free mail

December 27, 2010

இளந்தொழிலதிபர்களுக்கு நௌக்ரி.காம் நிறுவனரின் ஆலோசனை.

சஞ்சீவ் பிக்சாண்டனி. நிறுவனர் நௌக்ரி.காம். விரைந்து செய்யுங்கள் போட்டி இல்லாத நேரத்தில் நஷ்டமாகி கையை கடிக்காமல் இருக்கும் போதே தவறு செய்துவிடுங்கள். வியாபாரத் திட்டத்தில் அகலக் கால் வைக்காதீர்கள். எவ்வளவு உற்பத்தி செய்ய முடியுமோ அவ்வளவு மட்டுமே தருவதாகக் கூறி நிறைவேற்றும் போது அதிகமாக தாருங்கள். சிறந்தவர்களையே துணையாகக் கொள்ளுங்கள். உங்கள் நோக்கம்,பார்வை ஆகியவற்றை அவர்களிடம் சொல்லி , உங்கள் பணத்தையும் பங்காகச் சேர்த்து தொழில் தொடங்குங்கள். தாராளமாக அவர்களுக்கு பங்கு கொடுங்கள். பணம் சம்பாதிக்கவே தொழில் தொடங்குவதாக இருந்தால் , தொடங்காதீர்கள். ஏனெனில் தொழிலில் உகந்த நேரம் இல்லாமல் நஷ்டபட வேண்டியும் வரலாம்.சம்பாதிப்பதையும் தாண்டி தொலைநொக்கு இலக்கு இல்லாமல் இருந்தால், சோதனைக்காலம் புரட்டி போட்டுவிடும்.அனைத்தையும் விட்டு விட்டு உங்கள் பழைய வேலைக்கே போக நேரிட்டுவிடும்.ஆனால் தொழிலில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் இருந்தால் சுழலான தொழில் காலத்தில் அதை எதிர்த்துத் துடுப்புப் போட்டு கரையேறி விடுவீர்கள் என்பது நிச்சயம்! ஒருசந்தர்ப்பத்தை நான் அடையாளம் கண்டேன். அது ஒரு ஆதாயமான சந்தர்ப்பம் என்று முதலில் தெரியாது. என் மனதில் பட்டதெல்லாம் ஆகா! பிரமாதமான ஐடியாவா இருக்கே! எனக்கு இதைப் பிடிச்சிருக்கு என்பதுதான். ஆனால் காலப்போக்கில் அது கனிந்தது சரியான இடத்திலும் சரியான காலத்திலும் எனக்கு சாதகமாக நிகழ்ச்சிகள் நடந்தன.உங்ளுக்கு சரியான காலம் வாய்த்து ,சரியான இடத்தில் நீங்கள் இருந்து,நீண்டகாலமும் ஒரு தொழிலில் இருந்தால் ஏதாவது ஒரு விதத்தில் உங்கள் பக்கமும் காற்று வீசும். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள தெரிய வேண்டும் அவ்வளவே. விட்டுக்கொடுத்தால்தான் உயரப்பறப்பது சாத்தியம். புத்திசாலிகளை உங்கள் பக்கம் சேருங்கள். அவர்கள் தன்னம்பிக்கை உள்ளவர்காளாக இருப்பார்கள்.தங்களுக்கு வேண்டியதை தயார் செய்திருப்பார்கள்.நீங்கள் சாதிக்க முடியாதவற்றை அவர்கள் சாதிப்பார்கள்.நீக்கள் யோசித்து பார்க்காத கோணத்தில் அவர்கள் யோசிப்பார்கள்.பொறாமைப்பட்டு பயனில்லை. விட்டுக்கொடுத்தேனும் அவர்களை உங்கள் பக்கம் சேர்த்துக் கொள்ளுங்கள்.ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொன்றும் உங்கள் குடும்பத்தில் விளைவுகளை ஏற்படுத்தும்.அதற்கும் நீங்கள் அதற்கும் தயாராக இருக்க வேண்டும். நன்றி.. நூல் ...முயற்சி திருவினையாக்கும்.. ஆசிரியர்..ராஷ்மிபன்சால்.. தமிழில் தொகுத்தவர்...ரவி பிராகாஷ்.

December 13, 2010

28.10.2009 அன்று குமுதம் இதழில் ஞானி எழுதிய கட்டுரை

மூன்று மனக்குடைச்கல்கள்???? அரசியல் செல்வாக்கு,பணம் இவை இரண்டு மட்டும்தான் துணைவேந்தர் நியமனங்களில் இன்று செல்லுபடியாகக்கூடியவை.இரண்டு துணைவேந்தர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு இன்னும் நிலுவையில் உள்ளன. பதவி ஏற்றதுமே ஒரு துணை வேந்தர் அறிவித்தார்!முதல்வர் கருணாநிதியின் அனைத்து படைப்புகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நோபல் பரிசுக்கான கமிட்டிக்கு அனுப்பி வைக்கும் பணியை அவரது பல்கலைக்கழகம் செய்யுமாம்.இப்போது புது நியமனமாகியிருக்கும் ஒரு துணைவேந்தர் அறிவித்திருக்கிறார்!பெரியார்,அண்ணா,கலைஞர் மூவரின் சிந்தனைகள் பற்றியும் தனித்தனியே முதுகலைப்படிப்பை அவரது பல்கலைக் கழகம் அறிமுகப்படுத்துமாம்.பெரியார் சரி அவர் சுயமான சிந்தனையாளர்.அவர் சிந்தனைகளைப் படிப்பது பயனுள்ளதுதான்.அண்ணா பெரியார் அளவுக்கு வரமாட்டார் என்றாலும் பரவாயில்லை இருந்துவிட்டுப் பொகட்டும்.ஆனால் கலைஞர்?அவருடைய சுயமான சிந்தனை எல்லாமே சுயநலச் சிந்தனைகளாக மட்டும் இருந்ததுதானே ஐம்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கை வரலாறு?என்ன பாடத்திட்டம் போடுவார்கள்? நேர்மையாக போடுவதானால் இப்படித்தான் போட வேண்டும். செமஸ்டர்.1.குடும்பவியல் சிந்தனைகள்!இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக அரசு உயர் பதவியில் இருப்பவருக்கு மனைவி, துணைவி என்ற இரு உறவுகள் இருப்பதைப் பொதுமக்கள் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் கருத்தாக்கங்களாக எப்படி நடைமுறைப்படுத்தினார் என்று ஆராயப்படும்.சொந்தவாரிசுகள்,மருமான் வாரிசுகள்,குடும்பவாரிசுகள் ஆகியோரிடையே ஏற்படும் முரண்பாடுகளைக் களைந்து அனைவரும் பதவி, அதிகாரங்களை எப்படு எந்த விகிதத்தில் பகிர்ந்து அளித்தால் சமாதான சகவாழ்வு சாத்தியப்படும் என்ற குடும்பத் தலைவரின் சாணக்கியச் சிந்தனைகள் ஆராயப்படும். செமஸ்டர்.2.கட்சி அமைப்புச் சிந்தனைகள்!உட்கட்சி ஜனநாயகம் என்பது உயர் பதவிக்கு வரும் வாய்ப்பை ஏற்படுத்துவதல்ல மாறாக எல்லோருக்கும் ஆட்சி அதிகார சுகங்களில் அவரவர் நிலைக்கேற்ற பங்குகளை அனுபவிக்க வழி வகுப்பது என்ற அடிப்பையில் ஊழலில் ஜனநாயக சோசலிசத்தை அறிமுகம் செய்த பாங்கு ஆராயப்படும். செமஸ்டர்.3.மானிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற சமஷ்டி சித்தார்ந்த சிந்தனைகள்?மாநிலத்தில் சுயநல ஆட்சி தொடரும் விதத்தில், பாதிக்கப்படாத விதத்தில மத்தியில் உள்ளோர் அனுமதிக்கும் வரை அவர்களுடைய சிந்தனைகளை நம் சிந்தனைகளாக எப்படி சுவீகரித்துக்கொண்டு கூட்டாட்சி நடத்தலாம் என்று ஆராயப்படும். செமஸ்டர்.4.மொழிச்சிந்தனைகள்!ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தாய்மொழிக்கல்வியை குழி தோண்டி புதைத்து விட்டு அந்தக் கல்லறை மீது அமர்ந்து எட்படி கண்ணீர் வடிப்பது என்ற சோதனைகள் இந்த செமஸ்டரில் இடம்பெறும்.திரைப்படத்துக்கு தமிழ்ப் பெயரிட்டால் வரிவிலக்கு என்று அறிவித்து விட்டு படத்தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்களுக்கு மொழி விலக்கு அளிக்கும் முரண்பாடுகள் மக்கள் கண்ணில் உறுத்தாமல் அவர்கள் கவனங்களை மானாட மயிலாட போன்ற பண்பாட்டு நிகழ்ச்சிகள் வாயிலாகத் திருப்புவது எப்படி என்ற உத்திகள் ஆராயப்படும். செமஸ்டர்.5.பகுத்தறிவுச் சிந்தனைகள்!ஒவ்வொரு ஊழல்கள் பற்றியோ, அராஜகம் பற்றியோ,நிர்வாக முறைகேடு பற்றியோ முணுமுணுப்பாக விமர்சனங்கள் எழும்போதல்லாம் அவற்றிலிருந்து மக்கள் கவனத்தை திருப்ப எப்படு மக்கள் கவனத்தை திருப்பலாம் எப்படி பகுத்தறிவை பயன்படுத்தலாம் என்பது பற்றிய தந்திரோபாய சிந்தனைகள் ஆராயப்படும்.சூத்திரர் ஆட்சி, நெஞ்சில் தைத்முள் போன்ற காவியச் சொற்கள் எப்படு முகமூடிகளாகப் பயன்படக்கூடியவை என்பது பற்றிய சோதனை வகுப்புகள் இந்த செமஸ்டரில் இடம்பெறும். இன்னும் ஏழு செமஸ்டர்களுக்கான சரக்குகள் இருப்பதால் பாடத்திட்டத்தை இளங்கலையிலிருந்தே தொடங்கி முதுகலை முனைவர் பட்டம் வரை விரிவுபடுத்தலாம் என்று துணைவேந்தருக்கு பரிந்துரைக்கிறேன்.படிக்கிறவனுக்கு பொழுது போக்குக்காவது பாடம் இருக்கட்டும். மனக்குடைச்சல.2. படித்த நடுத்தர வர்கத்தினர் துளியும் சமூக அக்கரையற்றவர்ரளாக நடமாடுவதைக் காணும்போதல்லாம் இது எப்போதுதான் மாறும் என்ற மனக்குடைச்சல் அதிகமாகிறது. மேற்கு வங்கத்தின் மூர்சிதாபாதில் பதினாறு வயதுச் சிறுவன் பாபர் அலியின் சாதனையை படித்த போது நெஞ்சு நெகிழ்கிறது. வீட்டிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அரசு பள்ளிக்குச் சென்று படித்து விட்டு வரும் பாபர் அலி வீடு திரும்பியதும் அங்குள்ள குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கிறான் .ஒன்பது வயதில் டீச்சர் ஸ்டூடன்ட் விளையாட்டாக அவன் துவங்கிய இந்ண பள்ளிக் கூடம் இன்று வேலைக்கு போய் வரும் அறுநூறு குழந்தைகளுக்கான பாடசாலையாகிவிட்டது. இதைப்பற்றி பி.பி.சி படம்பிடித்து காட்டினப் பிறகுதான் நமக்கு தெரியவருகிறது.நம் தொலைக்காட்ச்சிகளுக்கு இந்த மாதிரி நிகழ்ச்சிகளே தேவையேயில்லையே. குழந்தைகளை அழ வைத்து சூப்பர் சிங்கராக்கி டி.ஆர்.பி ரேட்டை எப்படி ஏற்றுவது என்பதில்தான் குறியாக இருக்கிறார்கள். அதற்கு குடும்பம் குடும்பமாக ஒத்துளைக்கிறோம். மனக்குடைச்கல்.3.எந்த நாளும் நிலைத்திடும் நூலொன்றுமில்லை என்பான் பாரதி. உண்மைதான் சில அடிப்படை மனித உணர்ச்சிகளைச் சொல்லும் படைப்புகள் மட்டுமே எந்த நாளிலும் அர்த்தமுள்ளதாகத் தோன்றும். நன்றி ஞானி அவர்கள் மற்றும் குமுதம் வார இதழ்

December 10, 2010

இளந்தொழிலதிபர்களுக்கு ஓர் ஆலோசனை.ஷங்கர் மருவாடா

நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ அதில் உங்களுக்கு விருப்பமில்லையென்றால்,நீங்கள் ஓரு தவறான இடத்தில் இருக்கிறீர்கள் என்று பொருள்.இரண்டாவது தைரியம்.குழு உங்களுடனே நின்றுவிடும் மேலே நகராது.வாய்ப்புகளை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் தேர்வு ஒரு வேளை தவறாக போனாலும் நீங்கள் வெல்லும்போது உங்கள் கடந்தகாலத் தோல்விகள் எல்லாம் கழுவிக் களையப்பட்டுவிடும். நீங்கள் பல கதாபாத்திரங்களை ஏற்க வேண்டியிருக்கும்.தம்முனைப்பு உள்ளவராகவும்,அதே சமயம் தன்மையானவராகவும் இருக்க வேண்டியிருக்கும்.நீங்கள்தான் ஒன்றைச் செய்கிறீர்கள்,உங்கள் பின்னால் நீங்களேதான் இருக்கவும் வேண்டியிருக்கிறது.நீங்களே வழி நடத்த வேண்டும்,நீங்களே உங்களுக்கு பக்கபலமாகவும் இருக்கவும் வேண்டும்.ஒரு முக்கியமான வாடிக்கையாளர் வருகை தரும் நாளன்று உங்கள் டாய்லெட்டைச் சுத்தம் செய்யும் நபர் வரவில்லையென்றால்,நீங்கள்தான் அதைச் சுத்தம் செய்ய வேண்டும். இதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. வேலை அனுபவம் எங்கள் விசயத்தில் உதவி புரிந்தது.ஒரு கலாச்சாரத்தின் மீது கவனத்தைச் செலுத்துவது என்பது முன்பு நான் பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து கற்று கொண்டதுதான்.மதிப்பீடுகளிலும் நன்னெறிக் கோட்பாடுகளிலும் அதிக அளவு கவனம் செலுத்துவது ஓர் அற்புதமான கலாசாரம். ஆய்வுகள் பற்றி எனக்கு என்னவெல்லாம் தெரியுமோ அவையெல்லாம் ப்ராக்டர் அண்ட் கெம்பிளிலிருந்து கிடைத்தவைதான். ஒன்றைப் பற்றிய சிறிதளவு ஞானம்கூட இல்லாமல் பேரார்வம் என்பது வராது.ஆனால் எல்லோருக்கும் பொருந்தக்கூடிய ஒரே அளவு என்பது இல்லை.திறமைசாலிகளை நீங்கள் எப்போதுமே வேலைக்கு எடுத்துக்கொள்ள முடியும். தனியார் முதலீட்டாளர்களைத் தவிர ஒரு தொழிலதிபருக்கு ஒரு தேவதையும் தேவை.ஆரம்பக்கட்டத்தில் ஒன்றைத் தொடங்குவதற்காக கொஞ்சம் விதை நிதி உங்களுக்குத்தேவை.அதை உங்கள் நண்பர்களிடமிருந்து, குடும்பத்தாரிடமிருந்து பெறமுடியும்.உங்கள் யோசனையைச் செயல்படுத்தி நிரூபித்துக் காட்டப் போதுமான அளவு உங்களுக்கு பணம் தேவை. உங்கள் விருப்பம் என்ன என்று நீங்கள் அறிகிற போது உங்கள் யோசனை நிரூபிக்கப்படுகிறபோது,தனியார் முதலீடுகள் கட்டாயம் வரும்.உங்கள் தொழிலை மேலும் வளர்க்க அவர்களின் முதலீடுகளைப் பெறுவதுதான் சிறந்த வழி என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.ஆனால் வெளித்தலையீடுகளையும்,கட்டுப்பாடுகளையும் ஒப்புக்கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும். நன்றி ஷங்கர் மருவாடா, தமிழாக்க ஆசிரியர், ரவிபிரகாஷ், நூல்,முயற்சி திருவினையாக்கும்

IdlyVadai - இட்லிவடை: சாமி ஒரு அரசியல் சாரு நிவேதிதா - அரவிந்தன் நீலகண்டன்

IdlyVadai - இட்லிவடை: சாமி ஒரு அரசியல் சாரு நிவேதிதா - அரவிந்தன் நீலகண்டன்

ஓர் ஆலோசனை

தொழிலதிபர்களாக ஆகவிருப்பவர்களுக்கு ஓர் ஆலோசனை. மூன்றாண்டு விதியைவிட மேலான உண்மைத் தத்துவம் வேறு இருக்க முடியாது. ஒரு தொழிலில் மூன்று ஆண்டுகள் உங்களால் தாக்குப் பிடிக்க முடிந்தால், நாலாவது ஆண்டு இன்னும் மேலேறி ஓடிக்கொண்டு இருப்பீர்கள்.ஒரு வேலையில் இருந்து கொண்டுருப்பதைவிட ஒரு தொழிலதிபராக நீங்கள் இன்னும் சிறப்பாக செயல்படுவீர்கள்.என்னுடைய மூன்று சொந்த முயற்சிகளிலேயே இது நிகழ்ந்ததைப் பார்த்திருக்கிறேன்.அவற்றின் ஆரம்ப நிலைகளில் என்னை மிகவும் ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறேன்.தொடர்ந்து ஏராளமான நண்பர்களோடு அந்தத் தொழில்கள் மிகச் சிறப்பாக ஆனதையும் பார்த்திருக்கிறேன். நான்கு மற்றும் அதற்கு மேலான ஆண்டுகள் தொழிலதிபர்களாக இருப்பவர்களுக்கு உங்களிடமிருந்து எனக்கொரு ஆலோசனை தேவை.ஒரு நிறுவனம் உங்களோடு இருந்ததைவிட நீங்கள் இல்லாத போது இன்னும் சிறப்பாகச் செயல்படும்படியாக அதைவிட்டு விட்டு எப்படு அதிலிருந்து வெளியேறப் போகிறீர்கள்? இந்தப் பெரிய உலகத்திற்கு என்னுடைய ஆலோசனை முதல் ஆளாக கொடுப்பதில் உள்ள சந்தோசத்தை அனுபவியுங்கள்.அதற்கு முயற்சியாவது செய்யுங்கள்.தேவைப்படுபவர்களுக்கு உங்கள் நேரத்தைக் கொடுங்கள், பணத்தைக் கொடுங்கள்,திறமையைக் கொடுங்கள்.அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்த உதவுங்கள்.நம்புங்கள் அதில் உங்களுக்கு கிடைக்கும் சந்தோசம் வேறு எதையும் விட அதிகமாகவே இருக்கும். சொன்னவர் வெங்கட் கிருஷ்ணன் கிவ் இந்தியா.

December 6, 2010

என்ன செய்யலாம்?

உலகில் பணம்இருந்தால் எந்த பாவ காரியங்களோ,தவறுகளோ,கொடுமைகளோ ,வரம்பு மீறல்களோ எதை வேண்டுமானாலும் பயமின்றி செய்யலாம்.அதற்கு ஒரு சின்னச் உதாரணம் எனக்கு நேற்று நடந்த சம்பவத்தைச் சொல்லலாம்.இரவு எட்டு மணியிருக்கும் நான் நான்கு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தேன். ஒரு சிக்னல் அருகே வரும்போது மஞ்சள் வண்ண விளக்கு எரிந்து கொண்டிருந்தது அதனால் நிறுத்தக் கோட்டைத் தாண்டிச் சென்றுவிட்டேன்.தாண்டிவிட்டேனென்றால் ஒரு பத்தடி முன்பாக சென்றிருப்பேன் அவ்வளவே.திடீரென வாகனத்தின் முன்னால் போக்குவரத்து பணியாளர் ஒருவர் கையை நீட்டிக்கொண்டு நின்றார்.நான் வாகனத்தை நிறுத்தி விட்டேன்.வாகனத்தை ஓரமாக விடச்சொன்னார் நானும் அவ்வாறே செய்தேன் .பின்பு அருகில் வந்த அந்த ஆள் சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருப்பது உனக்கு தெரியவில்லை குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகிறாயா என மிரட்டலாக கேட்டார்.ஆனால் உண்மையில் நடந்தது நான் மஞ்சள் விளக்கு எரிந்து கொண்டிருந்த போதுதான் நிறுத்தக்கோட்டை கடந்தேன் .ஆனால் நான் கடந்த சில வினாடிகளிலேயே சிகப்பு விளக்கும் எரிந்திரிக்கிறது. அதை நான் கவனிக்கவில்லை.இதை அந்த ஆளிடம் சொன்னால் காதில் வாங்கமாட்டான் அதனால் சொல்லாமல் இருப்பதே நலமென அமைதியாக இருந்து விட்டேன்.பின்பு அந்த ஆள் என் முகத்தினருகிலே வந்து ஊதச்சொன்னார் நானும் ஊதினேன்.நான் குடிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். பின்பு ஓட்டுனர் உரிமம் இருக்கிறதா என்றார்.நான் இருக்கிறது என கூறிவிட்டு என் சட்டைப் பையிலிருந்து ஓட்டுனர் உரிமத்தை எடுக்க முற்பட்டேன்.அப்போது அந்த ஆள் என்னிடம் நூறு ரூபாய் கொடுத்துவிட்டுச் செல் என்கிறான். நான் அவனை பரிதாபமாக பார்த்தப்படியே அவ்வளவு பணம் என்னிடம் இல்லையே என்று அவனிடம் பொய் சொன்னேன் என்னிடம் இருந்ததோ வெறும் நூற்று நாற்பது ரூபாய்கள்தான் அதிலும் நூறு ரூபாயை அவனுக்கு தாரைவார்ப்பதா என யோசித்தேன்.அந்த யோசனைக்கே இடந்தராமல் மறுமுறை அவன் மிரட்டலில் பணத்தை கொடுத்தே விட்டேன். இதற்கு அடுத்ததாகத்தான் கவனிக்க வேண்டிய விசயமே இருக்கிறது.அது என்னிடம் ஓட்டுனர் உரிமத்தை கேட்டவன் பணத்தை பார்த்ததும் அந்த கடமையை மறந்து விட்டான்.மேலும் சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போதே சாலையை கடந்து செல்லுமாறு சைகையால் உத்தரவிடுகிறான்.வாங்கிய பணத்திற்கு விசுவாசமாம்.இப்படிப்பட்ட நல்லவர்களை என்ன செய்யலாம்.பணத்தைப் பார்த்ததும் கடமை காற்றில் பறந்துவிட்டது. இது ஒருச் சின்ன சம்பவம்தான் இருந்தாலும் சின்ன தவறுகள்தான் சமுதாயத்தை சீரழிப்பதற்ககு போதுமானதாக இருக்கிறது.இந்த தவறில் என்னுடை பங்கும் இருக்கிறது.ஆதலால் நானும் இப்போது குற்றவாளிதான் என்னை என்ன செய்லாம்?

November 30, 2010

கவிஞன் ஆனந்த்

புன்னகை பூத்தவளே என் புன்னகை பறித்தவளே பழகத்தானே புன்னகை கொடுத்தான் ஏன் புன்னகையோடு பறந்து போகிறாய் ஓரப்பார்வையில் ஆளைக் கவிழ்த்து விட்டு மீதிப்பார்வையை ஏனடி மறைத்தாய் உன் மீதிப்பார்வையும் கொடுத்துவிடு மௌனப்பூட்டை உடைத்துவிடு உறவை கொஞ்சம் மலரவிடு முடிவைப்பற்றி கவலை விடு

November 29, 2010

அன்பு

அன்பைப் பற்றி சொல்வதென்றால் அன்பில்லையேல் இவ்வுலகம் இல்லை அப்படியென்று சொல்ல மாட்டேன்.காரணம் பெரும்பாலும் அன்பு என்பது பணத்தைப் போலவே பரிமாறப்படுகிறது. அதாவது பரிமாற்றங்கள் நடைபெறுகின்றது.இவ்வளவு கொடுத்தால் இவ்வளவு கிடைக்கும் என்ற விகிதக்கணக்கு பார்க்கப்படுகிறது.இது மனிதனின் இயல்பு யாராவது யார்மீதாவது அ ன்பு செலுத்தினால் அவர்களும் நம்மீது அன்பு செலுத்த வேண்டும் என்று நினைப்பது இயல்பு அப்படி நினைக்காமல் இருந்தால் ஆச்சரியம்தான் ஏனென்றால் மனிதன் அன்பு செலுத்துவதைவிட அன்பு செலுத்தப்படுவதைதான் அதிகம் விரும்புகிறான்.இப்படி அன்பு என்பது வியாபாரம் ஆகிவிட்டது.இந்த உண்மையை அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.நீங்கள் இதை ஏற்றுக்கொள்ளாவிடினும் எனக்கு சம்மதமே ஏனென்றால் நான் உங்களை அன்பு செய்கிறேன்.தவறகள் தவிற்கப்பட வேண்டியதல்ல திருத்தப்பட வேண்டியவை.இதை நான் சொல்லவில்லை ஏதோ ஒரு வெளிநாட்டு அறிஞர் சொன்தாக கேள்வி.
நன்றி
வணக்கம்

November 28, 2010

ஆர்வக்கோளாறு

வணக்கம்
ஆர்வக்கோளாறு என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகவே நான் கருதுகிறேன்.சிலருக்கு ஆர்வக்கோளாறினால் நன்மை விளைவதும் உண்டு சிலருக்கு பாதகமாகவும் மாறிவிடுவதும் உண்டு.எதற்கு இதை இப்போது சொல்கிறேன் என்றால் என் ஆர்வக்கோளாறால் நன்மை விழைந்ததால்தான்.விழைந்தை அறுவடை வேறு செய்திருக்கிறேன்.அந்த நன்மை இணையம்தான்.இணையத்தின் மூலம் பல பயன்கள் உண்டென்று தெரிந்தாலும் அதை அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டது இணையத்தை பயன்படுத்த ஆரம்பித்தப் பின்னர்தான்.பல தகவல்கள்,விமர்சனங்கள்,கட்டுரைகள்,நண்பர்கள்,தகவல்பரிமாற்றங்கள்.இப்படி பட்டிமல் நீண்டு கொண்டே செல்லும்.இவ்வாறான பல அனுபவங்கள் கிடைத்தது என் ஆர்வக்கோளாறால்தான்.அதனால் அனைவரும் ஆர்வக்கோளாறோடு இருப்பது நல்லது என நான் பரிந்துரைக்கிறேன்.இதை யாராவது தவறிப்போய் படிக்க நேர்ந்திட்டால் ???