November 5, 2011

மறு வெளியீட்டில் கலக்கும் பாட்ஷா.

வெ ள்ளிக் கிழமை காலைக் காட்சி. இடம் தேவி வளாகம். இதில் உள்ள நான்கு அரங்குகளில் வேலாயுதமும் ஏழாம் அறிவும் ஓடிக் கொண்டுள்ளன.
நம்பினால் நம்புங்கள்…. 50 வாகனங்கள் மட்டுமே பார்க்கிங் ஏரியாவில் இருந்தன. அங்கிருந்த தியேட்டர் ஊழியரைக் கேட்டபோது, “டல்லடிக்குது சார். தியேட்டர்ல தனியா படம் பார்க்குற எஃபெக்ட். நாலைஞ்சு ஜோடிங்களுக்குதான் வசதியா இருக்கும் இப்போ!,”என்றார்.
பக்கத்திலேயே அண்ணா திரையரங்கம். கொட்டும் மழை. ஆனால் ஒரு புதுப்பட ரிலீசுக்கே உரிய ஆரவாரத்துடன் இளைஞர் கூட்டம்.
காரணம்… தலைவரின் பாட்ஷா மறுவெளியீடு!!
இந்த வரவேற்பும், கூட்டமும் விநியோகஸ்தர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துவிட்டது. சினிமா பாஷையில் முன்பெல்லாம் எம்.ஜி.ஆர் படங்களை ‘கோல்ட்’ என்று குறிப்பிடுவார்கள் விநியோகஸ்தர்கள்.
அந்த அந்தஸ்தை எம்.ஜி.ஆருக்கு அடுத்து ரஜினியின் படங்களுக்கு மட்டுமே கொடுத்துள்ளனர். ரஜினியின் எந்தப் படமாக இருந்தாலும், முறையாக மறுவெளியீடு செய்யும் போது வசூலை அள்ளுகின்றன.





தீபாவளி புதுப் படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லாத இந்த நேரம் பார்த்து, ரஜினியின் பிளாக்பஸ்டர் படமான பாட்ஷாவை வெளியிட்டுள்ளனர்.
தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கிலும் வசூலில் புதிய புரட்சியே செய்த படம் பாட்ஷா. இன்றுவரை தமிழ் சினிமாவின் 80 ஆண்டுகால டாப் 10 படங்களுள் ஒன்று என்ற அந்தஸ்தை இந்தப் படத்துக்கு கொடுத்துள்ளனர். இந்தப் படத்தை பார்க்காத தமிழ் ரசிகர்கள் அநேகமாக யாரும் இருக்கமாட்டார்கள்.
தொலைக்காட்சிகளில் கணக்கில்லாமல் ஒளிபரப்பப்பட்ட படங்களுள் பாட்ஷாவும் ஒன்று.
இருந்தாலும் இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் இப்போது மறுவெளியீடு செய்துள்ளனர். சென்னையில் அண்ணா, ஸ்ரீநிவாசா, நியூபிராட்வே, மகாலெட்சுமி ஆகிய நான்கு அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.
விஷயமறிந்த ரஜினி ரசிகர்கள் பெருமளவில் படம் பார்க்க திரண்டுவிட்டனர். “தீபாவளிப் புதுப்பட அரங்குகள் காலியாக இருக்கையில், ரஜினியின் பாட்ஷா வெலியான அரங்குகள் திருவிழாக் கோலத்தில் இருந்தது, ரஜினியின் மாஸ் என்ன என்பதை பறைசாற்றுகிறது,” என ரஜினி ரசிகர்கள் தெரிவித்தனர்.
படம் வெளியான அண்ணா தியேட்டரில் பல ரசிகர்கள் ரஜினி பேனருக்கு முன்னால் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். தலைவரின் படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சியின் போது எப்படி தூள் கிளப்புவார்களோ, அதற்கு நிகராக பாட்ஷா மறுவெளியீட்டின் முதல் காட்சியின் போதும் செய்து அசத்தினர் ரசிகர்கள்.
இதற்கிடையே சென்னை சீனிவாசா திரையரங்கில் பாட்ஷாவின் சிறப்புக் காட்சிக்கு சைதை பகுதி ரஜினி ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கு சைதை ரவி பொறுப்பேற்றுள்ளார். மாலை 6 மணிக்கு மேள தாளம் முழங்க, அதிர்வேட்டு முழக்கத்தோடு இந்த சிறப்புக் காட்சி தொடங்குகிறது.
இது குறித்து சைதை ரவி நம்மிடம் கூறுகையில், “புதுசோ பழசோ…தலைவர் படம் தலைவர் படம்தான். அந்தப் படம் எப்போது ரிலீஸானாலும் கொண்டாட்டம்தான். தலைவர் படத்தைப் பார்ப்பது ஒரு பரவசமான அனுபவம். அதைக் கொண்டாடத்தான் நாளை சிறப்புக் காட்சி. அனைத்து ரஜினி ரசிகர்களும் வந்து அந்த அனுபவத்தைப் பெறுங்கள்,” என்றார்.

தகவல்கள்.
www.envazhi.com
நன்றி.

No comments: