அனைவரும் எதிர் பார்த்துக்க கொண்டிருந்த திருச்சி மேற்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிகை இன்று காலை எட்டு மணிக்கு துவங்குகிறது.அநேகமாக காலை பத்து மணிக்குள்ளாகவே யாருக்கு வெற்றி தோல்வி என தெரிந்துவிடும்.இரண்டு கழகங்களுக்கும் இந்தத் தேர்தல் ஒரு கௌரவப் பிரச்சனையாகவே கருதப்படுகிறது.ஆகவே அ.தி.மு.க வினரும் தி.மு.க வினரும் பீதியோடு தேர்தல் முடிவை எதிர் நோக்கி இருக்கின்றனர். கடந்த தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற தேர்தல்களில் தி.மு.கவே வெற்றி பெறும் என்று தமிழ் நாடே உரக்கச் சொன்னது.அதற்கு காரணமாக தி.மு.க வின் பண பலத்தையும் ஆள்பலத்தையும் சுட்டிக்காட்டினார்கள்.அந்த அளவுக்கு பணபட்டுவாடா அமோகமாக நடந்தது.அதே போல் தி.மு.க வினர் வெற்றியும் பெற்றனர்.இப்போது நடைப்பெற்ற தேர்தலில் யார் வெற்றி பெற்றுவார்கள் என்பது கணிக்க முடியாததாகவே இருக்கிறது. அதற்கு தேர்தல் ஆணையத்தின் கடுமையான நடவடிக்கைகளா அல்லது அ.தி.மு.க வின் நல்லாட்சியா எதுவாயிருந்தாலும் கடந்த காலத்தில் நடைப்பெற்ற இடைத் தேர்தல்களை விட இம்முறை நடைப்பெற்ற இடைத் தேர்தல் ஓரளவுக்கு நியாயமாகவும்,நேர்மையாகவும் நடைபெற்றது என்பது என் எண்ணம்.
இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும்.அ.தி.மு.க வா ,தி.மு.க வா வாகைசூட போவது யார் என்று.
அ.தி.மு.க வின் பக்கமே வெற்றியின் சாயல் தெரிகிறது என்பது என் எண்ணம் பார்க்கலாம்.
No comments:
Post a Comment