free mail

September 19, 2011

காலத்தை வென்றப் பாடகி எஸ்.ஜானகி.

எனக்குப் பிடித்தப் பின்னணிப் பாடகிகளில் முதலாவதாக இருப்பது எஸ்.ஜானகி அவர்கள்தான்.அவரின் குரலில் இனம் புரியாத ஏதோ ஒன்று இருக்கிறது.அப்படியே அந்தக் குரலுக்கு அடிமையாகிவிடுகிறோம்.கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் தமிழ் திரை உலக பின்னணி பாடகிகளில் முன்னணியில் இருந்தவர்.இப்போது அவர் திரை இசையில் பாடுவது மிகவும் குறைவு என்றே கருதுகிறேன்.இசைக்கடவுள் இளையராஜாவின் இசையில் இவர் பாடியப் பாடல்கள் அனைத்துமே மக்களிடத்தில் பெரும் வரவேர்ப்பை பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.


எண்பதுகளில் ஜானகி அவர்கள் பாடாத திரைப்படங்கள் வெளிவருவது அரிதாகவே இருந்தது.இவரின் மற்றொருச் சிறப்பு குழந்தைகள் குரலில் பாடுவது ,இவர் குழந்தை குரலில் பாடினால் அவ்வளவு தத்ரூபமாக இருக்கும்.ஜானகி அவர்களின் குரல் தனித்துவம் வாய்ந்தது ஏனேனென்றால் அவர் குரல் மட்டும் தான் திரையுலகில் தனித்து ஒலிக்கும் குரல் ஆகும்.இவரைப் போல் பாடக்கூடியவர் இந்தி திரைஇசைப் பாடகி ஆஷா போன்ஸ்லேவைக் கூறலாம் இவரின் குரலும் ஜானகி அவர்களின் குரலும் கேட்பதற்கு ஒன்று போலதான் தோன்றும் என்பது என் கணிப்பு.ஜானகி அவர்கள் மிகவும் கடவுள் பக்தி உடையவர் அதனால் தானோ என்னவோ அவர் நிறைய பக்தி பாடல்களைப் பாடியிருக்கிறார்.பாடுவதோடு மட்டுமல்லாமல் பக்திப் பாடல்களுக்கு இசையும் அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரைப் பற்றிய சில தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா உதவியுடன் கீழே தொகுக்கப்படுகிறது.
எஸ்.ஜானகி அவர்கள் 23.4.1938 அன்று ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், பள்ளப்பட்லா என்னும் ஊரில் பிறந்தார்.இவரின் தந்தை பெயர் குணராமமூர்த்தி தாயார் பெயர் சத்தியவதி என்பது ஆகும் .ஜானகி அவர்கள் சிறு வயதிலேயே பாடத் தொடங்கி விட்டார்.நாதசுர மேதை பைடி சாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார்.சென்னைக்கு இடம் பெயர்ந்த ஜானகி ஏ.வி.எம். ஸ்டூடியோவில் இணைந்து திரைப்படத் துறையில் நுழைந்தார்.1957ஆம் ஆண்டில் வெளி வந்த விதியின் விளையாட்டு என்ற திரைப் படத்தில் இடம் பெற்ற பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடல் இவரது முதல் பாடல் ஆகும். அடுத்த நாளே அவருக்கு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. "எம்.எல்.ஏ" என்ற படத்தில் நீயாசா அடியார் என்ற பாடலை கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.
இதைத் தொடர்ந்து பல படங்களில் பாடும் வாய்ப்புக் கிட்டியது.25 ஆண்டுகளில் தென்னிந்தியமொழிகளில் மட்டுமல்லாமல்,கொங்கினி,துளு,சௌராஷ்டிரம்,இந்தி,வங்காளம்,சமஸ்கிருதம்,சிங்களம்,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆயிரக்காணக்கான பாடல்களைப் பாடினார்.1992 ஆம் ஆண்டில் இலங்கை சென்றிருந்த போது இவருக்கு ஞான கான சரஸ்வதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. தமிழ்,தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களைத் தாமே எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார்.மௌனப் போராட்டம் என்ற தெலுங்குப் படத்திற்கு முதன் முதலில் இசையமைத்திருக்கிறார்.


இவரது கணவர் காலஞ்சென்ற ராம்பிரசாத். தனது மகன் முரளி கிருஷ்ணாவுடன்சென்னையில் வாழ்ந்து வருகிறார். முரளி கிருஷ்ணா சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.


ஜானகி அவர்கள் பெற்ற விருதுகள்.


1986 இல்தமிழ்நாடு அரசின்கலைமாமணி விருது.

2002 இல் கேரளா மாநில சிறப்பு விருது.

நான்கு முறை சிறந்தப் பாடகிக்கான தேசிய விருது பெற்றிருக்கிறார்.
1976 ல் பதினாறு வயதினிலே திரைப்படத்தில் வரும் செந்தூரப் பூவே என்ற பாடலுக்காகவும்,

1980 ல் ஒப்போல் என்ற மலையாளத் திரைப்படத்தில் வரும் எட்டு மனூரம் பழத்தில் என்ற பாடலுக்காகவும் ,1984 ல் சித்தாரா என்ற தெலுங்குப் திரைப்படத்தில் வரும் வென்னெல்லோ கோடாரி அந்தம் என்ற பாடலுக்காவும்,
1992 ல் தேவர் மகன் படத்தில் வரும் இஞ்சி இடுப்பழகா மஞ்ச சிவப்பளகா என்ற பாடலுக்காக என நான்கு முறை தேசிய விருதுப் பெற்றுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பதினான்கு முறை கேரள மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருதும்,ஏழு தடவைகள் தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருதும்,பத்து தடவைகள் ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருதும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.எ.ஸ் .ஜானகி அவர்களின் ரசிகர்கள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் உள்ளனர்.அவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமைப் படுகிறேன்.

1 comment:

sengottuvel k velu said...

ஜானகி அம்மா ரசிகனான உங்களை சந்திப்பது மட்டற்ற மகிழ்ச்சி ...விக்கி பீடியோவில் நிறைய தவறான தகவல்கள் உள்ளன.. அவற்றில் ஒன்று ஜானகியம்மா பைடிசாமியிடம் இசை பயின்றது வெறும் ஏழு மாதங்கள் மட்டுமே ...அதுவும் முறையாக இசை கற்க செல்லவில்லை.. அவருடைய சகோதரி இசை பயிற்சிக்கு சென்று போது சிறுவயதான ஜானகியம்மா துணைக்கு உடன் சென்றார்... அங்கு கூட அவருக்கு இசை கற்பிக்க படவில்லை அவருடைய பிறவி இசைத்திறன் மூலம் பைடிசாமி அவர்களின் ஓய்வு நேரங்களில் அங்குள்ளோருக்கு கற்பிப்பவராக இருந்துள்ளார்... உண்மையில் அவர் சங்கீதமே கற்காமல் பிறவி ஞானத்தில் பாடிய பிரபஞ்சத்தின் ரத்தினம் நமது ஜானகியம்மா அவர்கள்