October 21, 2011

பொது மக்களின் பார்வையில் உள்ளாட்சி தேர்தல் முடிவு.

மொத்த 10 மா நகராட்சியில் உள்ள வாக்குகள் - 1 கோடி மொத்த 150 நகராட்சியில் உள்ள வாக்குகள் - 1 கோடி 500 பேரூராட்சி பஞ்சாயத்தில் உள்ள வாக்குகள் - 3 கோடி (தமிழ்நாட்டில் மொத்தம் 5 கோடி வாக்குகள் உள்ளன) 1)எதிர்பாத்த படி அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. ஆளுங்கட்சி, அப்புறம் இப்பதான் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த 6 மாதத்தில் மக்கள் பெரிய மாற்றம் இல்லை. ஆனால் தேதிமுக வந்த காரணத்தால் அதிமுக சட்ட சபையில் வெற்றி பெற்றது என்ற கருத்தை உடைத்து விட்டது. 2)திமுக பெரிய சிட்டியில் சரியாக வரவில்லை. ஆனால் நகராட்சி/பேரூராட்சி/கிராம பஞ்சாயத்தில் மதிப்பான இரண்டாம் இடத்தில் உள்ளது. நகராட்சியிலும், பேரூராட்சி/கிராம பஞ்சாயத்தில் தான் 60% தமிழகம் வசிக்கிறது. இது திமுக ஒரேடியாக சரிந்து விட வில்லை என்று காட்டுகிறது. தொண்டர்கள் பலம் உள்ள கட்சி என்பதையும் காட்டுகிறது 3) தேதிமுக. சுத்தமாக படுத்து விட்டது. மக்கள் இந்த முறை விஜய காந்துக்கு ஆப்பு வைத்து விட்டார்கள். மக்கள் மனதில் விஜய காந்த் ஒரு முதிர்ச்சியான தலைவராக படவில்லை. விஜய காந்த் முன்பு தனியாக நின்ற போது 8 - 10 சதவீத ஓட்டு கிடைக்கும். அதுவே இந்த முறை கிடைக்கும் என்பதில்சந்தேகமே? விஜய காந்துக்கு வந்த கூட்டம் ஒரு தற்காலிக கூட்டம் என்பதை நிரூபிக்கிறது. 4) வைகோ: பரவலாக இல்லாமல், நிறைய இடத்தில் 3 வது இடத்தில் வந்துள்ளது. வைகோவுக்கு ஓரளவுக்கு செல்வாக்கு இருப்பதை காண்பிக்கிறது(கோவை, தூத்துகுடி, திருச்சி...). சில நகராட்சியில் வெற்றி பெறலாம். நிறைய இடத்தில் திமுகவின் ஓட்டை உடைத்து வெற்றி வாய்ப்பு எடுத்து இருக்கிறார். நல்ல தலைவர்,தொண்டர்கள் கொள்கை பிடிப்பு இருந்தால், கட்சி தோல்வியிலும் துவண்டு விடாது என்பதற்கு எடுத்து காட்டு. அரசியலில் பதவி இல்லை என்றால் நிறைய பேர் ஓடி விடுவார்கள். ஆனா இவ்வளவு நாள் வைகோ தக்க வைத்துள்ளார். 5) காங்கிரஸ் அவ்வளவு மோசம் இல்லை. ஆரம்ப காலம் முதல் எங்கெல்லாம் செல்வாக்கு உண்டோ அங்கு 3 வது இடத்தில் வந்துள்ளது 6) பா.ம.க, வி.சி., பா.ஜ.க மரண அடி வாங்கும் என்று எதிர்பார்த்தது பொய் போகவில்லை. சொல்ல போனால் தமிழ் நாடு மக்கள் புத்திசாலிகள். அவர்கள் எந்த பத்திரிக்கை எப்படி எழுதினாலும், யோசனை பண்ணிஓட்டு போடறாங்க - போன தடவை வடிவேலுவை விட்டு விஜய காந்த அழிக்க பாத்தாங்க. மக்கள் கேட்கலை. ஆனா இப்ப விஜய காந்த் செயல் பாடு மக்களுக்கு பிடிக்கல. மக்களா பாத்து ஓரம் கட்டிட்டாங்க. யாரும் சொல்லல. - திமுக மந்திரிகள் உள்ள போனது உள்ளாட்சியில் அவ்வளவா பாதிக்கலை. அப்படின்னா, திமுக தொண்டர் பலத்தில் நடக்கிற கட்சி என்று இதிலிருந்து அறிய முடிகிறது.கெட்ட பெயர் உள்ள தலைவர்களை ஓரங்கட்டி விட்டு ( நேரு, வீர பாண்டி, ஈரோடு ராஜா), நல்ல பெயர் உள்ள இரண்டாம்கட்ட தலைவர்கள் வந்தால், திமுக உருப்படும். வைகோ மாதிரி தலைவர்கள் திமுக தலைவரா வந்தால் கட்சி வீறு கொண்டு எழுந்து விடும் - பாமகவும், வைகோவும் ஒரே சமயத்தில் வந்த கட்சி (1993 வாக்கில்). வைகோ இன்னும் தாக்கு பிடிக்கிறார். பா.ம.க சறுக்கி கொண்டே வருகிறது. வைகோவின் கொள்கை மீது தவறு சொல்லலாம். ஆனா அவர் சுய நல அரசியல் நடத்தல. அதுதான் வைகோ தாக்கு பிடிக்க காரணம். பா.ம.கவின் சுய நல அரசியலை மக்கள் அடையாளம் கண்டு கொண்டுள்ளார்கள். மொத்தத்தில் மக்கள் புத்தி சாலிகள். அவர்களிடம் பொய் சொல்லி கொஞ்ச நாள் தப்பிக்கலாம் (பா.ம.க) ஆனால் கண்டு பிடித்து விட்டால் மரண அடிதான்... இந்த தேர்தல், வைகோ என்ற நல்ல தலைவனுக்கு மறு வாய்ப்பு கொடுத்துள்ளது (எனக்கு வைகோவின் அரசியல் கொள்கை பிடிக்காது, ஆனா அவர் அரசியல் நேர்மை பிடிக்கும்). விஜய காந்த் சந்தர்ப்ப அரசியலை மக்கள்வெறுக்கிறார்கள். மற்றபடிஎதிர் பார்த்ததுதான். தமிழ் மக்கள் புத்தி சாலிகள் என்பதை நிருபித்திருக்கிறார்கள்.




நன்றி

ரமணி.

No comments: