free mail

November 15, 2015

நட்பு....

நேற்று நண்பர் ஒருவரோடு சின்ன மனகசப்பு உண்டாகிவிட்டது.தவறு அவர்பேரில் என்பதால் நான் அதிகப்படியான ரோசத்தோடே இன்று மாலைவரை நடந்துகொண்டேன்.அப்படியே இரவும் வந்தது.நான் வேண்டா வெறுப்பாக வேடிக்கை பார்ப்பதில் கவனத்தை செலுத்த முயற்சித்துக் கொண்டிருக்கையில் என்னருகே வந்த நேற்றைய நண்பர் ,எனக்கு இப்போ பாதிதான் தேவைப்படுது அதுக்குமேல போனா வீட்டுக்கு போறது கடினமாகிவிடும் அதனால் நாம இரண்டுபேரும் பகிர்ந்து கொள்ளலாமே என்றார்.எனக்கு பழைய ரோசம் அப்படியேதான் இருந்தது எனினும் அவருக்கு என்னிடம் வெறுப்பு இல்லை என்பதை அறிந்துகொண்டதால் அல்லது அவர் மீண்டும் நெருங்கிவர முற்படுவதால் நானும் உங்களுக்கு அவ்வளவு தேவையில்லையென்றால் நானும் அதில் பங்கெடுத்துக்கிறேன் என சொல்லி நூற்றி முப்பதில் என் கோபத்தையும் ரோசத்தையும் கழுவினேன்.
.
இப்போது இதை எதுக்கு சொல்றேன்னா கோபத்தை நீட்டிக்க பலவாய்ப்புகள் உண்டானால் குறைக்க அல்லது இல்லாமலாக்க சில வாய்ப்புகளேனும் உண்டாகலாம் அதை நாம் பயன்படுத்துவதில்தான் நாளைய நம் நட்புகளின் இணக்கம் உறுதியாகிறது..
.
பின்குறிப்பு..
பாதிக்காக இவன் வியாதி வந்தவன்போல் மாறிப்போனதாக நீங்கள் நினைத்தால் கம்பனி பொறுப்பேற்காது....

April 7, 2015

பொங்கும் செம்மரம் ...

ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட இருபது பேர் சுட்டுக்கொலை .அதில் சுமார் பனிரெண்டு பேர் தமிழர்களாம் .அதனால் சிலபல மனித உரிமை ஆர்வலர்களும்.சமூக போராளிகளும் இந்த அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்களாம்.தவறு எவர் செய்தாலும் தவறுதான் அதில் கூடுதல் குறைவு என்ற வாதத்திற்கே இடமில்லை .அதனால் தமிழன் தவறு செய்தால் தவறு சரியாகாதுதானே .அப்படி இருக்கையில் ஒரு அரசின் எச்சரிக்கையையும் அவமதித்து அங்கு கண்காணிப்புக்கு இருந்த அதிரடிப்படை வீரர்களுக்கும் கட்டுப்பட மறுத்தவர்களை தாக்குவதை தவிர வேறு உபயம் இருந்திருக்க முடியாது .துரதிர்ஷ்டவசமாக இருபது பேர் மரணித்தது வேதனைக்குரியதுதான் .இங்கு திருட்டு பெரிய குற்றமல்லதான் .ஆனால் தேசத்துரோகம் பெரிய குற்றம்தானே ..அரசையும் இயற்கையையும் மதிக்காதவர்களுக்கு இந்த சம்பவம் ஒருபாடமாக அமையலாம் .நம்ம ஊர்ல இந்த பிக்பாக்கட் அடிக்கிறவன் ,தாலி அறுப்பவன்,வீடேறி திருடுபவன் இவர்களல்லாம் தங்கள் வயிற்றுக்காகவும் வாழ்க்கைக்காகவும்தான் திருடுகிறார்கள். அவர்களும் தமிழர்கள்தான் .ஆகவே எதிர்பாரமால் அகப்பட்டுவிட்ட திருடனை அவன் உடல் நோகாமல் காவல் துறையினரிடம்  ஒப்படைத்துவிடுவீர்காளா ...?மரண அடி கொடுத்தல்லவா காவல் துறையினரிடம் ஒப்படைப்போம் ...நம் மனித நேயம் அப்படி இருக்க எங்கோ நடந்த சம்பவத்திற்கு போராளி என்ற பெயரில் நம்மை விளம்பரப்படுத்திக்கொண்டிருக்கிறோம் ..காரணம் தமிழன் தாக்கப்பட்டானாம் .நாம் பொறாமையோடு எதிர்கொள்ளும் அடுத்த வீட்டுக்காரனும் தமிழன்தான் அவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் ஏன் நம் நெஞ்சு இவ்வளவு பொங்குவதில்லை .காரணம் வீம்பு ,கர்வம் ,எரிச்சல் போன்ற இத்யாதி இத்யாதி சமாச்சாரங்கள்தான் .எப்போதும் நாம் கண்ணுக்கு தெரியாதவனை மட்டும்தானே  கொண்டாடுவோம் .அதுபோல் கண்ணில் அகப்படாமல் தொலைவில் உள்ளவன் பெயரிலும் பரிவு கொள்கிறோம் .அந்தப் பரிவு ஒரு விளம்பரத்துக்காக மட்டும் இல்லாமல் இருப்பது வரை நல்லது ...
.
.
தோன்றியது  ...

January 26, 2015

ஐ விமர்சனம் ..

ஐ விமர்சனம் ...

.
.
இந்தப்  படத்தின் ஓட்டைகளை விமர்சிப்பதா அல்லது ஓட்டைகளையே மறக்கடிக்கவைக்கும் ஏனைய பிரம்மாண்ட காட்சிகளை சிலாகித்து விமர்சிக்கவா ...எதுவும் முடியாது .ஏன்னா படம் என்னை  மெர்சலாக்கிடிச்சு  ....
விக்ரம் -நடிகன்டா நீ....
.
சங்கர் -உங்கள் படைப்பாளுமைக்கு  நாங்கள் தலை வணங்குகிறோம் .அல்லது நான் ....
.
ரவிச்சந்திரன் -சார் நீங்க நிஜ ஹீரோ ....
.
ரகுமான் -உலகறிந்ததாயிற்றே ..
.
ஏனைய மற்ற கலைஞர்களுக்கும் நன்றிகள் ...
.
முடிவா ஒண்ணே ஒண்ணு ..
அதாவது மேஜிக்குல யாரும் லாஜிக் பார்ப்பதில்லை .அதை எப்படி சாதித்தார்கள் என்றுதான் யோசிப்போம் .அதே மாதிரிதான் ஐயும் எப்படி இப்படி படைத்தார்கள் என்று யோசிப்போம் .ரசித்துவிட்டு வரலாம் ...
.
ஐ லைக் ஐ.....