January 12, 2012

இயற்கையின் அழகான பத்து புகைப்படங்கள்.

இயற்கையின் அற்புதமான சில காட்சிகள் புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு.

1

2

3

4

5

6

7

8
9


10



நன்றி அனைத்து புகைப்பட கலைஞர்களுக்கும்.

January 11, 2012

தமிழ் சினிமாவின் வசூலில் சாதனை படைத்த திரைப்படங்கள்.2011 வரை.

தமிழ் சினிமாவின் முதல் பேசும் படம் 1931 ஆம் ஆண்டு
வெளிவந்தது.அன்றிலிருந்து இன்று வரை 5150 (தோராயமாக)திரைப்படங்கள்
வெளிவந்திருக்கிறது.இதில் எத்தனையோ திரைப்படங்கள் வசூலை அள்ளிக்
குவித்திருக்கின்றன.பல திரைப்படங்கள் வந்த வேகத்தில் பெட்டிக்குள்
முடங்கியும் போயிருக்கின்றன.80 வருட பேசும் பட சினிமா வரலாற்றில் சில
திரைப்படங்கள் வசூலில் பிரம்மாண்ட சாதனை படைத்திருக்கிறது.அதில் முதல்
பத்து திரைப்படங்கள்.

எந்திரன்.
2010


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து ஷங்கர் இயக்கிய எந்திரன் திரைப்படம்தான் தமிழ் சினிமாவின் அதிகபட்ச வசூல் சாதனையில் முன்னணியில் இருக்கிறது.ஒட்டு மொத்த இந்திய சினிமாவை எடுத்துக்கொண்டாலும் எந்திரனுக்கே முதலிடம்.எந்திரனுக்கு அடுத்தப்படியாக 3 இடியட்ஸ் (வசூல்.335 கோடி)பாலிவுட் திரைப்படம் இருக்கிறது.

நடிகர்கள்,
ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய்,
சுமன்,
சந்தானம்,
இசை: ஏ ஏ. ஆர். ரகுமான்,
இயக்கம்.சங்கர்,
தயாரிப்பு.சன் பிக்சர்ஸ்,
செலவு. 160 கோடி ரூபாய்,

வசூல் .375 கோடி ரூபாய்.



சிவாஜி
2007



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இயக்குனர் சங்கரும் இணைந்த முதல் திரைப்படம்.சூப்பர் ஸ்டாரின் முந்தய திரைப்படமான சந்திரமுகியின் வசூல் சாதனையை சிவாஜி முறியடித்தது.

இயக்கம்.சங்கர்,
நடிகர்கள்,
ரஜினிகாந்த், ஸ்ரேயா, விவேக்,
இசை: ஏ. ஏ. ஆர். ரகுமான்,
தயாரிப்பு:ஏ.வி. எம்,
செலவு. 60 கோடி,
வசூல் .128 கோடி ரூபாய் .



தசாவதாரம்,
2008.


விருது நாயகன் கமலஹாசனும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் இணைந்து உருவாக்கிய ஐந்து திரைப்படங்களில் தசாவதாரம் நான்காவதாக 2008 ல் வெளிவந்த திரைப்படம் ஆகும்.இதில் கூடுதல் சிறப்பாக கமலஹாசன் 10 மாறுபட்ட வேடங்களில் நடித்திருந்தார்.

நடிகர்கள். கமலஹாசன்,
அசின்,
நாகேஷ்,
இசை: ஹிமேஷ் ரேஷ்மையா,
தயாரிப்பு.ஆஸ்கார் பிலிம்ஸ்,
இயக்கம்:கே.எஸ். ரவிக்குமார்.

செலவு-60 கோடி,
வசூல்.94 கோடி.




ஏழாம் அறிவு,
2011

கஜினியின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யா முருகதாஸ் இணைந்த இரண்டாவது திரைப்படம்.
2011 ஆம் ஆண்டில் மிக மிக ஆவலாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட படம்.(எதிர்பார்ப்பை உண்டாக்கினார்களோ)ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிதமாக பொய்த்துப் போனது.

நடிகர்கள்,
சூர்யா,
ஸ்ருதி,
ஜானி,
இசை:ஹாரிஷ் ஜெயராஜ்,
தயாரிப்பு.ரெட் ஜெயன்ட், இயக்கம்:ஏ.ஆர். முருகதாஸ்,
செலவு.80 கோடி
வசூல் 90 கோடி ரூபாய்.




மங்காத்தா,2011


அஜித் குமாருக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த பெரிய வெற்றி.
இயக்கம்.வெங்கட்பிரபு,
நடிகர்கள்,
அஜித்குமார்,
அர்ஜூன்,
,த்ரிஷா,
லட்சுமி ராய்,
அஞ்சலி,
இசை:யுவன் சங்கர் ராஜா,
தயாரிப்பு.கிளவுட் நைன்,

செலவு-30 கோடி,
வசூல்.68 கோடி.




சிங்கம்,2010,

இயக்குநர் ஹரியும் சூர்யாவும் இணைந்த மூன்றாவது திரைப்படம் அவர்கள் எதிர் பார்த்த வெற்றிக்கு மேல் அவர்களுக்கு கிடைத்தது.





இயக்கம்.ஹரி,
நடிகர்கள்,
சூர்யா,
அனுஷ்கா,
,பிரகாஷ் ராஜ்,
விவேக்,
இசை:தேவி ஸ்ரீ பிரசாத்,
தயாரிப்பு.ஸ்டுடியோ கிரீன்.
செலவு.15 கோடி,
வசூல்.65 கோடி.





சந்திரமுகி,2005,


யாருமே எதிர்பாராமல் வெளிவந்து எதிர்பாராத வெற்றியை குவித்த திரைப்படம்.தமிழ் சினிமாவின் அதிகபட்ச நாட்கள் ஓடிய திரைப்படங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.(835 நாட்கள்)

இயக்கம் .பி.வாசு,

நடிகர்கள், ரஜினிகாந்த்,ஜோதிகா,
நயன்தாரா,
பிரபு,
வடிவேல்,
நாசர்,
விஜயகுமார்,
மாளவிகா,
வினீத்,
தயாரிப்பு.சிவாஜி புரொடக்ஷன்,
செலவு.25 கோடி
வசூல்.65 கோடி.




அயன்,
2009

கே.வி.ஆனந்தும் துப்பறியும் நாவல் எழுத்தாளர்கள் சுபாவும் இணைந்த இரண்டாவது திரைப்படமாகும்.


இயக்கம் .கே.வி ஆனந்த்,
நடிகர்கள்: சூர்யா,
தமன்னா,
பிரபு,
கருணாஸ், இசை.ஹாரிஷ் ஜெயராஜ்,
தயாரிப்பு.ஏ.வி. எம்.
செலவு.15 கோடி,
வசூல் 60 கோடி.




வேலாயுதம்,2011


2011 ஆம் ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைபடங்களில் வேலாயுதமும் ஒன்று.விஜய் ரசிகர்களுக்கு திருப்தியை தந்த திரைப்படம்.

இயக்கம்.எம.ராஜா,

நடிகர்கள், விஜய்,
ஜெனலியா,
ஹன்சிகா,
சரண்யா மோகன்,
இசை.விஜய் ஆண்டனி,
தயாரிப்பு.ஆஸ்கார் பிலிம்ஸ்.
செலவு.45 கோடி
வசூல் 60 கோடி.




அந்நியன்,2005,


தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஆந்திரா,கேரளம் போன்ற வெளி மாநிலங்களிலும் வசூலை அள்ளிய திரைப்படமாகும்.

இயக்கம்.சங்கர்,
நடிகர்கள்.
விக்ரம்,
சதா,
பிரகாஷ் ராஜ்,
விவேக்,
இசை.ஹாரிஷ் ஜெயராஜ்,
தயாரிப்பு.ஆஸ்கார் பிலிம்ஸ்.
செலவு.38 கோடி
வசூல் 56 கோடி.

January 9, 2012

234 சட்டமன்ற உறுப்பினர்களின் மின்னஞ்சல் முகவரிகள்.

234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தமிழக அரசின் சார்பில் தனி தனித் மின்னஞ்சல் முகவரி கொடுக்கப்பட்டிருக்கிறது.இது ஒரு நல்ல திட்டம்தான்.ஏனென்றால் குறைகளையோ நிறகளையே ,திட்டியோ,பாராட்டியோ எதை வேண்டுமானாலும் உடனே ஒரு மின்னஞ்சல் மூலம் சம்பந்தபட்டவரிடம் தெரிவித்து விடலாம்.அதை நிச்சயமாக படிப்பார் என்ற எந்த உறுதியும் இல்லை இருந்தாலும் நம் மனதில் பட்டதை தெரிய படுத்தியிருக்கிறோம் என்ற திருப்தி நமக்கு கிடைக்கும்.


சில பல எம் .எல் .ஏக்களுக்கு முன்னரே மின்னஞ்சல் முகவரி இருந்தாலும் அது அவர்களுக்கு உரிமையானது.ஆனால் இப்போது அரசின் சார்பில் கொடுக்கப்ட்டிருக்கும் முகவரி இனி வரும் தேர்தலில் வெற்றி பெறும் எம்.எல்.ஏவுக்கும் இதுதான் முகவரி.தமிழக அரசு 234 சட்டமன்றங்களின் பெயர்களிலேயே முகவரி வழங்கியிருக்கிறது.உதராணமாக ஒசூர் எம்.எல்.ஏவுக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டுமென்றால் mlahosur@tn.gov.in என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.அந்தந்த சட்டமன்ற தொகுதியின் பெயருக்கு முன்னால் mla என்று சேர்த்தால் போதுமானது.
மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்.234 எம்.எல்.ஏ தொகுதிகளின் மின்னஞ்சல் முகவரி.

January 8, 2012

நக்கீரன் பத்திரிகை மீது தாக்குதல்.சரியா தவறா?

தமிழ்நாட்டின் நேற்றைய சூடான விவாதம் நக்கீரன் பத்திரிகை அலுவலகம் தாக்கப் பட்டது சரியா தவறா என்றுதான்.இணைய பக்கங்களிலும் செய்தித்தாளின் பக்கங்களிலும் இது குறித்து கண்டனமும் கருத்தும் நிரம்பிவழிகிறது.



.பலர் கேட்கிறார்கள் மாட்டுகறி உண்பது என்பது அவ்வளவு பெரிய தவறா என்று.பிராமணர்கள் புலால் உண்ணமாட்டார்கள் அது வேறு விசயம்.ஆனால் நக்கீன் கட்டுரையில் மாட்டுக்கறியை ஜெயலலிதா சமைத்து எம்.ஜி.ஆருக்கும் கொடுத்து தானும் உண்டதாக எம்.ஜி.ஆர் கூறியது போல் கட்டுரையில் பதிவாகியிருந்தது.இந்த செய்தியை படிக்கும் பொதுமக்களாகிய நமக்கு பல வித எண்ணம் தோன்றும் விதமாக அந்த எழுத்தின் சாரம் இருக்கிறது.அதாவது இரட்டை அர்த்தம் தொனிக்கிறது.இப்படி ஒரு கட்டுரை வெளியிட நிரம்ப தைரியம் வேண்டும். ஒரு மாநிலத்தின் முதல்வர்,லட்சக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட கட்சியின் தலைவர் இப்படி பெரும்பதவி வகிக்கும் ஒருவரைப் பற்றி இது போல் செய்தி வெளியிட்டால் கட்சி தொண்டனல்லாத பொதுமக்களுக்கே கோபம் வரும்.அம்மாவென்றும்,இதய தெய்வம் என்றும் கதறும் தொண்டனுக்கு கோபம் வந்ததில் ஆச்சர்யபடுவதற்கு ஒன்றுமில்லை.



சிலர் ஜெயலலிதாவின் தூண்டதலின் பெயரால்தான் இந்த தாக்குதல் நிகழ்ந்திருக்க கூடும் என்கிறார்கள்.இது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை ஏனென்றால் தூண்டிவிட்டோ அல்லது திட்டமிட்டோ இந்த சம்பவம் நடந்திருந்தால் இன்னும் விபரீதமான அசம்பாவிதங்கள் நடந்திருக்கும்.அலுவலகத்தின் கண்ணாடிகளும் அங்கிருந்த வாகனங்களின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டதாகவே செய்திகள் வலம் வருகின்றன.தாக்கப்பட்டது தவறு என்பவர்கள் சொல்லும் காரணம் சட்டம் என்று ஒன்று எதற்கு இருக்கிறது அதன் மூலமாக உங்கள் எதிர்ப்பை தெரிவித்திருக்கலாமே என்று.உணர்ச்சியை தூண்டும் விதமாக செய்தியை வெளியிட்டால் முதலில் உணர்ச்சிதான் கிளர்ந்தெழும் பிறகுதான் மூளை வேலை செய்யும் என்று எதிர் தரப்பினர் கருத்து தெரிவிக்கிறார்கள்.நக்கீரன் பத்திரிகையை பொறுத்த வரையில் ஆரம்பம் முதலே அ.தி.மு.க எதிர்ப்பு பத்திரிகையாகவே செயல்பட்டு வந்திருக்கிறது.எப்போதும் ஜெயலலிதாவின் குறைகளை சுட்டிக்காட்டும் நக்கீரன். நிறைகளை கண்டுகொண்டதில்லை.கடந்த சட்டமன்ற தேர்தலிலும் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் நகைச்சுவை நாடகம் ஒன்றை அரங்கேற்றியிருந்தது.அதாவது தி.மு.க 160 இடங்களையும் அ.தி.மு.க 40 இடங்களையும் பிடிக்கும் என்று கருத்து கணிப்பு வெளியிட்டது.இப்படி நாட்டு நடப்பு தெரியாமல் இருக்கும் ஒரு பத்திரிகைதான் நக்கீரன். அதுமட்டுமல்லாமல் தங்கள் பத்திரிகையின் விற்பனையை அதிகரிக்க எந்த அளவிற்கும் தரமிளப்பார்கள் என்பது நித்தியானந்தாவைப் பற்றி செய்தி வெளியிட்டதிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.கோபாலின் யுத்தம் என்றொரு புத்தகம் படிக்க நேர்ந்தது அதை படித்த போது ஒருவன் இப்படி எல்லாம் தன்னைப் பற்றி விளம்பரப் படுத்திக் கொள்ள முடியுமா என்று யோசித்தேன் .அந்த அளவிற்கு சுய புராணங்களும்,வெட்டி வியாக்யானங்களுமே நிரம்பியிருந்தது அந்த புத்தகத்தில்.இதில் அந்த புத்தகத்திற்கு இரண்டு மூன்று பாகங்கள் வேறு.பத்திரிகை சுதந்திரம் என்கிற பெயரில் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.நக்கீரன் மட்டுமல்ல அனைத்து பத்திரிகைகளும் முதலில் தங்களின் லாபத்தை முன்நிறுத்திய பின்னே சேவை என்னும் பாடவதியை வைத்து பாட வைக்கிறார்கள்.பத்திரிகைச் சேவை என்பது மாறிப் போய் பத்திரிகைத் தொழில் என்றாகிய பிற்பாடு இதல்லாம் சகஜம்தானே.