நீண்ட நாள் ஆனாலும்
கெட்டுப் போகமல் இருக்கும்
ஒரு உணவு பொருள் என்ன
என்று கேட்டால் பளிச்சென்று ஞாபத்துக்கு
வருவது தேன்.
தேனீக்களின் சேமிப்பு நமக்கு உணவு.
தேனில் மருத்துவக் குணங்களும்,
நோய் எதிர்ப்பு சக்தியும்,
வைட்டமின்களும்
இருப்பதாக ஆய்வு
செய்து கண்டறியப்பட்ட உண்மை.
நாம் பயன்படுத்தும் தேன்
பெரும்பாலும் மனிதனால் தயாரிக்கபட்ட
வை அதாவது தேனீ வளர்ப்பு மூலமாக கிடைக்கிறது.
தேன் அதிக அளவு கிடைப்பது
இம்முறையில்தான்.
தமிழ்நாட்டில் அதிக அளவு குமரி
மாவட்டத்தில் உற்பத்திச்
செய்ப்படுகிறது. இது ஒரு
குடிசைத் தொழிலாக அரசு அனுமதித்திருக்கிறது.
தேன் சேகரிப்பதற்கு சில
குறிப்பிட்ட இடங்கள்
மனிதர்க கண்டறியப்பட்டுள்ளது.
ரப்பர் மரம்
அதிகம் உள்ளப் பகுதிகள்,
தென்னஞ்சோலைகள்,
வாழைத்தோட்டங்கள்
போன்ற பகுதிகளில்
தேன் பெட்டி வைக்கப்
படுகிறது இதன் மூலம் தேன் சேகரிக்கப் படுகிறது.
இதனை நாட்டுத்தேன் என
குறிப்பிடுகின்றனர்.
காடுகளிலிருந்தும் தேன்
கிடைக்கிறது.இவை
அதிக அளவில் கிடைப்பதில்லை .அப்படி
கிடைத்தாலும் கலப்படமான தேன்தான்
கிடைக்கும் என்ற கருத்தும் உண்டு.
பல தனியார் நிறுவனங்கள் புட்டிகளில் அடைக்கப்பட்ட தேனை
விற்பனை செய்கின்றனர்.
அரசும் கூட்டுறவு அமைப்பு மூலம் தேன் விற்பனை செய்கிறது.
தேனுக்கு பல மருத்துவ
குணங்களும்,மகத்தான குணங்களும் உண்டு.
உடல் பருமனாக இருப்போர் நாள்தோறும் அதிகாலையில் ஒரு குவளை
வெந்நீரில் இரு
மேஜைக் கரண்டி தேன் கலந்து
குடித்து வந்தால் உடலில் உள்ள
கெட்டக் கொளுப்பு கரைந்துவிடும் என மருத்துவக் குறிப்பு கூறுகிறது.
அதேப் போல் உடல்
மெலிந்தோர் பருமனாகவும் தேன்
உதவுகிறது.பாதாம் ,முந்திரி,பிஸ்தா போன்ற பருப்புகளை தேனில்
ஊற வைத்து நாள் தோறும்
சாப்பிட்டு
வந்தால் உடல் பருமனாவது
மட்டுமல்லாமல்
வலிமையான
உடற்கட்டையும் பெறலாம்.
சித்த மருத்துவத்தில் தேனும்
ஒரு மருத்துவப் பொருளாகவே கருதப்படுகிறது.
தேனீக்கள் மலரில் இருந்து தேனை எடுத்து தன்
வயிற்றுப் பகுதியில் உள்ள ஒரு விசேசமான பையில்
நிரப்புகிறது.அங்கு பல வித ரசாயன
மாற்றங்களுக்கு உட்படும்
தேனீயின் உணவு இந்த மாற்றத்திற்கு
பிறகுதான் தேனாக உருவாகிறது.
அடுத்தபடியாக தன் வயிற்றுப் பகுதியில் உள்ள தேனை தேனடையில்
சேகரிக்கிறது.
தேனடையில் உள்ள
வெப்பநிலையும் ,காற்றோட்டமும்
சேரும்போது தேன் இறுகி விடுகிறது.
இதனால் அதில் உள்ள தண்ணீர் நீக்கப்படுகிறது.
ஆகவே தேன் பதப்படுத்தப்பட்ட நிலையை அடைகிறது.
இதனால் தான் தேன் நீண்ட நாட்கள்
ஆனாலும் கெடாமல் இருக்கிறது.
தேனீ என்னும் ஐந்து கிராம் எடை கொண்ட ஓர் உயிர் பல பேரின்
வருமானத்திற்காகவும்,வயிற்றிற்காகவும்,தாவரங்களின் மகரந்த சேர்கைக்கும் பெருமளவு உதவுகிறது.
இயற்கையின் அற்புதமான படைப்புகளில் முதல்
இடத்தைப் தேனீ பிடிக்கிறது.
இன்னும் எவ்வளவோ தகவல்களை தேனீயைப் பற்றி
சொல்லிக்கொண்டேச் செல்லலாம் எனக்கு
தெரிந்தது கடுகளாவான இவ்வளவே.
தேன் சுவைப்பதற்கும் இனிமை,கேட்பதற்கும் இனிமை , நினைத்தாலும் இனிக்கும் அளவிற்கு தேனீயின் அருமை இருக்கிறது.
இனிமேல் ரோஜா கூட்டத்தில் தேனீக்கள் கூட்டம்
இருந்தால்
அவைகளை விரட்டாதீர்.
No comments:
Post a Comment