நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது டிஸ்கவரி தமிழ்,
ஏறக்குறைய தமிழ் நாட்டின் பெரும்பாலான வீடுகளில் இப்போது அதிகம் ஒலிக்கப்படும் லோகோ இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் டிஸ்கவரி தமிழ் சேனலின் நிகழ்ச்சிகள் அனைத்துமே பெரியவர் முதல் சிறியவர் வரை அவரவர் ரசனைக்கேற்றவாறு ரசிக்கும்படி இருக்கின்றன.சிறுவர்களுக்கு, பெரியவர்களுக்கு என்று தனித் தனியே நிகழ்ச்சிகள் இல்லாவிடினும் இருசாராரும் இணைந்தே ஓர் நிகழ்ச்சியை ரசிப்பார்கள் அந்த பெருமை டிஸ்கவரி தமிழையே சேரும்.
புல்,பூண்டுகளின் அற்புத அழகையும் ,விலங்குகளின் மறு உலகையும்,நிலத்தில் இருக்கும் நீல வானத்தின் ஆள் மன ரகசியங்களையும், எரிமலைகளின் சிவந்த கோபத்தையும்,அறிவியலின் மற்றொரு கோணத்தையும்,மனிதனால் இயற்கை படும் துன்பங்கள் என அனைத்து நிஜங்களையும் நம் கண் முன்னால் பிரதிபலித்து நம்மை ஆச்சர்யபடவும்,திகைக்கவும் வைக்கிறது. உலகமே விந்தையானது என்பதை டிஸ்கவரி தமிழின் நிகழ்ச்சிகள் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
மென் விசஸ் வைல்ட் நிகழ்ச்சிக்கும் நிகழ்ச்சியை வழங்கும் பியர் கெய்ல்சுக்கும் எத்தனை கோடி ரசிகர்கள் என்று எண்ணி சொல்லி விட முடியுமா என்ன, அவரின் துணிச்சலான சில செயல்கள் ஆச்சர்யத்தில் வாயை பிளக்கவும் வைக்கும்,அருவருப்பில் முகத்தை சுழிக்கவும் வைக்கும் தன் உயிரை பணயம் வைத்து நிகழ்ச்சியை காட்சிப் படுத்துகிறார் என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் இருக்கப் போவதில்லை.
டிஸ்ராய்டு இன் செகன்ட்ஸ் நிகழ்சியை பார்க்கும்போது தேகம் சிலிர்ப்பது எப்படி என்று உணர்வீர்கள்.
டைம் வார்ப் நிகழ்ச்சியில் அறிவியலின் மற்றொரு பக்கத்தையும் மனிதனின் நவீன கண்டுபிடிப்புகளையும் கண்டு மெய்மறந்து போவோம்.
த மெடிக்கல் அனாமலைஸ் நிகழ்ச்சியில் ஊனம் என்ற பெயரில் சில மனிதர்கள் எவ்வளவு பெரிய வேதனையை அனுபவித்து வருகிறார்கள் என்பதை எண்ணி கண்ணீர் உகுக்காமல் யாராலும் இருக்க முடியாது.அந்த மனிதர்கள் நிஜமாகவே போராளிகளே.
ஏதோ உறங்கி கொண்டிருக்கும் தோரணையில் இருக்கும் கடலின் ஆழத்தில் நடக்கும் அதியங்களையும்,அழகையும் வெளிக்கொணரும் த புளு பிளானட் நிகழ்ச்சியை வருணிக்க வார்த்தைகளே இல்லை.
உலக அளவில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளை இவர்கள் தொகுத்து வழங்கும் விதம் நாமே அந்நிகழ்ச்சியை நேரில் பார்த்த பிரமிப்பை ஏற்படுத்துகிறது.உதாரணமாக, மும்பை குண்டு வெடிப்பு சம்பவம்,பின்லேடன் கொலை செய்யப்பட்டது,அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்குதல் சம்பவம் எல்லாவற்றிற்கும் மேலாக இரண்டாம் உலகப்போரின் அழிவுகளையும்,காரணங்களையும் வர்ணத்தில் ஒளிபரப்பியது யாரும் எதிர்பாராத ஒன்று.
லைப்,ஜாய் ஆப் த டிஸ்கவரி,டிஸ்கவர் மோர்,ஃபாக்ட்ரி மேட்,டர்ட்டி ஜாப்ஸ்,சர்வய்வர் மேன்,டுயல் சர்வய்வர்,மென்,வுமன் விசஸ் வைல்ட்,வொர்ஸ்ட் கேஸ்ட் செனாரியோ,கன்டர் ,
இப்படி எண்ணற்ற நிகழ்ச்சிகளை பட்டியலிட்டுக் கொண்டிருக்கலாம் அனைத்துமே இயற்கையின் எழிலையும் ,கோபத்தையும் நமக்கு உணர்த்த முயற்சி செய்கிறது.
டிஸ்கவரி நிறுவனம் 1985 ம் ஆண்டு அமெரிக்காவில் துவங்கப்பட்டது.இன்று கிட்டத்தட்ட 170 நாடுகளில் 40 மொழிகளில் தன் சேவையை வழங்கிக் கொண்டிருக்கிறது.இதில் நம் தமிழ் மொழியும் அடங்கும்.இந்தியாவில் இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் மட்டுமே தனியாக டிஸ்கவரி அலைவரிசை உள்ளது.தமிழில் தனி அலைவரிசை கடந்த 15.8.2011 முதல் துவங்கப்பட்டது.
டிஸ்கவரி தமிழை தமிழின் முதல் தர தொலைக்காட்சி என்றால் அது மிகையாகாது.ஏனென்றால் அவர்கள்தான் தமிழை அழகாக உச்சரித்து நிகழ்ச்சி வழங்குகிறார்கள்.
2 comments:
nalla karuththai veliyiterkal.
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.
Post a Comment