கூடங்குளம் அணுமின் உலை உண்மையிலேயே நவீனமானது. அதன் பாதுகாப்பில் எனக்கு நம்பிக்கை உள்ளது’’ என முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலான்மை கல்வி நிறுவன(ஐ.ஐ.எம்) பொன் விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நேற்று சென்றிருந்தார். அவரிடம், அணுமின் சக்தி திட்டத்துக்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்பு தெரிவிப்பது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது கலாம் கூறியதாவது:
பூமியில் இருந்து கிடைக்கும் எல்லாவிதமான எரிபொருள்களும் இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் வெளியாகும் மாசு, 30 பில்லியன் டன் கார்பன்டை ஆக்சைடுக்கு சமமானது.
இதனால் பூமிக்கு பாதிப்பு ஏற்படும். இதற்கு ஒரே தீர்வு சுத்தமான எரிசக்திதான். சூரிய சக்தி, அணு சக்தி, நீர் சக்தி, உயிர் எரிபொருள் போன்றவைதான் சுத்தமான எரிசக்தி.
இந்தியாவுக்கு மின்சக்தி அதிகம் தேவைப்படுகிறது. 2 ஆயிரம் மெகாவாட் திறனுள்ள சுத்தமான மின்சக்தியை அளிக்க கூடங்குளம் அணுமின் நிலையம் தயாராக உள்ளது. அதை ஏற்றுக் கொள்ளவேண்டும். கூடங்குளம் அணு மின்நிலையத்தை நான் நேரில் சென்று பார்த்தேன். அது உண்மையிலேயே நவீனமயமான அணு உலை. அதன் பாதுகாப்பில் எனக்கு முழுநம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அப்துல் கலாம் கூறினார்.
No comments:
Post a Comment