October 21, 2011

மக்கள் புரட்சியால் முடிவுக்கு வந்தது கொடுங்கோல் ஆட்சி.

அமெரிக்கா நினைத்தால் எந்த நாட்டிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்பத்திவிடலாம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.லிபியா அதிபர் கடாபியை அந்த நாட்டு புரட்சிப் படையினராலே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.மக்கள் நலனை புறக்கணித்து விட்டு என்னதான் ஆயுதங்களை வாங்கிக் குவித்து இரும்புக்கரம் கொண்டு எதிர்ப்பாளர்களை அடக்கி கொடுங்கோல் ஆட்சி நடத்தினாலும் மக்கள் புரட்சிக்கெதிராக எந்த அரசும் தாக்குப் பிடிக்க முடியாது.ஈராக்,லிபியாவைத் தொடர்ந்து ஏமன் ,சிரியா,பாகிஸ்தான் என பல நாடுகளில் உண்மையான மக்களாட்சியை எதிர் நோக்கியுள்ளனர் மக்கள்.



மன்னருக்கு எதிராக புரட்சி நடத்தி ஆட்சியைப் பிடித்தவர்தான் கடாபி.புரட்சியாளராக இருந்த அவர் கடந்த 42 ஆண்டு கால ஆட்சியில் கொஞ்ச கொஞ்சமாக மாறி மன்னரே பராவாயில்லை என மக்கள் நினைக்கும் வகையில் கொடுங்கோல் ஆட்சியாளராக மாறிப்போனார் .எதிர்ப்பவர்கள் திடீர் திடீரென காணமல் போயினர்.ஆட்சி மீது அதிருப்தி தெரிவிப்பவர்கள் உடனுக்குடன் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.எங்கு எதிர்ப்பு கிளம்பினாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டது.சொந்த மக்கள் மீதே ஏவுகணை தாக்குதல் நடத்தி கொன்று குவித்தவர் காடபி.எத்தனை நாள் பொறுப்பார்கள் மக்கள்.கடந்த பிப்ரவரி மாதம் லிபியாவின் இளைஞர்கள் புரட்சிப்படையை உருவாக்கினர்.இந்தப் படைக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்தது.ஊர் ஊராக அரசுப் படையை வேட்டையாடி வந்த புரட்சிப் படைக்கு அமெரிக்க தலைமையிலான நோட்டொ படை ஆயுதங்களை வாரி வழங்கியது .தொழில்நுட்ப உதவிகளையும் அளித்தனர்.கடாபின் மறைவிடம் குறித்த ரகசிய தகவல்களை அவ்வப்போது புரட்சிப்படைக்கு தெரிவித்தது.புரட்சிப்படைக்கு ஆதரவாக நோட்டோ படையின் விமானங்கள் ,ஹெலிகாப்டர்கள் களம் இறக்கப்பட்டன.அமெரிக்க எதிர்ப்பு கோசம் முழங்கிய கடாபியை பழிவாங்க புரட்சிப்படையை பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா.



இறுதியில் சொந்த ஊரான சிர்தேவில் பதுங்கு குழியில் ஒளிந்திருந்த கடாபியை வெளியே இழுத்துப் போட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளனர் புரட்சிப்படையினர்.




ஆரம்பம் முதலே லிபியாக்கும் அமெரிக்காவுக்கும் ஏழாம் பொருத்தம்.பொருளாதாரத்தடை உளவு அமைப்பு மூலம் மறைமுக சதி என்று லிபியாவையும் கடாபியையும் முடக்க நினைத்த அமெரிக்காவுக்கு உள்ளூர் மக்களின் புரட்சி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த காரணமாக இருந்து கை கொடுத்தது.அதோடு ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தி விட்டது.முதலில் ஈராக் இப்போது லிபியா. இந்த வரிசையில் ஏமன்,சிரியா,பாகிஸ்தான் போன்ற பல நாடுகள் ஆட்சி மாற்றத்துக்கு காத்திருக்கின்றன.




செய்தி.தமிழ் முரசு மாலை நாளிதள்.நன்றி.

No comments: