October 17, 2011

திருட்டு வி.சி.டி யில் திரைப்படம் பார்த்த நடிகர்.

திருட்டு சி.டி யை ஒழிப்போம் என்று ஹாலிவுட்,பாலிவுட்,கோலிவுட்,மல்லுட்.டோலிவுட் என எல்லா உட்டுகளுமே அனைத்து மேடை நிகழ்ச்சிகளிலும் டமாரம் அடித்து வருகின்றனர்.ஆனால் அவர்கள் துறையில் உள்ள சிலரே திருட்டு வி.சி.டி யில்தான் புதிய திரைப்படங்களை பார்க்கின்றனர் என்பது நகைப்புக்குரிய விசயம்.இதை வெளிப்படையாக சொல்லவும் செய்கின்றனர்.சில மாதங்களுக்கு முன்னர் கே.எஸ் ரவிக்குமார் புதிய திரைப்படம் ஒன்றை திருட்டு வி.சி.டி யில் பார்த்ததாக உளறி வைத்தார். இப்போது திருட்டு வி.சி.டி.யில் திரைப்படம் பார்த்தவர் பாலிவுட்டின் மெகா ஸ்டார் சல்மான்கான். புதிதாக வெளியிடப்படும் தமழ் திரைப்படங்களை உடனுக்குடன் பார்த்துவிடுவதில் சல்மானுக்கு ஆர்வம் அதிகம் ஏனென்றால் திரைப்படம் நன்றாக இருந்தால் அந்தத் திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முன் பதிவு செய்துவிடலாம் அல்லவா. அப்படி அவர் சமீபத்தில் பார்த்த திரைப்படம் அஜித் நடித்த மங்காத்தா. திரைப்படத்தைப் பார்த்துவிட்டு
தொலைபேசி மூலம் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவைத் தொடர்பு கொண்டு திரைப்படம் நன்றாக இருப்பதாக கூறியுள்ளார்.ஆனால் நான் பார்த்த பிரின்ட்தான் சரியில்லை .அதனால் ஒரிஜினல் பிரின்ட் ஒன்றை அனுப்பி வைக்குமாறு வெங்கட்பிரபுவிடமே கேட்டுள்ளார்.உடனே வெங்கட் பிரபுவும் அடுத்த விமானத்திலேயே ஒரு ஒரிஜினல் பிரின்டை மும்பைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.இதில் யாரை குற்றம் சொல்ல கேட்டவரையா ,கொடுத்தவரையா.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால,
நான் என் வீட்டில் திருடலாம் அடுத்தவர்தான் என் வீட்டில் திருடக்கூடாது.
இதுவும் நியாயம் தானே.

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

நான் என் வீட்டில் திருடலாம் அடுத்தவர்தான் என் வீட்டில் திருடக்கூடாது.
இதுவும் நியாயம் தானே.!!!!!

Try 🆕 said...

வருகைக்கு நன்றி ராஜராஜேஷ்வரி அவர்களே.