free mail

July 22, 2012

மீனாட்சி அம்மன் கோயில் ஓர் அனுபவம்.

தமிழ் நாட்டில் எவ்வளவோ சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன,அவைகளில் நான் பார்த்து ரசித்தது ஒன்றோ இரண்டோதான்.அந்த வகையில் சமீபத்தில் பார்த்து வியந்த இடம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.அதை கோயில் என்பதைவிட கலைகளின் மறு வடிவம் என்றே கூறலாம்.அவ்வளவும் கலை நயமும்,வேலைப்பாடும்,நவீனமும் கலந்த ஓர் அம்சம்.கோயிலைப் பற்றி விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை.
கோயிலுக்கு உள்ளே நுளையும் முன்பே வானுயர்ந்த கோபுரங்களையும் அதன் வேலைப்பாடுகளையும் பார்த்து வாய் பிளந்து விட்டேன்.பிளந்த வாயுடனே நுளைவாயிலினில் நுளைந்தேன்.அங்கு கோயிலுக்கு வருபவர்களை சோதனையிட காவல் அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர்.இரண்டு பாதைகளில் சோதனை நடந்து கொண்டிருந்தது.வலப்புற பாதையில் இரண்டு மூன்று ஆட்கள் வரிசையில் நின்று கொண்டிருந்ததால் இடது பக்கமாக போவோம் என்று போனேன்.முன்னால் சிறு பகுதி துணியால் மறைக்கப்பட்டிருந்தது.அது என்னவென்று யோசிப்பதற்குள் வலது புறமிருந்து ஓர் அதட்டல் கேட்டது...யோவ் எங்கேயா போற இங்க வாய்யா என்று, நான் அதிர்ச்சியில் திரும்பினால் காவலதிகாரி என்னையே முறைத்துக் கொண்டிருந்தார்.அப்போதுதான் எனக்கு புரிந்தது நான் போன பாதை பெண்களக்கானது என்று.கொஞ்சம் விட்டிருந்தால் அந்த துணி மறைப்பினுள் நுளைந்திருப்பேன்.நல்ல வேளை காவலதிகாரி குரல் கொடுத்ததால் அடிவாங்காமல் தப்பினேன்.செய்த தவறுக்காக காவல் அதிகாரியிடம் சாரி என்றேன்,என்ன சாரி பூரின்னுகிட்டு என்று நக்கலாக கேட்டுகொண்டே விட்டுவிட்டார்.

அப்படியே அசடு வளிந்தபடியே கோயிலுனுள் நுளைந்தேன்.பழைய அதிர்ச்சி நீங்கி புத்துணர்ச்சி வந்தது.அத்தனையும் மனிதனின் கைவிரல் செய்தது.பெரிய கற்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள்,பெரிய பாளங்களாக அறுக்கப்பட்ட கற்களினால் மேற்கூரைகள்,ஒரே கல்லாலான துண்கள் என அனைத்துமே பிரம்மாண்டம்.இந்த கோயில் சுமார் 3600 ஆண்டுகளுக்கு முன்னர் குலசேகர பாண்டியனால் துவங்கப்பட்டு கி.பி 1700களில் மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னர்களால் கட்டிமுடிக்கப்பட்டதாக அங்கிருந்த குறிப்புப்பலகை கூறியது.(விக்கிப்பீடியாவிலும் இதே தகவல்தான்)
எனக்கு கேள்வியாக இருந்தது ஆயிரங்கால் மண்டபத்தை பற்றிதான்.எதற்காக இதைக் கட்டினார்கள் என்று புரியவில்லை. ஏனென்றால் மண்டபம் முழுவதுமே தூண்களால் நிரம்பியிருக்கின்றன,அப்படி இது எதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கும்?ஒரு வேளை பொது மக்களுக்கு சாப்பாடு போடுவதற்காக இருக்கும் என நினைத்துக் கொண்டேன்.தூண்களின் இடையில் வரிசையாக அமர்ந்து சாப்பிடலாம் அதற்கான இடைவெளிமட்டுமே இருக்கிறது.அதுபோக அங்குள்ள சிற்பங்கள்,தூண்கள்,மற்றும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பழையகாலத்து சிலைகள் என அனைத்துமே பரவசமேற்படுத்தக் கூடியவை.


ஆசைதீர ஓடி ஓடி கோயிலை சுற்றிப்பார்த்தேன்.எல்லாமுமே நன்றாக இருக்க கோயிலுனுள் சில முரண்பாடுகள்.

பொதுமக்கள் வழிபடுவதற்காக மன்னர்கள் கட்டிவைத்த கோயிலை இப்போது சந்தையாக்கியிருக்கிறார்கள்.குறைந்தது நூறு கடைகளாவது கோயிலின் உட்புறம் காணலாம்.அடுத்தது வெளிநாட்டினர் சாமியை சந்நிதானம் சென்று தரிசனம் செய்ய அனுமதியில்லை.ஆனால் 200 ரூபாய் கட்டினால் வெளிநாடோ உள்நாடோ எவன் வேண்டுமென்றாலும் உள்ளே போகலாம்.என்னே ஒரு கலாச்சாரம்.அடுத்து போட்டோ, வீடியோ எதுவும் எடுக்கக்கூடாது.கண்டிப்பா எடுக்கணும்னா வீடியோக்கு 250 ரூபாய் போட்டோவுக்கு ஐம்பது ரூபாய் அது கோனிக்காவுல எடுத்தாலும் சரி மொபைல்ல எடுத்தாலும் சரி அது உங்கபாடு.இப்படி வருமானத்தை பெருக்கிக் கொள்ளும் கோயில் நிர்வாகம் அந்த பணத்தை வைத்து பொதுவான நலத்திட்டங்கள் ஏதேனும் செய்தனரா என்றால் இல்லை என்றே பதில் இருக்கும்.
இப்படி எதற்காக பொதுமக்களிடமிருந்து பணத்தை பறித்துக் கொள்ள வேண்டும்?(ஒரு வேளை பஞ்சத்துல இருப்பாங்களோ...)இப்படி வசூலிப்பதற்கு ஒரு தடை உத்தரவு கொண்டு வரமாட்டார்களா?
இது மாதிரி ஒரு சில வழிப்பறிகளை தவிர்த்து விட்ட கோயிலை பார்த்தால்,ரசித்தால் மனதிற்குள் பட்டாம்பூச்சி பறக்கும்.எனக்கு மனதுக்குள் பறந்தது.


சின்ன சந்தேகம்....
மீனாட்சி அம்மன் கோயிலில் இந்த பாதாள அறை,ரகசிய அறை எதுவும் இல்லையா?ஏன்னா நம்ம திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில்ல உள்ள சில பல அறைகளில் பத்து,இருபது லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் இருப்பதாக சொல்கிறார்கள்.இங்கும் எதேனும் அறைகள் இருந்தால் அதில் நூறோ ,இருநூறோ கோடி இருந்தால் பண தட்டுப்பாடில் இருக்கும் மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்தினருக்கு உதவியாய் இருக்குமே.....


மேலும் மீனாட்சி அம்மன் கோயிலைப் பற்றி அறிந்து கொள்ள விக்கிப்பீடியாவின் இந்தச் சுட்டி சொடுக்கவும்.


மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.

July 17, 2012

ஜனாதிபதி மாளிகை ஒரு பார்வை.

நாட்டின் முதல் குடிமகனை தேர்தெடுக்கும் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது.இதில் ஆழுங்கட்சி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி வெற்றி பெறுவாரா இல்லை இதர போட்டியாளரான சங்மா வெற்றி பெறுவாரா என்பது தேர்தல் முடிந்த பிறகு தெரிந்துவிடும்.நாட்டின் ஜனாதிபதி என்பவர் இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு தலையாட்டி பொம்மைதான். இருந்தாலும் அவர்களுக்கான ராஜபோக வாழ்கைக்கு எந்தவித குறைவும் இருக்காது.மாத சம்பளமாக சுமார் 1,50,000 ரூபாய்களும் மற்றும் வெளிநாட்டு சுற்றுபயணங்கள்,சகல வசதிகளுடன் வீடு(ராஷ்டிரபவன்).போன்ற ஆடம்பர வாழ்கையை அனுபவிப்பார்கள்.பெயருக்காக அந்த பதவி அலங்கரிக்கப்பட்டாலும் நாட்டின் முதல் குடிமகன் என்ற பெருமை ஜனாதிபதிக்கு உண்டு.இப்படி சகல சம்பிரதாயங்களோடு வலம் வரும் ஜனாதிபதி அவர்கள் பதவியில் அமர்ந்தது முதல் அடுத்த ஐந்தாண்டுகள் வரை வசிப்பதற்காக கொடுக்கப்படும் மாளிகைதான் ராஷ்டிரபவன்.அமெரிக்காவின் வெள்ளை மாளிகை போல்.

அப்படிப்பட்ட மேன்மையான ராஷ்டிரபவனை பற்றி தினமலரில் வெளியான கட்டுரை இதோ.இந்திய ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லம்,"ராஷ்டிரபதி பவன்' (ஜனாதிபதி மாளிகை). இது சிறந்த கட்டடக்கலை சிறப்பம்சத்தை கொண்டது. உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரின் இல்லம் இதுதான்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது, நாட்டின் தலைநகராக கோல்கட்டா இருந்தது. 1911ம் ஆண்டு டில்லிக்கு ஆங்கிலேயர் தலைநகரை மாற்றினர். அதே நேரத்தில் அதற்கான தலைமைச் செயலகம், அரசு அலுவலங்கள் அமைப்பது குறித்த ஆராய, ஆங்கிலேய அரசு, கட்டட பொறியாளர்கள் எட்வின் லேண்ட்சீர் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பாகர் ஆகியோர் தலைமையிலான குழுவை அமைத்தது.
இக்குழு தற்போதைய டில்லிக்கு அருகே 5 கி.மீ., தொலைவில் உள்ள "ரெய்சினா ஹில்ஸ்' என்ற உயரமான இடத்தை தேர்வு செய்தது. இப்பகுதியில் தான் தற்போதைய ஜனாதிபதி மாளிகை,பார்லிமென்ட், பிரதமர் அலுவலகம், மத்திய அரசு அலுவலகங்கள் ஆகிய கட்டடங்கள் உள்ளன. இது டில்லியின் மற்ற பகுதிகளை விட 741 அடி உயரமானது.
இதற்காக 1911 முதல் 1916 வரை, "1894 நிலம் கையகப்படுத்தும் சட்டம்' அடிப்படையில் 300 குடும்பங்கள் காலி செய்யப்பட்டன. 4000 ஏக்கர்நிலம் கையகப்படுத்தப்பட்டது."ஹில்ஸ்' ன் உயரமான இடத்தில் விக்டோரியா அரண்மனையும் (தலைமை செயலகம்), அதற்கு அருகே அரசு அலுவலங்களும் கட்ட திட்டமிடப்பட்டு, 1912ல் பணி தொடங்கப்பட்டது. விக்டோரியா அரண்மனை உயரமாக இருக்க வேண்டும் எனலுட்யென்ஸ் விரும்பினார். 1916ல் ஆங்கிலேய அரசு, அதிகமான நிதி செலவு செய்ய முடியாது என தெரிவித்து இவரது கோரிக்கையை நிராகரித்தது. இதையடுத்து"விக்டோரியா அரண்மனையின்' அளவை குறைத்தார். இந்திய கலாசாரமும், இக்கட்டடத்தில் இடம் பெற்றது.
கட்டத்திற்கான திட்ட மதிப்பீடு, துவக்கத்தில் 4லட்சம் பவுண்ட் என முடிவு செய்யப்பட்டு. இறுதியில் 9லட்சம் பவுண்டாக அதிகரித்தது. நான்கு ஆண்டுகளில் முடிய வேண்டிய பணி 17 ஆண்டுகள் இழுத்தது.
சிறப்பம்சம்: நான்கு மாடிகள், 340 அறைகள் இதில் உள்ளன. மொத்தம் 2 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. 70 கோடிசெங்கல், 30 கோடி கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ராஷ்டிரபதி பவன் கட்டடத்தில் இடம்பெற்றுள்ள "டூம்' வெகு தூரத்தில் இருந்த பார்ப்போரை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டது. கட்டடத்தில் உள்ள தூண்களில் "மணி' இடம் பெற்றுள்ளது. இது இந்து, புத்த, ஜெயின் சமூக மரபை பிரலிபதிப்பதாக அமைந்துள்ளது. ஆனால் இந்த"மணிகள்' கட்டடத்தின் வடக்கு பிளாக், சவுத் பிளாக் மற்றும் பார்லிமென்ட் வளாகம் ஆகியவற்றில் இடம் பெறவில்லை. இந்தியா சுதந்திரம் பெற்று ராஜாஜி இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக பதவியில் இருந்த போது, அவர் பயன்படுத்திய அறைகள், தற்போது வெளிநாட்டு தலைவர்கள் சந்திக்கும் இடமாக விளங்குகிறது.
இரண்டு இடங்கள்: முகுல் கார்டன், ஹெர்பல் கார்டன் ஆகிய தோட்டங்கள் ராஷ்டிரபதி வளாகத்தில் அமைந்துள்ளன. டில்லியைத் தவிர, சிம்லா (வடக்கு) மற்றும் ஐதராபாத் (தெற்கு) ஆகிய இடங்களில் ஜனாதிபதிக்கான"ராஷ்டிரபதி நிலையம்' அமைந்துள்ளது.மேலும் ஒரு தகவல்.ஜனாதிபதி தேர்தல் என்பது மறைமுக வாக்கெடுப்பு மூலம் நடைபெறுகிறது.இதிலும் பல புரியாத புதிர்கள் இருக்கின்றன அவற்றைப் பற்றி தெரிந்த கொள்ள கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்.

நாட்டின் முதல் குடிமகனை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறார்கள் ஒரு பார்வை.

July 7, 2012

தமிழ்நாட்டின் சில பிரச்சனைகள் சில கேள்விகள்.

தமிழ்நாட்டில் தற்போது டாப் டென் பிரச்சனைகளாக மக்கள் மத்தியில் உலா வரும் சில.
1.மின்வெட்டு
இது சில பல ஆண்டுகளாக இருந்து வந்தாலும் அதிமுக ஆட்சியில் இன்னும் அதிகமாகியதோ என்று தோன்றுகிறது,தமிழ் நாட்டைப் பொறுத்தவரை மின்சாரம் என்பது வரும் ஆனா வராது.

2.பேருந்துக் கட்டணம்.
பேருந்து கட்டணங்களை உயர்த்தி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியிருந்தாலும் ஒவ்வொரு முறை பேருந்தில் பயணிக்கும் போதும் அம்மையாரின் பெருமையைப் பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை.

3.இடைத்தேர்தல்.
சம்மந்தப் பட்ட தொகுதி மக்களுக்கு இனிப்பான செய்தி.எதிர் கட்சியினருக்கு தோற்று விடுவோம் என்று தெரிந்தே களம் காண வேண்டிய துர்பாக்கியநிலை.பிற தொகுதி மக்களுக்கு நம் தொகுதியில் எப்போது இடைத்தேர்தல் வரும் என மாண்புமிகு எம்.எல்.ஏ வை பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதே ஒரு பிரச்சனை.4.தண்ணீர், தண்ணீர்.

கி.மு விலேயே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் பிரச்சனை இருந்து வந்தாலும் அதன் வீரியம் இன்றும் குறையாமல் பாதுகாக்கப்படுகிறது.அண்டை மாநில ஆறுகளிலிருந்து தண்ணீர் தர மறுப்பதால்,இந்த யமுனா,கங்கை பாயும் வடமாநிலங்களிடம் கொஞ்சம் தண்ணீர் கேட்டுபார்க்கலாமோ?

5.இலவசங்கள்.
ஆடு,மாடு,வீடு,அம்மி,பணம்,டிவி,நிலம் இன்னும் எவ்வளவோ பொருட்கள் அம்மா ஆட்சியிலும் ஐயா ஆட்சிலும் கொடுத்தார்கள்.இன்னும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் பொது மக்களின் தற்போதைய கேள்வி அடுத்த தேர்தலில் கார் கொடுப்பார்களா?பைக் கொடுப்பார்களா?
6.ஐயாவா?அம்மாவா?
இது ரொம்ப ரொம்ப கஷ்டமான குளப்பமான கேள்வி,கூடவே பிரச்சனையும்.ஐயா நல்லவரா? அம்மா நல்லவரா?கிட்டத்தட்ட 25 வருட கேள்வி இது.

7.கூடங்குளம் அணு உலை.

பூதாகரமாக உருவாகி அதன் சுவடே தெரியாமல் அளிந்த பிரச்சனை.ஆனா மின்சாரம்
கேரளா,கர்நாடகம்,ஆந்திரா போயிட்டு மீதியிருந்தா நமக்கு தருவாங்க,ஏன்னா
நமக்கு பரந்த மனசாச்சே!!?

8.ஸ்பெக்ட்ரம்.
உண்மையிலேயே 175000 கோடி சுருட்டியிருக்க முடியாது,ஆனா அதுல பாதி
திருடியிருக்கலாம்.அது சரி அவ்வளவு பணத்தை எங்கு
மறைப்பார்கள்,மறைத்தார்கள்.9.நித்தியமும் ஆனந்தம்.
நித்தியானந்தா மேல் பலருக்கு கோபம் இருந்தாலும் எனக்கு கொஞ்சம்
பொறாமையாதான் இருக்கு.என்னா வாழ்க்க வாழ்ரார் சார் அவரு வயிறு
எரியுது.இப்போதெல்லாம் நித்தியானந்தா என்றால் கிளுகிளுப்பும்
பிரச்சனையும்தான்.


10.சின்னதிரை.
ரியாலிட்டி ஷோ நடத்துறேன்கிற பேர்ல இவங்க பண்ற அலம்புக்கு ஒரு அளவே
இல்லாம போயிடிச்சி.அமெரிக்காகாரன் பண்றத இந்தியாகாரன் சுடுறான் அவனப்
பாத்து தமிழ்நாட்டுக்காரன் சுட்டு ஏறத்தாள ஆறேளு கோடி பேருக்கு அறிவை
வளர்த்துக் கொண்டிருக்கிறான்.பணத்திற்காக எதையும் செய்யும் உலகமப்பா
இது.

March 21, 2012

ஊடகத்தில் என்றும் நிலைத்திருக்கப் போகும் ‘டிஜிட்டல் ரஜினி’ – த சன்டே இந்தியன் சிறப்புக் கட்டுரை!

உடல்நலக்குறைவில் இருந்து மீண்டு வந்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தொழில்நுட்ப உதவியுடன் புதிய படமான கோச்சடையானில் தோன்றுகிறார். ரத்தமும் சதையுமான ரஜினியைப் பார்த்து ரசித்த தமிழ் ரசிகர்கள், அவரது டிஜிட்டல் பிம்பத்தை ஏற்றுக்கொள்வார்களா?
சுல்தான் தி வாரியர், ராணா, கோச்சடையான் என்று ரஜினிகாந்த்தின் சமீபத்திய படம் பற்றிய மீடியா செய்திகளும் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. கடைசியில் கோச்சடையான் வேலைகள் தொடங்கியுள்ளன. ஆனால் ராணா என்கிற தலைப்பின் வசீகரத்தில் மயங்கிய அவர், அதே பெயரில் ஒரு கதையில் நடிக்கும் ஆசையில் இருக்கிறார். இயக்குநர் கே.வி. ஆனந்திடம் அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது கடைசித் தகவல்.
ஆனால் எந்திரனுக்குப் பின்னால் இனியும் ரஜினி ரத்தமும் சதையுமாக நடிக்க இருக்கும் படமாக வேறெந்த படமும் இருக்குமா? எந்திரன்தான் ஒரு சினிமா முழுக்க தானே நேரில் வந்து ரஜினி நடித்த கடைசிப் படமாக இருக்கலாம். அவரது திரைவாழ்வில் மிக உச்சகட்டப் படமாக அதிக பொருட்செலவில், அதிக விளம்பரத் துடன் வெளியாகி கோடிகளைக் குவித்த படம் அது. இனி அப்படி யெல்லாம் வந்து அவர் கஷ்டப்பட்டு நடிப்பதற்கு அவசியம் இல்லை என்பதைக் காட்டுவதே கோச்சடையான்.
எந்திரனுக்குப் பின்னால் ரஜினிகாந்த் நடிக்கப்போவதாக அறிவிக்கப்பட்ட ராணா படபூஜை ஏவிஎம் ஸ்டுடியோவில் பழைய பிள்ளையார் கோயிலில் நடந்தது. அப்போது ஒரே ஒரு ஷாட் மட்டுமே எடுக்கப்பட்டது. அன்று மாலையே அவருக்கு உடல்நலம் மோசமாகி இசபெல்லா மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். பிறகு ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று, உயர்தர சிகிச்சைக்காக மே 27 ஆம் தேதியன்று சிங்கப்பூர் சென்றார்.
அமிதாப்பச்சன் பரிந்துரையின்பேரில் அங்கு சென்றவர் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு உடல்நலம் தேறி ஜூலை 13 ஆம் தேதியன்று சென்னைக்கு வந்தார். மீண்டும் அதே சுறுசுறுப்புடன் ரஜினி உலவ ஆரம்பித்தார். இதெல்லாம் பழைய கதை. இதற்கு அடுத்ததாக ரஜினி என்ன செய்யப்போகிறார்? படங்களில் நடிக்க அவரது உடல்நிலை ஒத்துழைக்குமா என்று பலராலும் ஊகங்கள், கற்பனைகள் எழுப்பப் பட்டன.

கோச்சடையான் படத்தின் கதையைப் போலவே, ரஜினிகாந்த உடல்நலம் பற்றியும் பல கற்பனைக் கதைகள் வெளிவந்துகொண்டிருந்தன. அவர் மெதுவாகப் பேசுகிறார்; முன்பைப்போல அவரால் வேகமாக நடக்கமுடியவில்லை என்று சொல்லப்பட்டது. அதெல்லாம் பொய்யானவை என்பதை அவரே விழாக்களில் கலந்துகொண்டு பொய்யாக்கினார்.

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு நடந்த பாராட்டுவிழாவில் கலந்துகொண்டு எப்போதும்போல கலகலப்பாகப் பேசினார். அவரது பேச்சிலும் நடையிலும் எந்த சுணக்கத்தையும் பார்க்க முடியவில்லை. அதேபோல சமீபத்தில் ‘போர்பிரேம்ஸ்’ கல்யாணத்தின் மகன் திருமண விழாவில் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் உட்கார்ந்து வாழ்த்திச் சென்றிருக்கிறார். திருமதி. லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில் அவரது பெயரில் இயக்குநர் பாலசந்தருக்கு விருது வழங்கப்பட்டது. அங்கு இருபது நிமிடங்களுக்கு மேல் பேசிய ரஜினி, “என்னை திரையுலகில் அறிமுகப் படுத்திய குருநாதர் பாலசந்தர். அவருக்கு என் பெயரில் விருது வழங்குவது சரியல்ல. அடுத்த ஆண்டு முதல் அவருடைய பெயரில் மற்றவர் களுக்கு வழங்குங்கள்” என்று குறிப் பிட்டுள்ளார்.
எல்லா கற்பனைகளுக்கும் பதில் சொல்வதுபோல கோச்சடையான் என்ற புதிய படத்தில் ரஜினி நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டு பிரத்யேகப் புகைப்படங்களும் வெளியாயின. ஒரு மன்னனின் கெட்டப்புடன் வில்லுடன் ரஜினி நிற்பதுபோலவும் ஒற்றைக் காலில் கம்பீரமாக தவ நிலையில் இருப்பதுபோலவுமான காட்சிகள் வெளியிடப்பட்டன. இது அவதார் படத்தைப் போல 3 டி அனிமேஷன் தொழில்நுட்பத்தை முழுவதும் பயன்படுத்தி வெளிவரும் என்பது பட வட்டாரம் சொல்லும் தகவல். கோச்சடையான் என்ற பெயருக்குப் பின்னணியில் பல கதைகள் சொல்லப்படுகின்றன. நீண்ட சடைமுடியைக் கொண்ட சிவபெருமான் என்றும் பாண்டி நாட்டில் கோச்சடை பகுதியை ஆட்சிபுரிந்த குறுநிலமன்னன் ரணதீரன் என்றும் செய்திகள் உலவுகின்றன.
படப்பிடிப்புக்காக சில நாட்களில் இலண்டன் செல்லவிருப்பதாக தெரிவித்தார் த சன்டே இந்தியனிடம் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.
மேலும் பேசிய அவர், “சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உற்சாகத்துடன் கதை விவாதங்களில் கலந்துகொண்டார். படப்பிடிப்புக்குச் செல்வதற்கும் தயாராகிவிட்டார். கோச்சடையான் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறேன். இப்படம் தொடர்பான தொழில் நுட்பங்களை சௌந்தர்யா கவனித்துக் கொள்கிறார். அவர் இதற்காக சர்வதேச அளவில் அதிநவீன அனிமேஷன் தொழில்நுட்பம் பற்றி ஆய்வு செய்திருக்கிறார். அவதார் படத்தில் பணியாற்றிய வல்லுநர்கள் எங்கள் படத்தில் இருக்கிறார்கள். முதற்கட்டமாக இலண்டனில் படப் பிடிப்பை நடத்திவிட்டு சென்னைக்கு வந்து அடுத்த கட்டத்தை நடத்த இருக்கிறோம். இதுவொரு வரலாற்றுப் படம். எல்லாவற்றிலும் இப்படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய தளத்தை அறிமுகப்படுத்தும்” என்று சுருக்கமாகக் குறிப்பிடுகிறார். இன்னொரு தகவலும் உண்டு.
‘‘ராணா என்று எடுப்பதாக இருந்த படத்தின் கதைக்கு முன்கதைதான் கோச்சடையான். ராணா கதாநாயகன் பெயரே கோச்சடையான் ரணதீரன் என்பதுதான். அதுதான் ராணாவாக அழைக்கப்பட்டது. லண்டன், ஹாங்காங், ஹாலிவுட் ஆகிய இடங்களைச் சேர்ந்த மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பம் நிபுணர்கள் பீட்டர் ஜாக்சன் என்பவர் தலைமையில் ஹாங்காங்கில் தங்கி படத்திற்கான பணிகளில் ஈடுபடுபடப்போகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு முதற்கட்டப் பணிகளுக்காக ஹாங்காங் சென்று வந்திருக்கிறார் சௌந்தர்யா. சண்டைக்காட்சிகளை வடிவமைப்பு செய்கிறவர்கள் பிரிட்டிஷ்காரர்கள். அவர்களை ஒருங்கிணைப்பவராக நம்மூர் சண்டைப் பயிற்சியாளர் பீட்டர்ஹெய்ன் செயல்படுகிறார்’’ என்று சொல்கிறார் விவரமறிந்த ஒருவர்.
கோச்சடையானைப் பொறுத்தவரை சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளிவந்தது ரஜினிக்குத் தெரியாது என்று செய்திகள் வெளியாயின. “அதெல்லாம் பொய்யான தகவல். அப்பாவுக்கு அந்தக் கதை ரொம்பவும் பிடித்திருந்தது,” என்று டிவிட்டரில் பதில் சொன்னார் சௌந்தர்யா.
அதே டிவிட்டரில் திருமதி. லதா ரஜினிகாந்த்தும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் கணவரை மேக்கப் சேரில் உட்கார்ந்து பார்ப்பது மிகவும் சந்தோஷம் தருவ தாகச் சொல்லி டிவிட் செய்திருக்கிறார்.
கோச்சடையான் படத்திற்காக அலுவலக அளவில் பூஜை நடத்திவிட்டார்கள். ‘‘ராணா படத்திற்கு நடத்தியதுபோலவே பிரம்மாண்ட விழாக்களை நடத்த ரஜினி விருப்பப்படவில்லை. அவரது நோக்கம் முழுவதும் படத்தை பிரம்மாண்டமாக எடுத்து மக்களிடம் காட்டவேண்டும் என்பதாகவே இருக்கிறது. கடந்த மாதத்தில் ஒரு நாள் ஏவிஎம் ஸ்டுடியோவின் ஆறாவது புளோரில் படத்திற்கான போட்டோ ஷூட் நடந்தது. கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில், அவரது வரலாற்று கதாபாத்திரத்திற்கேற்ற விலையுயர்ந்த காஸ்ட்யூம்களில் ரஜினிகாந்தை படம்பிடித்திருக்கிறார் இப்படத்தின் இயக்குநரான சௌந்தர்யா. இப்படத்திற்கான கதையையும் அதுனுடன் கூடிய ஸ்டோரி போர்டையும் கணினியில் பார்த்த ரஜினிகாந்த், முழு படத்தையும் பார்த்த திருப்தி ஏற்பட்டதாகச் சொல்லியிருக்கிறார்’’ என்கிறார் நம்மிடம் பேசியவர்.
அதே மகிழ்ச்சியில்தான் ராணா படத்திற்கான கதையை கே.வி.ஆனந்திடம் எழுதச் சொன்ன சம்பவமும் நடந்துள்ளது. இதுபற்றி டிவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள ஆனந்த், ‘சுண்டெலி, சிங்கத்தை தூரத்திலிருந்து பார்க்கலாம். ரசிக்கலாம். கிட்டபோய் விளையாடற தகுதியெல்லாம் சுண்டெலிக்கு இல்லை’ என்றிருக்கிறார்.
ராணாவின் முதல் நாள் படப்பிடிப்பிலேயே படம் நின்று போனதால் தீபிகா படுகோனை மீண்டும் அழைக்க மாட்டார்கள் என்ற மூடநம்பிக்கை உடைந்திருக்கிறது. தீபிகாவை ரஜினி விடுவதாயில்லை. கோச்சடையானுக்கு தங்கையாக நடிக்கவிருந்த சிநேகா, அதே தேதிகளில் வேறொரு படப்பிடிப்பு இருப்பதால் அதிலிருந்து விலகிவிட்டார். இப்போது அந்த கதாபாத்திரத்தில் பொம்மலாட்டம் படத்தில் நடித்த, பாலேவும் பரதமும் தெரிந்த ருக்மணி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர்ஸ்டாரை சந்தித்துப் பேசிய சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், அவருடன் சேர்ந்து நடிக்கும் ஆசையை வெளிப்படுத்தினார். அது இப்போது நனவாகிவிட்டது. தனக்குக் கிடைத்த தெலுங்கு, கன்னடப் படவாய்ப்புகளைத் தள்ளிவிட்டு கோச்சடையானின் அரிதாரம் பூசக் காத்திருக்கிறார் சரத்குமார். வடிவேலுவை நடிக்க வைக்கலாம் என்று ரஜினியிடம் சொல்லப்பட, வீண் அரசியல் வதந்திகளும் செய்திகளும் மீடியாவில் வந்து படத்தின் கவனத்தைத் திசைதிருப்பும் என்பதால் மறுத்துவிட்டாராம்.
அதனால் சந்திரபாபு, நாகேஷ் இருவரில் ஒருவருடன் சேர்ந்து நடிப்பதுபோல புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் காட்சிகளை உருவாக்க யோசித்துள்ளனர். நாகேஷ் நடிப்பு மிகவும் பிடிக்கும் என்பதால் அவரை ஓகே செய்திருக்கிறாராம். அதற்கான பணிகளும் தொடங்கி விட்டனவாம். இந்தியாவின் முதல் ‘பர்மான்ஸ் கேப்சர் போட்டோ ரியலிஸ்டிக் பிலிம்’ என்று கோச்சடையான் என்று பட விளம்பரம் சொல்கிறது. இந்த பாணியை அவதார் படத்தில் ஜேம்ஸ் காமரூனும், அட்வென்சர்ஸ் ஆப் டின்டின் படத்தில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கும் பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
எப்போதும் ரஜினிகாந்த் படங்களில் ஏஆர் ரகுமானுடன் இணைந்து சூப்பர்ஹிட் பாடல்களைத் தந்துள்ளவர் கவிஞர் வைரமுத்து. இந்த முறை முந்தைய சூப்பர்ஸ்டார் படப் பாடல்களின் சாயல் ஏதுமில்லாத, அவற்றை ஞாபகமூட்டாத புதுமையான பாடல் வரிகளை எழுதப்போகிறாராம்.
திடீர் உடல்நலக்குறைவால் ராணா படம் நின்றுபோனதால், தற்போது உருவாகிவரும் கோச்சடையான் படத்தைப் பற்றிய தகவல்கள் அதிகமாக மீடியாவில் வெளிவராமல் சௌந்தர்யா பார்த்துக்கொள்கிறாராம். ஏனெனனில் மிகையான தகவல்களும் செய்திகளும் பழைய படத்தைப் போன்ற ஒரு தோற்றத்தைத் தந்துவிடும் என்ற அச்சம்தான் காரணம்.
முன்பைப்போல அதிக டேக்குகள் எடுத்து நடிப்பதற்கு ரஜினியின் உடல்நலம் ஒப்புக்கொள்ளாது என்பதால், அவருடன் நடிக்க இருக்கும் மற்ற நடிகர்களுக்கு படப்பிடிப்புக்கு ஒரு வாரத்திற்கு முன்பு ரிகர்சல் செய்யச் சொல்லியுள்ளார்களாம்.
ரஜினிகாந்த் பற்றிய பிரத்யேக இணையதளங்களான ரஜினிலைவ்.காம் மற்றும் என்வழி.காம் ஆசிரியர் எஸ் சங்கர் ‘தசஇ’யிடம் பேசும்போது, இது ஒரு முழுமையான டெக்னிக்கல் படம் என்கிறார். “தொழில்நுட்பத்தின் உச்சம் என்று சொல்லலாம். இந்தியாவில் வெறெந்த படத்துக்கும் செய்யத் துணியாத பல விஷயங்களைச் செய்கிறார்கள். அவர்கள் திட்டமிட்டபடி எடுத்தால் பெருமைக்குரிய படமாக இருக்கும். ரஜினிகாந்த் உண்மையிலேயே ஆர்வம் காட்டிவருகிறார். அவருக்குப் பதிலாக டூப் போடுகிறார்கள் என்பது பொய்யான செய்தி. தன்னால் முடியவில்லை என்றால் அந்த புராஜெக்ட்டை செய்யவேவேண்டாம் என்பதுதான் கே.எஸ்.ரவிக்குமாரிடம் ரஜினி நேரடியாக சொன்ன வார்த்தை. ரசிகர்களை ஏமாற்றவேண்டும் என்ற எண்ணம் அவரிடம் எப்போதும் கிடையாது” என்று உறுதியாகச் சொல்கிறார்.
புவனா ஒரு கேள்விக்குறி தொடங்கி ரஜினியை ஹீரோவாக வைத்து 25 படங்களை இயக்கிய மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், “எதுவாக இருந்தாலும் ரஜினி யோசித்துத்தான் முடிவெடுப்பார். நாம் சொல்வதை உள்வாங்கிக்கொண்டு பிறகுதான் கருத்துத் தெரிவிப்பார். அந்தக் காலத்திலிருந்தே ஒரு படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிலிருந்து அது ரிலீஸாகும் தேதி வரையில் அவருடைய உழைப்பும் ஈடுபாடும் குறையாது. சிவாஜி படப்பிடிப்பு சமயத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் அவருக்காக ஒரு கேரவான் நிறுத்தப்பட்டது. அதைப் பற்றி விசாரித்தவர், அதெல்லாம் எதுக்கு புதுப் பழக்கம். எப்போதும் நமக்குன்னு ஒரு மேக்கப் அறை இருக்கு. அதுபோதுமே என்று மறுத்துவிட்டார். இந்தக் குணம்தான் அவரை மக்கள் மனதில் ஒரு சூப்பர் ஸ்டாராக இடம்பெற வைத்திருக்கிறது. கோச்சடையானிலும் அது தொடரும்” என்கிறார் அவர்.
ரஜினியே நேரடியாக எல்லா வற்றையும் செய்யத் தேவையில்லாத, கிராபிக்ஸ் உத்தியில் வெளிவரும் இப்படத்தை அவரது ரசிகர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? என்று சங்கரிடம் கேட்டோம். “கோச்சடையான் படத்தின் அறிவிப்பு வந்தபோது ரசிகர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் ஒரு பொம்மையைப்போல ரஜினி இப்படத்தில் வரப்போவதில்லை. அவருடைய உண்மையான பிம்பத்தை காட்டப்போகிறார்கள் என்று தகவலைக் கேள்விப்பட்டதும் மகிழ்ந்தோம். முத்து படத்தைப் போல இந்தப் படத்திலும் சூப்பர்ஸ்டார் படத்தின் எல்லா அம்சங்களையும் பார்க்கலாம் என்று கே.எஸ்.ரவிக்குமார் உறுதியளித்திருக்கிறார். இந்திய அளவில் வேறெந்த நடிகரும் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடிக்க முன்வராதபோது துணிச்சலாக நடிக்கிற ரஜினியின் ஆர்வம் பாராட்டுக்குரியது. இது 100 சதவிகித சூப்பர் ஸ்டார் படமாக இருக்கும். அந்த நம்பிக்கையுடன் நாங்கள் காத்திருக்கிறோம்” என்கிறார்.


‘‘ஆனால் ரஜினி அசலான ரஜினி அல்ல. அவரது உருவ அமைப்பைப் படம்பிடித்துக்கொண்டு கிராபிக்ஸ் மூலம் காட்சிகளை அமைக்கப் போகிறார்கள். அவர், தன் நடிப்புலகப் புகழின் உச்சியில் இருக்கிறார். மிக முக்கியமான இக்காலகட்டத்தில் ரஜினியால் முழு வேகத்தில் நடிக்க இயலவில்லை. ஆனால் அவரது உருவத்தைப் பயன்படுத்தி உருவாக்கும் அனிமேஷன்கள் இதை நிரப்பும். ரசிகர்களை திருப்திப்படுத்துவதோடு கூடவே அவரது வர்த்தகச் சந்தையைப் பயன்படுத்திக்கொள்வதும் நடந்து விடும். இது சரியான வர்த்தகத் திட்டம். ஆனால் ரத்தமும் சதையுமான ரஜினியை திரையில் கண்ட ரசிகர்கள் அவரது போலியான பிம்பம் தோன்றும் படத்தை எப்படி ரசிப்பார்கள்? என்பதில் இருக்கிறது இப்படத்தின் எதிர்காலம்’’ என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத ஒரு சினிமா விமர்சகர்.
குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என சகலர் மனதிலும் அதிரும் பிம்பம் ரஜினி. தமிழில் முதன்முறையாக ஒரு நடிகர் மேம்பட்ட கார்ட்டூன் நாயகனாக மாறும் நிகழ்வாக அவர் கோச்சடையானில் அடியெடுத்து வைக்கிறார். இந்த சாகச நாயகன் அனிமேஷன் உருவமாக மாறுவதன் மூலம் காட்சி ஊடகத்தில் என்றென்றும் நீடிக்கப் போகிற பாத்திரமாக உருவாகிவிட்டார். அவரை வைத்து எதிர்காலத்தில் கார்ட்டூன் சீரியல்கள் கூட உருவாக்கப் படலாம். ஜாக்கிசான் கார்ட்டூன்களை சுட்டி டிவியில் பார்க்கும் உங்கள் வீட்டுக் குழந்தையிடம் இது பற்றிக் கேட்டுப்பாருங்கள்!
-நன்றி: த சன்டே இந்தியன்,சுந்தரபுத்தன்,envazhi.com..........

அமெரிக்காவில் பின்லேடன் உடல்: விக்கிலீக்ஸ் அதிர்ச்சி தகவல்!

பாகிஸ்தானிலுள்ள அபோடாபாத்தில் சுட்டுக்கொல்லப்பட்டு, அரபிக்கடலில் புதைத்துவிட்டதாக அமெரிக்கா கூறிவரும் பின்லேடனின் உடல் அமெரிக்காவில் உள்ளதாக விக்கிலீக்ஸ் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.அமெரிக்கா, உலக நாடுகளில் அமைத்துள்ள தனது தூதரகங்களுடன் ரகசியமாக பரிமாறிக்கொண்ட கேபிள் தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது விக்கிலீக்ஸ். இத்தகவல்களில் அமெரிக்கா உலக நாடுகளுக்கு எதிராக ரகசியமாக மேற்கொண்ட பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களும் அடங்கியிருந்தன. இதனால், விக்கிலீக்ஸ் இணையதள அசாஞ்சேமீது பாலியல் குற்றச்சாட்டு முதலான பலவித குற்றச்சாட்டுகள் சுமத்தியும் விக்கிலீக்ஸ் இணையதளத்தைப் பல நாடுகளில் முடக்கச் செய்தும் அமெரிக்கா விக்கிலீக்ஸுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது. எனினும் இதற்கு அசைந்து கொடுக்காத விக்கிலீக்ஸ், தற்போது அனானிமஸ்-விக்கிலீக்ஸ் என்ற பெயரில் மற்றொரு இணையதளத்தை உருவாக்கி, அமெரிக்காவுக்கு எதிராக மேலும் பல அதிர்ச்சியளிக்கும் ரகசிய தகவல்களை வெளியிட்டு வருகிறது.
இதில் தற்போது விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ள "பின்லேடன் உடல் அமெரிக்காவில் உள்ளது" என்ற அதிர்ச்சி தகவல் உலக நாடுகளிடையே பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடைய இத்தகவலுக்கு ஆதாரமாக ஒரு மின்னஞ்சலை அப்படியே வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ். அமெரிக்க அரசுக்காகவும் ராணுவம் மற்றும் உளவுப்பிரிவுக்காகவும் ஸ்ட்ராட்போர் என்ற நிறுவனம் பல்வேறு நாடுகளில் உளவு வேலை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் ரகசிய மின்னஞ்சல் பரிமாற்றங்களை வெளிப்படுத்தி வரும் விக்கிலீக்ஸ், ஸ்ட்ராட்போர் நிறுவனத்தின் ரகசிய பிரிவின் துணைத் தலைவர் பிரட் பர்ட்டன் தனது அதிகாரிக்கு எழுதியுள்ள மின்னஞ்சல் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அந்த மின்னஞ்சலில் பிரட் எழுதியுள்ளது பின்வருமாறு:
"கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி பாகிஸ்தானின் அபோடாபாத் நகரில் சுட்டுக் கொல்லப்பட்ட ஒசாமா பின் லேடனின் உடல் அமெரிக்கா கூறியபடி கடலில் புதைக்கப்படவில்லை. மாறாக அந்த உடலைச் சோதனை செய்யும் நோக்கில் தனது தனி விமானத்தில் அமெரிக்காவுக்குக் கொண்டுவந்தது சிஐஏ.

முதலில் டெல்வேர் மாகாணத்தின் டோவர் நகருக்குக் கொண்டுவரப்பட்ட பின்லேடன் உடல், பின்னர் மேரிலாண்டின் பெதெஸ்டா பகுதியில் உள்ள ராணுவத்தின் நோய் தடுப்பியல் ஆராய்ச்சி மையத்துக்குக் (Armed Forces Institute of Pathology) கொண்டு செல்லப்பட்டது."
மேற்கண்டவாறு அந்த மின்னஞ்சலில் பிரட் தன் அதிகாரிக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கே தெரியாமல் ரகசியமாக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின்மூலம் பின்லேடனைச் சுட்டுக்கொன்றதாக கூறிய அமெரிக்கா, இஸ்லாமிய முறைப்படி இறுதி சடங்குகள் செய்து அரபிக்கடலில் பின்லேடன் உடலைப் புதைத்துவிட்டதாக கூறியது.
அமெரிக்காவின் இக்கூற்று உலக அளவில் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. சுட்டுக்கொல்லப்பட்டதாக முதலில் வெளியிடப்பட்ட பின்லேடனின் புகைப்படம், கணினி மென்பொருள் மூலம் உருவாக்கப்பட்ட போலி படம் என்பது நிரூபணமாகியதோடு அமெரிக்கா கூறும் தகவலில் பொய்யுள்ளது என்ற குரல் ஒலிக்கத்துவங்கியிருந்தது.
இந்நிலையில், தற்போது விக்கி லீக்ஸ் வெளிப்படுத்தியுள்ள இத்தகவல் அமெரிக்கா, தான் சுட்டுக்கொன்றதாக கூறும் பின்லேடன் உண்மையில் பின்லேடன்தானா என்பதில் சந்தேகம் இருந்ததால் அதனை உறுதிபடுத்திக்கொள்வதற்காக அந்த உடலை அமெரிக்கா கொண்டு சென்று ரகசிய இடத்தில் வைத்துள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுவரை இது குறித்து எந்தத் தகவலும் அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா வெளியிடாததால், சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா கூறுவது உண்மையில் பின்லேடன்தானா என்ற சந்தேகத்தை மேலும் அதிகமாக்கியுள்ளது.

செய்திகள் at www.inneram.com

February 27, 2012

தமிழ் சின்னத்திரை ஒரு பார்வை.

இன்று தமிழகத்தின் பெரும்பாலான அனைத்து வீடுகளிலும் முக்கிய அங்கத்தினராக இருக்கும் ஒரு தொலைக்காட்சி அலை வரிசை டிஸ்கவரி தமிழ்தான்.மற்ற தமிழ் அலை வரிசைகளில் தமிழ் நிகழ்ச்சியென்ற பெயரில் ஆங்கிலத்தில் பேசி தொகுத்து வழங்குவார்கள் .ஆனால் டிஸ்கவரி தமிழில் மட்டும் ஆங்கில நிகழ்ச்சிகளை அழகான தமிழில் தொகுத்து வழங்குகிறார்கள்.

தமிழ் மொழியை தாய் மொழியாய் கொண்டவர்களின் அலை வரிசைகள் தமிழை விட ஆங்கிலத்தில் அதிகமாகப் பேசித் தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்கள்.குறிப்பாக பெரும்பாலான பெண் தொகுப்பாளர்கள் வடமாநிலங்களையும் மற்ற தென் மாநிலங்களையும் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு சில தொகுப்பாளினிகள் இருந்தாலும் அவர்களுக்கு வாயில் தமிழே வராது.நாற்பது சதவீதம் தமிழும் அறுபது சதவீதம் ஆங்கிலமும் கலந்து ஆங்கிலத்தில் பேசுவார்கள்.அப்படியே தமிழில் பேச முயற்சி செய்தாலும் இப்படித்தான் வரும்.......அதாவது நடிகர் தனுஷ் பேசுவது போல் அந்தாளுக்கு "ள்" என்கிற எழுத்தே தெரியாது என்றே நினைக்கிறேன்.அவள் என்று சொன்னால் அவல் என்று நமக்கு புரிகிறது.அதேபோல் 'ண' வையும் ன என்றே உச்சரிக்கிறார்கள்.இது தனுஷுக்கு சிறு வயது முதல பழகிக்கொண்டது என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த தொகுப்பாளர்கள் தவறான உச்சரிப்பென்று தெரிந்தே மீண்டும் மீண்டும் அதையே செய்கிறார்கள்.அப்படி பேசுவதில் ஒரு வித கவர்ச்சி இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்களோ என்னவோ.அவர்கள் அப்படி கொச்சையாக பேசும்போது உண்மையில் கோபம்தான் ஏற்படுகிறது.சன் அலைவரிசையில் இந்த நிலை குறைவுதான் ஆனால் இந்த விஜய் அலைவரிசையில்தான் அநியாத்திற்கு எல்லோரும் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள்.எனக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் தவறு கண்டுபிடிக்க வில்லை.மாறாக ஒரு தமிழ் அலைவரிசை தமிழில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்காமல் ஆங்கிலத்தையும் ஏன் சேர்க்க வேண்டும் என்பதே என் ஆதங்கம்.டிஸ்கவரி அலைவரிசையில் அந்தந்த நிகழ்ச்சியின் மொழிப்பெயர்ப்பை கேட்கும்போது உண்மையிலே உடல் சிலிர்க்கிறது.இதே போல் மக்கள் தொலைக்காட்சி அலைவரிசையையும் சொல்லலாம் அழகான தமிழில் அருமையாக தொகுத்து வழங்குகிறார்கள்.அனைத்துமே பயனுள்ள நிகழ்ச்சிகள்.ஆனால் மக்கள் அலைவரிசையின் செய்திகளை தவிர்த்து விடுவது நல்லது.மருத்துவர் புராணமும் சின்ன மருத்துவர் புராணமும் பாடியே செய்தியை முடித்து விடுவார்கள்.அது மட்டுமல்லாமல் செய்தி வாசிப்பாளர் செய்தியை வாசிக்கும் போது ராமதாஸ் தொடர்பான செய்திகள் வரும்போது மருத்துவர் ராமதாஸ் என்றே குறிப்பிடுகிறார்.ஆனால் மற்ற தலைவர்களின் பெயரை உச்சரிக்கும் போது மொட்டையாக கருணாநிதி,ஜெயலலிதா,விஜயகாந்த் என்றே குறிப்பிடுகிறார்.இது ஒரு பாரபட்சமான செயல்.இதை தவிர்த்தால் நன்றாக இருக்கும்.ராஜ் தொலைக்காட்சி அலைவரிசையின் நிகழ்ச்சிகளின் விளம்பர இடவேளையில் ஒரு வேளை உணவுக்கான சமையலை முடித்து விடலாம் அந்த அளவுக்கு விளம்பரங்களை ஒளி பரப்புகிறார்கள்.
கிட்டத்தட்ட பதினயிந்து நிமிடங்கள் இருக்கலாம்.

ஆங்கில அலைவரிசையான நேஷ்னல் ஜியோகிராபி மற்றும் கிஸ்ட்ரி அலைவரிசைகளில் தமிழில் மொழி பெயர்த்து நிகழ்ச்சியை வழங்குகிறார்கள்.ஆனால் டிஸ்கவரியில் மட்டும்தான் தனி தமிழ் அலைவரிசை இருக்கிறது.இருந்தாலும் அவர்கள் மொழிபெயர்ப்பும் அருமையாக இருக்கிறது.

செய்தி அலைவரிசைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் நேர்ந்து விட்டார்போல் ஒருபக்கமாகவே செய்திகள் வெளியிடுகின்றனர்.புதுவரவாக இருக்கும் புதியதலைமுறையின் செய்திகளை ஓரளவுக்கு கேட்கலாம் ஆனால் அவர்களின் மற்ற நேரலை நிகழ்ச்சிகள் படு மொக்கையாக இருக்கிறது.ஏதேனு ஒரு முக்கிய நிகழ்வு சம்மந்தமாக மூன்று நபர்களை கூட்டிவந்து கருத்து கேட்பார்களாம் ஆனால் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே விளம்பர இடைவேளை என்பார்கள் அல்லது அடுத்த நபரை பேச அழைப்பார்கள்,இப்படியே இறுதியில் நிகழ்ச்சியின் நேரம் முடிந்து விட்டது மீண்டும் சந்திப்போம் என்று அவர்களை அழைத்து வந்தர்கான காரணம் நிறைவேறாமலே நிகழ்ச்சியை முடிப்பார்கள்.நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு ஒருமாதிரி இருக்கிறதோ இல்லையோ ஆனால் பார்த்துக்கொண்டுருக்கும் பார்வையாளர்களுக்கு சிறு வெறுப்பு தோன்றும் என்பதே என் எண்ணம்.புதிய தலைமுறை செய்தியின் வெற்றி புதிய யுக்திகளை புகுத்துவதுதான் உதாரணமாக ஒரு நேரலை நிகழ்ச்சியின் கலந்துரையாடலின் போது பார்வையாளரான நம் கருத்தை தெரிவிக்க தொலைபேசியில் அழைக்கலாம் அல்லது புதியதலை முறையின் முகநூல் பக்கத்தில் நம் கருத்தை பதிவு செய்யலாம்.ஒரு சில நிமிடங்களிலேயே நம் கருத்து தொலைக்காட்சியல் ஒளிபரப்பாகிவிடும்.இந்த யுக்தியை முதல்முறையாக புதியதலைமுறைதான் மேற்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

எது எப்படியோ இந்த தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகளெல்லாம் ஆங்கில வார்த்தைகளை குறைத்து தமிழில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினால் அருமையாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

February 17, 2012

அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்து போடாவிட்டால் சம்பளம் இல்லை.

அரசு ஊழியர்கள்தமிழில்தான் கையெழுத்திட வேண்டும் என்றும் தமிழில் கையெழுத்திடாத அரசு ஊழியர்களின் சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என்றும் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ராணி தெரிவித்தார்.

அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் தமிழில் கையெழுத்து இடுகின்றனரா? அரசு அலுவலககங்களில் தமிழில் பெயர் பலகை மற்றும் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று திருவண்ணாமலையில் தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ராணி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார் அப்போது அனைவரும் தமிழில்தான் கையெழுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை, தகவல் பலகை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது சரியாக பராமரிக்கப்படுகிறதா, தமிழில் கையெழுத்திடப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
தமிழில் கையெழுத்திடாத அரசுஊழியர்களுக்கு சம்பளத்தை நிறுத்தி வைக்கவும், ஊதிய உயர்வு, பதவி உயர்வையும் நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீதும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

January 26, 2012

பிரபலமான மொபைல் பிரவுசர்களை டவுன்லோட் செய்ய.

இந்தியாவில் மொபைலில் இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்றரை கோடி.இதில் பெரும்பாலானோர் பிரவுசர்கள் மூலம் இணையத்தில் உலவுகின்றனர்.இதுவரை பல்வேறு நிறுவனங்களால் பல்லாயிரக்கணக்கான பிரவுசர்கள் வெளியிடப்பட்டுள்ளன.அவற்றில் சில பிரவுசர்களை நான் பயன்படுத்தியிருக்கிறேன்,பயன்படுத்தியும் வருகிறேன்.அதில் முதன்மையான சில பிரவுசர்களை நேரடி பதிவிறக்கம் செய்வதற்கு கீளுள்ள சுட்டிகளை சொடுக்குவதன் மூலம் செயல்படுத்தலாம்.


operamini 6.1 android browser download
ஆன்ராய்டு மொபைல்களில் தமிழ் தளங்களை படிக்க முடியாது.அதற்கு தீர்வாக operamini 6.1 பிரவுசரை ஆன்ராய்டு மொபைலில் நிறுவி சில மாற்றங்கள் செய்து தமிழ் தளங்களை படிக்கலாம்.நிறுவுவது எப்படி என்று அறிவற்கு கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்.மொபைலில் தமிழ் தளங்களை படிக்க ஆண்ராய்டு பிரவுசரை நிறுவது எப்படி?


operamini 4.2 download ஓபேராமினியின் வேகமான உலவி.


uc8 java browser download இந்த பிரவுசர் வேகமானது மட்டுமல்லாமல் பதிவிறக்கம் செய்யும் போது உலவியில் இருந்து வெளியே வராமல் சேமித்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.

operamini java browser download
மொபைல்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் பிரவுசர் ஒபேராமினி.மற்ற பிரவுசர்களை விட மினி வேகமானது.

blot browser download இந்த உலவியில் உள்ள ஒரு சிறப்பு கணினியில் எவ்வாறு பக்கங்களை பார்க்க முடியுமோ அப்படியே blot browser மூலம் மொபைலிலும் பார்க்கலாம்.ஆனால் இதில் வேகம் சிறிது குறைவாகவே இருக்கும்.

ebuddy download மொபைலில் பேஸ்புக் சாட் செய்ய வேகமான உலவி இது.


operamini android download ஒபேரா மினி பிரவுசர் ஆன்ராய்டு மொபைல்களுக்கானது.


uc 8 android browser downloading இது ஆன்ராய்டு மொபைல்களுக்கான uc browser.


செய்தித்தாள்news hunt application download

பல முன்னணி செய்தி நிறுவனங்களுடன் இணைந்து நியூஸ்கன்ட் செய்திகளை வழங்கிவருகிறது.இதில் தமிழ் பத்திரிகைகள் தினமலரும்,தினகரனும் வாசிக்க கிடைக்கும்.இதன் சிறப்பு தமிழ் எழுத்துகள் இல்லாத மொபைல்களிலும் newshunt ஐ நிறுவ முடியும்.

January 17, 2012

இயற்கையின் மாறுபட்ட சில பிரம்மாண்டங்கள்.

இயற்கை தன்னகத்தே பல வியத்தகு பிரம்மாண்டங்களை உள்ளடக்கி வைத்திருக்கிறது.அதில் சில இயற்கையின் மாறுபாட்ட கோணங்களையும் பிரமிக்கத்தக்க அழகையும் நம் முன்னே காட்சிப்படுத்துகிறது.அப்படிப்பட்ட சில மாறுபட்ட இயற்கையின் பகுதிகள் இங்கே.சாக்லேட் ஹில்ஸ், பிலிப்பைன்ஸ்


சாக்கலட் நிறத்தில் கூம்பு வடிவ குட்டி குட்டி மலைகள் பிலிப்பைன்ஸ் மத்திய Visayas பகுதியில், காணலாம்.அசாதாரண புவியியல் உருவாக்கம் தசாப்தங்களாக புவியியலாளர்கள் குழப்பி வருகிறது.கூம்பு மலைகள் உருவாக்கப்பட்டது எவ்வாறு என்று வெவ்வேறு கோட்பாடுகள் அங்கு நிலவுகின்றன.50 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள, வியக்கத்தக்க மலைகள் நூறுதீவுகள் தேசிய பூங்கா மற்றும் தால் எரிமலை, உலகின் மிகச்சிறிய செயலில் எரிமலை சேர்ந்து பிலிப்பைன்ஸின் தேசிய புவியியல் நினைவுச்சின்னங்களாக உள்ளன.


நரகத்தின் வாயில்கள், (gates of hell)துர்க்மெனிஸ்தான்

இங்குதான் இயற்கை எரிவாயு உலகின் ஐந்தாவது மிக பெரிய அளவில் உள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.சுமார் 1500 சதுர மைல் பரப்பளவில்.துரதிஸ்டவசமாக இந்த இயற்கை எரிவாயு யாருக்கும் பயனில்லாமல் இன்றும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.மே2011 ல், இந்த துர்க்மெனிஸ்தான் கண்டுபிடிக்கப்பட்டது .புவியியலாளர்கள் இங்கு ஆராய்ச்சி செய்ய தோண்டிய போது விஷ வாயு நிரப்பப்பட்ட ஒரு பெரிய பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டது.சொகொத்ரா தீவு Socotra, ஏமன்


இந்திய பெருங்கடலில் உள்ள நான்கு சிறிய தீவுகளை கொண்ட தொகுப்பு ஆகும்.
இங்கு பல அரிய வகையான உயினங்களும்,தாவர வகைகளும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.இது ஒரு முக்கிய சுற்றுலாத்தலமும் கூட.இங்குள்ள இரட்டைப் பாறை அமைப்பு வித்தியாசமானது.
ஜொர்மி Goreme தேசிய பூங்கா, துருக்கி,


இது இயற்கை செதுக்கிய ஓவியம் என கருதப்படுகிறது.காற்று,நீர்,ஏரிமலை போன்ற இயற்கை கூறுகளால் இந்த பள்ளதாக்கு வடிவமைக்கபட்டிருக்கிறது.இது கண்ணை கவரும் பேரழகு என பார்த்தவர்கள் வருணிக்கிறார்கள்.


பினாக்லஸ் (Pinnacles) பாலைவனம், ஆஸ்திரேலியா


இது ஆஸ்திரேலியாவின் நாம்பங் தேசிய பூங்காவில் அமைந்துள்ளது.ஆயிரக்கணக்கான சுண்ணாம்பு தூண்கள் பாலைவன மணலில் இருந்து உருவாகியிருப்பது ஓர் அபூர்வமாகும்.இந்த சுண்ணாம்பு தூண்களின் உயரம் நான்கு மீட்டர் வரை இருக்கலாம்.மேலும் உலகில் மிகப்பெரிய சிற்பம் இங்குதான் உள்ளது அதாவது ஒரே பாறையில் செதுக்கப்பட்ட சிற்பம்.

January 12, 2012

இயற்கையின் அழகான பத்து புகைப்படங்கள்.

இயற்கையின் அற்புதமான சில காட்சிகள் புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு.

1

2

3

4

5

6

7

8
9


10நன்றி அனைத்து புகைப்பட கலைஞர்களுக்கும்.

January 11, 2012

தமிழ் சினிமாவின் வசூலில் சாதனை படைத்த திரைப்படங்கள்.2011 வரை.

தமிழ் சினிமாவின் முதல் பேசும் படம் 1931 ஆம் ஆண்டு
வெளிவந்தது.அன்றிலிருந்து இன்று வரை 5150 (தோராயமாக)திரைப்படங்கள்
வெளிவந்திருக்கிறது.இதில் எத்தனையோ திரைப்படங்கள் வசூலை அள்ளிக்
குவித்திருக்கின்றன.பல திரைப்படங்கள் வந்த வேகத்தில் பெட்டிக்குள்
முடங்கியும் போயிருக்கின்றன.80 வருட பேசும் பட சினிமா வரலாற்றில் சில
திரைப்படங்கள் வசூலில் பிரம்மாண்ட சாதனை படைத்திருக்கிறது.அதில் முதல்
பத்து திரைப்படங்கள்.

எந்திரன்.
2010


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து ஷங்கர் இயக்கிய எந்திரன் திரைப்படம்தான் தமிழ் சினிமாவின் அதிகபட்ச வசூல் சாதனையில் முன்னணியில் இருக்கிறது.ஒட்டு மொத்த இந்திய சினிமாவை எடுத்துக்கொண்டாலும் எந்திரனுக்கே முதலிடம்.எந்திரனுக்கு அடுத்தப்படியாக 3 இடியட்ஸ் (வசூல்.335 கோடி)பாலிவுட் திரைப்படம் இருக்கிறது.

நடிகர்கள்,
ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய்,
சுமன்,
சந்தானம்,
இசை: ஏ ஏ. ஆர். ரகுமான்,
இயக்கம்.சங்கர்,
தயாரிப்பு.சன் பிக்சர்ஸ்,
செலவு. 160 கோடி ரூபாய்,

வசூல் .375 கோடி ரூபாய்.சிவாஜி
2007சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இயக்குனர் சங்கரும் இணைந்த முதல் திரைப்படம்.சூப்பர் ஸ்டாரின் முந்தய திரைப்படமான சந்திரமுகியின் வசூல் சாதனையை சிவாஜி முறியடித்தது.

இயக்கம்.சங்கர்,
நடிகர்கள்,
ரஜினிகாந்த், ஸ்ரேயா, விவேக்,
இசை: ஏ. ஏ. ஆர். ரகுமான்,
தயாரிப்பு:ஏ.வி. எம்,
செலவு. 60 கோடி,
வசூல் .128 கோடி ரூபாய் .தசாவதாரம்,
2008.


விருது நாயகன் கமலஹாசனும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் இணைந்து உருவாக்கிய ஐந்து திரைப்படங்களில் தசாவதாரம் நான்காவதாக 2008 ல் வெளிவந்த திரைப்படம் ஆகும்.இதில் கூடுதல் சிறப்பாக கமலஹாசன் 10 மாறுபட்ட வேடங்களில் நடித்திருந்தார்.

நடிகர்கள். கமலஹாசன்,
அசின்,
நாகேஷ்,
இசை: ஹிமேஷ் ரேஷ்மையா,
தயாரிப்பு.ஆஸ்கார் பிலிம்ஸ்,
இயக்கம்:கே.எஸ். ரவிக்குமார்.

செலவு-60 கோடி,
வசூல்.94 கோடி.
ஏழாம் அறிவு,
2011

கஜினியின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யா முருகதாஸ் இணைந்த இரண்டாவது திரைப்படம்.
2011 ஆம் ஆண்டில் மிக மிக ஆவலாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட படம்.(எதிர்பார்ப்பை உண்டாக்கினார்களோ)ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிதமாக பொய்த்துப் போனது.

நடிகர்கள்,
சூர்யா,
ஸ்ருதி,
ஜானி,
இசை:ஹாரிஷ் ஜெயராஜ்,
தயாரிப்பு.ரெட் ஜெயன்ட், இயக்கம்:ஏ.ஆர். முருகதாஸ்,
செலவு.80 கோடி
வசூல் 90 கோடி ரூபாய்.
மங்காத்தா,2011


அஜித் குமாருக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த பெரிய வெற்றி.
இயக்கம்.வெங்கட்பிரபு,
நடிகர்கள்,
அஜித்குமார்,
அர்ஜூன்,
,த்ரிஷா,
லட்சுமி ராய்,
அஞ்சலி,
இசை:யுவன் சங்கர் ராஜா,
தயாரிப்பு.கிளவுட் நைன்,

செலவு-30 கோடி,
வசூல்.68 கோடி.
சிங்கம்,2010,

இயக்குநர் ஹரியும் சூர்யாவும் இணைந்த மூன்றாவது திரைப்படம் அவர்கள் எதிர் பார்த்த வெற்றிக்கு மேல் அவர்களுக்கு கிடைத்தது.

இயக்கம்.ஹரி,
நடிகர்கள்,
சூர்யா,
அனுஷ்கா,
,பிரகாஷ் ராஜ்,
விவேக்,
இசை:தேவி ஸ்ரீ பிரசாத்,
தயாரிப்பு.ஸ்டுடியோ கிரீன்.
செலவு.15 கோடி,
வசூல்.65 கோடி.

சந்திரமுகி,2005,


யாருமே எதிர்பாராமல் வெளிவந்து எதிர்பாராத வெற்றியை குவித்த திரைப்படம்.தமிழ் சினிமாவின் அதிகபட்ச நாட்கள் ஓடிய திரைப்படங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.(835 நாட்கள்)

இயக்கம் .பி.வாசு,

நடிகர்கள், ரஜினிகாந்த்,ஜோதிகா,
நயன்தாரா,
பிரபு,
வடிவேல்,
நாசர்,
விஜயகுமார்,
மாளவிகா,
வினீத்,
தயாரிப்பு.சிவாஜி புரொடக்ஷன்,
செலவு.25 கோடி
வசூல்.65 கோடி.
அயன்,
2009

கே.வி.ஆனந்தும் துப்பறியும் நாவல் எழுத்தாளர்கள் சுபாவும் இணைந்த இரண்டாவது திரைப்படமாகும்.


இயக்கம் .கே.வி ஆனந்த்,
நடிகர்கள்: சூர்யா,
தமன்னா,
பிரபு,
கருணாஸ், இசை.ஹாரிஷ் ஜெயராஜ்,
தயாரிப்பு.ஏ.வி. எம்.
செலவு.15 கோடி,
வசூல் 60 கோடி.
வேலாயுதம்,2011


2011 ஆம் ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைபடங்களில் வேலாயுதமும் ஒன்று.விஜய் ரசிகர்களுக்கு திருப்தியை தந்த திரைப்படம்.

இயக்கம்.எம.ராஜா,

நடிகர்கள், விஜய்,
ஜெனலியா,
ஹன்சிகா,
சரண்யா மோகன்,
இசை.விஜய் ஆண்டனி,
தயாரிப்பு.ஆஸ்கார் பிலிம்ஸ்.
செலவு.45 கோடி
வசூல் 60 கோடி.
அந்நியன்,2005,


தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஆந்திரா,கேரளம் போன்ற வெளி மாநிலங்களிலும் வசூலை அள்ளிய திரைப்படமாகும்.

இயக்கம்.சங்கர்,
நடிகர்கள்.
விக்ரம்,
சதா,
பிரகாஷ் ராஜ்,
விவேக்,
இசை.ஹாரிஷ் ஜெயராஜ்,
தயாரிப்பு.ஆஸ்கார் பிலிம்ஸ்.
செலவு.38 கோடி
வசூல் 56 கோடி.

January 9, 2012

234 சட்டமன்ற உறுப்பினர்களின் மின்னஞ்சல் முகவரிகள்.

234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தமிழக அரசின் சார்பில் தனி தனித் மின்னஞ்சல் முகவரி கொடுக்கப்பட்டிருக்கிறது.இது ஒரு நல்ல திட்டம்தான்.ஏனென்றால் குறைகளையோ நிறகளையே ,திட்டியோ,பாராட்டியோ எதை வேண்டுமானாலும் உடனே ஒரு மின்னஞ்சல் மூலம் சம்பந்தபட்டவரிடம் தெரிவித்து விடலாம்.அதை நிச்சயமாக படிப்பார் என்ற எந்த உறுதியும் இல்லை இருந்தாலும் நம் மனதில் பட்டதை தெரிய படுத்தியிருக்கிறோம் என்ற திருப்தி நமக்கு கிடைக்கும்.


சில பல எம் .எல் .ஏக்களுக்கு முன்னரே மின்னஞ்சல் முகவரி இருந்தாலும் அது அவர்களுக்கு உரிமையானது.ஆனால் இப்போது அரசின் சார்பில் கொடுக்கப்ட்டிருக்கும் முகவரி இனி வரும் தேர்தலில் வெற்றி பெறும் எம்.எல்.ஏவுக்கும் இதுதான் முகவரி.தமிழக அரசு 234 சட்டமன்றங்களின் பெயர்களிலேயே முகவரி வழங்கியிருக்கிறது.உதராணமாக ஒசூர் எம்.எல்.ஏவுக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டுமென்றால் mlahosur@tn.gov.in என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.அந்தந்த சட்டமன்ற தொகுதியின் பெயருக்கு முன்னால் mla என்று சேர்த்தால் போதுமானது.
மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்.234 எம்.எல்.ஏ தொகுதிகளின் மின்னஞ்சல் முகவரி.

January 8, 2012

நக்கீரன் பத்திரிகை மீது தாக்குதல்.சரியா தவறா?

தமிழ்நாட்டின் நேற்றைய சூடான விவாதம் நக்கீரன் பத்திரிகை அலுவலகம் தாக்கப் பட்டது சரியா தவறா என்றுதான்.இணைய பக்கங்களிலும் செய்தித்தாளின் பக்கங்களிலும் இது குறித்து கண்டனமும் கருத்தும் நிரம்பிவழிகிறது..பலர் கேட்கிறார்கள் மாட்டுகறி உண்பது என்பது அவ்வளவு பெரிய தவறா என்று.பிராமணர்கள் புலால் உண்ணமாட்டார்கள் அது வேறு விசயம்.ஆனால் நக்கீன் கட்டுரையில் மாட்டுக்கறியை ஜெயலலிதா சமைத்து எம்.ஜி.ஆருக்கும் கொடுத்து தானும் உண்டதாக எம்.ஜி.ஆர் கூறியது போல் கட்டுரையில் பதிவாகியிருந்தது.இந்த செய்தியை படிக்கும் பொதுமக்களாகிய நமக்கு பல வித எண்ணம் தோன்றும் விதமாக அந்த எழுத்தின் சாரம் இருக்கிறது.அதாவது இரட்டை அர்த்தம் தொனிக்கிறது.இப்படி ஒரு கட்டுரை வெளியிட நிரம்ப தைரியம் வேண்டும். ஒரு மாநிலத்தின் முதல்வர்,லட்சக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட கட்சியின் தலைவர் இப்படி பெரும்பதவி வகிக்கும் ஒருவரைப் பற்றி இது போல் செய்தி வெளியிட்டால் கட்சி தொண்டனல்லாத பொதுமக்களுக்கே கோபம் வரும்.அம்மாவென்றும்,இதய தெய்வம் என்றும் கதறும் தொண்டனுக்கு கோபம் வந்ததில் ஆச்சர்யபடுவதற்கு ஒன்றுமில்லை.சிலர் ஜெயலலிதாவின் தூண்டதலின் பெயரால்தான் இந்த தாக்குதல் நிகழ்ந்திருக்க கூடும் என்கிறார்கள்.இது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை ஏனென்றால் தூண்டிவிட்டோ அல்லது திட்டமிட்டோ இந்த சம்பவம் நடந்திருந்தால் இன்னும் விபரீதமான அசம்பாவிதங்கள் நடந்திருக்கும்.அலுவலகத்தின் கண்ணாடிகளும் அங்கிருந்த வாகனங்களின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டதாகவே செய்திகள் வலம் வருகின்றன.தாக்கப்பட்டது தவறு என்பவர்கள் சொல்லும் காரணம் சட்டம் என்று ஒன்று எதற்கு இருக்கிறது அதன் மூலமாக உங்கள் எதிர்ப்பை தெரிவித்திருக்கலாமே என்று.உணர்ச்சியை தூண்டும் விதமாக செய்தியை வெளியிட்டால் முதலில் உணர்ச்சிதான் கிளர்ந்தெழும் பிறகுதான் மூளை வேலை செய்யும் என்று எதிர் தரப்பினர் கருத்து தெரிவிக்கிறார்கள்.நக்கீரன் பத்திரிகையை பொறுத்த வரையில் ஆரம்பம் முதலே அ.தி.மு.க எதிர்ப்பு பத்திரிகையாகவே செயல்பட்டு வந்திருக்கிறது.எப்போதும் ஜெயலலிதாவின் குறைகளை சுட்டிக்காட்டும் நக்கீரன். நிறைகளை கண்டுகொண்டதில்லை.கடந்த சட்டமன்ற தேர்தலிலும் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் நகைச்சுவை நாடகம் ஒன்றை அரங்கேற்றியிருந்தது.அதாவது தி.மு.க 160 இடங்களையும் அ.தி.மு.க 40 இடங்களையும் பிடிக்கும் என்று கருத்து கணிப்பு வெளியிட்டது.இப்படி நாட்டு நடப்பு தெரியாமல் இருக்கும் ஒரு பத்திரிகைதான் நக்கீரன். அதுமட்டுமல்லாமல் தங்கள் பத்திரிகையின் விற்பனையை அதிகரிக்க எந்த அளவிற்கும் தரமிளப்பார்கள் என்பது நித்தியானந்தாவைப் பற்றி செய்தி வெளியிட்டதிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.கோபாலின் யுத்தம் என்றொரு புத்தகம் படிக்க நேர்ந்தது அதை படித்த போது ஒருவன் இப்படி எல்லாம் தன்னைப் பற்றி விளம்பரப் படுத்திக் கொள்ள முடியுமா என்று யோசித்தேன் .அந்த அளவிற்கு சுய புராணங்களும்,வெட்டி வியாக்யானங்களுமே நிரம்பியிருந்தது அந்த புத்தகத்தில்.இதில் அந்த புத்தகத்திற்கு இரண்டு மூன்று பாகங்கள் வேறு.பத்திரிகை சுதந்திரம் என்கிற பெயரில் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.நக்கீரன் மட்டுமல்ல அனைத்து பத்திரிகைகளும் முதலில் தங்களின் லாபத்தை முன்நிறுத்திய பின்னே சேவை என்னும் பாடவதியை வைத்து பாட வைக்கிறார்கள்.பத்திரிகைச் சேவை என்பது மாறிப் போய் பத்திரிகைத் தொழில் என்றாகிய பிற்பாடு இதல்லாம் சகஜம்தானே.

January 6, 2012

டைட்டானிக் கப்பல் ஒரு பார்வை.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள் அதுபோல் நூறு ஆண்டுகளுக்கு முன் தாயாரிக்கப்பட்ட பிரம்மாண்டமான கப்பலான டைட்டானிக்கை குறிப்பிடலாம்.கப்பல் அட்லாண்டிக்கடலில் பயணம் செய்த போது எதிர்பாராத விதமாக பெரிய பனிப்பாறையின் மீது மோதியதால் விபத்துக்குள்ளானது.அந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்த ஹாலிவுட் திரைப்படமான டைட்டானிக் உலகெங்கும் பெரும் வரவேற்பை பெற்றது அது மட்டுமல்லாமல் வசூலிலும் சாதனை புரிந்தது.இப்போது அட்லாண்டிக் கடலில் 100 ஆண்டுக்கு முன் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் கிடைத்த 5,000 அரிய பொருட்கள் அந்த கப்பலின் 100 வது ஆண்டு நினைவை முன்னிட்டு ஏப்ரலில் ஏலம் விடப்படுகின்றன. கப்பலில் பொருத்தி இருந்த கலை நயமிக்க பாகங்கள், பயணிகளின் பர்ஸ், கூலிங் கிளாஸ்கள், உடைகள், காலணிகள், கைக்கடிகாரங்கள் உள்பட பலபொருட்கள் ஏலத்துக்கு தயாராக உள்ளன.இவை 2007 ஆம் ஆண்டு ரூபாய் 1000 கோடிக்கு மதிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் டைட்டானிக் கப்பல் பற்றிய சில தகவல்கள்.
டைட்டானிக் உலகின் மிகப்பெரிய முதல் பயணிகள் சொகுசு கப்பலாகும்.

டைட்டானிக்கின் முழுப்பெயர்.ஆர்.எம்.எஸ். டைட்டானிக்,

உரிமையாளர்: வைட் ஸ்டார் லைன்,

கட்டப்பட்ட துறைமுகம்: பெல்பாஸ்ட் அயர்லாந்து.
கட்டியோர்: ஹார்லண்ட்மற்றும் வூல்ஃப்,


டைட்டானிக்கின் கட்டுமானப் பணி மார்ச் 31 , 1909 ஆம் ஆண்டில் துவங்கி மே 31 , 1911 ஆம் முடிவடைந்தது.
ஏப்ரல் 10 , 1912 ஆம் ஆண்டு தன் முதல் பயணத்தை துவங்கிய டைட்டானிக் பயணம் துவங்கிய ஐந்தே நாட்களில் விபத்துக்குள்ளானது.
(ஏப்ரல் 15 , 1912)

கப்பலின் மொத்த எடை: 52,310 டன்(5,23,10,000 கிலோ)
நீளம்: 882 அடி
அகலம்: 92 அடி,ஆகும். விபத்து நேர்ந்த போது கப்பலில் பணிபுரிந்த பணியாளர்கள் உட்பட மொத்தம் 2,223 பேர் இருந்தனர் இதில் 706 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர் .ஏனய 1517 நபர்கள் இறந்து விட்டனர்.ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக் கப்பலை மையமாக வைத்து டைட்டானிக் திரைப்டடத்தை உருவாக்கி 1997 நவம்பர் 1 ல் வெளியிட்டார்.அந்த காலக்கட்டத்தில் அதிக பணச்செலவில் உருவாக்கப்பட்ட முதல் திரைப்படம் இதுதான்.ஏறக்குறைய 200 மில்லியன் டாலர்.தகவல்கள்.விக்கிப்பீடியா

January 4, 2012

சென்னைக்கு வருகிறது பிளாஸ்டிக் சாலைகள்.

சென்னையில் 1498 உட்புற சாலைகள், பேருந்துகள் செல்லும் சாலைகள் 118 என 1616 சாலைகள் 370 கி.மீ. தூரத்திற்கு பிளாஸ்டிக் சாலைகளாக ஆக்கப்படவுள்ளது. இதற்கான மொத்த செலவு ரூ.109.72 கோடி.குப்பைகளிலிருந்து பிரித்து எடுக்கப்படும் கேரி பேக், டீ கப், தெர்மாகோல், ஆவின் கவர், சோப்பு தூள் அடைக்கப்பட்டபிளாஸ்டிக் கவர்கள் ஆகிய பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படும். இவை அனைத்தும் இயந்திரத்தின் மூலம் 2 முதல் 3 மி.மீ. அளவிற்கு துகள்களாக மாற்றப்படும். இந்த துகள்கள் மிக்சின் மிஷினில் போட்டு கருங்கல் ஜல்லியுடன் கலக்கி சூடாக்கப்படும்.
இத்துடன் தார் கலவை கலந்து சாலை அமைக்கப்படும். இப்படி அமைக்கப்படும் சாலை தரமானதாகவும், பராமரிப்புசெலவு குறைவானதாகவும், நீண்ட காலம் நீடித்தும் இருக்கும். குப்பைகளில் இருந்து பிரித்து எடுக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு சாலை அமைப்பதற்கானசெயல் விளக்க கருத்தரங்கமும், பிளாஸ்டிக் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியும் தி.நகரிலுள்ள சர்.பிட்டி தியாகராயர் கலையரங்கில் நேற்று நடந்தது.தி.நகர் லட்சுமணன் சாலையில் பிளாஸ்டிக் சாலை அமைக்கும் பணியை மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
குப்பைகளை அகற்றுவது, சாலைகள் சீரமைப்பதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு துறை வாரியாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் சாலை அமைத்தால் தரமாக இருக்கும். பொருளாதார ரீதியாக செலவும் மிச்சமாகும். குப்பைகள் இனி கண்ணுக்கே தெரியாத அளவிற்கும், தரமான சாலைகள் அமைக்கவும் மாநகராட்சி முன்னோடியான திட்டங்களை செயல்படுத்த உள்ளது. மிகவிரைவில் குப்பையில்லாத, மழைநீர் தேங்காத சென்னையாக உருவாக்கப்படும். இவ்வாறுமேயர் பேசினார்.

செய்திகள்.www.dinakaran.com


இது நிச்சயமாக சென்னைவாசிகளுக்கு நல்ல செய்திதான் குப்பைகளால் மூழ்கி கிடக்கும் சென்னை இனிமேலாவது குப்பையிலிருந்து வெளிவருகிறதா என்று பார்க்கலாம்.மேலும் ஒரு சிறு தகவல் சென்னை புறநகரில் ஒரு தனியார் தொழிர்சாலையில் பிளாஸ்டிக் பைகளை மறு சுழர்ச்சி செய்து குரூட் ஆயில்(கச்சா எண்ணெய்)தாயாரிக்கிறார்கள்.அதில் இருந்து மண்ணெண்ணெய் ,பெட்ரோல் ,டீசல் போன்ற எரிபொருட்களை தனி தனியே பிரித்தெடுக்கிறார்கள்.இதன் நேரடி நிகள்ச்சி சுமார் ஒரு மாதங்களுக்கு முன்பு பொதிகை தொலைக்காட்சியில் ஒளி பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

January 3, 2012

முல்லைப் பெரியாறு அணையின் கதை.

முல்லை பெரியாறு அணை குறித்து பொது மக்களிடையே விளிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு மூத்த பொறியாளர் சங்கம் சார்பில் ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்துள்ளனர்.முல்லைப் பெரியாறு அணை எதற்காக,எப்போது,எந்த சூழ்நிலையில்,யாரால் கட்டப்பட்டது போன்ற விளக்கங்களும்,எண்பதுகளில் அணை எப்படி நவீனமுறைகளில் பலப்படுத்தப்பட்டது என்ற ஆதாரங்களும் இந்த ஆவணப்படத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.இந்த ஒலி ஒளிக் காட்சிகளைப் பார்ப்பது மூலம் முல்லைப் பெரியாறு அணையின் வரலாறையும்,பிரச்சனைகளயும் அறிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன்.
பகுதி.1பகுதி.2
பகுதி.3பகுதி.4


2011 ல் வெளியான தமிழ் திரைப்படங்களின் பட்டியல்.

2011 ஆம் ஆண்டு மொத்தம் 190 திரைப்படங்கள் தமிழில் வெளிவந்துள்ளன.இதல் 128 திரைப்படங்கள் நேரடி தமிழ்ப் படங்களாகவும் மற்றவை மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்ட திரைப்படங்களாகவும் வெளி வந்தன.தமிழில் வெளியான 128 திரைப்படங்களில் கிட்டத்தட்ட 50 திரைப்படங்களின் பெயர்களை படிக்கும் போது இந்த பெயர்களில் ஒரு படம் திரைக்கு வந்ததா என ஆச்சர்யப்பட்டுத்தான் போனேன்.இப்போது நல்ல படம் எது நொள்ளப் படம் எது என்று கருத்து கூற வரவில்லை.போன வருடம் தமிழில் வெளியனான திரைப்படங்களின் பெயர்களை ஞாபகப்படுத்திப் பார்க்கலாம் என்றுதான்.


1)தமிழ் தேசம்,
2)சிறுத்தை,
3)ஆடுகளம்,
4)சொல்லித்தரவா,
5)இளைஞன்,
6) காவலன்,
7)பதினாறு,
8)பழகியதே பிரிவதற்கா,
9)வாடா போடா நண்பர்கள்,
10)யுத்தம் செய்,
11)தூங்கா நகரம்,
12)கருவறைப் பூக்கள்,
13)வர்மம்,
14)பயணம்,
15)இது காதல் உதிரும் பருவம்,
16)நந்தி,
17)தம்பிக்கோட்டை,
18)காதலர் குடியிருப்பு,
19)ஆடுபுலி,
20)மார்கழி 16,
21)தப்பு,
22)சீடன்,
23)ஆரானின் காவல்,
24)சிங்கம் புலி,
25)பவானி,
26)அய்யன்,
27)ஐவர்,
28)அவர்களும் இவர்களும்,
29)மின்சாரம்,
30)முத்துக்கு முத்தாக,
31)லத்திகா,
32)குமரா,
33)சட்டப்படி குற்றம்,
34)குள்ளநரி கூட்டம்,
35)சிங்கையில் குருஷேத்திரம்,
36)படைசூழ,
37)அப்பாவி,
38)இதயத்தில் ஒருவன்,
39)தென்காசி பக்கத்துல,
40)நஞ்சுபுரம்,
41)பொன்னர் சங்கர்,
42)தேவதாசியின் கதை,
43)விகடகவி,
44)கோ,
45)காதல் மெய்ப்பட,
46)வானம்,
47)பூவா தலையா,
48)பாசக்கார நண்பர்கள்,
49)எங்கேயும் காதல்,
50)நர்த்தகி,
51)சங்கரன் கோவில்,
52)அழகர்சாமியின் குதிரை,
53)கண்டேன்,
54)மைதானம்,
55)சுட்டும் விழி சுடரே,
56)சபாஷ் சரியான போட்டி,
57)எத்தன்,
58)ஒரு சந்திப்பில்,
59)ஆண்மை தவறேல்,
60)சாந்தி அப்புறம் நித்யா,


61)ஒத்தையடி வீரன்,
62)ஆரண்ய காண்டம்,
63)அவன் இவன்,
64)பிள்ளையார் தெரு கடைசி வீடு,
65)இருளில் நான்,
66)நூற்றெண்பது,
67)அநாகரீகம்,
68)உதயன்,
69)திருட்டு புருஷன்,
70)சின்னஞ்சிறுசுகள்,
71)தேநீர் விடுதி
72)வேங்கை,
73)தெய்வத்திருமகள்,
74)காஞ்சனா,
75)மார்கண்டேயன்,
76)வெப்பம்,
77)கருங்காலி,
78)போடிநாயக்கனூர்கணேசன்,
79)போட்டா போட்டி,
80)ராமநாதபுரம்,
81)டூ,
82)சுசி அப்படித்தான்,
83)ரௌத்திரம்,
84)உயர் திரு 420,
85)சகாக்கள்,
86)கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை,
87)வெங்காயம்,
88)முதல் இடம்,
89)மிட்டாய்,
90)உன்னை கண் தேடுதே,
91)புலிவேஷம்,
92)யுவன் யுவதி,
93)காசேதான் கடவுளடா,
94)மதிகெட்டான் சாலை,
95)எங்கேயும் எப்போதும்,
96)வந்தான் வென்றான்,
97)ஆயிரம் விளக்கு,
98)வாகை சூட வா,
99)வேலூர் மாவட்டம்,
100)வர்ணம்,
101)ரா ரா,
102)சதுரங்கம்,
103)முரண்,
104)காதல் அல்ல அதையும் தாண்டி,
105)உயிரின் எடை 21 அயிரி,
106)கீழத்தெரு கிச்சா,
107)7ஆம் அறிவு,
108)வேலாயுதம்,
109)காதல் கொண்ட மனசு,
110)ஆயுதப் போராட்டம்,
111)திகட்டாத காதல்,
112)தம்பி வெட்டோத்தி சுந்தரம்,
113)நான் சிவனாகிறேன்,
114)கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்,
115)வித்தகன்,
116)மருதவேலு,
117)மயக்கம் என்ன,
118)பாலை,
119)ஒத்திகை,
120)போராளி,
121)குருசாமி,
122)வெண்மணி,
123)ஒஸ்தி,
124)மம்பட்டியான்,
125)உச்சிதனை முகர்ந்தால்,
126)மௌனகுரு,
127)ராஜபாட்டை,
128)மங்காத்தா

இவை கடந்த வருடம் வெளியான தமிழ் திரைப்படங்களின் பட்டியல் ஆகும்.தகவல்.www.dinakaran.com