September 26, 2011

இணையத்தின் சக்ரவர்த்தி கூகுல்.பாகம் மூன்று

கூகுல் தேடு பொறி 1998 செப்டம்பர் 7 ல் அமெரிக்காவின் கலிபோஃர்னியா மாநிலத்தில் நிறுவப்பட்டது. இணைய தேடுதலிலும் இணைய விளம்பரத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் கூகுல்,2004ம் ஆகஸ்ட்டு மாதம் 19 ம் நாளில் இருந்து பொது மக்கள் நிறுவனமாக தன்னை பதிவு செய்து கொண்டது. இதுவே"நாஸ்டாக்"(NASDAQ) ல் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனங்களில் பெரியது ஆகும்.



லாரி பேர்ஃஜ் ,சேர்ஜி பிரின் இருவரால் சேர்ந்து உருவாக்கப்பட்டகூகில் நாஸ்டாக் பங்குச் சந்தையில் வந்த 2004 ம் ஆக்ஸ்ட்டு 19 ம் தேதி அன்று $1.67 பிலியன்களுக்கு பங்குகள் விற்பனை ஆகியதுடன் $23 பில்லியனுக்கு மேலாக Google நிறுவனம் மதிப்பாகியிருந்தது.படிப்படியாக தொடரான புதிய பொருட்களின் வடிவமைப்பு, மற்றய நிறுவனங்களை கொள்முதல் செய்வது, பங்குதாரர்கள்,ஆரம்பத்தில் இருந்த விளம்பர யுக்திகளை இன்னும் விரிவுபடுத்தியது, இணைய மின்-அஞ்சல், இணைய வழி வரைபடம்,அலுவலக உற்பத்தி ஆகியவற்றுடன் இணைய வழி வீடியோவையும் இணைத்துக் கொண்டதன் மூலமாக பன்மடங்கு(4மடங்கிலும் மேலாக) மதிப்பில் கூகிள் தன்னை தற்போது உயர்த்திக் கொண்டுள்ளது. அத்துடன்,2003ம் அக்டோபர் மாதத்தில் பங்குச் சந்தையில் கூகுலை எடுத்துச் செல்ல ஆலோசிக்கும்வேளை "மைக்கிரோ சாப்ட்"(MicroSoft) நுளைந்து பங்காளியாக அல்லது தத்து எடுப்பதற்கு எடுத்த முயற்சி கை கூடாமல் போயிற்று. ஜனவரி 2004 ல் உலகின் மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளான "மோர்கன் ஸ்டான்லி"(Morganstanley) ,"கோல்டுமேன்சாச்ஸ்" (GoldmanSachs) ஆகிய வங்கிகளின் துணைகொண்டு பங்குச் சந்தையில் இணைவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டது.


பங்குச் சந்தையில் முதல் நாள் $4 பில்லியன்களாவது திரட்டப்படும் எனவும் கணக்கிட்டனர். இதனிடையே கூகுல் 2004 மே மாதம் இரு பெரிய முதலீட்டளர் வங்கியில் ஒன்றான கோல்டுமேனை வெட்டி விட்டு வேறொரு பிரபலமான வங்கியை இணைத்துக் கொண்டு 2004 ஆகஸ்ட் 19ம் நாள் முதல் முதலாக பங்குச் சந்தைக்கு 19,605,052 பங்குகளுடன் வந்த போது ஒவ்வொரு பங்கும் $85 க்கு விற்க்கப்பட்டது.முதல் நாள் மொத்தமாக கை மாறிய பங்குகள் 22,351,900 என்பதுடன் அன்றய இறுதி நேர விலை $100.34 ஆக மூடப்பட்டது, இது அவர்கள் கணித்து வைத்திருந்த அளவு தொகையை விடவும் மிக குறைவாகவும் இருந்தது. எனினும்,அன்று கூகுலின் இரட்டையர்கள்தம் வசம் 271 மிலியன் பங்குகளை வைத்திருந்ததன் மூலமாக $23 பிலியன்கள் மேல் நிறுவனத்தை மதிப்பு ஏற்றியதோடு $1.67 பில்லியன்களை பணமாக திரட்டியும் கொண்டனர்.அதோடு கூகுலில் பணியாற்றும் பலரையும் அன்று திடீர் டாலர் மில்லியனர்கள்ஆக்கியதும் அல்லாமல் வியாபார எதிரியாக இருக்கக் கூடிய"யாகூ" ( yahoo! 8.4 மில்லியன் Google பங்குகளை நஸ்ட ஈடாக பெற்றுக் கொள்ள ஒரு பேரத்தில் கூகிளின் பங்குச்சந்தை வருகையின் 10 நாள் முன் உடன் பட்டன.) இதன் அபார தொடர் வளர்ச்சியில் 2005 ஆம் ஜூன் மாதம் கூகுல் நிறுவனம் $52 பில்லியன்கள் (பங்குகள்தவிர $7பில்லியன்கள் பணமாக)மேல் மதிப்பானதுடன் இதுவே உலகின் மிகப் பெரிய மதிப்புடைய ஊடகவியல் நிறுவனம் ஆயிற்று.தொடற்சியாக பங்குகள் ஏற்ற இறக்கம் கண்டு 2007 ம் ஆண்டு அக்டோபரில் ஒரு பங்கு $700 ஆக இருந்த கூகிளின் பங்குகள் அமெரிக்கா, லண்டன் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளது.இது ஒரு அபாரமான வளர்ச்சி என்றே எல்லோராலும் கருதப்பட்டது.






இன்னும் தேடுவோம்.............

No comments: