மனைவியை நன்றாக வைத்திருப்பதாக காட்ட வேண்டுமே என்கிற தவிப்பும் வந்து போகிற வறுமையின் வாசனை தெரிந்துவிடக்கூடாதே என்கிற பதட்டமுமாக கௌரவம் கப்பாற்ற அலைகிற அந்தச் சமயங்களிலேதான் அரிசி தீர்ந்துவிடுவதும் எண்ணெய் காலியாகிவிடுவதுமென பற்றாக்குறைகளால் நிறைகிறது வீடு .
இருந்தாற்போல இருமுகிற மகளுக்கெனவும் விருந்தினர் வருகையூட்டிய தைரியத்தில் எதையாவது கேட்டழுகிற மகனுக்கெனவும் கையிருப்பும் கரைந்து போக வந்திருப்பவர்கள் எதையாவது கேட்டு வெறுங்கைச் சிரிப்பு வெளிபட்டு விடக்கூடாதே என்கிற பதற்றம் மனைவியாகிவிட்ட மகளுக்கே அதிகமிருக்கிறது எப்படியாகிலும் புறப்பட்டுப் போகிற போது தந்து விட்டுப் போன இரண்டாயிரம் ரூபாய் அறிந்து கொண்டதன் அடையாளமாக இருக்கலாமெனவும் தோன்றுகிறது.
பி.ஜி. கதிவன் என்பவர் . 17.8.2011 ஆனந்த விகடனில் எழுதிய கவிதை
No comments:
Post a Comment