November 14, 2011

கூடங்குளத்தில் பத்ரிகையாளர்கள் நேரடி விசிட்.

கூடங்குளம் அணுமின் நிலை யத்தின் பாதுகாப்பு குறித்து மக் களுக்கு எடுத்துச் சொல்லும் விதத் தில் நெல்லையில் இருந்து பத்திரி கையாளர்களை அழைத்து, அணு உலை எவ்வாறு செயல்படுகிறது , பாதுகாப்பு அம்சங்கள் என் னென்ன? என்பது குறித்து அதிகாரிகள் விளக்கினர்.



அணு உலையின் உச்சிக்கே அழைத்துச் சென்று விளக்கம்அளித்தனர் .
கூடங்குளத்தில் தற்போது இரண்டு அணு உலைகள் கட்டப் பட்டுள்ளன. அவற்றில் ஒரு அணு உலை இயக்கத் தயார் நிலையில் உள்ளது. அடுத்த அணு உலையின் பணிகள் இன்னும் இரண்டு அல் லது மூன்று மதங்களில் முடியும்.
முதல் அணு உலையின் மூலம் ஆயிரம் மெகாவாட் மின்சாரம்தயாரிக்க முடியும். முதலாவதாக அணு உலை, மின்சாரம் தடைப் பட்ட இடைக்கால நேரத்தில் அணு உலையை குளிர்விக்க 4 ஜெனரேட்டர் வசதி உள்ளது.
முற்றிலும் மின்தடை ஏற்பட்டால் தானியங்கி வசதி மூலம் அணு உலையின் அடிப்பகுதியில் அமைக் கப்பட்டுள்ள துளைகளில் இருந்து காற்று உள்ளே இழுக்கப்பட்டு உடனடியாக நீராவியாக மாறி அணு உலையை குளிர்வித்து விடும். இரண்டாவது ஏற்பாடாக அணு உலையை குளிர்விக்க 12 லட்சம் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டாங்கிகள் அணு உலைக்குள்ளே தயார் நிலையில் அமைக்கப்பட் டுள்ளது .
இது தவிர அணு உலையை இயக்க அணு உலைக்கு தேவை யான 75 டன் யுரேனியம் தற்சமயம் கையிருப்பில் உள்ளது.



அணு உலைக்கு உள்ளேயும் எந்த பாதிப்பும் வராது. அணு உலைக்கு வெளியேயும் எந்த பாதிப்பும் வராத அளவிற்கு கட்டப் பட்டுள்ளது.
அணு உலை இயங்கினால் அணு உலைக்குள் தொழில்நுட்ப ஊழியர்களைத் தவிர யாரும் செல்ல அனுமதி கிடையாது முழுக்க முழுக்க அணு உலையை இயக்க கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டு அறை உள்ளது. அதில்தான் அணு உலையை இயக்க வசதிகள் செய் யப்பட்டுள்ளன.
இந்த அணு உலைக்குள் ஒரு முறை யுரேனியத்தை நிரப்பினால் 11 மாதங்கள் வரை எந்த பராமரிப் பும் செய்ய தேவையில்லை . இது தவிர 8 ஆண்டுகளுக்கு அணுக் கழி வுகளை சேமித்து வைக்கக் கூடிய பாதுகாப்பு கலன்களும் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளன. இதை யெல்லாம் விட அணுக்கழிவுகளை மறு சுழற்சிமூலம் மீண்டும் , மீண் டும் பயன்படுத்தி அணுக் கழிவுகள் தேங்காமல் இருக்கக்கூடிய ஏற்பாடும் உள்ளது .
அணு உலை இயக்கபட்டால் அணுஉலை மூலம் கிடைக்க கூடிய மின்சாரம் நெல்லை அபிசேக பட்டியில் தயாராக உள்ள 400 கிலோ மெகாவாட் மின் திறன் கொண்ட பவர் கிரிட்டின் மூலம் தமிழகத்திற்கும், மற்ற மாநிலங் களுக்கும் விநியோகம் செய்யும் அளவிற்கு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன என்று விஞ் ஞானிகள் விளக்கினர்.
இந்த அணு உலை சுனாமி, புயல் மற்றும் இயற்கை இடர்பாடுகள் கூட தாக்காத அளவிற்கு கட்டப்பட்டுள்ளது . இதனால் மீன்வளமும் பாதிக்காது. அணு உலைக்கு தேவையான தண்ணீர் பேச்சிபாறை அணையிலிருந்து பயன்படுத்தப்படும் என்பது பொய்யான தகவலே. இப்படி ஒரு தகவல் வெளியே கசிய விடப்படுகிறது. உண்மை அதுவல்ல. அணு உலைக்கு தேவையான தண்ணீர் முழுக்க முழுக்க கடல்நீரையே மறு சுழற்சி மூலம் உப்பு நீரை நன்னீராக மாற்றி அணுஉலையை குளிர்விக்க, குடிநீர், மற்ற வசதிகளுக்கும் பயன் படுத்தப்பட உள்ளது. இந்த கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தற் போது வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இது ஏற்கனவே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே முடிக்கப் பட்ட பணியாகும்.
எனவே பேச்சிப்பாறை அணையின் நீர் அணு உலைக்கு பயன்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை. பாதுகாப்பைப் பொறுத்த மட்டில் மத்திய தொழிற்சாலைகள் பாது காப்பு படையை (சி.ஐ.எஸ்.எப்.) தாண்டி அணு உலைக்குள் அவ் வளவு எளிதில் செல்லமுடியாது , 24மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய மத்தியப் படையினரால் கூடங் குளம் அணு உலை கண்காணிக்கப் பட்டு வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக உள்ளது எனவே சர்வதேச அளவில் அடுத்த தலைமுறைக்காக தொலை நோக்கு பார்வையோடு பாதுகாப்பாக கட்டப்பட்ட முதல் அணுமின் நிலையம் கூடங்குளம் நியுக்ளியர் பவர் புராஜக்ட் தான் என்ற பெரு மையை கூடங்குளம் அணு மின் நிலையம் பெறுகிறது .
அணு உலைக்குள் உள்ள சிறப்பு அம்சங்கள்
கூடங்குளம் அணு உலையில் சிறப்பு அம்சங்களாக அணு உலைக்குள் அவசர கால குளிர்விப் பான் , நீராவி கலன் , இயல்பு நிலை குளிர்விப்பான் , போரானை உள் செலுத்தும் அறைகள் , தானியங்கி ஹைட்ரஜன் மறு இணைப் பான்கள், கடல் நீரை குடிநீராக்கும் மாற்று இயந்திரங்கள் , தடை யில்லா ஜனரேட்டர்கள் வசதி, கம்ப்யூட்டர் கட்டுபாட்டு அறைகள் போன்றவை உள்ளன என்று விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரி கள் விளக்கினர்.

செய்திகள்.தினக்கதிர்.

No comments: