October 18, 2011

கூடங்குளம் விவகாரத்தில் தமிழ் நாட்டை ஏமாற்றியதா மத்திய அரசு.

புகுஷிமா விபத்தினைத் தொடர்ந்து ரசிய அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து ஒரு ஆய்வறிக்கையை ரசிய அரசு நிறுவனங்கள் அதிபர் மெத்வதேவிடம் அளித்திருக்கின்றன. வெள்ளம், தீ, நில நடுக்கம் முதலான இயற்கைப் பேரழிவுகள் முதல் மனிதத் தவறுகள் வரையிலான காரணங்களால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தடுக்கும் ஏற்பாடுகள் ரசிய அணு உலைகளில் இல்லை என்று கூறுகின்றது அந்த அறிக்கை. “அது நாள் வரை வெளிப்படையாகச் சொல்லப்படாத, உலகம் அறியாத பல குறைபாடுகளை அந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது” என்று நார்வேயின் ஆற்றல் தொழில் நுட்பத்துறையின் தலைமைப் பொறியாளர் ஓலே ரிஸ்தாத் இவ்வறிக்கையைப் பற்றித் தெரிவித்திருக்கிறார். கூடங்குளம் மக்கள் போராட்டத்துக்கு துணை நிற்க வேண்டுமே தவிர எதிர்க்க கூடாது. நமது தமிழ்நாட்டில் ஏற்கனவே கல்பாக்கத்தில் ஒரு அணு மின் நிலையம் உள்ளது. தூத்துக்குடி, நெய்வேலி போன்ற இடங்களில் அனல் மின் நிலையங்கள் உள்ளன . நம் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாராம் தான் பல மாநிலங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. இப்படி இருக்கும் போது இன்னும் ஒரு அணு உலை பல லட்ச கணக்கான மக்கள் வசிக்கும் இடங்களில் எதற்கு. தமிழர்கள் எதிர்த்து கேள்வி கேட்க மாட்டார்கள் என்று நினைத்தார்களோ என்னவோ, மேலும் வேலை வாய்ப்புகளை ஆசை காட்டி அணு என்றால் என்ன என்று தெரியாத நிலையில் கூடங்குளத்தில் அணு உலை அமைக்கும் பணி சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டன . இப்பொழுது மக்களுக்கு அணு உலையின் கொடுமை தெரிந்து விட்டது. அதனால் எதிர்க்கிறார்கள். மின்சாரம் தேவை என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதற்கான களமாக தமிழகத்தை மட்டும் பயன்படுத்துவது ஏன் ? ஏன் இந்தியாவில் வேறு மாநிலங்கள் இல்லையா ? நமது தமிழ்நாட்டில் ஏற்கனவே கல்பாக்கத்தில் ஒரு அணு மின் நிலையம் இருக்குபோது இதை வேறு மாநிலத்தில் அமைத்து இருக்கலாமே.அணுமின் நிலையம் , அனல் மின் நிலையம் போன்ற எந்த திட்டமே இல்லாத மாநிலங்கள் கூட இந்தியாவில் உள்ளன .அந்த மாநிலங்களில் இல்லாத வசதியும்,வாய்ப்பும் தமிழ்நாட்டில் இருக்கிறதா என்ன? இதில் எதோ சூழ்ச்சி இருப்பதாகத்தான எண்ண தோன்றுகிறது.



இந்தப் பதிவு நண்பர் ஜெயசந்திரன் என்பவர் பேஸ்புக்கில் பகிர்ந்ததாகும். நன்றி ஜெயசந்திரன்.




என்ன நோக்கத்தில் தமிழ்நாட்டை மத்திய அரசு தேர்ந்தெடுத்தது என்று தெரியவில்லை.ஒருவேளை தமிழன் தமிழ் தமிழ் என கூவிக்கொண்டிருப்பானேயொளிய தமிழுக்காகவும் தமிழ் நாட்டிற்காகவும் போராடமாட்டான் என்று நினைத்தார்களோ?கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டை அப்போதும் ஏமாற்றியிருக்கிறது இப்போதும் ஏமாற்றிக் கொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

2 comments:

இருதயம் said...

உங்களின் பதிவை பார்த்தேன். ரசித்தேன்

// அணு என்றால் என்ன என்று தெரியாத நிலையில் கூடங்குளத்தில் அணு உலை அமைக்கும் பணி சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டன //

இது ஒரு தவறான கருத்தாகும். 1947 ம் வருடம் இந்தியா சுதந்திரம் அடைந்தவுடனே அணுவை பற்றிய ஆய்வுகள் தொடங்கி விட்டது என்பது தங்களுக்கு தெரியவில்லை என நினைக்கிறேன். இந்தியாவே வடிவமைத்து அணுமின் நிலையங்கள் பலவற்றை கட்டி அவைகளை இயக்குவது உங்களுக்கு தெரியவில்லை என நினைக்கிறேன்.

// அந்த மாநிலங்களில் இல்லாத வசதியும்,வாய்ப்பும் தமிழ்நாட்டில் இருக்கிறதா என்ன? இதில் எதோ சூழ்ச்சி இருப்பதாகத்தான எண்ண தோன்றுகிறது.//
உங்களது கேள்வியை பார்த்தால் சிரிக்கவா அல்லது அழவா என்று தெரியவில்லை. நாம் சாதாரணமாக ஒரு வீடு கட்டுகிறோம் என்று வைத்து கொள்ளுங்கள் . அதனுடைய நில வடிவமைப்புக்கு நாம் எவ்வளவு முக்கியம் கொடுக்கிறோம் என்பது நீங்கள் அறியாதது அல்ல. அதே போல் ஒரு அணு மின் நிலையம் அமைக்க வேண்டுமானால் Site selection committee என்று ஓன்று இருக்கிறது. அவர்கள் பல அம்சங்களை ( பூகம்ப அபாயம் , கடல் மட்டத்தில் இருந்து உயரம் , தண்ணீர் வசதி ( நல்ல தண்ணீர் அல்ல ) , விவசாயம் இல்லாத நிலம் மற்றும் பல ) ஆராய்ந்து தான் முடிவெடுப்பார்கள் . அதனால் நான் நீங்கள் நினைப்பது போல சூழ்ச்சியும் அல்ல வேறொன்றும் அல்ல .

என்னுடைய பதிவுகளையும் பாருங்களேன் http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_15.html

நன்றி

Try 🆕 said...

உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

என்னுடைய கருத்தாக ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். 1950 களில் அணு உலை திட்ட ஆராய்ச்சிகள் துவங்கினாலும் என்னைப் போன்ற பாமரர்களுக்கு இன்றுதான் தெரியும் அதுவும் செய்தித்தாள்கள் ,வார இதழ்கள் போன்ற ஊடகங்களின் உதவியுடன்தான்.