January 4, 2012

சென்னைக்கு வருகிறது பிளாஸ்டிக் சாலைகள்.

சென்னையில் 1498 உட்புற சாலைகள், பேருந்துகள் செல்லும் சாலைகள் 118 என 1616 சாலைகள் 370 கி.மீ. தூரத்திற்கு பிளாஸ்டிக் சாலைகளாக ஆக்கப்படவுள்ளது. இதற்கான மொத்த செலவு ரூ.109.72 கோடி.



குப்பைகளிலிருந்து பிரித்து எடுக்கப்படும் கேரி பேக், டீ கப், தெர்மாகோல், ஆவின் கவர், சோப்பு தூள் அடைக்கப்பட்டபிளாஸ்டிக் கவர்கள் ஆகிய பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படும். இவை அனைத்தும் இயந்திரத்தின் மூலம் 2 முதல் 3 மி.மீ. அளவிற்கு துகள்களாக மாற்றப்படும். இந்த துகள்கள் மிக்சின் மிஷினில் போட்டு கருங்கல் ஜல்லியுடன் கலக்கி சூடாக்கப்படும்.
இத்துடன் தார் கலவை கலந்து சாலை அமைக்கப்படும். இப்படி அமைக்கப்படும் சாலை தரமானதாகவும், பராமரிப்புசெலவு குறைவானதாகவும், நீண்ட காலம் நீடித்தும் இருக்கும். குப்பைகளில் இருந்து பிரித்து எடுக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு சாலை அமைப்பதற்கானசெயல் விளக்க கருத்தரங்கமும், பிளாஸ்டிக் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியும் தி.நகரிலுள்ள சர்.பிட்டி தியாகராயர் கலையரங்கில் நேற்று நடந்தது.



தி.நகர் லட்சுமணன் சாலையில் பிளாஸ்டிக் சாலை அமைக்கும் பணியை மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
குப்பைகளை அகற்றுவது, சாலைகள் சீரமைப்பதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு துறை வாரியாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் சாலை அமைத்தால் தரமாக இருக்கும். பொருளாதார ரீதியாக செலவும் மிச்சமாகும். குப்பைகள் இனி கண்ணுக்கே தெரியாத அளவிற்கும், தரமான சாலைகள் அமைக்கவும் மாநகராட்சி முன்னோடியான திட்டங்களை செயல்படுத்த உள்ளது. மிகவிரைவில் குப்பையில்லாத, மழைநீர் தேங்காத சென்னையாக உருவாக்கப்படும். இவ்வாறுமேயர் பேசினார்.

செய்திகள்.www.dinakaran.com


இது நிச்சயமாக சென்னைவாசிகளுக்கு நல்ல செய்திதான் குப்பைகளால் மூழ்கி கிடக்கும் சென்னை இனிமேலாவது குப்பையிலிருந்து வெளிவருகிறதா என்று பார்க்கலாம்.மேலும் ஒரு சிறு தகவல் சென்னை புறநகரில் ஒரு தனியார் தொழிர்சாலையில் பிளாஸ்டிக் பைகளை மறு சுழர்ச்சி செய்து குரூட் ஆயில்(கச்சா எண்ணெய்)தாயாரிக்கிறார்கள்.அதில் இருந்து மண்ணெண்ணெய் ,பெட்ரோல் ,டீசல் போன்ற எரிபொருட்களை தனி தனியே பிரித்தெடுக்கிறார்கள்.இதன் நேரடி நிகள்ச்சி சுமார் ஒரு மாதங்களுக்கு முன்பு பொதிகை தொலைக்காட்சியில் ஒளி பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments: