பாஸந்தி முழுக்கமுழுக்க பாலினால் செய்யப்படும் ஒரு இனிப்பு. வட இந்தியர்களின் வீடுகளில் பெரும்பாலும் பாஸந்தி இருக்கும்.அவர்கள் வீட்டிலேயே பாஸந்தி தயாரித்துக் கொள்வர்.பாஸந்தி செய்வது கடுமையான வேலையில்லை ஆனால் பணம் சிறிது அதிகமாகவே செலவாகும்.பணத்தை பார்த்தால் ருசியாக சாப்பிட முடியாது.சரி விசயத்துக்கு வருகிறேன்.எனக்கு பாலில் செய்த இனிப்புகள் என்றால் கொள்ளை பிரியம்.அதிலும் பாஸந்தி என்றால் கேட்கவா வேண்டும். எத்தனை நாள்தான் கடைகளிலே சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாமே அதை தயாரித்தால் என்ன என்று யோசனை உருவாகியது. பாஸந்தி யோசனையில் மட்டுமே இருந்தது நடைமுறைக்கு வரவில்லை காரணம் எனக்கு பாஸந்தி செய்ய தெரியாது.அதனால் பாஸந்தி செய்வது எப்படி என்று கூகுலில் தேடினேன்.தேடல் வீண் போகவில்லை பாஸந்தியைப் பற்றி அ முதல் ஃ வரை தகவல் கிடைத்தது .ஆனால் அதன் செய்முறை கடினமாக இருப்பதாக தோன்றியது அதனால் அதை எளிதாக புரியும்படியாக நாலுபேருக்கு சொல்வோம் என்ற சிந்தனையின் வெளிப்பாடுதான் இந்தப் பதிவு.
நான் மொக்கை போடுவதாக நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. நிபந்தனைக்குட்பட்டது.
பாஸந்தி செய்முறை.
தேவயான பொருட்கள்.
[பால் 2லிட்டர்]
[சர்க்கரை 1 கப்]
[குங்குமப்பூ தேவையான அளவு]
[நெய் 3டீஸ்பூன்]
[பாதாம் 10 எண்ணம்]
[முந்திரி 15 எண்ணம்]
[பிஸ்தா தேவையான அளவு]
@செய்முறை@
வாணலியில் பாலை ஊற்றி சிறிதளவு தீயில் அடுப்பை வைத்து பாலை காய்ச்ச வேண்டும்.கவனிக்கவும் வாணலியின் அடி கனமாக இருக்க வேண்டும்.இல்லையென்றால் பாஸந்தி வெள்ளை நிறத்தில் இருக்காது கறுப்பு நிறத்தில் தான் இருக்கும்.சரி அடுத்ததாக பால் காய்ந்ததும் சிறிது குங்குமப்பூவே சேர்த்து கலக்க வேண்டும். அதன் மேல் படியும் ஏடை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொண்டே இருக்கவும்.இவ்வாறு பாலின் அளவு கால் லிட்டர் வரும் அளவிற்கு குங்குமப்பூ கலந்து ஏடுகளை எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அடுத்ததாக சேகரித்த பால்ஏடு மற்றும் சர்க்கரையும் சேர்த்து சிறிதளவு தீயில் நன்றாக கிளறவும்.பிறகு பாதாம்,முந்திரி,பிஸ்தா மூன்று பருப்புகளையும் நெய்யில் வறுத்தும் சேர்கலாம்.தண்ணீரில் ஊற வைத்தும் சேர்க்கலாம்.அது உங்களின் விருப்பம் .பின்பு அதன் மேல் செய்யப்படும் அலங்காரங்களும் உங்கள் விருப்பத்திற்கே.பாஸந்தியின் மற்றொரு சிறப்பு இதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்ச்சியாகவும் சாப்பிடலாம். அப்படியே சூடாகவும் சாப்பிடலாம்.
இப்போதே சமயலறைக்குச் சென்று ஆக வேண்டிய வேலைகளை பாருங்கள்.
No comments:
Post a Comment