைத்து முக்கிய இடங்களின் பாதுகாப்பும், ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, இந்திய அணுசக்தி கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

செய்திகள்.www.dinamalar.com



இது போராட்டக் குழுவினரை பயமுறுத்தும் முயற்சியா இல்லை நிஜமாகவே அணு உலைக்கு முப்படைகளின் பாதுகாப்பு தேவையா? ஒவ்வொருவரும் விதவிதமான கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இதில் எந்த கருத்தை நம்புவது ,யாரை பின்பற்றுவது குழப்பம்தான் மிஞ்சுகிறது.
அந்நியசக்தி சதி என்கிறார்கள்,பணம் வாங்கிக் கொண்டு போராட்டம் நடத்துகிறார்கள் என்கிறார்கள்,மக்கள் அறியாமையால் போராடுகிறார்கள் என்கிறார்கள்.அப்துல் கலாம் அவர்கள் அணு உலையால் எந்த ஆபத்தும் இல்லை என கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக உறுதியாக சொல்கிறார்.மத்திய அரசு எது வந்தாலும் ஒரு கை பார்க்கலாம் என்ற முடிவோடு இருக்கிறது.இதில் வேறு ஆய்வு செய்வதற்கு பத்து இருபது குழுக்கள் வேறு. உலகத்திலேயே ஆய்வு செய்வதற்கென்று அதிக குழுக்களை நியமனம் செய்தது கூடங்குளம் அணு உலைக்காகத்தான் இருக்கும்.


இறுதியில் எனக்கு தோன்றுவது.ஐயோ சாரே கன்பியூஸ் ஆயிட்டாரே

ரஜினி படத்தில் த்ரிஷா?

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து விட்ட த்ரிஷா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மட்டும் நடிக்கவில்லை.


இது குறித்து அவரிடம் கேட்டதற்கு ஜக்குபாய் படத்தில் சூப்பர் ஸ்டாரோடு நடிக்க வாய்ப்பு வந்து நானும் அதற்கு உற்சாகமாக சம்மதித்தேன் ஆனால் அந்த திரைப்படம் கைவிடப்பட்டதால் ரஜினியோடு நடிக்கும் வாய்ப்பு கை நழுவி போனது என்றார்.அது போல மற்றொரு ரஜினி படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் நடனமாட அழைத்தார்கள்.ஆனால் ஒரு பாட்டிற்கு ஆடுவதில்லை என்ற என் கொள்கையை சொல்லி அந்த வாய்ப்பை தவிர்த்துவிட்டேன் என்றார்.



அப்படினா ஒரு படத்தின் ஹீரோயின் என பெயர் போட்டு ஐந்து பாட்டுக்கு ஆட அழைத்தால் மட்டும் போவீங்களோ......

November 7, 2011

உலக அழகி பட்டத்தை வென்ற வெனிசுலா நாட்டு அழகி.

2011 ஆம் ஆண்டிற்கான உலக அழகி போட்டி லண்டனில் நடைபெற்றது.இந்தியாவின் சார்பாக மிஸ் இந்தியா பட்டம் வென்ற கனிஷ்கா தங்கர் கலந்து கொண்டார்.இறுதியில் உலக அழகி பட்டத்தை வெனிசுலா நாட்டைச் சார்ந்த ஐவியான் சார்கேஷ் தட்டிச் சென்றார்.இவருடைய வயது 21 இவர் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த போட்டியில் பிலிப்பைன்ஸ் அழகி ஜிவென்டோலைன் ரூயஸ் இரண்டாம் இடத்திலும், பேர்ட்டோரிக்கோ அழகி அமண்டா பரீஸ் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
மிஸ் இந்தியாவான கனிஷ்கா தங்கர் அரையிறுதிக்கு முன்னேறவில்லை என்பது இளைஞர்களான நமக்கு வேதனையான விசயம்தான்.

சார்லி சாப்ளின் சிறு குறிப்பு.

உலகையே சிரிக்கவைத்தவர் சார்லி சாப்ளின்! ஆனால், அவரது வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததே இல்லை. பிறந்ததில் இருந்தே துன்பங்கள், அவமானங்கள், தோல்விகள் இவைதான் அவரின் நண்பர்களாக இருந்தது.




1889 ஆம் ஆண்டு லண்டன் நகரில் சாப்ளின் பிறந்து, ஓரிரு வருடங்களிலேயே பெற்றோரிடையே சண்டை வந்து டிவோர்ஸ் ஆகிவிடவே, பேசத்தொடங்கும் முன்பே, தாயுடன் சேர்ந்து மேடையில் பாடவேண்டிய நிர்ப்பந்தம். ஐந்து வயதுச் சிறுவனின் பாட்டுக்குக்கிடைத்த அமோக வரவேற்பு, ஏழு வயதிலேயே பறிபோனது. காரணம், அவரது தாயாரின் மனநிலை பாதிக்கப்பட்டதுதான். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, சலூன்,கண்ணாடித் தொழிற்சாலை,மருத்துவமனை என எங்கெங்கோ வேலை பார்த்தவர், சில காலம் தந்தையுடன் சேர்ந்து மேடை நாடகங்களிலும் நடித்தார். ஆனால், தந்தை திடீரென இறந்துவிடவே, மீண்டும் தொய்வு!.



1910 ல் நாடகக் குழுவினருடன் அமெரிக்கா போனவருக்கு குறும்படங்களில் நல்ல பெயர் கிடைத்தது. அவரது முத்திரை கதாபாத்திரமான ‘டிராம்ப்’ (பேகி பேண்ட், தொப்பி, கைத்தடி, வளைந்த கால்கள்) பிரபலமானது. ‘திகிட்’, படத்தில் தொடங்கிய வரேவற்பு, ‘தி கிரேட் டிக்டேட்டர்’ வரை நீடித்தது. ஆனால், இந்த காலகட்டங்களில் குடும்ப வாழ்வு அவரை பாடாய்ப் படுத்தியது. 1918-ல் நடந்தமுதல் திருமணம், இரண்டு வருடம் மட்டுமே நீடித்தது.அதற்குப்பின் நடந்த இரண்டு திருமணங்களும்கூட சாப்ளினுக்குச் சோகத்தை மட்டுமே கொடுத்தன. 1942-ல் நான்காவது மனைவியாக ஓனெய்ல் அமைந்தபின் இல்லறத் தொல்லைகள் நின்றன.
1945-ம் ஆண்டு. சாப்ளின் ஒரு கம்யூனிஸ்ட் தீவிரவாதி என அமெரிக்க அரசு குற்றம் சாட்டியது. இரண்டாவது மனைவி ஜோன் பெர்ரியும் சாப்ளின் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருந்தார். அவர் தரப்பு நியாயங்களை அமெரிக்க அரசு கேட்காததால், வேறு வழியின்றி, 1952-ல் கனத்த இதயத்துடன் சுவிட்சர்லாந்தில் அடைக்கலமானார் சாப்ளின்.
1972 ஆம் ஆண்டு காலச் சக்கரம் சுழல,அதே அமெரிக்க அரசு, ‘உலகின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர்’ விருது பெற சாப்ளினை அழைத்தது. பரிசினை ஏற்றுக்கொண்டாலும், அமெரிக்காவில் தங்க விருப்பமின்றி, மீண்டும் சுவிட்சர்லாந்து கிளம்பினார் சாப்ளின். விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து நின்று,"வாழ்நாள் முழுவதும் போர்க்களமாக இருந்தாலும் எப்படி ஜெயித்தீர்கள்? அது என்ன ரகசியம்?" எனக் கேட்டார்கள். சாப்ளின் சிரித்தார்... "இந்த நிலை மாறிவிடும் என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை. அது இன்பமாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி... மாறிவிடும்! இதோ இந்தக் கணத்திலும் கூட!"

அறிந்து கொள்வோம் சில.

அறிந்து கொள்வோம் சில,


அமெரிக்காவின் பதினாறாவது அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கனை கொன்றவன் ஜான் வில்கிஸ் பூத்.இவன் 1865 ல் வாஷிங்டன் நகரில் கொல்லப்பட்டான்.




உலக அதிசயங்களில் ஒன்றான சீன பெருஞ்சுவர் கட்டிமுடிக்கப்பட்ட ஆண்டு.கி.பி 214.






விமானச் சேவை வழங்கி வரும் ஏர் இந்தியாவின் முந்தையப் பெயர் டாடா ஏர்லைன்ஸ் என்பதாகும்.







மருத்துவ உலகின் மிகப் பெரிய வரப்பிராசதமான பென்சிலினைக் கண்டுப்பிடித்த விஞ்ஞானி அலக்ஸாண்டர் பிளெமிங் ஓவியக் கலையில் சிறந்தவர் ஆவார்.









கீழ் கோர்ட்,மேல் கோர்,சிறப்பு கோர்ட் என எல்லா கோர்ட்டுக்கும் தலைவரான சுப்ரீம் கோர்ட் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கப்பட்டது.





கோ கோ விளையாட்டை கண்டுபிடித்த நாடு இந்தியா.

November 6, 2011

மும்பையில் வார்னேயின் திருமண விருந்து.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் ஷேன் வார்னேயின் இரண்டாவது திருமணம் மும்பையில் நடை பெற இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.






வார்னேயும் இங்கிலாந்து மாடலும் நடிகையுமான எலிசபெத் ஹர்லியும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விசயம்தான்.

வார்னேவுக்கு முதல் மனைவி மூலம் மூன்றுக் குழந்தைகள் இருகிறார்கள்.எலிசபெத் ஹர்லிக்கு இது மூன்றாவது திருமணம்.முதல் கணவர் ஹாலிவுட் பட தாயரிப்பாளர் ஸ்டீவ் பிங் ,இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.இரண்டாவதாக இந்திய தொழிலதிபர் அருண் நய்யாரை திருமணம் செய்து கொண்டார்.எவ்வளவு வேகமாக திருமணம் செய்து கொண்டார்களோ அவ்வளவு வேகமாக விவாகரத்தும் செய்து கொண்டார்கள்.




விரைவில் திருமண வாழ்வில் இணையவிருக்கும் வார்னே ,ஹர்லி ஜோடி அதற்கான விருந்து பார்டியை மும்பையில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.மும்பையில் பெரிய விருந்து கொண்டாட்டத்தை நடத்த விரும்புகிறேன் என்று வார்னே முன்பே தனது நண்பர்களிடம் தெரிவித்திருக்கிறார். 20-20 கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய போது மும்பை வட்டாரத்தில் நன்கு பழக்கமானவர் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

டிசம்பரில் திருமணத்தை வைத்துக்கொள்ள முடிவெடுத்திருக்கும் வார்னே அதே மாதத்தில் மும்பையில் விருந்தும் வைக்கிறாராம்.

பாகிஸ்தான்,இலங்கை ,வாங்காளதேசத்தைச் சேர்ந்த தனது நண்பர்களும் மும்பை விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று வார்னே விரும்புகிறார்.எல்லோரும் விரும்பும் நகராக மும்பை இருக்கும் என்பதால் வார்னே மும்பையை தேர்வு செய்திருக்கிறார்.நண்பர்கள் வாட்டாரத்துக்காக வார்னே மும்பையை விரும்புகிறார் என்றால்,எலிசபெத் ஹர்லி தான் வடிவமைத்த நீச்சல் உடைகளை அறிமுகப் படுத்த இங்கு வர ஆசைப்படுகிறாராம்.



வியாபாரமோ விருந்தோ நல்லா நடந்தா சரி.