November 4, 2014

கடன் ஓர் கடன்

நம்ம அண்ணன் ஒருத்தர்ட்ட...

அண்ணே எனக்கு அவசரமா பத்தாயிரம் ரூபாய் தேவைப்படுது யார்கிட்டயாவது வட்டிக்கோ அல்லது டெய்லி சீட்டுக்கோ வாங்கித்தர முடியுமா என கேட்டேன் ..கடனாய் கேட்டாலும் தரமாட்டார்கள் என்பதால்தான் வட்டி என்ற பிட்டை போட்டேன் )
நொடி கூட தாமதிக்காம உடனே சொன்னார் .என்னது வட்டிக்கு காசா டேய் நாங்க எல்லாம் வாங்கிட்டு படுகிற அவஸ்த்தை எங்களுக்குதான் தெரியும் .எக்காலத்திலையும் வட்டிக்கு வாங்கும் எண்ணத்தை மட்டும் விட்டுவிடு என சீரியசாவே சொல்லி முடிச்சார் ..
.
நான் குழம்பிட்டேன் நம்ம நல்லதுக்குதான் வாட்டிக்கு வாங்க வேணாம்னு சொல்றாங்களா ..அல்லது நம்மேல் கொண்ட அதீத நம்பிக்கையின் பிரதிபலிப்பே இந்த நிராகரிப்பாய் இருக்குமா என குழம்பித்தான் போனேன் ..
இருந்தாலும் ...
அண்ணே எனக்கு ரொம்ப தேவை இருக்குண்ணே அதனால ஐந்தாயிரம் ரூபாய் கடனுக்காச்சும் கொடுண்ணே என்று கேட்டேன் ....
.
கொஞ்சமா திகைத்த முகத்தோடு சொன்னார் ....
வாய்ப்பே இல்லயப்பா ஏன்னா போனவாரம்  வட்டிக்கு வாங்குன  பத்தாயிரம் ரூபாய் சாயங்காலம் திருப்பி கொடுக்கணும் இப்போ ஐந்தாயிரம் ரூபாய்தான் இருக்கு மீதி ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஓடிட்டு இருக்கேன் ...இதுல நாளைக்கு ஒருத்தருக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடுக்கணும் ...அடுத்வாரம் இன்னும் ஒருத்தருக்கு ...
.
அண்ணே போதும்ணே இதோட நிறுத்திரு .உன்கிட்ட கடனுக்கும் கேட்கல வட்டிக்கும் கேட்கல .....போட்டா ..
.
ஹலோ நான்தான்டா எனக்கு அவசரமா ஒரு ஐந்தாயிரம் ரூபாய் தேவைப்படுது ....
.
டேய் மச்சான் நானே உன்கிட்ட கேக்கலாம்னு இருந்தேன்டா ... ...
.
அவன் பேசுனது பிறகு எனக்கு கேக்கவே இல்லை ...கட் பண்ணிட்டேன் அழைப்பை ......
.

November 3, 2014

சில்லரை

சினிமாவில் யதார்த்தத்தை மீறிய சில காட்சிகள் நிஜ வாழ்க்கையில் நடக்கும்போது மிக சுவாரஸ்யமாகிவிடுகிறது ... அப்படிதான் இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தையில் வெட்டியாக நின்று கொண்டிருந்தபோது ஒரு குடிகார பிச்சைக்காரர் ஒரு பக்தி கானத்தை மிகுந்த உச்சக் கூக்குரலில் பாடி பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார் .அவர் பாடும் தோரணையும் வித்தியாசமான பாவனையும் என்னை கவர்ந்ததால் அவரை கவனித்துக்கொண்டிருந்தேன் ...அவரும் நான்கைந்தை வரிகளை மட்டும் மீண்டும் மீண்டும் பாடியவாறே நான் நின்றிருந்த கடைக்கருகே வந்து மீண்டும் முதல் வரியிலிருந்து பாட ஆரம்பித்தார் ..கடைக்கு காய்கனி வாங்கவந்தவர்கள் பாடக பிச்சைக்கரரின் குரலின் உச்சநிலையைக் கண்டு அதுவும் செவிப்புறமாய் பாடும்போது மிரண்டுதான் போனார்கள் ...இதைப்பார்த்த கடை முதலாளிக்கு சிறிது கோபம் வந்துவிட்டது .இருந்தாலும் வெளிக்காட்ட முடியாத சூழ்நிலையாதலால் அமைதியாக இருந்துவிட்டார் ..பாடகரும் பாடிய நிலையிலேயே மூன்று முறை கையேந்தி விட்டார் ..முதலாளி கண்டுகொள்வதாக இல்லை ..மீண்டும் பாடகரின் ஒருசில முயற்சிச்சிக்குப் பின் முதலாளி வாயைத் திறந்து சில்லறை இல்லை என்று மூஞ்சை கோணலாக வைத்துக்கொண்டே சொன்னார் ...கொஞ்சமும் அலட்டாத பாடகர் பாடிபடியே இந்தாங்க எடுத்துக்கோங்க என்று தன் தட்டை முதலாளி முன் வைத்தார் ...... அப்படியே முதலாளி அதிர்ச்சியாயிட்டாரு.. சுத்தியிருந்த நாங்களும்தான் ...சில வினாடிகளுக்குப் பிறகு சாவதனாமாக பாடகர் சொல்கிறார் சில்லறை எடுத்துக்கோங்கன்னு சொல்லவந்தேன் அப்படி என்று விட்டு மீண்டும் பாட ஆரம்பித்து விட்டார் ..அவர் பாடலை ஆரம்பிக்கவும் நான் சிரிக்க ஆரம்பிக்கவும் சரியாய் இருந்தது..அதுவும் பலமாக சிரித்தேன் என் கூட துணைக்கு சிரிக்கவும் ஒருசிலர் இருந்தனர் ....இப்போது முதலாளிக்கு பிச்சைக்காரனை மறந்துவிட்டார் என்னை முறைக்க ஆரம்பித்தார் ..நான் இன்னும் பலமாக சிரித்தேன் .அவர் கோ ப ப்டவில்லை அவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டார் ..... . ஆனா பிச்சைக்கார பாடகருக்குதான் காசு கிடைக்கவில்லை ..பிறகு நான்தான் என்கிட்ட சில்லரை இல்லையென சொல்லி வேறு ஒருவரிடம் ஒரு ரூபாய் கொடுக்க சொன்னேன் .....
.
நான் கொடுக்க சொல்லவில்லை என்றால் என்னையும் எடுக்கச்சொல்லியிருப்பார் ...........சில்லரை ......

November 2, 2014

ஆங்கிலம் கற்பதற்கு ஓர் வியாபாரக்கூடம்

எட்டு வயது குழந்தையுடன் ஒரு உரையாடல் ....
உன் பெயரென்னம்மா ....
.
கிப்சிகா ...
.
எத்தனாவது வகுப்பு படிக்குற ..
.
மூணாவது...
.
எந்த பள்ளிக்கூடம் ..
.
ஏபிஜெஎம்..காக்காவிளை ..
.
உன்னுடைய வகுப்பில் மொத்தம் எத்தனை பேர் ..
.
பதினான்கு ..
.
சரி திருக்குறள் தெரியுமா ..
.
தெரியும் ..
.
எத்தனை ..
.
ஒன்று ..
.
ஒண்ணுதான் தெரியுமா ..
.
ஆமா ..
.
மொத்தம் எத்தனை திருக்குறள் உண்டுனு தெரியுமா ...
.
தெரியாது ...எங்களுக்கு சொல்லிதரல ..
.
தமிழ் பாடம் நடத்துவாங்கதானே ..
.
ஆமா ஒரு பிரீயடு மட்டும் ...
.
சரி உங்க பள்ளிக்கூடத்தில் இங்கிலீஷ்ல பேசுவீங்களா தமிழ்ல பேசுவீங்களா ...
.
தமிழ் பிரீயடை தவிர மத்த நேரம்லாம் இங்கிலிஷ்லதான் பேசனும் மீறிப் தமிழ்ல பேசுனா பைன் போடுவாங்க ..சில நேரம் அடிக்கவும் செய்வாங்க ...
.
ஐயையோ ரொம்ப அநியாயமா இருக்கே ..
.
ம்.
.
வீட்ல அப்பா அம்மாகிட்ட பள்ளிக்கூடத்துல இந்த மாதிரி தண்டனை தராங்கன்னு சொன்னியா ...
.
சொன்னேன் அவங்க ஒண்ணும் சொல்ல ..
.
உனக்கு தமிழ்ல பேசி தண்டனை கிடைச்சுருக்கா..
.
ஆமா ஒருதடவை ....
.
உனக்கு இங்கிலீஷ்ல பேசுறது பிடிக்குமா தமிழ்ல பேசுறது பிடிக்குமா ...
.
தமிழ்ல பேசுறதுதான் பிடிக்கும் ...
.
ஓ செல்லம் சூப்பர் ..
.
சரி தமிழ்ல பேசுனா தண்டனை பள்ளிக்கூடத்தை அடிச்சு உடைச்சுரலாமா ...
.
குறு குறுவென என் முகத்தைப் பார்த்துவிட்டு ..உங்களால் அது முடியாது என்றாள் ....
நானும் அதோடு பேச்சை நிறுத்திவிட்டேன் ....புள்ள கடைசி பதிலை சரியாதான் சொல்லிருக்கா ......
இந்த நிகழ்ச்சியை நாளைக்கு அல்லது அடுத்த நாளோ நாலுபேரிடம் பேசிட்டு இருக்கும்போது பொங்குவேன் அடுத்ததான் நான் என்  வேலையைப் பார்க்கப் போய்விடுவேன் ...மிகச் சாதாரண சாமான்யனின் கோபம் எதிர்த்து பிரச்சினை செய்யாத நாலுபேரோடு முடிகிறது ......