பெருந்தலைவர் காமராஜர்
நீண்ட தூரம் சுற்று
பயணம் முடிந்து காரில் சென்னைக்கு
வந்து கொண்டிருந்தார்.
அதிகாலை நேரம் பயண களைப்பால்
கண்ணயர்ந்திருந்த அவர் நீண்ட நேரம் கார்
ஓரிடத்திலேயே நிற்பதை
உணர்ந்தார்.கண்விழித்த அவர்
என்னய்யா ஆச்சு
எங்கேய்யா வந்திருக்கோம்
என்று ஓட்டுனரிடம் கேட்டார்.
சைதாப்பேட்டை பாலங்கிட்ட வந்தாச்சு.
ஆனால் போக்குவரத்து
நெரிசலால் வாகனங்கள்
நகர்வதில் சிரமம் என்று
ஓட்டுனர் பதிலளித்தார்.
உடனே காமராஜர் காரின்
கதைவைத் திறந்தார்.
வேட்டியை மடித்துக்
கட்டிக்கொண்டு விறுவிறுவென
சைதாபேட்டை காவல்
நிலையத்தை நோக்கி சென்றார்.
அப்போது அங்கு பணியில் இருந்த
மூன்று காவலர்கள்
தங்கள் முன்னால் முதல்வர் வந்து
நிற்பதைக்கண்டு
பதறி எழுந்தார்கள்.
இங்கே உட்கார்ந்து என்ன
பண்றீங்க.
ரோடு பூரா வண்டிங்க
நிற்குது.
வாங்கய்யா வெளியே
என்றார் காமராஜர்.
காவலர்களோடு சேர்ந்து தானும்
போக்குவரத்தை சரி செய்தார்.
அங்கு அவரைப் பார்த்த
பயணிகள் ஆச்சர்யம்
அடைந்தனர்.
அரை மணி நேரத்தில்
போக்குவரத்து சரியானது.
நன்றி
தினதந்தி
No comments:
Post a Comment