July 30, 2011
ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார். உற்சாகமாக சுறு சுறு மூடில் இருக்கும் போது மகள் ஐஸ்வர்யாவின் வீடு மற்ற நேரங்களில் போயஸ்கார்டன் இல்லம் என மாறி மாறி ரிலாக்ஸ் பண்ணிக்கொண்டிருக்கிறார் ரஜினி.போயஸ்கார்டன் இல்லத்தில் வாஸ்து சாஸ்திரப்படி மாற்றியமைக்கும் வேலைகள் இன்னும் முழுவதுமாக முடியவில்லை. இது ஒரு வகையில் ரஜினிக்கு ப்ளஸ்சாகி இருக்கிறது.எந்திரன் படவேலைகளால் கடந்த ஆண்டு ஓய்வில்லாமல் இருந்த ரஜினிக்கு இப்போதுதான் மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டில் பேரன்கள் யாத்ரா,லிங்கவுடன் மகிழ்சியாக விளையாடி அவர்களை கொஞ்சும் சூப்பர் தாத்தாவாக நேரம் கழிக்கும் தருணம் அமைந்திருக்கிறது. இந்த உற்சாக ரஜினி கேளம்பாக்கத்திற்குச் சென்றுவிட்டால் அப்படியே அனைத்தும் மாறிவிடும். தினமும் தியானம்,நீச்சல் பயிற்சிகளுக்கு பிறகு நடைபயிற்சிக்கு கிளம்பிவிடுவார்.மொத்தத்தில் ரஜினி இப்போது தனது சூப்பர் ஸ்டார் இமேஜை சுத்தமாக ஓரங்கட்டி வைத்துவிட்டு அவர் அவராகவே இருக்கும் காலம் இது . நன்றி. குமுதம்
July 29, 2011
குமுதம் தலையங்கம்
தனக்கென்று சொந்தமாக சிறு துண்டு நிலமாவது வேண்டும் என்று கனவு காணாதவர்கள் யார் இருக்கிறார்கள்? நிலம் என்னும் நல்லாள் என்கிற பைந்தமிழ் வரிகள் சொல்கிறபடி நிலம் என்பது வெறும் மண் மட்டுமல்ல. அதில் எத்தனையோ மனிதர்களின் நம்பிக்கைகள் ஈரத்தோடு ஒட்டிக்கொண்டிருக்கின்றன.அப்படிப்பட்ட நிலத்தையும் வீட்டையும் அதிகார பலத்துடன் பயமுறுத்தி பெரும் கும்பல் அராஜகமாகப் பறித்திருப்பதுப் பற்றி என்ன சொல்ல? தமிழகத்தில் ஆட்சி மாறியதும் வந்த புகார்களைப் பரிசீலித்து நில ஆக்கிரமிப்புத் தடுப்புக்காக சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு சில வாரங்களிலேயே இரண்டாயிரத்து நானூறுக்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்திருப்பது மலைக்க வைக்கிறது. நிலத்தைப் பறிகொடுத்தவர்களில் பெரும்பாலானோர்கள் முதியவர்கள், கூடவே பெண்களும்,விதவைகளும் அதிகமாக ஏமாற்றப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்ற விசயங்கள் பீதியை ஏற்படுத்துகின்றன. முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் என்கிறப் பாரபட்சமற்றுப் புகார்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. இதில் சிலர் மிரட்டப்பட்டு புகார்களைத் திரும்பப் பெறும் நிலை உருவாகிவிட்டால் ஆயிரக்கணக்கானோரின் நம்பிக்கை பலனில்லாமல் போய்விடும். கட்சி பேதமற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அப்பாவியான பலரிடமிருந்து முறைகேடாகப் பறிக்கப்பட்ட நிலங்களையும் சொத்துக்களையும் திரும்ப அவர்களுக்குக் கிடைக்க வழி செய்ய வேண்டும். அதற்கான நம்பிக்கையை முதலில் உருவாக்க வேண்டும். எந்த ஆட்சியாக இருந்தாலும் இம்மாதிரியான சமூக விரோதமாகச் செயல்படும் கும்பல்கள் முளைத்துக் கொண்டுதான் இருக்கும். ஆனால் அந்தக் களைகள் வளர இந்த ஆடசி உரம் அளித்துவிடக் கூடாது என்பதுதான் தமிழகத்தில் இருக்கும் சராசரி தமிழனின் கவலை. நன்றி குமுதம் வார இதள்.
July 28, 2011
கூடங்குளம் அணுமின் நிலையம் ஓர் தகவல்
கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் பற்றிய அடிப்படைத் தகவல்களைக்கூட அணுசக்தித் துறையோ,மத்திய அரசோ தராமல் இருந்த நிலையில் திட்டம் சம்பந்தமான பத்திரிகைச் செய்திகள், ஆய்வுக்கட்டுரைகள், போராட்டக் கட்டுரைகள் போன்றவற்றைத் தொகுத்து ஒரு புத்தகம் 2004-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.தகவல்கள் தரமறுத்த அதிகார வர்கத்துக்கு தக்க பதிலாக அமைந்தது இந்தக் கையேடு.கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தைப்பற்றிய ஒரு பொது விவாதத்தை துவக்குவதும்,அணு சக்தித் துறை எனும் 'புனிதப்பசுவின்' போலி வேடங்களைத் தோலுரித்துக் காட்டுவதும்,அணு சக்திக்கு எதிரான போராளிகளுக்கு பயன்படும் தகவல்களைத் திரட்டி வழங்குவதுமே இப் புத்தகத்தின் நோக்கங்கள்.382 பக்கங்கள் கொண்ட இந்த ஆவணத்திரட்டு....திரைப்படங்களும்,நாவல்களும்,நாடகங்களும்,கவிதைகளும் சாதிக்க முனைவதை ஆவணங்கள் வழியாக அடைய முயற்சிக்கிறது. நன்றி., ஜுனியர் விகடன் மற்றும் கட்டுரை ஆசிரியர்.. 29.6.11
ரஜினிகாந்திற்கு ஓர் கடிதம்ரஜினிகாந்திற்கு ஓர் கடிதம்
கடிதத்துக்கு ரியாக்ஸன். தற்போது ஓய்வில் இருக்கும் ரஜினிக்கு உருக்கமான கடிதத்தை ஃபேக்ஸ் அனுப்பியிருக்கிறார் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன். இது உங்களுக்கு மறுபிறப்பு.போன பிறவியில் ஒரு நடிகராக மட்டுமே இருந்தீர்கள்.மகத்தான மாற்றத்தை உண்டாக்கும் வாய்ப்பு உங்களுக்கு இருந்தாலும் அதனை நீங்கள் பயன்படுத்தவே இல்லை. இந்த பிறவியிலாவது மக்கள் நலன் சார்ந்த விசயங்களுக்காக நீங்கள் போராடவேண்டும்.உங்களுக்கு கிடைத்த உயரிய சிகிட்சைகள் சாதாரண மக்களுக்கு கிடைப்பது சாத்தியமில்லை.அடிப்படை மருத்துவத்துக்கே வழியற்ற நிலமை தமிழகத்தில் நிலவுகிறது.அதனை தீர்க்கும் விதமான முன்னெடுப்பைச் செய்வதுதான் உங்களைக் கொண்டாடும் தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யும் பதிலீடாக இருக்கும்! என அழுத்தமாக எழுதி இருக்கிறார் சௌந்தர்ராஜன். உயிர் மீண்ட நெகிழ்வில் இருக்கும் ரஜினியை அந்தக் கடிதம் ரொம்பவே உசுப்பியிருக்கிறதாம்.சமுகம் சார்ந்த கைக்கோப்புக்கான அழைப்பு எப்போதும் ரஜினியிடமிருந்து கிளம்பலாம். நன்றி. ஆனந்தவிகடன். 29.6.11
July 27, 2011
July 26, 2011
Subscribe to:
Posts (Atom)