இந்திய கிரிக்கெட் அணி பற்றி
பேசுவதற்கு எனக்கு தகுதி
இருக்கிறதா என்பது தெரியவில்லை.
இருந்தாலும் இந்திய அணியின் தீவிர ரசிகன்
என்ற முறையில் நான் பேசலாம்
என்று நினைக்கிறேன்.
கிட்டத்தட்ட இருபது மாதங்களாக டெஸ்ட்
போட்டியில் முதல் இடத்தில் ஆதிக்கம்
செலுத்திய இந்திய அணி
தற்போது நடைபெற்றுக்
கொண்டிருக்கும் இங்கிலாந்துக்கு
எதிரான தொடரில் தொடர்ந்து
மூன்று தோல்விகளை
சந்தித்தை அடுத்து தன்னுடைய
ஒன்றாம் நம்பர் இடத்தை
இங்கிலாந்துக்கு தாரைவார்த்தது.
இது எல்லோரும் அறிந்த சேதிதான்.
எந்த விளையாட்டாக இருந்தாலும்
தோல்வியை சந்திக்காமல்
எந்த அணியும் இல்லை எந்த
வீரரும் இல்லை.
ஆனால் இந்திய அணி
இப்போதுதான் தோல்வி அடைவது போல
சில முன்னாள் வீரர்களும்,சில பத்திரிகைகளும்
,ரசிகர்களும் கூட வானத்துக்கும் பூமிக்குமாக
குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த கோபமும் ,கிண்டலும் எதற்கென்று
கேட்கிறேன்.இந்திய அணி வெற்றி பெற்ற போது
இப்போது திட்டிக்கொண்டிருப்பவர்கள்
அப்போது பாராட்டினார்கள்இது உண்மை.
அதற்காக தோல்வி அடைந்தால்
திட்ட வேண்டும் என்னும்
விதிமுறை இருக்கிறதா என்ன?
நாள் தோறும் செய்தித்தாளைத்
திறந்தால் முன்னாள் வீரர் கருத்து.
அவர் குற்றம் சாட்டினார்,இவர் குற்றம் சாட்டினார் என்று
பத்திரிகைகள் எழுதித் தீர்க்கின்றன.
இப்படி பேட்டி அளித்துக் கொண்டிருப்பவர்கள்
தோல்வி என்ற சுவடையே
காணாதவர்கள் போலும்
அதனால்தான் என்னவோ வாய்க்கு
வந்தாற்போல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
எனக்கு தெரிந்து இப்போது
திட்டிக்கொண்டிருக்கும் பலர்
சொல்லிக்கொள்கிறார் போல் பெரிய வெற்றி ஒன்றும்
பெற்றவர்களில்லை.
திட்ட வேண்டுமென்பது அவர்கள் கடமைபோலும்.
இப்போது இந்திய அணிக்கு
வேண்டுயது, குட்டோ ,திட்டோ அல்ல
ஆதரவுமட்டுமே.இந்நேரத்தில் ஆதரவாக
பேசாவிடினும் பறவாயில்லை.மௌனமாக இருந்தாலே போதும்.
இந்த தோல்வியிலிருந்து எப்படி
மீழ்வது என்று இந்திய வீரர்களுக்கு
தெரியும்.
யாரும் அறிவுரை கூற வேண்டிய அவசியமில்லை
என்பதே என் கருத்து.
No comments:
Post a Comment