February 17, 2012

அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்து போடாவிட்டால் சம்பளம் இல்லை.

அரசு ஊழியர்கள்தமிழில்தான் கையெழுத்திட வேண்டும் என்றும் தமிழில் கையெழுத்திடாத அரசு ஊழியர்களின் சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என்றும் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ராணி தெரிவித்தார்.

அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் தமிழில் கையெழுத்து இடுகின்றனரா? அரசு அலுவலககங்களில் தமிழில் பெயர் பலகை மற்றும் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று திருவண்ணாமலையில் தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ராணி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார் அப்போது அனைவரும் தமிழில்தான் கையெழுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை, தகவல் பலகை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது சரியாக பராமரிக்கப்படுகிறதா, தமிழில் கையெழுத்திடப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
தமிழில் கையெழுத்திடாத அரசுஊழியர்களுக்கு சம்பளத்தை நிறுத்தி வைக்கவும், ஊதிய உயர்வு, பதவி உயர்வையும் நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீதும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments: