October 11, 2011

இப்படி இருந்த நாங்கள் எப்படி ஆயிட்டோம் மும்பை இந்தியன்ஸ்.

யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் சேம்பியன்ஸ் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வெல்லுமென்று.ஏனென்றால் லீக் ஆட்டங்களில் எந்த ஒரு அணியுடனும் சிறப்பாக விளையாடியது என்று கூறமுடியாது.சென்னை அணியுடன் மோதிய முதல் ஆட்டத்தில் இறுதிவரை சென்னைதான் வெற்றி பெறும் என அனைவரும் நம்பினார்கள்.ஏன் மும்பை வீரர்கள் கூட அப்படித்தான் எண்ணியிருப்பார்கள்.ஆனால் வேகப்பந்து வீச்சாளரான மலிங்காவின் மட்டை வீச்சால்(39,18 பந்துகளில் மற்றும் ஒரு விக்கெட்) மும்பை அணி வென்றது. அரையிறுதியிலும் கூட தோற்று விட்டது என்று நினைத்த வேளையில் வெற்றி பெற்றார்கள்.இந்த ஆட்டத்திலும் மலிங்காவே கைகொடுத்தார்(4 ஓவர்கள் 20 ரன்கள் 4 விக்கெட்டுகள்).அவரது பந்துவீச்சு மிக அருமையாக இருந்து என்றே சொல்ல வேண்டும்.இப்படி எதிர்பாராத வெற்றிகள் மூலம் இறுதிப்போட்டிக்குள் நுளைந்தது மும்பை அணி.



இறுதிப் போட்டியில் மும்பை வீரர்கள் எதிர் கொண்ட அணி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ். இந்த அணி லீக் சுற்றின் இறுதி ஆட்டத்திலும்,அரையிறுதி போட்டியிலும் எதிரணி நிர்ணயித்த இமாலய இலக்கை(214,204)சர்வ சாதரணமாக எட்டியது. அதனால் இறுதி போட்டியில் கோப்பை பெங்களூருக்கே என்று எண்ணும் சூழல் உருவாகியிருந்தது.

சென்னையில் இறுதிப்போட்டியும் துவங்கியது. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது இது அணி தலைவரான ஹர்பஜனின் தவறான முடிவு என்றே பலரும் எண்ணியிருப்பார்கள்.ஏனென்றால் பெங்களூரு அணி இலக்கை துரத்தி எட்டுவதில் சிறப்பாக செயல்பட்டது அந்த அணியின் பேட்டிங் பலமும் அதைத்தான் உறுதிப்படுத்தியது.


மும்பை அணி தட்டுத்தடுமாறி 139 ரன்கள் குவித்தது(எடுத்தது).இருபது ஓவர் போட்டியில் 139 ரன்கள் என்பது ஒரு கௌரவமான இலக்குதான் ஆனால் பெங்களூர் அணியைப் பொறுத்தவரை இந்த இலக்கு சுலபமாக எட்டக்கூடியதாகவே இருக்கும் என்று நினைத்தேன்.ஆனால் நடந்ததோ வேறு.

பெங்களூர் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் வேகமாக ஆட்டமிளந்தாலும்.விராத் கோலி கை கொடுப்பார் என்று பார்த்தால் அவரும் சொற்ப ரன்னில் வெளியேற பின்னால் வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பெங்களூர் அணி தோல்விக்கான பாதையில் பயணிக்க தொடங்கியது.பாதையும் சரியாக தோல்வியிடம் இட்டுச்சென்றது.


தொடர் நாயகன் விருதை மலிங்கா தட்டிச் சென்றார்.
மும்பை அணி ஆடிய ஆறு ஆட்டங்களில் இறுதி ஆட்டத்தில்தான் எளிதாகவும், விறுவிறுப்பு இல்லாமலும் வெற்றி பெற்றது.எது எப்படியோ மும்பை இந்தியன்ஸ் சேம்பியன்களுக்கு சேம்பியனாகிவிட்டது.


மூன்று முறை சேம்பியன்ஸ் லீக்கில் கலந்து கொண்டு மூன்றாவது முறை கோப்பையை கைப்பற்றியது மும்பை. இந்திய அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட அணியாக மும்பை அணி ஆரம்பம் முதலே வலம் வந்துக் கொண்டிருக்கிறது.அதற்கு முக்கிய காரணம் கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டென்டுல்கர் மும்பை அணியின் தலைவராக இருப்பதுவாகும்.


சாம்பின்ஸ் லீக் தொடரில் உடல் நலக்குறைவால் சச்சின் விளையாடாவிடினும் அவரின் ஆசியால் மும்பை அணி வெற்றிப் பெற்றது.


வாழ்த்துக்கள் மும்பை இந்தியன்ஸ்.

No comments: