free mail

January 2, 2012

குட்டி குட்டித் தகவல்கள்.

பி.எம்.டபிள்யூ.


உலகின் முன்னணி விலை உயர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபிள்யூ சென்னை கிளையில் தனது இருபதாவது ஆயிரம் காரை தயாரித்திரிக்கிறது.2007 ஆம் சென்னை தொழிர்ச்சாலையில் உற்பத்தியை தொடங்கிய போது ரூ 110 கோடியை முதலீடு செய்திருந்தது.ஆரம்பத்தில் ஆண்டுக்கு மூன்றாயிரம் கார்கள் என்று இருந்த அதன் உற்பத்தி திறன் இப்போது பதினொன்றாயிரம் கார்கள் என்ற விகிதத்தில் உயர்ந்திருக்கிறது.தற்போதைய காலக்கட்டத்தில் சுமார் 5400 கார்களை ஆண்டொன்றுக்கு தயாரிக்கிறது சென்னை பி.எம்.டபிள்யூ நிறுவனம்.உலகெங்கும் மொத்தம் உள்ள 24 கிளைகளில் சென்னையும் ஒன்று.சென்னை தொழிர்சாலையில் சுமார் 400 ஊழியர்கள் பணி யாளர்கள் பணி புரிகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.பி.எம்.டபிள்யூ நிறுவனம் கார் தயாரிப்போடு மோட்டார் சைக்கிள்களையும் தயாரிக்கிறது விரைவில் தமிழ்நாட்டிலும் தன் இருசக்கர வாகன விற்பனை சந்தையை ஏற்படுத்தும் என எதிர்பாக்கப்படுகிறது.


பணம்.


இந்திய ரிசர்வ் வங்கி தற்போது தன் கையில் வைத்திருக்கும் இருக்கும் டாலர்கள் 300பில்லியன் .தோராயமாக ரூ 15,60,000 கோடி.


சரியும் பண மதிப்பு.


கடந்த 12 மாதங்களில் எப்போதும் இல்லாத அளவிற்கு டாலருக்கு நிகரனா ரூபாயின் மதிப்பு மிகவும் சரிந்துள்ளது.2011 ஜனவரியில் 44.67 ஆக இருந்த டாலரின் இந்திய மதிப்பு டிசம்பர் 2011 ல் 53 என சரிந்தது.இதற்கு காரணமாக இந்தியாவலிருந்து முதலீட்டாளர்கள் வெளியேறுவதை குறிப்பிடுகிறார்கள்.
திருவிழா ஆரம்பம்.


தமிழர்களின் பண்டிகையான பொங்கல் திருநாளையொட்டி புதுத் திரைப்படங்கள் வெளியிடுவது வழக்கம்.குறைந்த பட்சம் ஐந்து திரைப்படங்களாவது வெளியாகும்.ஆனால் இந்த வருடம் இரண்டு திரைப்படங்கள்தான் வெளியாகும் என தெரிகிறது.ஷங்கரின் நண்பன் திரைப்படமும்,லிங்குசாமியின் வேட்டை திரைப்படமும் வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.இதில் நண்பன் திரைப்படம் சென்னையில் 25 திரையரங்குகளிலும், வேட்டைத் திரைப்படம் 20 திரையரங்குகளிலும் திரையிடப்படுகிறது.

பாரதி


மகா கவி பாரதியாரின் படைப்புகள் அனைத்தையும் மற்றும் அவரைப் பற்றி எழுதப்பட்ட படைப்புகள் ஆகியவற்றையையும் தமிழர்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் விதத்தில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்டுகிறது.இதற்காக பாரதியின் 130 ஆவது பிறந்த நாளான 2011 டிசம்பர் 11 ஆம் தேதி மகாபாரதியார்.இன்ஃபோ என்ற இணைய தளம் துவங்கப்பட்டுள்ளது.இத்தளத்தில் உள்ள தகவல்களையும் விவரங்களையும்,புகைப்படங்களையும் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த இணையதளத்தின் நிறுவனர்.தஞ்சாவூர் பாரதி தமிழ் சங்கத்தின் தலைவர் .வி.எஸ் .ராமலிங்கம்.விருது.


2011 மே மாதத்தில் யுண்டாய் நிறுவனம் புதிய ரக வெர்னா காரை அறிமுகப்படுத்தியது.மார்ச் முதல் டிசம்பர் வரை மொத்தம் 34,000 கார்கள் நாடு முழுவதும் விற்று தீர்ந்திருக்கிறது.அது மட்டுமல்லாமல் என்.டி.டிவியின் கார் ஆப் த இயர் விருதையும் பெற்றிருக்கிறது.மேலும் 2011 ஆண்டிற்கான சிறந்த சிறிய ரக கார், சிறந்த வடிவமைப்பு,சி.என்.பி வியூவர்ஸ் சாய்ஸ் ஆகிய மூன்று தலைப்புகளிலும் தனி தனியே விருதுகளை தட்டிச்சென்றிருக்கிறது வெர்னா.
அசிங்கப்பட்டான் அமெரிக்கா காரன்.புத்தாண்டன்று வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயன்ற மூன்று அமெரிக்கர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ளார்கள்.படுகாயம்டைந்த அவர்களில் ஒருவர் தப்பித்து ஓடிவிட மற்ற இருவரையும் பொதுமக்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.இச்சம்பவம் தூத்துக்குடியில் நேற்று நடந்தது.தகவல்கள்.இந்திய டுடே,ஆனந்த விகடன்,தினமலர்.

2 comments:

Anonymous said...

முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

Anonymous said...

முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html