September 22, 2011

இணையத்தின் சக்கரவர்த்தி கூகுல்.பாகம் 1.

இணையம்(internet) மனிதன் கண்டுபிடித்த மிகப் பெரிய படைப்பு என்று சொல்லலாம்.இணையம் மூலம் இந்த அகண்ட உலகத்தை நம் கைப்பிடிக்குள் வைத்திருக்கிறோம் என்றால் அது மிகையாகாது.இணையம் என்றால் அனேகமாக அனைவருக்கும் ஒருசேர ஞாபகத்திற்கு வருவது கூகுல்(google)என்ற தேடுதல் இயந்திர இணையதளம்தான் .கூகுலில் கிடைக்காத தகவல்களும்,வசதிகளும் இல்லை என்னும் அளவிற்கு அனைத்தும் கொட்டிக் கிடக்கின்ற இந்த பிரபஞ்சம் போலவே என் கண்களுக்கு தோன்றுகிறது. அப்படிப்பட்ட கூகுல் பிறந்த கதையும்,வளர்ந்த கதையும் இங்கு தொகுக்கப்படுகிறது.என்னைப் போன்ற இணையத்தின் புதிய பயனாளர்களுக்கு இது பயன்படும் என்று நம்புகிறேன். தமிழ்விக்கிபீடியா, தமிழ்வெப்.com, மற்றும் சில இணையதளங்களின் உதவியுடன் இந்த கட்டுரை பதிவுச் செய்யப்படுகிறது.







கூகுல்(google) 1996 ம் வருடம் ஜனவரி மாதம் ,லாரி பேஜ்(Larry Page)உம் இவரது சக மாணவரான சேர்ஜி பிரின் (Sergey Brin) என்பவரும் தங்கள் பட்டப்படிப்பிற்காக கலிபோர்னியாவிலுள்ள stanford பல்கலைக் கழகத்தினால் வழங்கப்பட்ட ஆராய்ச்சிக்கானதலைப்பின் (இணையங்கள் இடையிலான கணித தொடர்பு) முடிவில் தோன்றியதாகும் கூகுல்.அவர்களின் நோக்கம் வேறு ஆனால் கிடைத்த பலனோ அவர்களே நினைத்துப் பார்க்காதது.ஆரம்பத்தில் லாரி பேஜின் ஆராய்ச்சிக்கான ஒரு பாடமாக மட்டுமே இது இருந்த போதிலும் வெகு விரைவிலேயே சகமாணவரும் நெருங்கிய நண்பருமான சேர்ஜி பிரின் இணைந்து கொண்டார். இவர்கள் இருவரும் தங்களது ஆய்வை இணைய தேடு பொறிக்கான ஒரு ஆய்வாக முன்னெடுத்தனர்.இவர்கள் தாம் சேகரித்த தகவல்களின் படி தேடு பொறியில் தேடப்படும் செய்தி எந்த இணையப் பக்கங்களில் உள்ளது என்பதையும் அதன் தொடர்புகளையும் அலசி ஆராய்ந்து தேடலின் பதிலாக பட்டியலிடுவதே சிறந்த முறை எனவும் முடிவு செய்தனர்.


இது அப்போது பரிசோதனையில் இருந்த தேடு பொறி தனது தேடும் செய்தியை எந்த இணையப் பக்கம் அதிகம் கொண்டிருந்ததோ அதன் எண்ணிக்கை வரிசையில் (இறங்கு முகமான வரிசை) பதிலாக (கணனியின்திரையில்) கொடுப்பதை
விட, தமது தேடுதல் கருவியானது தேடிய தகவல்களின் பக்கங்களை அலசி தேடுதலின் பதிலாக வழங்கும் முறை சிறப்பான தொழில் நுட்பம் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள்.இவர்கள் தமது ஆராய்ச்சிக்கு புனை பெயராக 'பாக்ரப்'(பின்னால் தடவு அல்லது வருடு)என்ற பெயரை சூட்டிருந்ததுடன் இந்த ஆய்வு ஒரு இணையத்தின் பின் புல இணைப்புகளுடன் முக்கிய பங்கு வகிப்பதனால் அவ்வாறு அர்த்தத்தில் குறிப்பிடனர்.இவர்கள் ஆய்வை போலவே தேடுதலை பதிலாக கொடுப்பதற்கு அந்த கால கட்டத்தில் சிறிய தேடு பொறி"ராங்டெக்ஸ்" (rankdex)என்ற நிறுவனம் முயற்சியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

தேடப்படும் தகவல் அடங்கிய இணையப் பக்கங்களினால் அதிகம் எந்த ஒரு இணையப் பக்கம் இணைக்கப் படுகின்றதோ அதுவே தேடப்படும் தகவலின் தொடர்பான பதில் என தமது ஆராய்ச்சியை நியாயப்படுத்தினர்.இந்த ஆராய்ச்சி ஸ்ரான்போஃர்ட்(stanford) பல்கலைக்கழகபட்டப் படிப்புடன் சம்பந்தமான ஆராய்ச்சி என்பதால் தமது விதிகளை அங்கு சோதனை செய்து பார்த்ததோடு google தோன்றவும் அடிகோலினர்.ஆரம்பத்தில் ஸ்ரான்போஃர்ட் பல்கலைக் கழகத்தின் இணையப் பக்கங்களை தேடுவதற்க்காக google.stanford.edu என்று பெயர் சூட்டப்பட்டாலும் பின்னர் google.com என 1997ம் வருடம் செப்டம்பர் 15 ம் நாள் பதிவு செய்யப்பட்டதுடன் 1998ம் வருடம் செப்டம்பர் 15ம் நாள் Google தனியார் நிறுவனமாகவும்பதியப்பட்டது.1998ம் ஆண்டு செப்டம்பர் 7 இல் நண்பர் ஒருவரின் car grageல் Google நிறுவனம் வர்த்தக நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது.


இன்னும் தேடுவோம்.......

No comments: