தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக ஸ்டீபன் ஹாஃக்கின்ஸை தாராளமாக கூறலாம்.மொத்த உடலுமே இயங்காத நிலையில் அண்டத்தை பற்றி பல புத்தகங்கள் காலத்தைப் பற்றிய ஆராய்ச்சி என மனிதர் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார்.எனக்கு ஹாஃக்கின்ஸ் அறிமுகமானது டிஸ்கவரி தொலைக்காட்சி மூலமாகத்தான்.இந்த சாதனை மனிதரைப் பற்றி சில குறிப்புகள் http://ewow.lk இணையத்தின் உதவியுடன் கீழே.
2005-ம் ஆண்டு வீல் நாற்காலியில் அமர்ந்தபடி தொலைக்காட்சி நிலையத்துக்கு செவிலியர்கள் துணையுடன் வந்தார் 63 வயதான ஸ்டீபன் ஹாஃக்கின்ஸ்.கை,கால்,வயிறு,தலை என உடலின் எந்தப் பாகமுமே செயல்படாத நிலை.அவரது வீல் நாற்காலியில், வலது கண் அசைவின் மூலமாக இயங்கும் கணினியும், வாய்ஸ் ஸென்சரும் இருந்தது. பிரிட்டிஸ் டே டைம் டாக் ஷோ நிகழ்ச்சி நடத்திய ரிச்சர்ட் மற்றும் ஜூடி கேட்ட கேள்விகளுக்கு கணணி மூலம் எளிதாகப் பதில் சொன்னார் ஸ்டீபன்.
‘‘பெருவெடிப்பு எனப்படும் ‘பிக் பாங்’ ஏற்படும் முன்னர்,அண்ட வெளியில் என்ன இருந்தது?’’ என்று கேட்டார் ரிச்சர்ட். ‘‘வட துருவத்தின் வடக்கில் என்ன இருக்குமோ அது!’’என்று சாதுர்யமாகப் பதில் சொல்லி அனைவரையும் அசத்தினார் ஸ்டீபன். கை தட்டிப் பாராட்டியவர்கள், ‘‘வாழ்க்கை எப்படி இருக்கிறது?’’ எனக் கேட்டார்கள். ‘‘முன்னை விட சுவாரஸ்யமாகவும், சவால் நிறைந்ததாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது’’ என்றார். ‘‘இந்த உடல் நிலையுடன் உண்மையில் சந்தோஷமாக இருக்க முடியுமா?’’ என்று தயங்கித் தயங்கிக் கேட்டார்கள். ‘‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!’’ என்றார் ஸ்டீபன்.
பிரிட்டனில் 1942-ம் வருடம் பிறந்த ஸ்டீபன், படிப்பில் படு சுட்டியாக இருந்தார். ஆக்ஸ்ஃபோர் யூனிவர்சிட்டியில் மூன்றாவது வருடம் படித்துக் கொண்டு இருந்தபோது, தன் உடல் தளர்ந்திருப்பதை உணர்ந்தார். காரணமின்றி அடிக்கடி கீழே விழுந்தார்.21-வது வயதில் உடலெங்கும் தசை மாதிரிகளை வெட்டி எடுத்துப் பரிசோதித்தும், மருத்துவர்களால் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால், இரண்டு அல்லது மூன்று வருடத்துக்கு மேல் உயிர் வாழ முடியாது என்பதை மட்டும் தீர்மானமாகச் சொன்னார்கள்.
துயரத்திலிருந்த ஸ்டீபனுக்கு எதிர் வார்டில் ஒரு சிறுவன் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டான். சில நாட்களிலேயே எதிர்பாராமல் நிகழ்ந்த அந்தச் சிறுவனின் மரணம், ஸ்டீபனுக்கு பயம் தருவதற்குப் பதிலாகத் தைரியம் கொடுத்தது. அந்தச் சிறுவனைவிட தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்தார். உடல் தன் கட்டுப்பாட்டில் இல்லா விட்டாலும் மூளையும் சிந்தனையும் முழு உற்சாகத்துடன் இருப்பதை உணர்ந்தார். வீல் நாற்காலியில் இருந்தபடியே பல்கலைக் கழக ஆய்வினை முடித்து,பேராசிரியர் ஆனார். திருமணம் முடிந்து, மூன்று குழந்தைகளும் பிறந்தன.
ஏ.எல்.எஸ். எனக் கண்டறியப்பட்ட நரம்பு நோய் முற்றியதால், 1985-ம் வருடம் அவரது உடல் முழுமையாகச் செயலிழந்தது. ஆனாலும், நம்பிக்கை இழக்காமல் வலக்கண்ணை மட்டுமே அசைத்து எழுத்துக்களை அடையாளம் காட்டிப் பாடம் நடத்தியதுடன், வரலாற்றுத் திருப்பு முனையான புத்தகம் ஒன்றும் எழுதினார். ‘எப்ரீஃப் ஹிஸ்ட்ரி ஆஃப் டைம்’ என்கிற அந்தப் புத்தகம் ஸ்டீபனின் புகழை உச்சிக்கு உயர்த்தியது. கலிஃபோர்னியாவைச் சேர்ந்த கணினி நிபுணர் ஒருவர் ஸ்டீபனின் கண்ணசைவுக்கு இயங்கும் கணணி மென்பொருள் கண்டு-பிடித்து, வீல்சேரில் பொருத்தித் தர,சிரமம் குறைந்து அதிகமாகச் சிந்தித்து நிறைய எழுதிக் குவித்தார் ஸ்டீபன்.
‘காலம் எப்போது தொடங்கியது? எப்போது முடியும்? காலத்தை பின்னோக்கிச் சென்று காண முடியுமா? விண்வெளிக்கு எல்லை உண்டா?’ என எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாக பதில் சொல்லி மலைக்க வைத்த ஸ்டீபன் ஹாஃக்கின்ஸின் வாழ்வு, மருத்துவர்களுக்கு இன்றும் ஒரு புதிர்தான். உடல் நிலை மோசமான காலகட்டத்தில் மனைவியும், குழந்தைகளும் அவரை விட்டுப் பிரிந்தனர். ஸ்டீபன் அப்போதும் மனம் தளராமல், தன்னை அன்புடன் கவனித்துக் கொண்ட நர்சை இரண்டாவதாகத் திருமணம் முடித்தார்.
‘‘இந்த நோயால் பாதிக்கப்பட்டதால்தான் வெளி உலக கவனச் சிதறல்கள் இல்லாமல், முழுக் கவனமும் செலுத்தி என்னால் புத்தகங்கள் எழுத முடிகிறது. உண்மையில் நான் அதிர்ஷ்டம் செய்தவன்’’ என்று ஸ்டீபன் நம்பிக்கையுடன் பேசக் காரணம், ‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; எது மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!’ என்கிற மந்திரச் சொல்லின் மகத்துவம் தான்!
நன்றி.www.ewow.lk
November 25, 2011
உலகின் பிரம்மாண்டமான பத்து நதிகள்.
மனித நாகரீகம் தோன்றியதே நதிக் கரை ஓரங்களில்தான் என்று வரலாறு கூறுகிறது.அப்படிப்பட்ட இயற்கையின் அற்புதமான ஆறுகளின் சில புகைப்படங்கள்.
நைல் நதி.எகிப்த்
எகிப்தில் உருவாகும் நைல் நதி சூடான் , புருண்டி , ருவாண்டா , காங்கோ , தன்சானியா , கென்யா , உகண்டா , எத்தியோப்பியா ஆகிய நாடுகள் வழியாக பாய்கிறது.
நீளம் 6,650கிமீ
அமேசான் ஆறு.பிரேசில்
இது உலகிலேயே அகலமான ஆறாகும்.அமேசான் அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கும் பொழுது, நொடிக்கு 300,000 கன மீட்டர் நன்னீரைக் கொண்டு சேர்க்கின்றது.அமேசான் ஆற்றின் நீரின் அளவு மிசிசிப்பி,நைல், மற்றும் யாங்சே ஆகிய நதிகளின் மொத்த அளவை விட அதிகம். இதன் நீளம் 6400 கி.மீ
யாங்சே ஆறு.சீனா
யாங்சே ஆறு அல்லது சாங் ஜியாங் ஆசியாவிலேயே மிகவும் நீளமான ஆறு ஆகும். சீனாவின் வணிக தலைநகரான சாங்காய் இதன் கழிமுகத்தில் உள்ளது.நீளம்.6,300 கி.மீ இது சீனாவின் மேற்குப்பாகத்தில் உள்ள குவிங்காய் மாகாணத்தில் தொடங்கி கிழக்கு நோக்கி ப் பாய்ந்து கிழக்கு சீனக்கடலில் கலக்கிறது.
மிசிசிப்பி ஆறு.அமெரிக்கா
வட அமெரிக்காவின் மிகப் பெரிய ஆற்றுத் தொகுதியும், உலகின் பெரிய ஆற்றுத் தொகுதிகளுள் ஒன்றுமாகிய ஜெபர்சன் - மிசூரி -மிசிசிப்பி ஆற்றுத் தொகுதியின் ஒரு பகுதியாகும். நீளம். 6,275 கிமீ.
யெனிசெ.அங்காரா
இந்நதி 5,539 கிமீ நீளம் உடையது.
மஞ்சள் ஆறு (ஹுவாங் கி)சீனா
நீளம்.5,464 கிமீ. சீனாவின் துயரம் எனவும் இந்நதி குறிப்பிடப்படுகிறது.
ஓப்- இர்டிச்.
ரஷ்யா
இந்நதியின் நீளம். 5,410 கிமீ ஆகும்.
காங்கோ-ஜாம்பசி .மசாக்கா
4,700 கிமீ, நீளம் கொண்ட இந்நதி அங்கோலா,புருன்டி,கேமரூன்,ருவான்டோ,தான்சானியா,சிம்பியா, போன்ற நாடுகளை வளப்படுத்துகிறது.
ஆமுர்-ஆர்கன் . ரஷ்யா,சீனா
இந்நதி.ரஷ்யா,சீனா,மங்கோலியா ஆகிய நாடுகளில் பாய்கிறது. இதன் நீளம்.4,444 கிமீ.
லெனா . ரஷ்யா
இந்நதி ரஷ்யாவை வளப்படுத்துகிறது.இதன் நீளம்.4,400 கி.மீ.

November 24, 2011
ஊழல் அரசியல் வாதிகளே ஜாக்கிரதை.
இதுவரை தலைவர்கள் மீது கோபத்தையோ எதிர்ப்பையோ காட்ட அவர்களைப்பற்றி கேவலமாக திட்டுவார்கள் அல்லது கையில் கிடைத்த கல்லோ மண்ணோ ஏன் காலணியாகக் கூட இருக்கலாம் இது போன்ற ஆயுதங்களை உபயோகிப்பார்கள். இது நேற்று வரை இன்று முதல் புது முயற்சியாக ஒண்டிக்கொண்டி நேரடித்தாக்குதல்தான் அப்படி சமீபத்தில் தாக்கப்பட்டவர் இந்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார்.முதுகில் ஒரு உதையோ நெஞ்சில் ஒரு குத்தோ வாங்கிக் கொள்ளலாம்.ஆனால் கன்னத்தில் வாங்கிக் கொள்ளும் அறையென்பது மேலே குறிப்பிட்ட இரண்டு தாக்குதல்களையும் விட கொஞ்சம் அவமானம் அதிகம்.இந்த அவமானகர செயலை சரத்பவாருக்கு எதிராக நிகழ்த்தியிருப்பவர் ஹர்விந்தர் சிங் என்ற இளைஞர்.
மனதில் எவ்வளவு தைரியமும், கோபமும் இருந்திருந்தால் இந்த செயலை செய்திருப்பார்.தாக்குதலுக்கான காரணமாக ஹர்விந்தர்சிங் கூறியதாவவது.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் சரத்பவாரே காரணம் என்றும்,
சரத்பவாரை கொல்லதான் நினைத்தேன் என்று கூறிய அவர் மேலும் விளம்பரத்துக்காக அவர் கன்னத்தில் அறையவில்லை. என்றும், நாட்டின் எல்லா பகுதிகளிலும் ஊழல் தலை விரித்து ஆடுகிறது. அதை தன்னால் பொறுத்தக் கொள்ள முடியவில்லையென்றும் ஆவேசமாக கூறினார்.
இறுதியில் தன் கையையும் கத்தியால் கிழித்துக்கொண்டார்..
இதே ஹர்விந்தர் சிங்தான் ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராம் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நமக்கும் இதுபோல சில அரசியல்வாதிகளை மூக்கில் குத்த வேண்டும் என்று ஆசை இருக்கும் .நிறேவேறாத ஆசை என்று தெரிந்தே ஆசைப்படுவோம்.ஆனால் ஹர்விந்தர்சிங் போன்ற ஒரு சிலர் தங்களுக்கு ஏற்படும் பின்விளைவுகளின் கொடுமைகளை சட்டை செய்யாமல் உச்சபட்ச தைரியத்துடன் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
இந்த செயல் மாற்றுக் கருத்தே இல்லாத தவறான செயல்தான் என்பதில் ஐயமில்லை.லட்சகணக்கான மக்களால் தேந்தெடுக்கப்பட்ட ஒரு மத்திய அமைச்சரை பொது இடத்தில் தாக்குவது என்பது ஜீரணித்துக் கொள்ள முடியாத விசயம்தான்.பாவம் ஹர்விந்தர் சிங் தன் எதிர்ப்பைக் காட்ட இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை போலும்.ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே போன்றோர் மக்களை திரட்டி போராடுகிறார் என்றால் ஹர்விந்தர்சிங் போன்ற சிலர் தனிமனிதராக களத்தில் இறங்கி ஆபத்தை சந்திக்கிறார்கள். ஹர்விந்தர் சிங்கை நினைத்து உள் மனதில் ஓரமாக பாராட்டினாலும்,அவரின் செயலுக்காக கிடைக்கும் துன்பங்களுக்கு வெளிப்படையாக பரிதாபப்படத்தான் முடிகிறது.
சரத்பாவர் பற்றி,
மூன்று முறை மஹாராஷ்டிர மாநில முதல்வராக இருந்துள்ளார்.2005 முதல் 2008 வரை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பொறுப்பில் இருந்திருக்கிறார்.பல முறை மத்திய அமைச்சர் பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.இந்தியாவின் டாப் ஊழல்களான முத்திரை தாள் மோசடி முதல் தற்போதுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வரை இவரது பெயர் அடிப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
என்னுடைய சந்தேகம்.
இது போன்ற செயல்கள் ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்குமா அல்லது இதெல்லாம் அரசியல்ல சாதரணமப்பா என்று எடுத்துக்கொள்வார்களா?ஹர்விந்தர் சிங்கின் தாக்குதலுக்கு எதிராக நிறைய அரசியல் வாதிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.நாளை அவர்கள் மூஞ்சியுலும் யாராவது கை வைத்து விடுவார்கள் என்ற பயமாக இருக்கலாமோ?

Subscribe to:
Posts (Atom)