சமீபத்தில் உலக தமிழர்களையே உலுக்கிய ஒரு தியாக மரணம்
செங்கொடி என்னும் இளம் சமூக போராளினுடையது.செங்கொடியின் தியாகத்திற்கான காரணம் உலகம் அறிந்ததே, பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகிய மூவருடைய தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டி தன் உயிரை தியாகம் செய்தார். அன்று ஒரு முத்து குமார் இன்று ஒரு செங்கொடி.செங்கொடியின் தியாகம் சாதாரணமானதல்ல இப்படி ஒரு அசாதரணமான காரியம் செய்ய எவ்வளவு துணிச்சல் வேண்டும் நினைத்தாலே தேகம் சிலிற்கிறது.கொடூரமான தூக்குத் தண்டனையை எதிர்த்து கொடூரமான முறையில் தன்னுடைய எதிர்ப்பை உலகுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.அவரின் இந்த முடிவு பொது மக்களிடையே பெரும் எழுச்சியை உருவாக்கியிருக்கிறது.ஆனால் அவரின் எதிர்ப்பைக் காட்ட தன் உடலை நெருப்புக்கு இரையாக்கியிருக்கக் கூடாது என்பது என் கருத்து.எவ்வளவு துடிதுடிக்க வைத்து சாவை தரக்கூடிய செயல் இது.நினைக்கவே முடியவில்லை அதை செங்கொடி தேர்ந்தெடுத்திருக்கிறார். அவரின் இறுதி கோரிக்கை நிறைவேற வேண்டுமென்றால் நீதிமன்றம் மனம் வைக்க வேண்டும்.அதற்கு அனைத்து தரப்பினரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். செங்கொடியின் இளப்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை.இருந்தாலும் கவிஞர் வாலி அவர்கள் செங்கொடி என்னும் பெண்ணரிசிக்காக ஒரு கவிதை வடித்துள்ளார் .அக்கவிதையை 11.9.2011 தேதியிட்ட ஜுனியர் விகடன் இதழ் வெளியிட்டிருக்கிறது.இதோ அந்த கவிதை...
கொடி வணக்கம்!
கொடிகாக்கத் - தன்னைக்
கொளுத்திக் கொண்ட உயிருண்டு
உயிர்காக்கத் தன்னைக் -
கொளுத்திக் கொண்ட கொடியுண்டா?
உண்டு:
அதன்பேர் செங்கொடி:
இனிமேல் -
அதுதான் என் கொடி!
தொன்மைத் தமிழரெலாம் - ஒரு
தொப்புள் எழுந்த கொடி: இவள்
தொப்புள் எழுந்த கொடிகளைக் காக்க -
வெப்புள் விழுந்த கொடி!
இதுதான் -
எனது -
வணக்கத்திற்குரிய கொடி! இதை
வணங்காது வேறெதற்கு முடி?
மூவுயிர் விடு! ஈடாக என் -
பூ வுயிர் எடு!
என்று
எமனிடம் தந்தாள் தன்னை;
செங்கொடி கன்னியாயினும் - மூன்று
சேய்களைக் காத்த அன்னை!
ஆம்;
அந்தக் -
கன்னி தீயானாள்; தீயாகி -
கன்னித் தாயானாள்!
பெருவாரியான நாடுகள்
பெரும்பிழை புரிந்தோரையும் -
சிறையில் வைக்க முயலுமேயன்றி -
சிதையில் வைக்க முயாலாது;
ஏன்
எனில் -
சிதையில் வைத்தது தவறென்றால்
சீவனை வழங்க இயலாது!
மரண தண்டனைக்குதான்
மரண தண்டனை தர வேண்டும்;
மானுடற்கு
மரணம் -
கயிறு வழி யல்ல;
காலன் வழிதான் வர வேண்டும்!
விழிநிறையக் கனாக்களுமாய்;
விடை தெரியா வினாக்களுமாய்;
இருபது ஆண்டுகள்
இறந்து போனபின்...
இம் மூவர்க்கு
இன்னமும் மீதமாய் -
இருக்கும் வாழ்வையும் - கயிறு
சுருக்கும் என்றால் ....
அது - அரக்கம்
இருக்க வேண்டாமா -
இரக்கம்?
'கண்ணுக்குக் கண்! எனும்
கருத்தை ஏற்காதவர்
காந்தி;
தபால்
தலையில் மட்டுமல்ல
நம்
நடக்க வேண்டாமா -
நம்
எண்ணத்திலும் தேசப்பிதாவை
ஏந்தி?
செங்கொடியே என் செல்ல மகளே!
சேவிக்கத் தகுந்ததுன் சேவடி துகளே!
ஒன்றுரைப்பேன்; உன் தியாகத்திற்கில்லை
ஒப்பு;
என்றாலும் - அதை
ஏற்பதற்கில்லை; அது தப்பு!
நன்றி
கவிஞர் வாலி
மற்றும்
ஜூனியர் விகடன்
No comments:
Post a Comment