January 6, 2012

டைட்டானிக் கப்பல் ஒரு பார்வை.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள் அதுபோல் நூறு ஆண்டுகளுக்கு முன் தாயாரிக்கப்பட்ட பிரம்மாண்டமான கப்பலான டைட்டானிக்கை குறிப்பிடலாம்.கப்பல் அட்லாண்டிக்கடலில் பயணம் செய்த போது எதிர்பாராத விதமாக பெரிய பனிப்பாறையின் மீது மோதியதால் விபத்துக்குள்ளானது.அந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்த ஹாலிவுட் திரைப்படமான டைட்டானிக் உலகெங்கும் பெரும் வரவேற்பை பெற்றது அது மட்டுமல்லாமல் வசூலிலும் சாதனை புரிந்தது.இப்போது அட்லாண்டிக் கடலில் 100 ஆண்டுக்கு முன் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் கிடைத்த 5,000 அரிய பொருட்கள் அந்த கப்பலின் 100 வது ஆண்டு நினைவை முன்னிட்டு ஏப்ரலில் ஏலம் விடப்படுகின்றன. கப்பலில் பொருத்தி இருந்த கலை நயமிக்க பாகங்கள், பயணிகளின் பர்ஸ், கூலிங் கிளாஸ்கள், உடைகள், காலணிகள், கைக்கடிகாரங்கள் உள்பட பலபொருட்கள் ஏலத்துக்கு தயாராக உள்ளன.இவை 2007 ஆம் ஆண்டு ரூபாய் 1000 கோடிக்கு மதிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் டைட்டானிக் கப்பல் பற்றிய சில தகவல்கள்.




டைட்டானிக் உலகின் மிகப்பெரிய முதல் பயணிகள் சொகுசு கப்பலாகும்.

டைட்டானிக்கின் முழுப்பெயர்.ஆர்.எம்.எஸ். டைட்டானிக்,

உரிமையாளர்: வைட் ஸ்டார் லைன்,

கட்டப்பட்ட துறைமுகம்: பெல்பாஸ்ட் அயர்லாந்து.
கட்டியோர்: ஹார்லண்ட்மற்றும் வூல்ஃப்,


டைட்டானிக்கின் கட்டுமானப் பணி மார்ச் 31 , 1909 ஆம் ஆண்டில் துவங்கி மே 31 , 1911 ஆம் முடிவடைந்தது.
ஏப்ரல் 10 , 1912 ஆம் ஆண்டு தன் முதல் பயணத்தை துவங்கிய டைட்டானிக் பயணம் துவங்கிய ஐந்தே நாட்களில் விபத்துக்குள்ளானது.
(ஏப்ரல் 15 , 1912)





கப்பலின் மொத்த எடை: 52,310 டன்(5,23,10,000 கிலோ)
நீளம்: 882 அடி
அகலம்: 92 அடி,ஆகும். விபத்து நேர்ந்த போது கப்பலில் பணிபுரிந்த பணியாளர்கள் உட்பட மொத்தம் 2,223 பேர் இருந்தனர் இதில் 706 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர் .ஏனய 1517 நபர்கள் இறந்து விட்டனர்.



ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக் கப்பலை மையமாக வைத்து டைட்டானிக் திரைப்டடத்தை உருவாக்கி 1997 நவம்பர் 1 ல் வெளியிட்டார்.அந்த காலக்கட்டத்தில் அதிக பணச்செலவில் உருவாக்கப்பட்ட முதல் திரைப்படம் இதுதான்.ஏறக்குறைய 200 மில்லியன் டாலர்.



தகவல்கள்.விக்கிப்பீடியா