October 13, 2011

தாக்குதலுக்குத் தயாராகும் இந்திய அணி.

இந்தியா, இங்கிலாந்து இடையேயான ஒரு நாள் போட்டித் தொடர் இன்று பலத்த எதிர்பார்ப்புக்கிடையே துவங்குகிறது.


இங்கிலாந்து மண்ணில் வாங்கிய அடி அவ்வளவு விரைவில் மறந்துவிடாது இந்திய அணிக்கும் இந்திய ரசிகர்களுக்கும்.உலக கோப்பையை வென்று சில நாட்களிலேயே மிக மோசமான தோல்வியை சந்தித்தது வேதனையான விசயம்தான்.தோல்விக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் தோல்வி என்பது தோல்விதானே.


இப்போது நடக்கப்போகும் தொடரில் இந்தியா ஐந்துக்கு ஐந்து என்று வெற்றி பெறாவிட்டாலும் மூன்றுக்கு இரண்டு என்ற வீதத்திலாவது வெற்றி பெற வேண்டும் என்பதுதான் இந்திய ரசிகர்களின் அதிகபட்ச ஆசையாக இருக்க முடியும்.


இங்கிலாந்து சுற்று பயணத்தில் அனைத்து தொடரையும் இளந்தது ,அடுத்ததாக வந்த சேம்பியன் லீக் போட்டியில் சென்னை அணி லீக் சுற்றோடு வெளியேறியது போன்றவைகளுக்கு காரணமாக பெரும்பாலானோர் சொன்னது டோனியின் அதிர்ஷ்டம் முடிந்துவிட்டது என்றுதான். எங்கிருந்துதான் இப்படிப்பட்ட யோசனைகள் வருமோ நமது மக்களுக்கு.இங்கிலாந்து சுற்று பயணத்தின் போது விளையாடிய போட்டிகளில் பல முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விளையாடவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே இருந்தும் ரசிகர்கள் டோனியை குறை சொல்கிறார்கள்.இதற்கெல்லாம் ஒரே காரணம் டோனி மீது ரசிகர்கள் மிக அதிக எதிபார்ப்பு வைத்திருப்பதுதான். எப்படியும் எல்லா தொடர்களையும் டோனி வென்றுவிடுவார் என்று நம்புகிறார்கள்.நம்பிக்கை பொய்க்கும் போது அவர் மேல் விமர்சனத்தை பாய்ச்சுகின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விசயம் இப்போதும் டோனியைதான் நம்பிக்கொண்டிருக்கிறோம்.ஏனேன்றால் அவர் தந்த வெற்றியின் களிப்புகள் அவ்வளவு எழிதில் மறந்து விட முடியாது.இந்திய மண்ணில் இங்கிலாந்து அணிக்கு நிச்சயம் தோல்வியை இந்திய அணி பரிசளிக்கும் என்று நம்புவோம்.

No comments: