November 5, 2011

முதல்வர் மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்குகள்.

இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளில் நம் முதல்வர்தான் அதிக ஊழல் வழக்குகளை சந்தித்திருக்கிறார்.1991-1996 ஆம் ஆண்டு காலத்தில் அவர் முதலமைச்சராக இருந்து 96 ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க,த.மா.க கூட்டணியிடம் படு தோல்வி அடைந்தார்.அப்போது பதவிக்கு வந்த மு.கருணாநிதி தலமையிலான தி.மு.க அரசு ஆறு மாதங்கள் கழித்து டிசம்பர் 7 ஆம் தேதி பஞ்சாயத்துகளுக்கு வண்ண தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கிய வழக்கில் முதன் முறையாக ஜெயலலிதாவை கைது செய்தது.






அவரை கைது செய்து வீட்டிலிருந்து அழைத்துச் சென்றவுடனையே லஞ்ச ஒழிப்பு போலிஸ் ஜெயலலிதா வீட்டினுள் நுளைந்தது.அப்போது நடைப்பெற்ற சோதனையில்தான் ரூ.66 கோடி சொத்துகள் கைப்பற்றப்பட்டு சொத்துக் குவிப்பு வழக்குப் போடப்பட்டது. ஜெயலலிதா சிறையில் 28 நாட்கள் இருந்து 1997 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி விடுதலையானார்.ஆனால் அவர் சிறையில் இருந்தபோதே அவர் மீது மேலும் 7க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டன.


தமிழக மின் வாரியத்துக்கு நிலக்கரி வாங்கிய வழக்கு,பிளசன்ட் ஸ்டே வழக்கு,டான்சி வழக்கு,ஸ்பிக் வழக்கு,சுடுகாட்டு ஊழல் வழக்கு ஆகியவையாகும்.1997 ஏப்ரலில் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க மூன்று சிறப்பு நீதிமன்றங்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் மூலம் கருணாநிதி அரசு நியமித்தது.இந்த சிறப்பு நீதிமன்றங்களை எதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்த மனுக்கள் உச்ச நீதி மன்றத்தில் 1999 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன.

வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டி ஊழல் வழக்கில் அவரை சிறப்பு நீதிமன்றம் மே 30 ,2000 ஆண்டு விடுதலை செய்தது.டான்சி வழக்கிலும்,பிளசன்ட் ஸ்டே வழக்கிலும் சிறப்பு நீதிமன்றத்தில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

டான்சி வழக்கில் டிசம்பர் 4.2001 ல் அவர் விடுதலை ஆனார். இதனை எதிர்த்து தி.மு.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதில் நவம்பர் 24,2003 ல் விடுதலை ஆனார் .பின் நிலக்கரி இறக்குமதி வழக்கிலும் சிறப்பு நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் உயர் நீதி மன்றத்திலேயே அவருக்கு விடுதலை கிடைத்தது.மேலும் 12 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த வருமான வரிக் கணக்கினை தாக்கல் செய்யாததற்கான வழக்கிலிருந்தும் விடுதலை ஆனார். 3 லட்சம் டாலரை தனது பிறந்த நாள் பரிசாக வாங்கியதாக சி.பி.ஐ தொடர்ந்த வழக்கிலும் சென்னை உயர்நீதிமன்றம் அவரை விடுவித்தது.இப்படி கிட்டத்தட்ட எல்லா வழக்கிலிருந்தும் விடுதலையான முதல்வருக்கு இந்த சொத்துக் குவிப்பு வழக்கு மட்டும் தலைக்கு மேல் கத்தி போல் தொங்கிக்க கொண்டிருக்கிறது. இந்த வழக்கின் முடிவும் விரைவிலேயே தெரிந்துவிடும்.பார்ப்போம் கத்தி கூர்மையாக இருக்கிறதா இல்லை மழுங்கிப் போய் விட்டதா என்று.

தகவல்கள்.இந்தியா டுடே.

No comments: