ஊழல் எதிர்ப்பு போரில் தீவிரமாக இருக்கும்
காந்தியவாதி அன்னா ஹசாரே
இளம் வயதில் தற்கொலைக்கு
முயன்றவர் என தகவல் வெளியாகி உள்ளது.
அதற்கு சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமல்ல.
வாழ்கையில் ஏற்பட்ட வெறுப்பின்
காரணமாக தற்கொலை செய்து
கொள்வதற்காக இரண்டு பக்க கடிதமும் எழுதி
வைத்திருந்தார்.
அந்தி நிலையில் ஒரு நாள் புது டில்லி ரயில்
நிலையத்தில் இருந்தபோது,அங்கிருந்த
கடையில் சுவாமி விவேகானந்தரைப்
பற்றிய புத்தகத்தை
வாங்கிப் படித்தார்.
மனிதன் உயிர் வாழ்வதற்கான காரணத்தை தேடி
அலைந்த அவருக்கு
அந்த புத்தகத்தில் விடை
கிடைத்தது.சக மனிதர்களுக்கு சேவை
செய்வதே தமது வாழ்கையின் நோக்கமென
உணர்ந்தார். அதனால் தற்கொலை
செய்யும் முயற்சியை கைவிட்டார்.
1962-ம் ஆண்டு சீன போருக்குப் பிறகு மத்திய அரசு
இளைஞர்களுக்கு விடுத்த அழைப்பை
ஏற்று ,ராணுவத்தில் தன்னை
இணைத்துக் கொண்டார்.9-வது மராத்தா பட்டாலியன்
பிரிவில் இருந்த அவர் 1978-ம் ஆண்டு
ராணவத்திலிருந்து விருப்ப
ஓய்வு பெற்றார்.
அப்போது அவருக்கு வயது 39.
அதன் பின்னர் மராட்டிய
மானிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட
ராலேகான் சித்தி கிராமத்துக்குச் சென்றார்.
அங்கு விவசாயிகள் வறுமையில்
உழல்வதைக் கண்டார்.
மழைநீர் சேகரிப்பு திட்டத்தை
செயல்படுத்தி அதை மாதிரி கிராமமாக
மாற்றிக்காட்டினார்.
தனது போரட்டங்கள் மூலமாக
அந்த கிராமத்துக்கு மின்சாரம்
,பள்ளிக்கூடம் உள்ளிட்ட வளர்ச்சி
திட்டங்களை கொண்டுவரச் செய்தார்.
அவரது போராட்ட ஆயுதம் உண்ணாவிரதம்
தான் ஆனால் அதை பிளாக்மெயில்
என்று மராட்டிய அரசியல்வாதிகள் வருணிப்பது உண்டு.
1995-ம் ஆண்டில் 2 ஊழல் மந்திரிகளை
அப்போதைய சிவசேனா பாரதிய ஜனாதா கூட்டணி
அரசில் இருந்து நீக்க செய்தார்.
2003-ம் ஆண்டில் 4 ஊழல் மந்திரிகளுக்கு எதிராக விசாரணை
கமிஷன் அமைக்க செய்தார்.
இந்த ஆண்டு ஏப்ரலில் தனது நான்கு நாள்
உண்ணாவாரதம் மூலம் லோக்பால்
மசோதாவை உருவாக்க சமூக ஆர்வலர்கள்
அடங்கிய கூட்டுக்குழுவை அமைப்பதற்கு
மத்திய அரசை சம்மதிக்க செய்தார்.
நேற்று மீண்டும் உண்ணாவிரதம் இருக்கத்
தயாரான போது
அவர் கைது செய்யப்பட்டார்.
நன்றி
தினதந்தி
No comments:
Post a Comment